பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கேற்ப துன்பங்களும் மனக்கவலைகளும் விலகி புத்தாண்டில் அனைவருக்கும் நன்மைகளும் மகிழ்ச்சியும் புத்துணர்ச்சியும் அனைத்து செல்வங்களும் பல்கிப் பெருக
மனங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!
புத்தாண்டு தொடங்கிய இந்நாளில் அனைவருக்கும் ஒரு இனிப்பை வழங்குகிறேன். ஒரு மாறுதலுக்கு இந்த முறை ஒரு கேரளாத்து இனிப்பு.
பொதுவாய் கேரள மக்கள் தங்கள் வீட்டில் குழந்தைகளுக்கு நேந்திரம்பழத்தை அவித்து வெல்லம் கலந்து உண்ணக்கொடுப்பார்கள்.
நேந்திரன்பழம் அத்தனை சத்துக்கள் நிறைந்தது. நேந்திரம்பழ சிப்ஸ் அனைவருக்கும் தெரிந்தது தான்.
இந்த நேந்திரம்பழத்தில் குறுக்கே அரிந்து உள்ளே தேங்காய் வெல்லப்பூரணம் வைத்து மைதா மாவுக்கரைசலில் தோய்த்து எண்ணெயில் பொரித்து எடுப்பது பழம் பொரி என்ற இனிப்பு. இதை பலரும் பலவிதமாகச் செய்வார்கள்.
இப்போது நான் எழுதப்போவது நேந்திரம்பழ அல்வா பற்றி! இந்த அல்வாவின் தனி சிறப்பு இதை செய்த பிறகு ருசிக்கும்போது நேந்திரம்பழத்தினால் செய்தது என்பதை கண்டு பிடிக்க முடியாது என்பது தான். நேந்திரன் பழத்தை உபயோகித்து பலகாரங்கள் செய்யும்போது அவை பதமான பழங்களாக இருக்க வேண்டும் அதிகம் பழுத்திருந்தால் பலகாரங்கள் செய்வது நன்றாக வராது.
நேந்திரம்பழ அல்வா
தேவையானவை:
நேந்திரன் பழம்- இரண்டு
சீனி- 4 மேசைக்கரண்டி
நெய்- 4 மேசைக்கரண்டி
தேங்காய்த்துருவல்- கால் கப்
முந்திரிப்பருப்பு - 10
ஏலப்பொடி- கால் ஸ்பூன்
செய்முறை:
நேந்திரன் பழங்களை தோலுரித்து நீட்ட வாக்கில் இரண்டாக கத்தியால் நறுக்கவும். உள்ளே கறுப்பாக உள்ள பகுதியை நீக்கி விட்டு பழங்களை சிறு துண்டுகளாக நறுக்கவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கி இந்த பழத்துண்டுகளைப்போட்டு சிறு தீயில் சிறிது நேரம் சமைக்கவும். அவை மசிந்து வரும்போது சீனியை சேர்த்துக் கிளறவும். பழம் நன்கு மசிந்து திரண்டு வரும். தேங்காய்த்துருவலையும் முந்திரிப்பருப்புகளையும் தனித்தனியே நெய்யில் வறுத்துக்கொட்டி, மீதி நெய்யையும் ஏலப்பொடியையும் சேர்த்து சில நிமிடங்கள் கிளறவும். அல்வாப்பதமாகத் திரண்டு வரும்போது தீயை அணைக்கவும். நெய் மணக்க மணக்க சுவையான அல்வா தயார்!!