Friday, 2 April 2010

கண்களில் கனவு!

இதுவும் வாட்டர் கலரில் நான் வரைந்த ஓவியம்தான். ஆனால் முந்தையதைப்போலல்லாமல் நிறைய ஷேட்ஸ் இதில் உபயோகித்திருக்கிறேன்.

41 comments:

மன்னார்குடி said...

ஓவியம் மிக அழகு. வாழ்த்துக்கள்.

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள மன்னார்குடி அவர்களுக்கு!

ஓவியத்தை ரசித்து பாராட்டியதற்கு என் அன்பு நன்றி!!

Jaleela Kamal said...

மனோ அக்கா புக்குகளில் எல்லாம் பார்த்து இருக்கேன், அது கூட இவ்வள்வு சூப்பரா இருந்ததில்லை, என்ன ஒரு உயிரோட்டம்.அருமை, அருமை, அருமை இதுக்கே உங்களுக்கு எத்தனை அவார்டும் கொடுக்கலாம்.

Ahamed irshad said...

ஓவியம் அழகாக, இயற்கையாக உள்ளது. அருமை..

மனோ சாமிநாதன் said...

அன்பு ஜலீலா!

உங்களின் மனம் திறந்த பாராட்டு உண்மையாகவே எனக்கு நிறைய அவார்டுகள் கொடுத்ததைப்போல இருக்கிறது. என் அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள அஹமத் இர்ஷாத் அவர்களுக்கு!

தங்களின் பாராட்டிற்கு என் இதயங்கனிந்த நன்றி!

Asiya Omar said...

மனோ அக்கா உயிர் உள்ள ஓவியம்னு சொல்வாங்களே ! அது இது தானோ?

ஜெயா said...

அற்புதமான ஓவியம்.உண்மையாக இது உயிர் கொண்ட ஓவியம் தான்,இதனை வரைந்து உயிர் கொடுத்த மனோ அக்கா உங்களை எப்படி வாழ்த்துவது என்றே தெரியவில்லை. என் அன்பான வாழ்த்துக்கள்..

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள ஆசியா!

அழகான ஓவியமோ அல்லது படைப்புகளோ-அதை எளிதாக படைத்து விடலாம். ஆனால் எல்லாவற்றையும் கலைக்கண் கொண்டு ரசிக்க ரசனையுள்ள மனம் இருப்பதுதான் அபூர்வம். அது உங்களிடம் இருக்கிறது. என் அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள ஜெயா!

சிறு வயதிலிருந்து எத்தனையோ பேர்-சினேகிதயரிலிருந்து பத்திரிக்கை ஆசிரியர்கள் வரை என்னை பாராட்டியிருக்கிறார்கள். ஆனால் வலைத்தளத்தில் கிடைக்கும் இது போன்ற பாராட்டுகள் மனதை நெகிழ வைக்கின்றன. உங்களுக்கு என் இத்யங்கனிந்த நன்றி!

R.Gopi said...

மனோ மேடம்....

இந்த ஓவியம்... நேரில் ஒரு பெண்ணை பார்ப்பது போன்ற தோற்றத்தை தருகிறது... அவ்வளவு தத்ரூபமாய் உள்ளது...

சித்திரமும் கை பழக்கம் என்று சொன்னதை படித்திருக்கிறேன்... அப்படி என்றால், இது போன்ற உயிரோட்டமான ஓவியங்கள் வரைய நீங்கள் எவ்வளவு பயிற்சி எடுத்திருப்பீர்கள்... நினைத்தாலே மலைப்பாய் இருக்கிறது மனோ மேடம்...

உங்களின் ஓவியத்திறமைக்கு நான் தலை வணங்குகிறேன்...

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள கோபி அவர்களுக்கு!

தங்களின் மனம் திறந்த பாராட்டிற்கு என் அன்பு நன்றி!
ஓவியத்திற்கு நான் முழுமையான பயிற்சி எதையும் எடுத்துக்கொண்டதில்லை. சந்தர்ப்பங்களும் அமைந்ததில்லை. பிறந்ததிலிருந்தே கூடவே வந்ததுதான் இது!

Krishnaveni said...

Excellent painting. You have a nice blog with precious thoughts especially in tamil. Well done. Happy to follow you Madam.

மனோ சாமிநாதன் said...

Dear Krishnaveni!

Thanks a lot for yr nice feedback as well as valuable comment. i am proud to have a follower like you!

செந்தமிழ் செல்வி said...

உயிரோவியம் என்றால் இதுதானோ??!!!!
ரொம்ப அழகு!!!!

மனோ சாமிநாதன் said...

அன்பு செல்வி!

என் ஓவியத்தை உளமாரப் பாராட்டியதற்கு என் அன்பு நன்றி!

ஸாதிகா said...

அக்கா..அசத்துறீங்க..உங்களிடம் இவ்வளவு திறமைகளா?உயிரோட்டம் படத்தின் முகபாவங்களில் அப்படியே தெரிகின்றது.

Vijiskitchencreations said...

மனோ மேடம் என்ன கலைநயத்தோட வரைந்திருக்கிங்க. உண்மையிலேயே அற்புதம் இந்த மாதிரி புத்தகங்களில் மாருதி & மாயா அவர்களின் ஒவியத்தை பார்த்திருக்கேன், ஆனல் இதுவும் அவர்களின் ஓவியம் போல் கன்னை பறிக்கும் மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றகூடிய அப்படியே நேரில் நிற்கின்றதை போல் இருக்கு. பாராட்ட எழுத வார்த்தைக்கள் போதவில்லை. பெரிய பதிவு, எனக்கும் ட்ராயிங்,பெயிண்டிங் எல்லாம் ரொம்ப் ரொம்ப பிடிக்கும்.
மேடம் கந்த சரஸ் மஹால், தஞ்சை தெரியுமா?

மனோ சாமிநாதன் said...

ஸாதிகா! அன்பு பாராட்டிற்கு என் மனங்கனிந்த நன்றி!!

மனோ சாமிநாதன் said...

அன்பு விஜி!

என் ஓவியத்தை ரொம்பவும் ரசித்துப் பாராட்டியிருப்பது மனதை நெகிழச் செய்தது. உங்களுக்கு என் அன்பு நன்றி!

இளம் வயதில் வினு, நடராஜன், கோபுலு இவர்கள் தான் என் ஆதர்ச ஓவியர்கள். இவர்கள் ஓவியங்களையெல்லாம் பார்த்துப் பார்த்துத்தான் ஏகலைவன் மாதிரி ஓவியம் கற்றேன், வண்ணங்கள் தீட்ட பழகினேன்.

‘கந்தசரஸ் மஹால்’ தெரியுமா என்று கேட்டிருப்பதைப் படித்ததும் ஷாக் அடித்தது மாதிரி இருந்தது. அதன் அருகில்தான் என் இல்லம் இருக்கிறது. உங்களுக்கும் கந்தசரஸிற்கும் என்ன சம்பந்தம்? உடனே எழுதுங்கள் விஜி.

மங்குனி அமைச்சர் said...
This comment has been removed by the author.
மங்குனி அமைச்சர் said...

அருமையான ஓவியம் ,,
ரொம்ப நாள் முன்னாடி வரைஞ்சதா மேடம்? , காது தோடு , நெத்தி சூடி , தலை நிறைய பூ , சாரி டிசைன் எல்லாம் கொஞ்ச காலத்துக்கு முந்திய டிசைன்

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள மங்குனி அமைச்சர் அவர்களுக்கு!

என் தளத்துக்கு விஜயம் செய்து கருத்தும் உரைத்ததற்கு என் அன்பு கலந்த நன்றி!

சரியாக சொல்லி விட்டீர்கள்! இது 12 ஆண்டுகளுக்கு முன் நான் வரைந்தது. இந்த காலத்தில் இந்த மாதிரி தலை நிறைய பூ, நகை அலங்காரம் எல்லாம் பார்ப்பது மிகவும் அரிதாகி விட்டது.

பாராட்டுக்கு மீண்டும் என் நன்றி!!

அன்புடன் மலிக்கா said...

மிக மிக அழகு உயிருள்ள ஓவியம் உயிரற்ற ஓவியத்திற்க்கு ஒளியேற்றிய காட்சி சூப்பர் மேடம்.
அசத்துறீங்க..வாழ்த்துக்கள்

]மங்குனிக்கு ஒரு ஸ்பெசல் கொட்டு கரகீட்ட கண்டுபிடித்தமைக்கு]

Asiya Omar said...

அக்கா அந்த முத்து வளையலையும்,அந்த சிவப்பு கண்ணாடி வளையலையும் பார்த்து கிட்டே இருக்கலாம் போல இருக்கு,

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள மலிக்கா!

என் ஓவியத்தை ரசித்துப் பாராட்டியதற்கு என் இதயங்கனிந்த நன்றி!!

மனோ சாமிநாதன் said...

ஆசியா!

அப்போதெல்லாம் இப்படித்தான் அழகுக்கு அழகு சேர்க்க லதா போன்ற ஓவியர்களெல்லாம் அழகாக ஆபரணங்களை வரைவார்கள். உங்கள் ரசனையும் எனக்கு மகிழ்ச்சியை அளித்தது.

இமா க்றிஸ் said...

ஓவியம் அற்புதம் மனோ அக்கா. எனக்கும் பார்த்ததும் ஓவியர் லதாவின் சித்திரங்கள்தான் சட்டென்று நினைவில் வந்தன. ;)
அடுத்தது என்ன என்று ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

அன்புடன் இமா

prabhadamu said...

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ஓவியம் மிக அழகு amma. super.

மனோ சாமிநாதன் said...

அன்பு இமா!

உங்களின் பதிவும் பாராட்டும் என்னை மேலும் மேலும் அழகான ஓவியங்கள் வரையத் தூண்டுகின்றன! உங்களுக்கு என் அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

அன்பு பிரபா!

உங்கள் பாராட்டு என்ன்னை நெகிழ வைக்கிறது. என் அன்பு நன்றி!!

Vijiskitchencreations said...

மனோ அக்கா. கந்த சரஸ் உரிமையாளரை எனக்கு ந்ல்லா தெரியும். அவர்களின் கந்த சரஸ் மஹாலின் கணக்குகளை நான் ஒருகாலத்தில் பார்த்து வந்தேன். மீதி மெயிலில்.

மனோ சாமிநாதன் said...

விஜி!

மீதிக்கதையை மெயிலில் அறிய ஆவலாக இருக்கிறேன்.

Priya said...

வாவ் சூப்பர்ப்!
முடிந்தால் நான் வரைந்த ஓவியங்களை பாருங்க மேம்!

http://enmanadhilirundhu.blogspot.com/search/label/%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D

மனோ சாமிநாதன் said...

அன்பு ப்ரியா!

அன்பான பதிவிற்கும் பாராட்டிற்கும் என் அன்பு நன்றி!

உங்கள் ஓவியங்களெல்லாம், குறிப்பாக இயற்கைக்காட்சிகள், பறவைகள் யாவும் அருமை!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

உங்களுடைய படத்திற்கு என் விமர்சனம்.
படம்= (மாயா+கல்பனா+கோபுலு)/3

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள ராமமூர்த்தி அவர்களுக்கு!

விமர்சனத்திற்கும் மதிப்புரைக்கும் என் அன்பு நன்றி!
இளம் வயதில் ஓவியர்கள் வினு, லதா இவர்கள்தான் என் ஆதர்ச ஓவியர்கள். அவர்களின் ஓவியங்களை வரைந்து பார்த்தே ஓவியரானேன்.

ஹைஷ்126 said...

வாவ் நம்பவே முடியவில்லை வரைந்தது என ஸ்கின் டோன் வாட்டர் கலரி இவ்வளவு நேச்சுரலா இருக்கே!!
சூப்பர்.

வாழ்க வளமுடன்

மனோ சாமிநாதன் said...

அன்புச் சகோதரர் ஹைஷ் அவர்களுக்கு,

ரசித்துப் பாராட்டியதற்கு அன்பு நன்றி !

Guruji said...

இவ்வளவு நேச்சுரலா இருக்கே!!

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஓவியத்தில் ஓர் உயிரூட்டம் உள்ளது. மிக்க மகிழ்ச்சி.

மனம் நிறைந்த பாராட்டுகள்.

அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

கீழ்க்கண்ட பதிவுகள் மூலம் மட்டுமே, [தாங்கள் இந்தப் பதிவு இட்டு ஆறு ஆண்டுகள் ஆகியும்கூட] இன்று நான் இங்கு இந்தப்பதிவுக்கு வருகை தந்துள்ளேன். :)))))

http://swamysmusings.blogspot.com/2016/08/blog-post_14.html

http://swamysmusings.blogspot.com/2016/08/blog-post_21.html