முத்துச்சிதறலில் சமையல் குறிப்பு வந்து நாட்களாகி விட்டன. இன்றைய சமையல் முத்தாக எல்லோருக்கும் பிடித்த கார வகை ஏதேனும் போடலாம் என்ற நினைப்பு வந்த போது உரப்படையின் ஞாபகம் உடனே வந்தது. இந்த உரப்படை தமிழ் நாட்டில் ஊருக்கு ஊர் வித்தியாசப்படும். அதுவும் தஞ்சை மாவட்டத்தில் இது வீட்டுக்கு வீடு மாறுபட்டிருக்கும் செய்முறையில். ஆனால் சுவை என்னவோ ஒன்றை விட மற்றொன்று மிஞ்சியே இருக்கும். இந்த உரப்படை சமீபத்தில் என் சினேகிதியிடம் கற்றது. மாலை நேரத்தில் மழைக்காலத்தில் இதன் சுவையே அபாரம்தான்!! செய்து பாருங்கள்!
உரப்படை:
தேவையானவை:
புழுங்கலரிசி - ஒன்றரை கப்
சோம்பு- 1 ஸ்பூன்
மிளகாய் வற்றல்-6
தேவையான உப்பு
பொட்டுக்கடலை- 3 மேசைக்கரண்டி
மெல்லியதாக அரிந்த பெரிய வெங்காயம்-1
கறிவேப்பிலை- சில இலைகள்
பொடியாக அரிந்த கொத்தமல்லி- கால் கப்
பொரிக்கத் தேவையான எண்ணெய்
செய்முறை:
பொட்டுக்கடலையை நன்கு பொடித்து மாவாக்கவும்.
புழுங்கலரிசியை ஊறவைத்து சோம்பு, உப்பு, மிளகாய் வற்றலுடன் கெட்டியாக ஆரைக்கவும்.
பொட்டுக்கடலை மாவைச் சேர்த்துப் பிசையவும்.
வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்கு பிசைந்து துணியில் வடையை விட சற்று மெல்லியதாக தட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
சூடான சுவையான உரப்படை தயார்!!
53 comments:
நல்ல பகிர்வு. எங்கள் பக்கம் இதை ‘தட்டை’ என அழைப்போம்.
//மாலை நேரத்தில் மழைக்காலத்தில் இதன் சுவையே அபாரம்தான்!! //
அதே:)!
மனோ அக்கா தட்டை பார்க்கவே சூப்பர்.உரப்படை என்ற பெயரை இப்ப தான் கேள்விபடுறேன்.
எங்கள் ஊர் பக்கம் தட்டை என்று செய்வார்கள்... ஆனால், வெங்காயம் போடுவதில்லை.
looks delicious
நன்றி ராமலக்ஷ்மி!
தட்டை என்பது வேறு. அதுவும் பல முறைகளில், பச்சரிசி, புழுங்கலரிசியில் செய்யப்படுவது. அதை எண்ணெயில் பொரிக்கும்போது மொறு மொறுவென இருக்கும். பல நாட்களுக்கு வைத்து உபயோகிக்கலாம்.
இந்த உரப்படை என்பது மிகவும் ஸாஃப்டாக இருக்கும். ஒரு நாளுக்கு மேல் உபயோகிக்க முடியாது. சூடாகச் சாப்பிட்டால்தான் அதிக சுவை!!
அன்பு நன்றி ஆசியா!
உரப்படை நான் எழுதியிருப்பது போல எங்கள் ஊர் பக்கம் பலவிதமாக செய்வார்கள்.
தட்டைக்கும் இதற்கும் வித்தியாசத்தை மேலே எழுதியிருக்கிறேன்.
அன்பு நன்றி சித்ரா!
தட்டை என்பது வேறு. இது மிகவும் மிருதுவாக இருக்கும். தட்டை போல மொறுமொறுவென்று இருக்காது.
உரப்படை மிகவும் வித்தியாசமா இருக்கு,இப்போதான் நானும் கேள்விபடுகிறேன்...
ரொம்ப மிருதுவா இருக்கும் போல. நல்லாயிருக்கு.
தஞ்சையில் படித்த காலத்தில் சாப்பாட்டை தவிர வேறெதிலும் கவனம் சென்றதில்லை...ஹி..ஹி...ஹி....ஆனா இதை சாப்பிடிருக்கிறேனான்னு ஞாபகமில்லை. அதுக்கென்ன...செஞ்சு சாப்பிடுட்டே மறுபடியும் பதில் சொல்றேன்... ஆனா பாக்கவே நல்லா இருக்குக்கா...:)
புது ரெசிப்பி..பேரும் புதுசா இருக்கு.சீக்கிரம் செய்து பார்க்கிறேன் மனோ மேடம்.
வித்தியாசமாக உள்ளது மனோ அக்கா.கண்டிப்பாக செய்து பார்த்து விடுவோம்.
நல்லாயிருக்கு
//தட்டை என்பது வேறு.//
ஓ சரிங்க:)! இதை செய்து பார்க்கிறேன். நன்றி.
பாக்க நல்லாருக்கு. இங்க தட்டைன்னு சொல்லுவாங்க..
உரப்படை சூப்பர். சும்மா கெட்டி சட்னி வெச்சிக்கிட்டு மழை பேயும் நல்லா குளிரான முற்பகல் அல்லது பிற்பகல் நேரத்தில் சீட்டாடிக்கொண்டே சாப்பிட்டால், சொர்க்கம்தான் போங்கள்.
Nalla pakirvu amma...
engal paguthiyil ramalakshmi akka sonnathu pola thattai endruthaan solluvim...
பேரே வித்தியாசமா இருக்கே..!! இது ஸ்வீட் கடைகளில் கிடைக்குமா??
nice tipz..
nice
வித்தியாசமான ஒன்றாக தான் இருக்கிறது...செய்து பார்க்கணும்....! படம் பாக்கிறப்போவே சாப்பிடனும் போல தோணுது
ம்னோ அக்கா. இதை நான் ஒரு பெங்களூரு தோழி வீட்டில் சாப்பிடது நினைவுக்கு வருகிறது. அவங்க இதே முறையில் செய்தாங்க. அதை அவ நிப்பட்டு என்று சொல்லி குடுத்தாள். நல்ல ரெசிப்பி.
வணக்கம் அம்மா
அம்மா நாபகம் வந்து விட்டது
நான் திருச்சியில் வேலை பார்த்துக்கொண்டு இருக்கும்போது அம்மா என்னோடு சில நாட்கள் தங்கினார்கள் காலமெல்லாம் எங்களுக்காக சமைத்துபோட்ட கைகள் அது அவர் என்னோடு தங்கிய சில நாட்களை நேற்றும் என்னோடு தொலைபேசியில் பகிர்ந்துகொண்டாங்க அம்மா
அம்மா என்னோடு தங்கிய நாட்களில் நான் சமைத்துப்போட்டு அவர் ஆசையாக உணவருந்த நான் ரசிப்பேன் இன்றும் இனிக்கிறது அம்மா பாராட்டிய என் கைப்பக்குவம் ...............
அதுக்காக அவ்வளவு நல்லா சமைப்பேன்லாம்னு இல்லை ஏதோ
எனக்கு தெரிந்தது
கத்தரிக்காய் எண்ணெய் குழம்பு
கில்லிபோட்ட சாம்பார்
காய்போட்ட சாம்பார்
மோர்குழம்பு
பீன்ஸ் ஆவி பொறியல்
கோவைக்காய் ஆவி பொறியல்
உருளைகிழங்கு பொடி பொறியல்
இவ்வளவுதாம்மா எனக்குத் தெரியும்
கண்டிப்பா ஊருக்குப் போனதும் உரப்படை அம்மாவுக்கு செஞ்சு தருவேன்
akka, super recipe!
Thanks a lot for the nice comment Krishnaveni!!
இந்த உரப்படை எங்கள் பக்கத்தில் பிரபலமானது சித்ரா! இதே புழுங்கலரிசியில் துவரம்பருப்பை ஊற வைத்தும் செய்வார்கள். சிலர் துவரம்பருப்பு, உளுந்து ஊறவைத்து அரைத்து வாழைப்பூவை சன்னமாக வெட்டிப்போட்டும் செய்வார்கள்!!
ஆமாம் புவனேஸ்வரி! இது ரொம்பவும் மிருதுவாகவும் காரசாரமாக வெங்காய ருசியுடன் அருமையாக இருக்கும்!
பாராட்டுக்கு அன்பு நன்றி அன்னு! செய்து பார்த்து, சாப்பிட்டு எழுதுங்கள்!!
செய்து பார்த்துச் சொல்லுங்கள் மகி!
இது மிகவும் வித்தியாசமான கார அடை! செய்து பார்த்து சொல்லுங்கள் ஸாதிகா!!
பாராட்டுக்கு அன்பு நன்றி தியா!
அன்பு நன்றி வித்யா!
நான் முன்பே எழுதியது மாதிரி தட்டை வேறு, உரப்படை வேறு!!
அன்புச் சகோதரர் கோபி ராமமூர்த்தி!
பழைய நினைவுகளையெல்லாம் கிளறி விட்டீர்கள்!! உண்மை தான். யாராவது சுடச்சுட செய்து கொடுக்க, புத்தகம் படித்துக்கொண்டே அல்லது சீட்டு விளையாடிக்கொண்டே சாப்பிடுவது தான் எத்தனை சுவை! பெண்களுக்கு எப்போதும் செய்து கொடுக்கிற வேலைதான். இந்த சுகமெல்லாம் சின்ன வயதோடு போய்விட்டது!!
அன்பு நன்றி சகோதரர் குமார்!!
சான்ஸே இல்லை சகோதரர் ஜெய்லானி! வீடுகளில்தான் இதை சுடச்சுட செய்வார்கள்!!
Thanks a lot for the nice comment Puthiya manithaa!
உரப்படை எங்கள் ஊரிலும்
புகழ் பெற்ற ஓன்று.
பயனுள்ள பதிவு.
Thank you very much for the nice comment as well as the first visit!
பாராட்டுக்கு அன்பு நன்றி கெளசல்யா! அவசியம் செய்து பாருங்கள்!!
பாராட்டுக்கு அன்பு நன்றி விஜி!
நிப்பெட்டும் தட்டை போலவே இருக்கும் மொறுமொறுவென்று! இது அதிரசம் மாதிரி சற்று மொத்தமாக மிருதுவாக இருக்கும்.
அம்மாவுக்கு ஆசையாக சமைத்துப்போட்டதைப் பற்றி எழுதியிருந்ததைப் படித்து மிகவும் சந்தோஷமாக இருந்தது தினேஷ்குமார்! நிச்சயம் உங்கள் அம்மாவுக்கு அதைவிட வேறு பெருமிதம் இருந்திருக்க முடியாது! இத்தனை சமையல் குறிப்புகளைத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்! என் அன்பான பாராட்டுக்கள்! நிச்சயம் உங்கள் மனைவி கொடுத்து வைத்தவர்கள்தான்!!
Thank you for the nice appreciation Vanathy!
மனோ மேடம்...
இந்த உரப்படை என்பது உறைப்பான அடை என்பது தானோ??!!
ஆனாலும், அந்த அடைகள் ரொம்ப சின்னதா, பஜ்ஜி போலவே இருக்கு...
டேஸ்டும் சூப்பரா இருக்கும்னு நெனக்கறேன்....
தரைப்படையை நினைவுபடுத்தும் பெயர்!! தட்டைதானே என்று நினைத்ததை, உங்கள் பதில்களில் தெளிவுபடுத்திவிட்டீங்கக்கா.
//ஜெய்லானி said...
.. இது ஸ்வீட் கடைகளில் கிடைக்குமா??//
ஸ்வீட் கடையில ஸ்வீட்தானே இருக்கும்? காரம் எப்படி..? :-))))))
மனோ அக்கா உரப்படை கேள்வி பட்டு இருக்கேன்.
இது தான் தட்டையா? அரிசிய கட்டியாக ஆட்டனுமா? எவ்வள்வு நேரம் ஊறவைக்கவும் இட்லிக்கு போலா?
எனக்கு இது போல் ஐட்டங்கள் ரொம்ப பிடிக்கும்.
@@ஜெய்லானி
.. இது ஸ்வீட் கடைகளில் கிடைக்குமா??//
@@@ஹுஸைனம்மா --//
ஸ்வீட் கடையில ஸ்வீட்தானே இருக்கும்? காரம் எப்படி..? :-))))))
ஆஹா.. சைக்கிள் கேப்பில நம்மளை கலாய்ச்சிட்டாங்களே..!!காரா பூந்தின்னு ஒரு ஐட்டம் , பொட்டு கடலை மாதிரி இருக்கும் இன்னொரு ஐட்டம் ( பேரு மறந்துப்போச்சே )உங்க ஊருல எந்த கடையில கிடைக்குதுன்னு பிளீஸ் சொல்லுங்களேன் ..!! ஹா..ஹா..
எங்கள் ஊர் பக்கமும் அதாவது மதுரை தாண்டி தென் மாவட்டங்களில் தட்டை என்று சொல்வார்கள்.
தஞ்சாவூர் பக்கம் இதை உரைப்படை ன்னு சொல்றாங்க.
ருசி அபாரமாக இருக்கும்.
R.Gopi said...
"இந்த உரப்படை என்பது உறைப்பான அடை என்பது தானோ??!!..
டேஸ்டும் சூப்பரா இருக்கும்னு நெனக்கறேன்...."
ஆமாம்! உரைப்பு கலந்த அடை என்பதால்தான் ‘உரப்படை’! இது மிக மிக சுவையானதுதான்!
ஜலீலா! இது தட்டை இல்லை. உரப்படையே தான். தலைப்பில் உரப்படை என்று தான் போட்டிருக்கேன். இட்லி அரிசியை இட்லிக்கு ஊறவைப்பது போலவே ஊறவைத்து கெட்டியாக அரைத்து பின் பொட்டுக்கடலை மாவையும் மற்றதையும் கலக்கணும்! செய்து பாருங்கள்!!
அன்புள்ள ஜிஜி!
உரப்படை சற்று கெட்டியாக அதிரசம் போல மொத்தமாகவும் தட்டை மெல்லிசாக மொறு மொறுவென்றும் இருக்கும்!
வருகைக்கும் பதிவுக்கும் அன்பு நன்றி!!
அன்பார்ந்த வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி சகோதரர் தங்கதுரை!!
இப்பதிவை இண்ட்லியில் இணைத்து ஓட்டுமளித்த அன்புச் சகோதரர் ஜெய்லானிக்கு இதயங்கனிந்த நன்றி!! இணைந்து ஓட்டளித்த தோழமைகள் Pirasha, Bharani, Srimananandhaguruji, Panithuli Sankar, Kousalya, KarthikVk, Kaelango, Abdul Kadher, Sounder, Parveen. Saadhiqah, IdnKarthik, paarvai, Vadivelan, Kosu, Boobathy, Nanban, Arasu, Kiruban, Amalraj, easylife, Manikandavel, Ganga, Sukku maanikkam, Jothi, Riyas, Sramese, Guru அனைவருக்கும் என் அன்பு நன்றி!!
ஒகே நன்றி மனோ அக்கா செய்து பார்த்து ருசித்து விட்டு சொல்கிறேன்.
Post a Comment