சகோதரர் கரந்தை ஜெயக்குமாரிடம் பேசிக்கொண்டிருந்த போது, முதல் சந்திப்பிலேயே ,என் தாத்தா ஒரு தமிழ்ப்புலவரென்றும் தொல்காப்பியத்திற்கு மறுப்புரை எழுதியவர் என்றும் அவரது நூல்கள் மன்னார்குடி அரங்கசாமி நூல்நிலையத்தில் உள்ளன என்றும் அவரது பெயர் சோமசுந்தரம் பிள்ளை என்றும் சொன்னேன். தனக்கு அப்படி ஒருவரைப் பற்றித் தெரிந்திருக்கவில்லையே என்று சகோதரர் சொன்னார்.
சென்ற வருடம் என்று நினைக்கிறேன்,என் தாத்தாவைப்பற்றி சில குறிப்புகள் கிடைத்ததை என் கொழுந்தனார் சென்னையிலிருந்து அனுப்பி வைக்க, அவற்றை நான் சகோதரரிடம் பகிர்ந்து கொண்ட போது, ' இவரையா சொன்னீர்கள், இவர் 'இலக்கணம் சோமசுந்தரம் பிள்ளை என்றலவா எனக்குத் தெரியும் என்று சொன்னார். இப்போது சில நாட்களுக்கு முன் தாத்தாவைப்பற்றி பல வருடங்களாக கரந்தையில் வெளி வந்து கொண்டிருக்கும் தமிழ்ப்பொழில் என்ற இதழ் மூலம் நிறைய விபரங்கள் அறிந்து கொண்டதாகக் கூறி சகோதரர் அவற்றை எனக்கு அனுப்பி வைத்தார். அவற்றை முழுமையாக படித்து முடித்த போது, மனதில் ஏற்பட்ட பெருமிதத்தையும் நெகிழ்ச்சியையும் தமிழில் எழுத வார்த்தைகளில்லை!
|
நன்றி: திரு.ஜெயக்குமார் அவர்கள். |
என் மிகச்சிறு வயதிலேயே என் தந்தை மறைந்து விட்டதால் தாத்தாவைப்பற்றி அதிகம் நான் அறிந்ததில்லை. அம்மாவைப்பெற்ற அம்மாச்சி மறையும் வரை எங்கள் வீட்டில் தான் இருந்தார்கள். என்னிடம் மிகவும் பிரியம் வைத்திருந்த அவர்கள் காது கேளாமையாலும் அமைதியான சுபாவத்தாலும் அதிகம் பேசி நான் பார்த்ததில்லை. அந்தச் சிறிய வயதில் என் பாரம்பரிய வேர்களைத் தேடிப்பிடிக்கும் ஆர்வம் எனக்கு புலப்பட்டதில்லை. இந்த அம்மாச்சி தான் என் தாத்தாவிற்கு மூத்த மகள். என் தாத்தாவின் இரண்டாவது மகன் தான் என் தந்தை. கடைசி மகள் என் மாமியார். தன் மூத்த சகோதரியின் மகளைத்தான் என் தந்தை மணந்தார்கள். என் தந்தையின் கடைசி சகோதரியின் ஐந்தாவது மகனைத்தான் நான் மணந்தேன்.
என் பாரம்பரிய வேர் பற்றி எனக்குத் தெரியும். ஆனால் எத்தனை ஆழமானது என்பதை சகோதரர் ஜெயக்குமார் மூலம் தான் இப்போது அறிந்து கொண்டேன். இந்த அருஞ்செயலுக்காகவும் என் அழைப்பிற்கிணங்கி என் தாயாரின் பிறந்த
|
திரு &திருமதி கரந்தை ஜெயக்குமார் அவர்களுடன் |
நாள் விழாவிற்கு இல்லத்தரசியுடன் வருகை தந்து சிறப்பித்ததற்கும் ஜெயக்குமார் அவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றியை இங்கே தெரிவித்துக்கொள்வதில் பெருமிதம் அடைகிறேன்.
என் தாயாரின் நூறாவது பிறந்த நாள் விழா 31ந்தேதி சிறப்பாக நடந்தேறியது. இதில் தொலைந்து போன, மறந்து போன பல உறவுகளை சந்தித்தது மனதுக்கு நிறைவாக இருந்தது.
|
என் தங்கை, அக்கா, அம்மாவுடன் நான். |
அம்மா நன்றாகப்படித்தவர். ஆங்கிலப்புலமை உள்ளவர். இந்த வயதிலும் தன்னம்பிக்கையும் மன உறுதியும் நிரம்பப்பெற்றவர். நினைவாற்றல் அதிகம் இன்னும் இருக்கிறது. தாத்தாவைப்பற்றி பேசிய போது, தன் சிறு வயதில் அவரிடம் சீவக சிந்தாமணி, மணிமேகலை முதலான நூல்களைப்பற்றி கற்றதாதாகவும் ஒவ்வொரு குழந்தைக்கும் தான் வேலை பார்த்த இடத்து கோவில்களின் இறைவன், இறைவி பெயரை வைத்ததாகவும் கூறினார்கள். அம்மாவிற்கு நாங்கள் அனைவரும் சேர்ந்து விழா எடுத்ததில் மிகுந்த மகிழ்ச்சி!!!
22 comments:
ஒரு குடும்பவிழாவை சிறப்படைய செய்வதைவிட வேறு ஆனந்தம் உண்டா ? எமது மனம் நிறைந்த வாழ்த்துகள்.
100 வயது கண்ட உங்கள் தாயாருக்கு எங்கள் வணக்கங்கள்!
உங்கள் தாத்தாவைக் குறித்து கரந்தையாரின் தளத்திலும் வாசித்தோம்! மிகவும் பெருமை மிக்க பாரம்பரியக் குடும்பம் தங்களது என்று அறிந்து வியப்புடனான மகிழ்ச்சி!
விழா இனிது நடைபெற்றமையும் சிறப்பு.
எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்! சகோதரி/மனோக்கா
துளசிதரன், கீதா
சகோ கரந்தை ஜெயக்குமார் பதிவிலும் அம்மாவுக்கு என் வணக்கங்களை தெரிவித்துக் கொண்டேன்.
இங்கும் சொல்லிகொள்கிறேன்.
அம்மாவுக்கு விழாஎடுத்த உங்கள் குடும்பத்தினருக்கு எங்கள் வாழ்த்துக்கள்.
தாத்தாவின் பெருமையை படித்து தெரிந்து கொண்டோம்.
மனமார்ந்த வாழ்த்துக்கள் மனோ அக்காவின் அம்மாவிற்கு ...வணங்குகிறோம் ,குடும்ப விழாக்கள் சந்தோஷத்தை அதிகப்படுத்தும் .ஜெயக்குமார் சகோ பக்கம் சென்று மற்ற விவரங்களையும் படிக்கிறேன்
உங்கள் பெருமிதத்தையும்,சந்தோஷத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது. வாழ்க நலம்.
அம்மாவுக்கு எங்கள் நமஸ்காரங்கள். இப்படிப்பட்ட குடும்பத்தில் வந்த நீங்களும் அதனாலேயே இவ்வளவு சிறப்பு பெற்று விளங்குகிறீர்கள்.
இனிய வாழ்த்துக்களுக்கு மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி!
அன்பான வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி சகோதரர் துளசிதரன்/கீதா!
இனிய வாழ்த்துக்களுக்கு மனம் நிறைந்த நன்றி கோமதி அரசு!
வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி ஏஞ்சல்!
வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன்!
உங்கள் அன்னைக்கு எனது பணிவான வணக்கமும் நமஸ்காரமும்.
குடும்ப விழா சிறப்பாக நடந்தது அறிந்து மகிழ்ச்சி.
அம்மாவுக்கு வாழ்த்துக்கள். ஆரோக்கியமாக,சந்தோஷமாக உங்கள் அம்மா வாழவேண்டுகிறேன்.
குடும்பவிழா சிறப்பாக நடைபெற்றமையும் உங்கள் தாத்தாவின் பெருமையை அறிந்ததில் மகிழ்ச்சி மனோக்கா.
மிக மகிழ்ச்சி மா..
அம்மாவிற்கு என் வணக்கங்களும்...
அருமையான விழாவிற்கு எனது வாழ்த்துக்களும் ..
உங்கள் அம்மாவுக்கு என் அன்பான வணக்கங்கள்.
மனம் நிறைந்த மகிழ்ச்சியான வாழ்த்துக்கள்.. உங்கள் அம்மாவைப்பார்த்தால் 70..80 வயதுக்கு மேல் சொல்ல முடியாது...
மனமகிழ்ச்சி தரும் அருமையான நிகழ்வு பகிர்வு.தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
வணக்கம்
தங்கள் தாத்தா குறித்து அறிந்தேன்
மகிழ்வு
பெருமிதம் எங்களுக்கும்தான்
இனிய வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி வெங்கட்!
அம்மாவுக்கான வாழ்த்துக்களுக்கும் பிரார்த்தனைகளுக்கும் அன்பு நன்றி பிரியசகி!
வணக்கங்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி அனுராதா பிரேம்குமார்!
வருகைக்கு அன்பு நன்றி ராமலக்ஷ்மி! வணக்கங்களை அம்மாவுக்குத் தெரிவித்து விடுகிறேன்!
Post a Comment