புகழ் பெற்ற வெளி நாட்டு ஓவியம் இது. ஒரு தமிழ் வார இதழில் முகப்புப்படமாக வந்திருந்தது. இந்த பிஞ்சு முகத்தில் தெரியும் சோகமும் கண்ணீர்த்துளிகளும் மனதை என்னவோ செய்ய 20 வருடங்களுக்கு முன்னர் அதைப்பார்த்து நான் வரைந்த ஓவியம் இது. வெறும் வாட்டர் கலரில் வரைந்திருக்கிறேன்.
12 comments:
அக்கா இந்த ஓவியம் முன்பு நான் பார்த்து இருந்தாலும் திரும்ப பார்க்கும் பொழுது அதன் அருமை தெரிகிறது.
அழகு, அழகு. ;)
அன்பு ஆசியா!
மறுபடியும் உங்களின் ரசனையைப் பார்த்து வியக்கிறேன். கொஞ்ச காலமாகவே நான் அதிகமாக வரையவில்லை. உங்களைப்போன்ற அனைவரது பாராட்டுக்களும் இன்னும் அழகான ஓவியங்கள் வரையத் தூண்டுகின்றன!
அன்பு இமா!
உங்களின் ரசனை மிகுந்த பாராட்டிற்கு என் அன்பு நன்றி!!
நல்ல அழகு சித்திரம்.
ரசனையான பாராட்டிற்கு என் அன்பு நன்றி விஜி!
சகோதரி, இந்த படத்தை எங்க பள்ளியில வெச்சிருந்தாங்க.. அந்த நினைவுகளை கிளரிவிட்டது உங்கள் படம்.. :)
இது மிகவும் புகழ் பெற்ற மேலை நாட்டு ஓவியம், நாஸியா!
அந்தக் கண்களிலிருந்து வழியும் கண்ணீர்தான் என்னை வரையத் தூண்டியது.
பதிவுக்கு என் அன்பு நன்றி!!
அக்கா உண்மையிலேயே இது வாட்டர் கலர் என நம்ப முடியவில்லை அவ்வளவு அழகாக இருக்கிறது. எங்கோ இதன் ஒரிஜினல் பார்த்து இருக்கிறேன். ஆனால் ஏதும் வித்தியாசமே தெரியவில்லை.
வாழ்க வளமுடன்
அன்புச் சகோதரர் ஹைஷ் அவர்களுக்கு,
பல வருடங்களுக்கு முன் ‘ சாவி’ வார இதழில் இதன் மூலச் சித்திரம் வெளியாகியிருந்தது. அந்தக் குழந்தையின் கண்ணீர் அது ஓவியம் என்பதையே மறக்க வைத்து என்னைப் பாதித்தது. உடனே வரையவும் தூண்டியது.
தங்களின் ரசிப்புக்கும் பாராட்டிற்கும் என் அன்பு நன்றி!!
எனக்கு ஓவியத்தின் மீது ஆர்வம் அதிகம். தாங்கள் வரைந்த எல்லா ஓவியங்களை பார்த்தேன். மிகவும் அருமை. வண்ண ஓவியங்களும், நீர் வண்ண ஓவியங்களும், கருப்பு வெள்ளை ஓவியங்கள் என எல்லாமே அழகு. நன்றி.
அந்தக் குழந்தையின் கண்ணீர் மனதை என்னவோ செய்கிறது. குழந்தையின் துன்பத்தை அப்படியே ஓவியத்தில் கொண்டு வந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
Post a Comment