Sunday 16 May 2010

FISH PAKODA

மீன் பக்கோடா:

இனிப்பிற்குப் பிறகு மிகவும் சுவையானதாய் எந்த சமையல் குறிப்பைப் போடலாம் என்ற்று யோசித்தபோது தான் ‘இந்த மீன் பக்கோடா’வையே வெளியிடலாம் என்று முடிவு செய்தேன். காரணம் இதிலுள்ள பொருள்கள் சற்று வித்தியாசமானவை.
மீன் மட்டும் வாடை இல்லாததாகத் தேர்வு செய்தால் சுவை மேலும் அதிகரிக்கும். இந்த ஊரில் பாரட் மீன், ரெட் ஸ்னாப்பர், விரால் முதலியவை பொருத்தமாக இருக்கும். மதிய உணவிற்கு பக்க பதார்த்தமாகவோ அல்லது மாலை நேரச் சிற்றுண்டியாகவோ சாப்பிடலாம்.
தேவையான பொருள்கள்:

வேகவைத்து உதிர்த்த மீன் துண்டுகள்- 3 கப்
எண்ணெய்- 3 மேசைக்கரண்டி
மெல்லியதாக அரிந்த வெங்காயம்-1 கப்
பொடியாக அரிந்த கொத்தமல்லி- 2 மேசைக்கரண்டி
கறிவேப்பிலைகள்-20
மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்
சலித்த கடலை மாவு- 1 கப்
முட்டை-1
மிளகாய்த்தூள்- அரை ஸ்பூன்
வெள்ளை சாஸ்-சிறிது
தேவையான உப்பு
பக்கோடா பொரித்தெடுக்கத் தேவையான எண்ணெய்

சற்று சிதைக்க வேண்டிய பொருள்கள்:

சோம்பு- 1 ஸ்பூன், பச்சை மிளகாய்-3, துருவிய இஞ்சி- 2 ஸ்பூன், சிறிய பூண்டிதழ்கள்-8

வெள்ளை சாஸ் தயாரிக்கும் முறை:

1 கப் பாலில் 1 மேசைக்கரண்டி சோள மாவு, கொரகொரப்பான மிளகுத்தூள்- அரை ஸ்பூன், சிட்டிகை உப்பு சேர்த்து கரைத்து அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். சாஸ் கெட்டியானதும் இறக்கி ஆறவைக்கவும்.

செய்முறை:

வாணலியில் எண்னெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
அரைத்ததை மஞ்சள் தூளுடன் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
மீனை உப்புடன் சேர்த்து குறைந்த தீயில் நன்கு சுருண்டு வரும்வரை வதக்கவும்.
வதக்கியதை ஆற வைக்கவும்.
முட்டையை சிறிது தண்ணீர் சேர்த்து நுரை வர அடிக்கவும்.
கடலைமாவில் உப்பு, மிளகாய்த்தூள், வெள்ள சாஸ், முட்டை சேர்த்து பிசையவும்.
ஆறிய மீனையும் சேர்த்து அனைத்தும் நன்கு  கலக்குமாறு  பிசையவும்.
வாணலியில் போதுமான எண்னெய் ஊற்றி சூடாக்கவும்.
மீன் கலவையை சிறிது சிறிதாகக் கிள்ளிப்போட்டு பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.
சூடான மீன் பக்கோடா தயார்.
தக்காளி சாஸ் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும்.

24 comments:

இமா க்றிஸ் said...

வித்தியாசமாக இருக்கிறது அக்கா. கட்டாயம் செய்து பார்ப்பேன்.

ஜெய்லானி said...

வாழ்க்கையில எதை எதை மிஸ் பண்ணிருக்கேன்னு இப்பதாங்க புரியுது. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Asiya Omar said...

மனோ அக்கா ரொம்ப அருமையாக இருக்கு,நிச்சயம் வீட்டில் அனைவருக்கும் இந்த முறைப்படி செய்து கொடுக்க வேண்டும்.ஹமூரும் இதற்கு ஏற்ற மீன் தானே அக்கா.எப்படி இப்படி சுத்த தமிழில் குறிப்பு ஆச்சரியம்,நானும் பின்பற்ற முயற்சிக்கிறேன்.

Chitra said...

புது மாதிரியான ரெசிபி. பகிர்வுக்கு நன்றி.

athira said...

மனோஅக்கா,புதுமையான, அருமையான ரெசிப்பி. ட்ரைபண்ணப்போகிறேன்.

ஜெயா said...

நல்ல சமையல் குறிப்பு..நன்றி அக்கா...

மனோ சாமிநாதன் said...

நன்றி, இமா! அவசியம் செய்து பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும்.

மனோ சாமிநாதன் said...

ஜெயானி அவர்களுக்கு!

ஒரு தரம் செய்து சாப்பிட்டுப் பாருங்கள். அப்புறம் மிஸ் பண்ணியிருக்கும் அத்தனை நல்ல விஷயங்களையும் நீங்களே தேடிக்கண்டு பிடித்து விடுவீர்கள்!

மனோ சாமிநாதன் said...

ஆஸியா! வெள்ளியன்று ஹமூரை வைத்தும் செய்து பார்த்தேன். சூடாக இருக்கும்போது வாடை சாப்பிடுகையில் தெரியவில்லை. ஆனால் ஆறியதும் வாடை இருந்தது. வறுக்கும்போதும் காற்றில் வாடை தெரிந்தது.
வேறு எந்த மீனும் வாடை இல்லாத்தாக இருந்தாலும் சமைத்துப் பார்க்கலாம்.

மனோ சாமிநாதன் said...

வருகைக்கு நன்றி, சித்ரா!

மனோ சாமிநாதன் said...

செய்து பாருங்கள், அதிரா! நிச்சயம் சுவையாக இருக்கும்.

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு நன்றி, ஜெயா!

ஸாதிகா said...

வித்தியாசமான் பக்கோடா.டிரை பண்ணுகின்றேன் அக்கா.

Krishnaveni said...

yummy and delicious fish pakoda

ஹுஸைனம்மா said...

என் மாமியார், ஏறக்குறைய இதேபோல செய்வதுண்டு. நல்லா இருக்கும். எப்பவும் குழம்பு, வறுவல் என்று மட்டுமே சாப்பிடும் மீனுக்கு வித்தியாசமான செய்முறைகூட.

மங்குனி அமைச்சர் said...

//ஜெய்லானி said...

வாழ்க்கையில எதை எதை மிஸ் பண்ணிருக்கேன்னு இப்பதாங்க புரியுது. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்///


ஏய் , இதெல்லாம் மனுசங்க சாபுடுறது , நீ ஏன் பீல் பண்ற, நாங்க சாப்பிடும் போது அமைதியா கொரைக்காம இரு

மனோ சாமிநாதன் said...

செய்து பாருங்கள். ஸாதிகா! மிகவும் நன்றாக இருக்கும்.
வருகைக்கு என் அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

நன்றி, இர்ஷாத்!

மனோ சாமிநாதன் said...

Thank you for the nice feedback, Krishnaveni!

மனோ சாமிநாதன் said...

அன்பான பதிவுக்கு மிகவும் நன்றி, ஹுஸைனம்மா!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பதிவிற்கும் நன்றி மங்குனி அமைச்சரே!

Jaleela Kamal said...

மீன் பகோடா ரொம்ப யம்மியாக இருக்கு.

Jaleela Kamal said...

வெள்ளை சாஸ் சேர்த்துசெய்வது புதுமையாக இருக்கு.

மனோ சாமிநாதன் said...

இந்த வெள்ள சாஸ் சேர்த்து செய்வதுதான் இந்த மீன் பகோடாவை மிகவும் சுவையாக ஆக்கும் ஜலீலா!