என்னுடைய 200 வது பதிவு இது.
தமிழகத்துக்கும் அரபு நாட்டிற்குமான தொடர்ந்த பயணங்கள், அது தொடர்பான சுமைகள் பல நேரங்களில் நான் நினைத்த அளவு எழுத இயலாமலும் பின்னூட்டங்கள் தர இயலாமலும் இருந்து வருகிற போதிலும் பதிவெழுதுவது என்பது குளிர்ந்த மழைச்சாரலில் அவ்வப்போது நனைகிற மாதிரி மனதுக்குக் கிடைக்கிற சந்தோஷம் இது! பதிவுலகில் நுழைந்ததிலிருந்து இன்று வரையிலும் பதிவுகள் வெளியிட்ட போது, எந்த ஒரு பதிவிலுமே ஆர்வமும் சுவாரஸ்யமும் எனக்குக் குறைந்ததேயில்லை. இயல்பான எழுத்தார்வம் ஒரு காரணம் என்றாலும் அதற்கு முக்கிய காரணம் வலையுலக நண்பர்களாகிய உங்கள் அனைவரது அன்பும் தொடர்ந்து வரும் உங்களின் அருமையான பின்னூட்டங்களும் தான்!!
உங்கள் அனைவருக்கும் என் இதயங்கனிந்த நன்றிகள்!!
சிலந்தி வலைகள்!!
வாழ்க்கையில் வளர்ப்புப்பிராணிகள் என்று பலரும் நாய், பூனை, பறவைகள் என்று அன்புடன் வளர்ப்பதைப்பார்த்திருக்கிறோம். அவற்றையொட்டி பல விதக்ககதைகளை அறிந்திருக்கிறோம், ரசித்திருக்கிறோம். ஆனால் சிலந்திப்பூச்சிகளையும் ஒருத்தர் செல்லப்பிராணிகள் போல தன் வீட்டில் வைத்து வளர்க்க முடியும் என்பதை நினைத்துப்பார்க்கவே முடியவில்லை. அப்படியொரு செய்தியை அறிந்த போது ஆச்சரியமாக இருந்தது. மனிதர்களுக்கே உரிய ரசனையும் குணங்களும் சிலந்திகளுக்கும் இருப்பதை அறிந்த போது என் ஆச்சரியம் மேலும் அதிகரித்தது. நான் ரசித்த செய்திகளை இங்கே தொகுத்திருக்கிறேன்.
நாகர்கோவிலைச் சேர்ந்த ஓய்வு பெற்ற விலங்கியல் துறைப்பேராசிரியை திருமதி. அன்ன சுதாதேவி தன் வீட்டில் 40 க்கும் மேற்பட்ட சிலந்திப்பூச்சிகளை வளர்த்து வருகிறார். இவர் வீட்டில் சுவர், கதவு போன்ற எல்லா இடங்களிலும் சிலந்திப்பூச்சிகள் ஓடி விளையாடிக்கொண்டிருக்கின்றன. சிலந்திப்பூச்சிகளால் மனித வாழ்வுக்குக் கிடைக்கும் நன்மைகளைப்பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளார் இவர்
வலைகள் பின்னுவதால் இவற்றிற்கு வலையான் என்றும் பெயர் உண்டு. உலகில் 30 ஆயிரம் வகை சிலந்திப்பூச்சிகள் உள்ளன. பொதுவாக சிலந்திகள் ஆறு மாதம் வரையில் தான் உயிர் வாழ்கின்றன. சிலந்திகள் முட்டையிட்டு வலை பின்னி அவற்றை மூடி பாதுகாக்கின்றன. இவை குக்கூன் என்றழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு குக்கூனிலும் 10 முதல் 500 வரை முட்டைகள் இருக்குமாம்.
சிலந்திப்பூசிகளின் அடி வயிற்றில் ஆறு ஓட்டைகள் உள்ளன. இவற்றின் வழியாக வரும் ' சிப்பனர் ரெட்' என்ற திரவம் காற்று பட்டதும் நூல் போல மாறி விடுகின்றது. இவற்றைக்கொண்டு தான் சிலந்திகள் வலை பின்னுகின்றன. இவற்றில் ஆர்ஃப் வலை, சீட் வலை, புனல் வலை என்று பல பிரிவுகள் உள்ளன. இவை காற்று, மழையில் அழிந்து போகாத அளவிற்கு உறுதியானவை. விதம் விதமாக இவை வலை கட்டினாலும் இவற்றுக்கு கண் பார்வை கிடையாது. வலையில் ஏற்படும் அதிர்வுகளால்தான் உணவைக்கண்டறிகின்றன. சிலந்திகள் திரவ உணவை மட்டுமே உண்பதால் மற்ற பூச்சிகளிலுள்ள திரவத்தை மட்டுமே உண்டு வாழ்கின்றன. வலையில் பூச்சிகள் வந்து சிக்கிக் கொண்டால் தன் உடலிலுள்ள விஷம் போன்ற திரவத்தை அதன் மீது செலுத்தி அவற்றை செயலிழக்க வைத்து அதன் பின் அந்த பூச்சிகளிலுள்ள திரவத்தை உறிஞ்சுகிறது.
அயல்நாடுகளில் இதய வால்வு அறுவை சிகிச்சைக்கும் பாரசூட், மீன் வலை தயாரிப்பிற்கும் சிலந்தியின் வலையை உபயோக்கிகிறார்கள். பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை அழிக்க சிலந்திகளை வயல்களில் விடலாம் என்ற விழிப்புணர்வை விவசாயிகளிடம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வீடுகளிலும் ஈக்கள், கொசுக்கள் இவற்றை இந்த சிலந்திகள் அழிக்கின்றன.
பிளக்சிபல் என்ற சிலந்தி தினமும் 10 ஈக்களைப் பிடித்து தின்கின்றனவாம். அரைனஸ் என்ற சிலந்தி மாலையில் மட்டுமே வலை பின்னுமாம். அதாவது, மாலையில் வலை கட்டி பூச்சிகளைப்பிடித்து உண்டு விட்டு காலை தன் வலையைக் கலைத்து விட்டுச் சென்று விடுமாம். யோலோபோரஸ், ஆர்ஜியோப்பல்சல்லா போன்ற சிலந்திகள் கண்கள் இல்லாமல் தன் வலையை நீள அகலம் கச்சிதமாகப்பார்த்து வெள்ள நிற நூலால் பார்டர் கட்டி அழகு படுத்துமாம்.
ஸ்டிகேடைவஸ் என்ற வகை சிலந்தி தனக்கு இரை கிடைத்ததும் தன் குடும்பத்துடன் சேர்ந்து தான் உண்ணுகின்றன. அதே போல தன் குடும்பத்துடன் அருகிலுள்ள கூடுகளுக்கு விருந்துக்கும் செல்லுமாம் தன் குடும்பத்துடன்!
இது போன்ற பல அரிய தகவல்களைச் சொல்லும் அன்ன சுதா தேவி மற்ற உயிரினங்களுக்கு சரணாலயம் இருப்பது போல சிலந்திகளுக்கும் அரசாங்கம் ஒரு சரணாலயம் ஏற்படுத்த வேண்டும் என்று கோருகிறார்.
24 comments:
அக்கா... நல்ல சீவ காருண்யம் மிக்கவர் அந்தச் சகோதரி!
ஆனாலும் எனக்கென்னவோ இப்ப நினைத்தாலும் உடலெல்லாம் லேசா நடுங்குகிறதே அக்கா!..:)
நல்ல பகிர்வு!மிக்க நன்றி!
உங்களுக்கும் இனிய கிறிஸ்மஸ் புது வருட வாழ்த்துக்கள் அக்கா!
200 வது பதிவுக்கு .வாழ்த்துக்கள் . சிலந்தியை இங்கும் நிறைய பேர் பெட் ஆக வளர்க்கிறார்கள் :)டாரன்டுலா எல்லாம் பல பிள்ளைகள் என் மகள் உட்பட பயமின்றி கையில் ஏந்தியிருப்பதை கண்டிருக்கேன் ..
நம் நாட்டில் இது புதுமையான தகவல் ,பகிர்வுக்கு நன்றிக்கா ..நானும் பல சாரிட்டி வேளைகளில் ஈடுபடுவதால் அதிகம் அனைவர் பதிவுக்கும் வர இயலவில்லைக்கா.நண்பர்களின் ஊக்கம்தான் அவ்வபோதாவது பதிவுகள் எழுத காரணம் .
Angelin
200வது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் அம்மா...
அரிய தகவல்களைக் கொண்ட சிறப்பான பகிர்வு...நன்றி.
200 வது பதிவிற்கு நல் வாழ்த்துக்கள் சகோதரியாரே.
தங்களின் எழுத்துலகப் பயணம் தொடரட்டும், சாதனைகள் பலவற்றைப் படைக்கட்டும்
நன்றி
உங்களது 200 ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள்! சிலந்தியைப் பற்றியும் சிலந்தி வலையைப் பற்றியும் நிறைய தகவல்கள். ஓய்வுபெற்ற அந்த பேராசிரியை சிலந்திகளை வளர்ப்பதோடு மட்டுமல்லாது, தான் கண்டறிந்த அவற்றின் வாழ்க்கை முறையைப் பற்றி நூலாகவும் வெளியிட்டால் நல்லது.
200 ஆவது பதிவுக்கு இனிய வாழ்த்துக்கள்மா... இன்னமும் தொடர வாழ்த்துக்கள்.பேராசிரியர் சொல்றதைப் பார்த்தால் இனிமேல் வீட்டில் ஒட்டடை அடிக்கக் கூடாது போலிருக்கே... நல்ல புதிய தகவல். நன்றி
200 வது பதிவுக்கு .வாழ்த்துக்கள்!!
சிலந்தியைப் பற்றி புதிய தகவல்கள்.
//இனிமேல் வீட்டில் ஒட்டடை அடிக்கக் கூடாது போலிருக்கே...//
:))
200வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
சிலந்திகளைப் பற்றிய அரிய தகவல்.
200 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்..!
200 வது பதிவா!... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அக்கா!
இன்னும் பல்கிப் பெருகி பல நூறுகளாய் ஆயிரமாய் முத்துக்கள் கொழிக்க வாழ்த்துகிறேன்!
அக்கா!... நான் பார்த்தபோது உங்க பதிவு சிலந்திப் பூச்சியிலிருந்துதானே ஆரம்பித்திருந்தது...:(
பின்னர் சேர்த்திருந்தீர்களோ!..
என்கருத்து முதலாவதாக வந்ததுமில்லாமல் உங்களுக்கு 200 வதற்கு வாழ்த்திடாததாகப் போச்சே!...
சரி.. என் உளமார்ந்த நல் வாழ்த்துக்கள் என்றென்றும் உங்களுக்கு இருக்கு அக்கா!
இனிய இனிய நல் வாழ்த்துக்கள்!!!
200
200 வது பதிவிற்கு ஈய வாழ்த்துக்கள் மனோ மேடம்.
சிலந்திகளைப் பற்றிய தகவல்கள் நிறைய கிடைத்தன . நன்றி.
//என்னுடைய 200 வது பதிவு இது. //
மனம் நிறைந்த அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
பதிவினில் கொடுத்துள்ள தகவல்கள் மிகவும் பயனுள்ளவை. அரிதானவை. பாராட்டுக்கள். நன்றிகள்.
200......... வாழ்த்துக்கள்.
சிலந்தி பற்றிய விந்தையான செய்திகளின் தொகுப்பு...
சிலந்தியில் இத்தனை சிறப்பா.. அனைத்து தகவல்களுமே புதிது...
இருநூறாவது இடுகைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மேடம். தொடர்ந்து பல பயனுள்ள தகவல்களைத் தந்துகொண்டிருக்க என் வாழ்த்துக்கள்.
சிலந்தி பற்றிய பல தகவல்கள் எனக்குப் புதியது. சிலந்திக்கு கண்பார்வை கிடையாது என்பதையும் அது திரவ உணவுதான் உண்ணும் என்பதையும் இன்று அறிந்துகொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி மேடம்.
200-வது பதிவிற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.....
சிலந்தி பற்றி எத்தனை தகவல்கள்.... பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
Congrats. Interesting information about spiders.
200 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.அக்கா உங்களுடைய பகிர்வில் அழகான நேர்த்தியிருக்கும், நான் அதனை மிகவும் ரசிப்பதுண்டு.சிலந்தி பற்றிய தகவல்கள் புதிது எனக்கு.தொடர்ந்து நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் பதிவிட்டு அசத்துங்கள்.
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !
நீங்கள் நினைத்த காரியம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்..... ஆரோக்கியமும், வளமும் பெருகட்டும் இந்த ஆண்டில் !!
வருகை புரிந்து வாழ்த்துக்களும் கருத்துரைகளுமாய் பின்னூட்டமிட்ட அன்பின் அனைவருக்கும் என் இதயங்கனிந்த நன்றி!!
200 இன்னும் பலகோடிகள் ஆகட்டும் வாழ்த்துக்கள்!
அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,
நல்வணக்கம்!
திருமதி ஞா.கலையரசி அவர்களால்,
வலைச்சரம் ஆறாம் நாள் - பல்சுவை விருந்து
இன்றைய வலைச் சரத்தின்
சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
வாழ்த்துக்களுடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
(குழலின்னிசையை தொடர தாங்கள் உறுப்பினரானால் அகம் மகிழ்வேன்! நன்றி!)
Post a Comment