Friday, 15 October 2010

முத்துக்குவியல்-3


1. எழுத்தாளர் அனுராதா ரமணன் தான் இறப்பதற்கு 3 மாதங்கள் முன் ஒரு மாத நாவலில் தனது ‘மன ஊஞ்சலில்’ நூலில் வரும் சில பகுதிகளை எழுதியிருந்தார்.

“ வலிகள் வரும்போதெல்லாம் நான் இரு வழிகளை கடை பிடித்தேன்.

ஒன்று:

அந்த வலியை கண்களை மூடிக்கொண்டு அனுபவிப்பது. “ இது எப்படி சாத்தியம்?” என்று கேட்பவர்களுக்கெல்லாம் நான் சொல்லிக்கொள்வது ஒன்றுதான். நம் மனதை ஒன்று திரட்டி அதாவது ஒருமுகப்படுத்தி- வலிக்கும் பாகத்தில் வைக்க வேண்டும். பழக்கமாகும் வரையில் கஷ்டம்தான். அப்போதுதான் இதையும் விட வலி வரும்போது தாங்க முடியும்.

இரண்டு:

வலியை மறக்க வேறு எதிலாவது மனதைச் செலுத்துதல்-மனதுக்கு பிடித்த சம்பவங்கள், மனிதர்கள்-இது மாதிரி. எனக்கு நெஞ்சு வலி வரும்போதெல்லாம் எனக்குப் பிடித்த இடங்களுக்கு பயணம் செய்யப்போய் விடுவேன். எப்போது தூங்குவேன் என்று எனக்கே தெரியாது. ஆனால் இது போன்ற மரண அவஸ்தையின் முடிவில் எனக்காக இனிமையானதொரு நாள் காத்திருப்பதாக நினைப்பேன். எனக்கு ஒவ்வொரு விடியலும் அதி முக்கியமானது. வாழ்க்கை தன் புதுப்பக்கத்தை எனக்காக திறந்து வைக்கிறது.. .. ..

படித்தபோது மனசு கனமானது. வாழ்க்கையில் நம்மை அடித்துப்போடும் துரோகங்களையும் உடலைத் துடிக்க வைக்கும் நோய்களின் கொடுமைகளையும் எதிர்த்துப்போராட மிகுந்த மன வலிமை வேண்டும். அது அவர்களுக்கு அதிகமாகவே இருந்திருப்பதை அறியும்போது மானசீகமாக ஒரு மலர் வளையத்தை மனசு அவர்கள்மீது அணிவிக்கிறது!

2. சமீபத்தில் ரசித்த பழமொழி:

“ பேசாத வார்த்தைகளுக்கு நீ எஜமானன்.
 பேசிய வார்த்தைகள் உனக்கு எஜமானன்”

- கார்லைல்-


3. இன்றைய பள்ளிக் கல்வியில் பல நவீன தொழில் நுட்பங்கள் வந்தாலும் இன்னும் கரும்பலகையையும் சாக்பீஸையும் உபயோகிப்பது பல கிராமங்களில் தொடர்கிறது. எப்போதும் இந்த சாக்பீஸுடனேயே உறவாடும் ஆசிரியர்களில் 40 சதவிகிதம் பேர் மூச்சுக்குழல் நோய் பாதிக்கப்பட்டு அவதியுறுகிறார்கள் என்று சர்வே ஒன்று கூறுகிறது. காரணம் முன்பெல்லாம் கார்பன் கார்பனேட் மட்டும் கலக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட சாக்பீஸ் இன்று ஜிப்ஸம் என்ற வேதிப்பொருளும் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இது உடலுக்கு பல பிரச்சினைகளைக் கொடுக்கிறது.

4. மாத்திரைகள் எடுப்பவர்கள் அந்த சமயத்தில் ஆல்கஹாலும் சேர்த்து எடுப்பது உடலுக்கு பல பிரச்சினைகளை உண்டு பண்ணுகிறது. ஆஸ்பிரினுடன் ஆல்கஹால் எடுக்கும்போது அதன் பலன் 25 சதவிகிதம் அழிக்கப்படுகிறது. பாரசிட்டமாலுடன் ஆல்கஹால் எடுக்கும்போது இரண்டுமே கல்லீரலில் சிதைக்கப்படுகின்றன. அதனால் கல்லீரலில் பாதிப்பு ஏற்படுகிறது.

5. ரொம்ப நாட்களுக்கு முன் நடந்த உண்மை சம்பவம். ஒரு பெண்கள் மலரில் ஒரு சினேகிதி எழுதியதைப் படிக்க நேர்ந்தது.

அவரின் தம்பியும் அவருடைய உறவினர் மகனும், கிணற்றில் பொருத்தியிருந்த மோட்டாரில் நீர்க்கசிவு இருந்ததால் அதை ஏனென்று பார்க்க கிணற்றுக்குள் இறங்கியிருக்கிறார்கள். கிணற்றின் பைப்பை பிடித்துக்கொண்டு இறங்கி தண்ணீர் மட்டம் வரை சென்று பார்த்திருக்கிறார்கள். தண்ணீரில் கொப்புளங்கள் போல வருவதையும் இலேசாக எண்ணெய்போல ஏதோ மிதப்பதையும் கண்டு குனிந்து பார்த்திருக்கிறார்கள். முகத்தில் அடித்த விஷ வாயு உடனடியாக அவர்களை தாக்கி கைப்பிடி நழுவ சமாளிக்க முடியாமல் தண்ணீரில் இருவரும் விழ, சினேகிதியின் அண்ணன் உடனேயே இறந்து விட்டார். உறவினர் மகனை மட்டும் தீயனைப்புப் படையினர் வந்து காப்பாற்றிவிட முடிந்தது. அவர் கடைசியில் எழுதியிருந்த வேண்டுகோள்:

“தயவு செய்து அபாயகரமான வேலைகளைத் தெரியாது செய்யாதீர்கள். மின்சாரம், காஸ் ஸ்டவ், நெருப்பு-இவைகளால் ஏற்படும் கோளாறுகளை நீங்களே சரி செய்யாதீர்கள். உயிர் விலைமதிப்பற்றது.

46 comments:

இலா said...

அருமையான முத்துக்கள்!
எனக்கும் வலி மறக்க இரண்டாவது வழி தான் சரிப்பட்டு இருக்கு.மனசின் காயங்கள் ஆற காலம் தான் சரியான மருந்து.

ராம்ஜி_யாஹூ said...

thanks for sharing.

CS. Mohan Kumar said...

Excellent. Liked the first and last one very much.

ஜெய்லானி said...

//“தயவு செய்து அபாயகரமான வேலைகளைத் தெரியாது செய்யாதீர்கள். மின்சாரம், காஸ் ஸ்டவ், நெருப்பு-இவைகளால் ஏற்படும் கோளாறுகளை நீங்களே சரி செய்யாதீர்கள். உயிர் விலைமதிப்பற்றது//

எதையும் கற்றூக்கொள்ளும் ஆர்வம் என்ற பொய்யை சொல்லி தன்னை தானே பலியாடாய் மற்றிக் கொள்பவரே அதிகம் .

ஜெய்லானி said...

//இலா--அருமையான முத்துக்கள்!
எனக்கும் வலி மறக்க இரண்டாவது வழி தான் சரிப்பட்டு இருக்கு.மனசின் காயங்கள் ஆற காலம் தான் சரியான மருந்து. //

ரிப்பீட்ட்ட்

Chitra said...

வாழ்க்கையில் நம்மை அடித்துப்போடும் துரோகங்களையும் உடலைத் துடிக்க வைக்கும் நோய்களின் கொடுமைகளையும் எதிர்த்துப்போராட மிகுந்த மன வலிமை வேண்டும்.


..... so true!

Chitra said...

“தயவு செய்து அபாயகரமான வேலைகளைத் தெரியாது செய்யாதீர்கள். மின்சாரம், காஸ் ஸ்டவ், நெருப்பு-இவைகளால் ஏற்படும் கோளாறுகளை நீங்களே சரி செய்யாதீர்கள். உயிர் விலைமதிப்பற்றது.


.......Good message

தமிழ் உதயம் said...

வலி முதல் முறையாக வலிக்கும் போது தான் வலிக்கும். பிறகு வலி பழகி விடும். வலி சுமந்த அனுராதாரமணன் நமக்கு வழிகாட்டி தான்.

Vidhya Chandrasekaran said...

முத்துக்குவியல் அருமை.

புவனேஸ்வரி ராமநாதன் said...

அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி.

Asiya Omar said...

முத்துக்குவியல்-3. பகிர்ந்தமைக்கு நன்றி.

Vijiskitchencreations said...

நல்ல பதிவு.

“ பேசாத வார்த்தைகளுக்கு நீ எஜமானன்.
பேசிய வார்த்தைகள் உனக்கு எஜமானன்”
நல்ல பழமொழி.

வலியை மறக்க வேறு எதிலாவது மனதைச் செலுத்துதல்-மனதுக்கு பிடித்த சம்பவங்கள், மனிதர்கள்-இது மாதிரி. சூப்பரான எழுத்து இது தான் நானும் பாலோ பன்னுவேன்.

Menaga Sathia said...

அருமையான முத்துக்கள்!!

எஸ்.கே said...

அருமையான கட்டுரை!

Anisha Yunus said...

சரியாக சொன்னீங்கக்கா. அவங்கவங்களுக்கு தெரிஞ்ச விஷயத்தில்தான் மூக்கை நுழைக்கனும். ஆனால் விஷயம் எப்படிபட்டது என்பதைப் பொறுத்துதான் ரிஸ்க் எடுக்க அனுமதிக்க முடியும். இப்படி அனியாயமாக இறந்து போனது வருத்தமே. :(

ஸாதிகா said...

அக்கா,அருமையான பதிவுக்கா.//பேசாத வார்த்தைகளுக்கு நீ எஜமானன்.
பேசிய வார்த்தைகள் உனக்கு எஜமானன்”// பொன்னெழுத்துக்களில் பொரிக்கப்படவேண்டியவை.

தினேஷ்குமார் said...

வணக்கம் அம்மா

//எனக்கு நெஞ்சு வலி வரும்போதெல்லாம் எனக்குப் பிடித்த இடங்களுக்கு பயணம் செய்யப்போய் விடுவேன். எப்போது தூங்குவேன் என்று எனக்கே தெரியாது. ஆனால் இது போன்ற மரண அவஸ்தையின் முடிவில் எனக்காக இனிமையானதொரு நாள் காத்திருப்பதாக நினைப்பேன். எனக்கு ஒவ்வொரு விடியலும் அதி முக்கியமானது. வாழ்க்கை தன் புதுப்பக்கத்தை எனக்காக திறந்து வைக்கிறது.. .. .. ///

அருமையான பதிவு
தன்னம்பிக்கை வரிகள்
இந்த மாதிரிதான்மா ஒரு முறை குடும்ப சுற்றுலா சென்று வரும்போது நள்ளிரவு பனிரெண்டு மணி இருக்கும் பேருந்து மிக வேகமாக சென்று கொண்டிருந்தது என் நண்பன் படிக்கட்டில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க நான் பேருந்து படிகளில் உட்கார்ந்திருந்தேன் எதிபாராத விதமாக பேருந்து கதவு திறந்து நான் முழுவதுமாக வெளியே சென்று விட்டேன் கண் இமைக்கும் நேரத்தில் வினாடிகளில் மரணம் என்ற நிலை மனதை திடப்படுத்தி உடலை ரப்பராக்கி உருண்டேன் நள்ளிரவில் உயிர்பிழைத்தேன் பேருந்து வெகுதொலைவு சென்று நின்றது என் சடலத்தை எங்கு தேடியும் காணவில்லை. நான் சாலையோர புதர்மிகுந்த எரி ஒன்றிலிருந்து நான் இங்க இருக்கேன் எனக்கு ஒன்னும் ஆகலைன்னு சொல்லிக்கொண்டே நடந்து வந்துக்கொண்டிருந்தேன் அனைவரும் என் பக்கம் வரவே சற்று தயங்கினர். பின் வந்து கட்டியனைத்துக்கொண்டனர்.
இன்னும் எனக்குப் புரியவில்லை என்மீது உள்ள நம்பிக்கையில் பிழைத்தேனா கடவுளின் அருளா
எலும்பு முறிவில்லாமல் சிறு சிறு காயங்கள் மட்டுமே என் உடலில்..........
இன்றைக்கு நினைத்தாலும் நீள்கிறது...........

vanathy said...

super & very touching.

Kousalya Raj said...

மிக முக்கியமான பகிர்வு. பகிர்தலுக்கு நன்றி.

ஹுஸைனம்மா said...

வலி குறித்த அனுராதா அவர்களின் வரிகள் எல்லோருக்கும் அவசியப் பாடம். (பயன்படுத்தும் சூழ்நிலை வரவேண்டாமெனினும்).

சாக்பீஸ் - வகுப்பில் டீச்சர்களின் தலைமுழுதும் வெள்ளையாய் ஆகிவிடும். முதல் டெஸ்கில் இருப்பவர்களுக்கும் தாராளமாய் பன்னீர் தெளிப்பதுபோலக் கிடைக்கும்!! அப்பவே இது கெடுதல் என்று சொல்வார்கள். இப்ப நாகரீக உலகில்..

//மின்சாரம், காஸ் ஸ்டவ், நெருப்பு-இவைகளால் ஏற்படும் கோளாறுகளை நீங்களே சரி செய்யாதீர்கள்.//

ரொம்பச் சரி அக்கா. நான் இதனாலேயே சிலதை வீட்டுக்காரரிடம் சொல்லவே மாட்டேன்!!

மனோ சாமிநாதன் said...

ஆமாம் இலா! வலிகளை மறக்க இந்த வழி சிறந்தது என்றாலும் நோயின் தீவிரத்தால் ஏற்படும் வலியை மறக்க இந்த வழியை பயிற்சி செய்வது மிகவும் கடினம்!!

மனோ சாமிநாதன் said...

கருத்துக்கு மிக்க நன்றி சகோதரர் ராம்ஜி!

மனோ சாமிநாதன் said...

Thanks a lot for the nice appreciation Mr.Mohankumar!

மனோ சாமிநாதன் said...

அன்புச் சகோதரர் ஜெய்லானி!

பொதுவாய் வீட்டில் சின்ன சின்ன ரிப்பேர் வேலைகளை நாம்தான் செய்வோம் இல்லையா? இதை படித்த பின் ஒன்றுக்கு நூறு தடவை யோசிக்கணும் என்ற உனர்வு ஏற்பட்டிருக்கிறது!!

மனோ சாமிநாதன் said...

கருத்துக்கு அன்பு நன்றி சித்ரா!!

மனோ சாமிநாதன் said...

எனக்கென்னவோ ஒவ்வொரு வலியும் கொடுமையானது என்றுதான் தோன்றுகிறது தமிழ் உதயம்! இரு கோடுகள் மாதிரி, பழைய வலியின் தீவிரம் ஒரு புதிய வலி வந்ததும் குறைந்து விடுகிறது! இதுதான் நிதர்சனம்!

மனோ சாமிநாதன் said...

கருத்துக்கு அன்பு நன்றி சகோதரர் கோபி ராமமூர்த்தி!

மனோ சாமிநாதன் said...

அன்பான கருத்துக்கும் பாராட்டுக்கும் மகிழ்வான நன்றி வித்யா!

மனோ சாமிநாதன் said...

கருத்துக்கும் பாராட்டுக்கும் அன்பு நன்றி புவனேஸ்வரி!

மனோ சாமிநாதன் said...

அன்பு நன்றி ஆசியா!!

மனோ சாமிநாதன் said...

கருத்துக்களையும் பாராட்டுக்களையும் வழங்கியதற்கு அன்பு நன்றி விஜி!!

மனோ சாமிநாதன் said...

அன்பு நன்றி மேனகா!!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி எஸ்.கே!!

மனோ சாமிநாதன் said...

ஆமாம் அன்னு! சாதாரணமாக இந்த மாதிரி ரிப்பேருக்கு எத்தனையோ பேர் இந்த மாதிரி கிணற்றில் இறங்கி சரி செய்வதை பார்த்திருக்கிறேன். அப்படி செய்வது எத்தனை ஆபத்து என்பதை இத்தனை கொடூரமாக ஒரு மரணம் உணர்த்தியிருக்கிறது! பாவம், அந்தக் குடும்பத்தில் எப்படியெல்லாம் துடித்திருப்பார்கள்!

மனோ சாமிநாதன் said...

ஆமாம் ஸாதிகா! எனக்கும் இந்தப் பழமொழி மிகவும் பிடித்திருக்கிறது! இந்த நாக்கைக் கட்டுப்படுத்தாவிட்டால் எத்தனை கஷ்டங்கள் தொடர்ந்து வருகின்றன!!

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள தினேஷ்குமார்!

உடல் நலம் சரியில்லாததால் பதில் எழுதத் தாமதமாகி விட்டது.
உங்கள் பதிவு என்னை மிகவும் பாதித்தது. அந்த அனுபவத்தை அவ்வளவு சுலபமாக மறக்கவோ, ஒதுக்கி மனதின் அடியில் போட்டு வைப்பதோ மிகவும் கடினம்தான்.
இருந்தாலும் மேலே எழுதியிருப்பதுபோல, உலகத்தின் அழகான, பரிசுத்தமான விஷயங்களில் மனதை செலுத்தி இந்த மாதிரி அனுபவங்களின் கசப்பை மறக்க முயலுங்கள். வாழ்க்கையில் இது போன்ற நிகழ்வுகள் அவ்வப்போது தோன்றிக்கொண்டுதான் இருக்கும். அவற்றை ‘ இதுவும் கடந்து போகும்’ என்று எடுத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் வாழ்க்கை இலேசாக இருக்கும்.
சில பேருக்கு, மிகப்பெரிய துன்பம் கூட அதன் சுவடுகள் எதுவுமேயில்லாமல் பறந்து போய் விடும். அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்! நீங்களும் அவர்களில் ஒருவர் என்றே நான் நம்புகிறேன்!

மனோ சாமிநாதன் said...

Thanks a lot for the appreciation Vanathy!

மனோ சாமிநாதன் said...

கருத்துக்கு அன்பு நன்றி கெளசல்யா!

மனோ சாமிநாதன் said...

விரிவான கருத்துக்களுக்கு இதயங்கனிந்த நன்றி ஹுஸைனம்மா!

அன்புடன் மலிக்கா said...

//படித்தபோது மனசு கனமானது. வாழ்க்கையில் நம்மை அடித்துப்போடும் துரோகங்களையும் உடலைத் துடிக்க வைக்கும் நோய்களின் கொடுமைகளையும் எதிர்த்துப்போராட மிகுந்த மன வலிமை வேண்டும்.//

நிச்சயமாக.இறைவன் அதனை நமக்கு வழங்க வேண்டும்

நல்ல விழிப்புணர்வுடன் கூடிய பதிவு.மனோம்மா..

'பரிவை' சே.குமார் said...

அருமையான முத்துக்கள்!

Muthalavathu namakku saththiyamillai...

irantavathuthaan enakku saththiyamanathu.

Kanchana Radhakrishnan said...

வாழ்க்கையில் நம்மை அடித்துப்போடும் துரோகங்களையும் உடலைத் துடிக்க வைக்கும் நோய்களின் கொடுமைகளையும் எதிர்த்துப்போராட மிகுந்த மன வலிமை வேண்டும்.

...true.

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு அன்பு நன்றி மலிக்கா!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் குமார்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுப் பதிவிற்கு அன்பு நன்றி காஞ்சனா!!

மனோ சாமிநாதன் said...

இதை இண்ட்லியில் இணைத்து ஓட்டளித்த அன்புச் சகோதரர் ஜெய்லானி அவர்களுக்கு என் அன்பு நன்றி! இணைந்து ஓட்டளித்த தோழமைகள் கெளசல்யா, ஸாதிகா, ஆசியா, புவனேஸ்வரி, சித்ரா- ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி!!