Friday, 27 February 2015

சேவை அமைப்புகள்!!

மாற்றுத்திறனாளிகள், அவர்களுடைய பிரச்சினைகளுக்கென்றே சில தொன்டு நிறுவனங்கள் சேவை செய்து வருகின்றன. அவற்றைப்பற்றி நிறைய பேருக்கு வெளியே தெரிவதில்லை. நமக்கோ, நமக்கு நெருங்கியவர்களுக்கோ பிரச்சினைகள் வரும்போது தான் நம்மில் பெரும்பாலானோர் மேல் விபரங்களைத் தேட ஆரம்பிக்கிறோம். சமீபத்தில் ஒரு பெண்கள் இதழில் சில முக்கியமான சேவை அமைப்புகள் பற்றிய தகவல்கள் வெளி வந்தன. அவற்றைப்பற்றி கீழே எழுதியிருக்கிறேன். நிச்சயம் யாருக்கேனும் இவை பயன்படும். முக்கியமாய் பாஸிடிவ் செய்திகள் எழுதி வரும் ஸ்ரீராம்
அவர்களுக்கும் இத்தகவல்கள் பயன்படும்!

சேவை அமைப்புகள்:

1. முதுகுத்தண்டுவட பாதிப்பிற்காளானவர்களுக்கு தேவையான சக்கர நாற்காலி, உதவித்தொகை, வேலை வாய்ப்பு மற்றும் அவர்களின் மறுவாழ்வுக்குத்தேவையான உதவிகளைச் செய்கிறது இந்த அமைப்பு. தனிப்பட்ட முறையில் இந்த பாதிப்பை உண‌ர்ந்தவர் என்பதால் முதுகுத்தண்டுவட பாதிப்பிற்கு, குறிப்பாக பெண்களுக்கு நம்பிக்கையூட்டி வாழ வழி செய்கிறார் ப்ரீத்தி சீனிவாசன். மொபைல்:9952626756

2. ஆதவற்ற மாற்று திறனாளி குழந்தைகளுக்காக உணவு, உடை, தங்குமிடம், கல்வி, மருத்துவ உதவி என்று அனைத்து தேவைகளையும் அளிக்கிறது சென்னையிலுள்ள ஸ்ரீ அருணோதயம்!  அழைக்க: ஐயப்பன் சுப்ரமணியன், 9444915803/98843077815/044 26512880

3. தங்களைப்போன்றே 'மஸ்குலர் டிஸ்ட்ரோபி நோயால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாத்து பராமரிக்க, வானவன்மாதேவி மற்றும் இயல் இசை வல்லபி சகோதரிகளால் உருவாக்கப்பட்ட அமைப்பு ஆதவ் ட்ரஸ்ட், சேலம். தசைச்சிதைவு நோயாளிகளுக்கான சக்கர நாற்காலி, பிஸியோதெரபி மற்றும் அக்குப்ரெஷர் பயிற்சிகளும் இங்கு அளிக்கப்படுகின்றன. அழைக்க: 9976399403/9976399409

4. மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வுக்கென காகிதப்பை தயாரிப்பு, நாப்கின் தயாரிப்பு, செயற்கை நகைகள் தயாரிப்பு போன்ற தொழில் பயிற்சிகள் தரப்படுகின்றன. மனநலம் குன்றிய மாணவர்களுக்கான சிறப்புப் பள்ளியும் நடக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான அடையாள அட்டை, அரசின் நலத்திட்டங்கள், மருத்துவ முகாம், ப்ரத்யேக சுஅ உதவிக்குழு, வங்கிக் கடன், வேலை வாய்ப்பு குறித்த ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. அழைக்க: கலையரசி, கொளக்குடி, [லால்குடி அருகில் ], திருச்சி. 9443456521

5. திருநெல்வேலியிலுள்ள‌ அமர்சேவா சங்கம் போலியோ போன்ற பல காரணங்களால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தினசரி அனைத்து வசதிகள், தங்கும் வசதி, பள்ளி, தொழில் க‌ல்வி, உடற்கருவிகள் வழங்குதல் என்று பெரிய அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கென மறுவாழ்வு மையமாகத்திகழ்கிறது. ராமகிருஷ்ணன், 04633249170

6. சென்னையில் 40 ஆண்டு காலமாக செயல்பட்டு வரும் இந்த அமைப்பு மாற்றுத்திறனாளிக்குழந்தைகளுக்கான உணவு, தங்குமிடம், கல்வி மற்றும் மருத்துவ உதவி என அனைத்துத்தேவைகளையும் அளிக்கிறது. இங்கு கணினி போன்ற தொழில் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. ஹோப் ரிஹாபிலேஷன் செண்டர், சென்னை. எல்டன் வீஸ்னர், டோரதி வீஸ்னர்: 044 26261748

 

31 comments:

ஸ்ரீராம். said...

நல்ல செய்திகள். நன்றி மேடம். குறித்துக் கொண்டேன்.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

அறியாத உள்ளங்களுக்கு அறியவைத்தை முத்துக்கள் அனைத்தும் சிறப்பு.. தேடலுக்கு வாழ்த்துக்கள் பகிர்வுக்கு நன்றி த.ம 1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

எம்.ஞானசேகரன் said...

நன்றி. சேமித்துக்கொண்டேன்.

'பரிவை' சே.குமார் said...

நல்ல செய்திகள் அம்மா...

கே. பி. ஜனா... said...

பயனுள்ள தகவல்கள்..

துரை செல்வராஜூ said...

மிகவும் பயனுள்ள தகவல்கள்..
பதிவில் பகிர்வு செய்ததற்கு நன்றி!..

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

சேவை அமைப்புகளை அறிமுகப்படுத்தி, அவர்களுடைய சேவையைப் பற்றி பகிர்ந்தவகையில் சிறப்பான சேவை செய்துள்ளீர்கள்.
நன்றி.

Thulasidharan V Thillaiakathu said...

மிக மிக நல்ல தகவல்கள். நோட் பண்ணிக் கொண்டோம்...மிக்க நன்றி

ராமலக்ஷ்மி said...

பயனுள்ள பகிர்வு.

Thenammai Lakshmanan said...

மிக அருமையான உபயோகமான தகவல்கள் மனோ மேடம்

RAMA RAVI (RAMVI) said...

மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி பகிர்வுக்கு.

கரந்தை ஜெயக்குமார் said...

மிகவும் பயனுள்ள தகவல்கள் சகோதரியாரே

Angel said...

பயனுள்ள தகவல்கள் மனோ அக்கா .இதை அப்படியே முகபுதகதிலும் பகிர்கிறேன்

ஞா கலையரசி said...

சேவை மையங்களை அறிமுகப்படுத்தி அவர்களுக்கு உதவி கிடைக்கச் செய்வதும் ஒரு சேவை தான். மிக்க நன்றி மனோ!

கோமதி அரசு said...

நல்ல பகிர்வு.
இரண்டு மூன்று சேவை மையங்களை பற்றி தெரியும். பயனுள்ள தகவல்.
நன்றி, வாழ்த்துக்கள்.

Asiya Omar said...

தேவையான பகிர்வு.நன்றி அக்கா.

மனோ சாமிநாதன் said...

வருகைக்கு அன்பு நன்றி ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் அன்பு நன்றி ரூபன்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கு அன்பு நன்றி கவிப்ரியன்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி குமார்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ஜனா!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி சகோதரர் துரை செல்வராஜ்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி துளசிதரன்!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி ராமலக்ஷ்மி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி தேனம்மை!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு இனிய நன்றி ராம்வி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி ஏஞ்சலின்! முகப்புத்தகத்தில் அவசியம் பகிர்ந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். பலருக்கும் பயன் தரும். அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி கோமதி அரசு!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ஆசியா!