இரு மதங்கள் இணைந்து ஆரம்பித்த ஒரு அருமையான கோவில் கட்டுமான அடிக்கல் நாட்டு விழா உலகில் வேறெங்கும் நடந்திருக்காது என்று நினைக்கிறேன். நேற்று நடந்த நிகழ்வுகள் இந்திய நாட்டில் இந்து மதத்தை கெளரவித்து ஆட்சி செய்த அக்பரை நினைவூட்டியது!
ஒரு இந்தியப்பெண்மணியாக பெருமையடையும் அதே நேரத்தில் மத நல்லிணக்கத்திற்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக திகழும் அமீரகத்திற்கு கடந்த 43 ஆண்டுகளாய் நிறைவாகவும் அமைதியாகவும் இங்கு வசிப்பதற்கும் மனதால் நன்றியும் சொல்லுகிறேன்!
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளுக்கிணங்கி துபாய் அபுதாபியை இணைக்கும் சாலையான ஷேக் ஜாயீத் சாலையில் அல் முரைக்கா பகுதியில் உள்ள 10.9 ஹெக்டேர் பரப்பளவு இடத்தை இந்து கோவில் கட்டுவ்தற்கு அமீரக அரசு அனுமதி தந்துள்ளது.
இந்தக்கோவில் கட்டுவதற்கும் அதனை நிர்வகிக்கவும் குஜராத் மாநிலத்தில் ஆமதாபாத் நகரிலுள்ள பாப்ஸ் [போச்சன்வாசி ஸ்ரீ அக்சார் புருஷோத்தம் சுவாமி நாராயண் சன்ஸ்தா] என்ற அமைப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அமீரகத்தலைநகரமான அபுதாபியில் கடந்த வருடம் பிப்ரவரியில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்ற்து. அப்போது அமீரகம் வந்திருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டு விழா மற்றும் கோவில் வடிவத்தை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
நேற்று காலையில் 2 மணி நேர பிரம்மாண்ட பூஜையுடன் இந்து கோவில் கட்டுமான பணிகள் தொடங்கின.
இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட இளஞ்சிவப்பு கல்லைக்கொண்டு முதற்கட்ட அடித்தளம் அமைக்கும் பணிகள் நடந்தன. இந்த பூஜை 'சிலன்யாஸ் விதி' என்று அழைக்கப்படுகிறது. பாப்ஸ் அமைப்பின் மதத்தலைவர் மகந்த் சுவாமி மகராஜ் தலைமையேற்று நடத்தினார். அரேபிய அமைச்சர்கள் பலரும் இதில் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்கள்.பூஜை நிறைவடைந்ததும் காலை 10.50க்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்தக்கோவில் கட்டுவதற்கான அனைத்து கற்கள், இளஞ்சிவப்பு கற்கள் ராஜஸ்தானிலிருந்து கொண்டு வரப்படுகிறது. மத்திய கிழக்கு பகுதியில் கட்டப்பட இருக்கும் முதலாவது இந்து கோவில் என்ற பெருமையை இக்கோவில் பெறுகிறது. இது கட்டி முடிக்க திர்ஹம்ஸ் 450 மில்லியன் ஆகும் என்று நிர்ண்யிக்கப்பட்டுள்ளது.[ இந்திய ரூபாய்க்கு 18.88ஆல் பெருக்கிக்கொள்ளவும்]
அடுத்த ஆண்டிற்குள் இந்தக்கோவில் முழுமையடையும். கோவில் வளாகத்திலேயே இந்து திருமணங்கள், பண்டிகை கொண்டாட்டங்கள் நடைபெறவும் வசதி செய்து தரப்பட உள்ளது.
பின்னர் மகந்த் சுவாமி மகராஜ் பேசிய போது இந்தக் கோவில் சகிப்புத்தன்மைக்கும் உலக அமைதிக்கும் இந்தியாவிற்கும் அமீரகத்திற்குமான நல்லுறவிற்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக அமையும் என்றார்.