ஒவ்வொரு வருடமும் துபாயில் அக்டோபர் முதல் ஏப்ரல் முதல் வாரம் வரை நடக்கும் திருவிழா இது! இரவு 12 வரை கோலாகலமாக நடைபெறும் இந்தத்திருவிழாவில் திங்கட்கிழமைகளில் பெண்களுக்கும் குடும்பத்தினருக்கும் மட்டுமே அனுமதி தரப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு நுழைவு சீட்டு கிடையாது! 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும்!
ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கான வருகையாளர்களை இது சந்திக்கிறது. இந்த முறை 70 நாடுகள் கலந்து கொண்ட இந்தத்திருவிழாவில் உலக நாடுகளின் கலாச்சாரமும் உணவுப்பொருள்களும் ஒன்றாய் இணைந்து கண்களுக்கும் நாவிற்கும் நல்விருந்து படைத்தன! நான் ஒவ்வொரு வருடமும் இதைப்பார்க்கத் தவறுவதில்லை. இந்த முறை சென்ற போது எடுத்த புகைப்படங்கள் இவை.
|
பழங்களை அலங்காரமாக வைக்கக்கூடிய பாத்திரம், மூடியுடன்! |
|
சிரியா, ரஷ்ய, ஜப்பான்
|
|
ஒவ்வொரு நாட்டுக்கான உணவகத்திற்கு முன் அந்தந்த நாட்டு பாரம்பரிய உடை அணிந்து கொண்டு, ஒருவர் வெளியே வந்து நின்று, கடந்து போகும் மக்களை சாப்பிட வருமாறு அழைக்கும் காட்சி!
|
|
பஹ்ரைன்
|
பல்வேறு நாட்டு உணவகங்களும் சிறு சிறு தின்பண்டங்கள் விற்கும் கடைகளும் மாலையிலிருந்து சுறுசுறுப்பாய் உணவுப்பொருள்களை வியாபாரம் செய்யும். ஒரு சில காட்சிகள்!
|
CHEST NUTகளை அனலில் வாட்டித்தருவார்கள்! சுவை அபாரமாக இருக்கும்! |
|
SPIRAL POTATO CHIPS!
|
|
FRIED ICE CREAM!! |
18 comments:
அவசியம் பார்க்கவேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது - பதிவும் படங்களும்!..
வாழ்க நலம்..
பிரம்மாண்டம் என்கிற வார்தைக்குப் பொருள்!
பழைய நினைவுகளை மீட்டி விட்டன படங்கள்.
படங்கள் அட்டகாசம்...
ஆஹா அருமையான படங்கள் ...அழகு
படங்கள் வெகு அழகு.
பார்க்க வேண்டும் என்று ஆவலை தூண்டக்கூடிய படங்கள்
ஹப்பா என்ன பிரம்மாண்டம். நீங்கள் போன முறை போட்டவையும் நினைவுக்கு வருகிறது. அட்டகாசமான படங்கள். ஒரு நாள் போதாது இல்லையா?
துளசிதரன், கீதா
அட்டகாசம்..... பிரம்மாண்டமான முறையில் செய்கிறார்கள். பிரமிப்பாக இருக்கிறது.
வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் துரை செல்வராஜ்!
இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி ஸ்ரீராம்!
பழைய நினைகள் என்றைக்குமே மறக்காது, இல்லையா கில்லர்ஜி? கருத்துரைக்கு அன்பு நன்றி!
இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி தனபாலன்!
ரசித்துப்பாராட்டியதற்கு அன்பு நன்றி அனுராதா!
இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி இமா!
நீண்ட நாட்களுக்குப்பின்னான வருகைக்கும் ரசித்துப்பாராட்டியதற்கும் அன்பு நன்றி சொக்கன் சுப்ரமண்யன்!
இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி துளசிதரன்/கீதா!
ரசித்துப்பாராட்டியதற்கு அன்பு நன்றி வெங்கட்!
Post a Comment