இந்த முறை 'முத்துக்குவியலில்' நான் சமீபத்தில் படித்து வியந்த சில செய்திகளைக் குறிப்பிட்டு எழுதலாமென்று நினைத்தே. இங்கே வெளியிட்டிருக்கும் இரண்டு செய்திகளுமே மிக மிக ஆச்சரியமான விஷயங்கள்தாம்!
குழந்தையே பிறக்காத கிராமம்!
இப்படி ஒரு செய்தியைப்படித்தபோது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
ஸ்பெயினின் தலைநகரான மாட்ரிடிலிருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது சியூன்கா நகர். அதனருகில் உள்ள ஒல்மெடா தி லா சியூஸ்டா என்ற கிராமத்தில்தான் கடந்த 40 வருடங்களாக குழந்தைகலே பிறக்கவில்லை. குழந்தைகள் மட்டுமில்லை, சிறுவர்கள், இளைஞர்களைப்பார்த்தும்கூட 40 வருடங்கள் ஆகிவிட்டன இந்த கிராமத்திற்கு.
இந்த கிராமத்தின் மொத்த மக்கள் தொகையே 15 பேர் தான். அவர்களும் 65 வயதிலிருந்து 90 வயதிற்குட்பட்டவர்கள். ஒரு காலத்தில் இந்த கிராமம் விவசாயத்தில் கொடி கட்டிப் பறந்திருக்கிறது. அதன் பின் விவசாயம் கொஞ்சம் தடுமாற பிழைப்புக்காக வெளி மாநிலங்களில் இந்த கிராமத்து மக்கள் குடியேறி விட்டார்கள். நல்லது, கெட்டது எதற்குமே அப்படிச் சென்றவர்கள் திரும்ப வந்ததில்லை. கிராமத்தை விட்டு வெளியேற விரும்பாத சிலர் அப்படியே இருந்து விட, ஐந்து வருடங்களுக்கு முன் கணக்கெடுத்தபோது 22 பேர்களாயிருந்து, இப்போது பதினைந்தாகக் குறைந்து விட்டார்கள்.
அதற்காக, நிலைமையைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கவில்லை இந்தப் பெரியவர்கள். தன் கிராமத்துக்குப் புது ரத்தம் பாய்ச்சியே ஆக வேன்டும் என முடிவெடுத்து அதற்கான செயலிலும் இறங்கி விட்டார்கள். அதற்காக அவர்கள் கையிலெடுத்த ஆயுதம் ரியல் எஸ்டேட். நிலங்களை மிகக் குறைந்த விலைக்கு விற்கத் தொடங்கினார்கள். அதற்காக அவர்கள் போட்ட நிபந்தனை ஒன்றே ஒன்றுதான். நிலத்தை வாங்குபவர்கள் இளைஞர்களாக இருக்க வேண்டுமென்பதுதான். தற்போது பலரும் அங்கே நிலங்களை வாங்கிப் போட்ட வண்ணம் இருக்கிறார்களாம். ஆனாலும் ஓரளவு அங்கே ஜனத்தொகை கூடுவதற்கு இன்னும் 10 ஆண்டுகள் பிடிக்கும் என்கிறார் சியூன்கா மேயர்!
&&&&&&&&&
தாய்ப்பால் ஐஸ்க்ரீம்!
ஐஸ்கிரீமிஸ்ட்ஸ்!
இது லண்டனிலுள்ள மிகப்பெரிய ஐஸ்கிரீம் பார்லர்! இங்கு ஒரு ஐஸ்கிரீம் கிடைக்கிறதென்றால் அது வேறு எங்கேயும் அறிமுகப்படுத்தாத அல்லது அறிமுகப்படுத்தியிருந்தாலும் அத்தனை சுவையில்லாததாகத்தான் இருக்கும்!
இதன் நிறுவனர் எப்போதுமே வித்தியாசமாக சிந்திப்பவர். அதனால்தான் யாருமே கற்பனைகூட செய்திருக்க முடியாத தாய்ப்பால் ஐஸ்கிரீம் விற்பனைக்கு வந்திருக்கிறது. உலகில் பல தாய்மார்களுக்கு தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுவதில் சிரமம் இருக்கின்றன. கொடுப்பதில் உடல் ரீதியான பிரச்சினைகள் இருக்கலாம் அல்லது குடிப்பதில் குழந்தைகளுக்குப் பிரச்சினைகள் இருக்கலாம். இதன் விளைவாக, பால் கட்டிக்கொண்டு செயற்கை முறையில் அதை வெளியேற்ற வீணாக்க வேண்டியிருக்கிறது.
இப்படிப்பட்டவர்கள் தயவு செய்து உங்கள் பாலை வீணாக்காமல் எங்களுக்குத் தாருங்கள். நாங்கள் காசு தருகிறோம் என்று ஒரு விளம்பரம் இதன் நிறுவனர் வெளியிட்டார். பல தாய்மார்கள் முன் வந்தார்கள். அந்தத் தாய்ப்பாலை அதி நவீன முறையில் பதப்படுத்தி ஐஸ்கிரீம் தயாரித்திருக்கிறது ஐஸ்கிரீமிஸ்ட்ஸ் கம்பெனி!
ஒரு தாய்ப்பால் ஐஸ்கிரீம் விலை 14 பவுண்டுகள்! [23 டாலர்கள், கிட்டத்தட்ட ஆயிரத்து இருநூறு ரூபாய்கள்!}