10 வருடங்களுக்கு முன் எனக்கு சர்க்கரை இருக்கிறது என்று கண்டறிந்ததும் இங்குள்ள என் இதய மருத்துவர் ' இனி மருந்துகள் ஆரம்பித்து விடலாம்' என்றார். நான் சென்னையிலிருக்கும் சர்க்கரை நோய்க்கென்றே உள்ள ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சென்று ஒரு முறை பரிசோதனை செய்து வருகிறேன் என்றேன். அது போலவே சென்னை சென்றோம்.
அங்கே முதற்கட்டமாக நம் உடல்நிலையைப்பற்றிய தகவல்கள் பல கேள்விகள் மூலம் பதிவு செய்யப்பட்டன. அதற்கடுத்தாற்போல சில இரத்தப்பரிசோதனைகள், இதயத்திற்கான, பின் மூளைக்கான ஸ்கான்கள், எக்ஸ்ரேக்கள் என்றெல்லாம் சோதனைகள் செய்யப்பட்டன. அப்போது தான் சர்க்கரை ஆரம்ப நிலையில் இருக்கும் எனக்கு எதற்கு இத்தனை பரிசோதனைகள் என்ற கேள்விகள் எழாமல் இல்லை. கடைசியில் தலமை மருத்துவரிடம் சென்றதும் அவர் எதுவுமே விளக்கங்கள் சொல்லாமல் ' இந்த மாத்திரைகள் எல்லாவற்ரையும் தொடர்ந்து சப்பிட்டு வாருங்கள்' என்று சொல்லி அனுப்பி விட்டார். காலை 9 மணிக்கு அந்த மருத்துவ மனையில் நுழைந்த நாங்கள் மாலை 5000 ரூபாய் அனைத்திற்கும் கட்டணமாகக் கட்டி விட்டுத் திரும்பினோம். மறுநாளிலிருந்து மாத்திரை சாப்பிட ஆரம்பித்தேன். அடுத்த நாளே தாழ்நிலை ச்ர்க்கரையினால் கிட்டத்தட்ட மயக்கத்திற்குப்போய் விட்டேன். சர்க்கரை அதிகம் கலந்திருக்கும் ஃபான்டா சாப்பிட்டதும் தான் மயக்கம், பலவீனம் சரியானது. அடுத்த நாளும் இதே போல பாதிக்கப்பட்டதால் இங்குள்ள என் இதய மருத்துவருக்கு ஃப்போன் செய்து ஆலோசனை கேட்டேன். அவர் மாத்திரைகள் பெயர்கள், அதிலுள்ள மருந்து விகிதங்களையெல்லாம் படிக்கச் சொல்லிக் கேட்டு, எனக்கு ஒரு மாத்திரையே போதும், மற்றதையெல்லாம் எடுக்க வேண்டாமென்று சொன்னார். மிகவும் வீரியமான மருந்துகளைக் கொடுத்திருப்பதாகச் சொன்னார். அதன் பிறகு, அந்த மருத்துவமனையிலிருந்து கொண்டு வந்திருந்த ஃபைலை எடுத்து ஒவ்வொரு பக்கமாய் பார்த்தபோது தான் தெரிந்தது அவர்கள் என் பிரச்சினையையே தப்பாக எழுதியிருக்கிறார்க்ள் என்று! எப்போதிலிருந்து சர்க்கரை இருக்கிறது என்று கேட்டதற்கு கடந்த ஒன்பது மாதங்களாய் சர்க்கரை ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கிறது என்று நான் பதில் சொன்னேன். அவர்கள் 9 மாதங்கள் என்பதை ஒன்பது வருடங்களாக என் ஃபைலில் ரிக்கார்ட் பண்ணி விட்டார்கள். ஒன்பது வருடங்களாக சர்க்கரை என்பதால் தலைமை மருத்துவர் வீரியமான மாத்திரைகள் தந்து விட்டார்!
இப்படிப்பட்ட மோசமான அனுபவத்துடன் தான் என் சர்க்கரை நோய்க்கான மருத்துவம் ஆரம்பித்தது. எந்த நோய்க்கும் ஒரு நல்ல, நம்மை அக்கறையுடன் கவனிக்கக்கூடிய மருத்துவர் நமக்குத்தேவை. பிரபல மருத்துவமனைகள் என்று பத்திரிகைகள், விளம்பரங்கள் சொல்வதை நம்பாதீர்கள். நமக்கு பழக்கமானவர்கள் சிபாரிசு செய்யும் நல்லதொரு மருத்துவரை உங்கள் குடும்ப மருத்துவராக வைத்துக்கொள்ளுங்கள். அப்போது தான் உங்கள் உடல்நலத்தை நீங்கள் சிறப்பாக கவனித்துக்கொள்ள முடியும். உங்கள் உடல் நிலைக்கேற்ப சிறப்பு மருத்துவரை அவரே பரிந்துரை செய்வார்.
சர்க்கரை அவ்வளவாக உங்கள் கட்டுக்குள் இல்லையென்றால் ஒரு குளுக்கோமீட்டர் வாங்கி தொடர்ந்து உங்கள் சர்க்கரை அளவை காலை வெறும் வயிற்றிலும் பின் சாப்பிட்டு 2 மணி நேரங்கழித்தும் சோதித்துப்பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும். முந்திய இரவு சாப்பிட்டு மறுநாள் காலை 12 மணி நேரம் கழித்து வெறும் வயிற்றில் சர்க்கரை அளவை பரிசோதனை செய்ய வேண்டும். அது போல காலை உணவு சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து சர்க்கரை அளவை பரிசோதனை செய்ய வேண்டும். இதன் மூலம் எந்த உணவு சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கிறது, எந்த உணவில் ச்ர்க்கரை அதிகம் இருக்கிறது என்பதை நாமே அறிந்து கொண்டு அதற்கேற்ப நம் உணவு பழக்கங்களை சரி செய்து கொள்ளலாம்.
ஆனாலும் குளுக்கோமீட்டர் எப்போதும் நம் சர்க்கரையின் அளவை சற்று கூடுதலாகவே காண்பிக்கும். அதை விட இரத்த பரிசோதனை செய்யுமிடத்தில் பரிசோதித்துப் பார்த்துக்கொள்ளுவது நல்லது. அதுவும் நம்பகமான பரிசோதனை நிலையமாக இருக்க வேண்டும்!!!
மருந்துகள் முறையாக எடுப்பது அவசியம். மருத்துவர் பல வகையான மத்திரைகள் தரக்கூடும். அவற்றுள் உணவுக்கு முன், உணவுக்கு பின் என குறிப்பிடப் பட்ட வகைகள் இருக்கும். சிலர் இதைப் பொருட்படுத்துவதில்லை. எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் விழுங்குவார்கள். மருத்துவர் காரணமில்லாமல் அவ்வாறு எழுதித் தர மாட்டார். சில மாத்திரைகள் இன்சுலினை சுரக்கத் தூண்டுவதாக இருக்கலாம். சில உடலிலிருக்கும் இன்சுலினை பயன்படுத்திக் கொள்ள வகை செய்பவையாக இருக்கலாம். அதே போலவே, ஊசி மூலம் இன்சுலின் எடுத்துக் கொள்பவர்கள் உணவுக்கு எவ்வளவு நேரத்திற்கு முன் அதை எடுத்துக் கொள்ளவேண்டும் என மருத்துவர் எப்படி கூறுகிறாரோ அவ்வாறே செய்தல் வேண்டும்.
மருந்தோ அல்லது ஊசியோ ஒரு குறிப்பிட்ட வேளையில் எடுத்துக்கொள்ள மறந்து விட்டால், அதை இருமடங்காக அடுத்து வேளை எடுத்துக் கொள்ளக்கூடாது. அவ்வாறு மறந்து விட்ட வேளையின் மருந்தையும் சேர்த்து எடுத்தால் இரத்ததில் சர்க்கரையின் அளவு மிகக் குறைந்து மோசமான விளைவுகளை உண்டாக்ககூடும்.
சர்க்கரை மிக அதிகமாக, நம் கட்டுக்குள் இல்லையென்றால் மெதுவாக ஒவ்வொரு உறுப்பும் நம்மை பாதிக்க ஆரம்பித்து விடும்.
என் நெருங்கிய உறவினர் நாற்பது வயதினிலேயே சர்க்கரையினால் மரணமடைந்தார். சர்க்கரையை கட்டுக்குள் வைத்துக் கொள்ளததனால் முதலில் பார்வை பாதிக்கப்பட்டது. கண்களில் இரத்தக்குழாய்கள் வெடித்து ரத்தம் கசிய ஆரம்பித்தது. அப்போதும் அவர் ச்ர்க்கரையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முயன்றதில்லை. சிறிது நாட்களில் உடலில் சர்க்கரையினால் கட்டிகள் தோன்ற ஆரம்பித்தன. ச்ர்க்கரை அதிகம் இருந்தால் கட்டிகள் சுலபமாக ஆறாது. நாளடைவில் அவரின் சிறுநீரகம் பாதிப்படைய ஆரம்பித்தது. இரத்தத்தில் கிரியாட்டினின் அளவும் யூரியா அளவும் அதிகமாக ஆரம்பித்தன.
சிறுநீரகத்தின் செயல்பாடு ஆரோக்கியமாக இருந்தால் ரத்தத்தில் அதிகமாய் சேரும் உப்பு, பொட்டாசிய சத்துக்கள், சிரியாட்டினின் பாஸ்பேட்டில் இருந்து பிரியும் கிரியாட்டினின் எனும் வேதிப்பொருள் ஆகியவற்றை சிறுநீரகங்கள் வடிகட்டி சிறுநீர் மூலம் வெளியேற்றிவிடும். ரத்தத்தில் யூரியா எனப்படும் உப்பு சத்து அளவு 40 மில்லி கிராமுக்கு குறைவாக இருக்க வேண்டும். பொட்டாசிய சத்து 4.5 மில்லி கிராமுக்கு குறைவாகவும் கிரியாட்டினின் அளவு 1 மில்லி கிராமுக்கு குறைவாகவும் இருக்க வேண்டும். சர்க்கரை இரத்தத்தில் அதிகமாக அதிகமாக இவை சிறுநீரில் வெளியேறுவதும் அதிகமாகும். ஒரு கட்டத்தில் இவை வெளியேறுவது மிக அதிகமாக, சிறுநீரை சுத்தகரிப்பது என்ற 'ஹீமோ டயாலிஸிஸ்' ஆரம்பித்து விடும். என் உற்வினருக்கு சிறுநீரகம் சுத்தமாக செயலிழந்த நிலையில் மருத்துவர்கள் கை விரித்த நிலையில் அப்போது தான் தன் நிலைமை அவருக்கு தீவிரமாக புரிய ' என்னை எப்ப்டியாவது காப்பாற்றுங்கள்' என்று அழுதார். இறுதியில் பரிதாமாக இறந்தும் போனார்.
எல்லோருமே மரணம் அமைதியான முறையில் அதிகம் கஷ்டப்படாமல் இருக்க வேண்டும் என்று விரும்புவோம். ஒவ்வொரு அவயமாய் வீணாகி, அடுத்தவரின் பரிதாபத்திற்கு ஆளாகி இப்படி துடிதுடித்து இறக்க நேர்வது கொடுமை! சர்க்கரை நோய் பாதிப்பிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள ச்ந்தர்ப்பங்களை நிறைய இயற்கையே கொடுக்கின்றது. சந்தர்ப்பங்களை முழுவதுமாகப்பயன்படுத்திக்கொண்டு, அடுத்தவருக்கும் தொல்லை தராமல் வாழ்க்கையை இறுதி வரை நகர்த்திக்கொண்டு நாம் போக நமக்கு மன உறுதியும் நாக்குக் கட்டுப்படுத்துவதும் மிகவும் முக்கியம்.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு சுத்தமாக இருப்பது மிகவும் முக்கியம். வெளியிடங்களில் உள்ள கழிப்பறைகளை உபயோகிப்பதை அறவே தவிருங்கள். கழிப்பறைகள் மூலமாக ஒரு வகை மஞ்சள் காமாலை பரவுவதாய் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவசியம் கழிப்பறையை உபயோகிக்க வேண்டுமென்றால் நன்கு கழுவி விட்டு உபயோகியுங்கள்.
சமீபத்தில் ஏற்கனவே கிரியாட்டினினும் யூரியாவும் அதிகமாயிருந்த என் கணவரின் சகோதரர் சென்னையில் அவரின் மகளுக்குத் துணையாக மருத்துமனையில் சில காலம் இருக்க வேண்டியிருந்தது. அந்த சமயம் அவருக்கு மஞ்சள் காமாலை பரவியிருந்தது அவருக்கு தெரியவில்லை. குளிர் ஜுரம் வந்து மருத்துவமனையில் சேர்த்த போது அவருக்கு எல்லாமே மிக அதிகமாகி சிறுநீர் சுத்தகரிப்பு செய்தும் பலனன்றி இறந்து போனார்.
தாழ்நிலை சர்க்கரை : [ hypoglycemia ]
இரத்தத்தில் சர்க்கரை மிகவும் கீழே இறங்கும்போது தாழ்நிலை சர்க்கரை என்றாகிறது.
சர்க்கரை நோய் இருப்பவர்கள் அதிக வீரியமான மருந்துகள் எடுக்கும்போதும் ஒழுங்கான நேரத்தில் உணவு எடுக்காதபோதும் இந்த தாழ்நிலை சர்க்கரை ஏற்படுகிறது. மருந்து எடுத்த இரண்டு மணி நேரம் கழித்து அவசியம் ஏதேனும் பழம், இரன்டு மேரி பிஸ்கட் எடுப்பது அவசியம். மாத்திரையால் கீழிறங்கிக் கொண்டிருக்கும் சர்க்கரை மறுபடியும் சீரடையும். இதனால்தான் வெளியே செல்ல நேரிடும்போது சட்டைப்பையில் சில சாக்கலேட் வைத்திருக்கச் சொல்லுகிறார்கள். மாத்திரை எடுத்து 2, 3 மணி நேரங்களில் கால் சில்லிட்டு, உடல் மிக பலவீனமாக மாறும் நிலை அடிக்கடி ஏற்பட்டால் உங்கள் மருத்துவரிடம் செல்லுங்கள். அவர் அதற்கேற்ப உங்கள் மத்திரையை குறைத்து எழுதிக்கொடுப்பார்.
இது அல்லாமல் சர்க்கரை குறைய வேண்டுமே என்ற அதீத ஆவலில் மாத்திரைகளோடு ஏதாவது வெளித்தயாரிப்புகளான பவுடர்கள் எடுத்தால் சில நாட்களில் உங்களுக்கு தாழ்நிலை சர்க்கரை ஏற்படலாம்.
என் தாயார் விளம்பரங்களில் பார்த்த ஒரு பவுடரை வாங்கி ஆர்வக்கோளாறில் சாப்பிடப்போக, ஒரு நாள் மாலை அப்படியே உட்கார்ந்தபடியே எந்த செயலும் இல்லாத உணர்வற்ற நிலைக்குப்போய் விட்டார்கள்! உடனே அவர்களின் நெஞ்சில் விக்ஸ் தடவி பரபரவென தேய்த்து விட்டதும் 10 நிமிடங்களில் மெதுவாகக் கண் திறந்தார்கள். பின் அவர்களை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றினோம்.
தாழ்நிலை சர்க்கரை ஒரு நோயல்ல. மருந்துகளையும் அதன் பின் நம் உணவையும் கவனத்துட்ன் கையாண்டால் போதும், தாழ்நிலை சர்க்கரை ஏற்படாமல் நம்மை காத்துக்கொள்லலாம்.
மாதம் ஒரு முறை சர்க்கரைக்கான இரத்தப்பரிசோதனை அவசியம் செய்ய வேண்டும். நாள்பட்ட ச்ர்க்கரை நோய்க்காரர்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கிரியாட்டினின், யூரியா அளவுகளையும் கண்டறிதல் வேன்டும். அத்துடன் மூன்று மாதங்களுக்கான் மொத்த சர்க்கரை அளவையும் [ HBA1C ]பரிசோதித்துப்பார்த்துக்கொள்ள வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இரத்த்த்தின் கொழுப்புக்களின் விகிதங்களையும் கண்டறிதல் வேன்டும்.
மருத்துவத்தில் சித்த மருத்துவம், ஆயுர்வேதம், அக்குப்ப்ரெஷர், அக்குப்பங்சர், முத்திரைகள், யோகா என்று சர்க்கரையை கட்டுப்படுத்த பல்வேறு சிற்ந்த மருத்துவங்கள் இருக்கின்றன. எந்த மருத்துவத்தையாவது முழுவதுமாக மேற்கொண்டு, கூடவே நல்ல உணவுப்பழக்க வழக்கங்களையும் உட்ல் சுத்தத்தையும் மிதமான உடற்பயிற்சியையும் தொடர்ந்து கொண்டிருந்தால் சர்க்கரை நம்மை விட்டு முழுவ்துமாக ஓடிப்போகாவிட்டாலும் நம்மை விட்டு எட்டியே நின்று கொன்டிருக்கும்!!