Wednesday 18 December 2013

சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?

 சாதம் எப்படி உண்ண வேண்டும் என்பது பற்றிய சில குறிப்புகளை ஒரு புத்தகத்தில் படித்தேன். மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. அதைப் பகிர்ந்து கொள்ள நினைத்த போது, பழைய சங்க காலப் பாடல்களில் படித்த சில அழகிய கருத்துக்கள் நினைவில் எழுந்தன.

ஒளவையார் எது கொடியது என்ற தன் வெண்பாவில், எல்லாவற்றையும் விட கொடுமையானது, அன்பில்லா பெண்டிர் கைகளால் பரிமாறப்படும் உணவை உண்பது தான் என்று அழுத்தம் திருத்தமாகக்க் கூறியிருக்கிறார்.

என்பெல்லாம் பற்றி எரிகின்ற தைய்யையோஅன்பிலாள் இட்ட அமுது என்றும் கூறியிருக்கிறார்.

இன்னொரு வெண்பா [பாடல் சரியாக நினைவில் இல்லை]
பாலும் தேனும் பாகும் கலந்து அத்தனை சுவையான அடிசிலும் அன்பில்லாத கையால் உண்ணும்போது விஷமாகிறது. அதுவே பழைய சாதம் கூட அன்போடு பரிமாறப்படுகிறபோது, அதுவே அமிர்தமாகிறது என்று அழகாகக்கூறுகிறது !


முன்னோர்கள் சொல்லி வைத்த பழமொழிகளின் சிறப்பும் பாடல்களின் அருமையும் நினைக்க நினைக்க ஆச்சரியமாயிருக்கிறது!

சரி, இப்போது சாதம் எப்படி சாப்பிட வேன்டும் என்ற விஷயத்திற்கு வருகிறேன்.

சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?


சாதத்தை எப்படி சாப்பிடுகிறோம் என்பதில்தான் நல்ல உடல் நலத்துக்கான சூட்சமம் இருக்கிறதாம்.
தமிழ் நாட்டில் அதிக அளவில் சர்க்கரை நோய் இருப்பதற்குக்காரணம் தினமும் அரிசி சாதம் சாப்பிடுவது என்று பலரும்சொல்கிறார்கள். அது தவறு. அதை எப்ப்டி சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம். பலரும் இன்று குக்கரில் வேக வைத்த சாதம் சாப்பிடுகிறார்கள். கஞ்சியை வடிக்காமல் சாதம் சாப்பிடுவதால்தான் நீரிழிவு ஏற்படுகிறது.

சாதம் வடித்த கஞ்சி சூடாக இருக்கும்போது சிறிது உப்பைப்போட்டு பருகினால் கண் எரிச்சல், பித்தம் ஆகியவை அகலும். அதுவே கஞ்சி ஆறிப்போய் குடித்தால் வாயு வை ஏற்படுத்தும். சாதம் உலையில் கொதிக்கும்போதே கஞ்சியை எடுத்துப் பருகினால் நீர்க்கடுப்பை நீக்கும்.

கொதிக்கக் கொதிக்க சோறு சாப்பிடக்கூடாது. மிதமான சூட்டிலேயே சாப்பிட வேண்டும். அதே நேரம் சில்லென்று ஆறிப்போய் சாப்பிட்டால் கீல் வாதம், மூட்டு வாதத்தை ஏற்படுத்தும்.

பழையமுது சாப்பிட்டுத்தான் நம் முன்னோர் நல்ல தெம்புடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்ந்தார்கள். முதல் நாள் தண்ணீர் சாதத்தில் ஊற்றி, மறு நாள் காலையில் பழைய சோற்றை சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சி, வலிமை தருவதுடன் வயிற்றுக்கோளாறு, அல்சர், மூட்டு வலி, தோல் நோய்கள் எதுவும் பாதிக்காமல் பாதுகாக்கிறது. பழைய சோற்றில் தயிர் ஊற்றி சாப்பிடக்கூடாது. மோரைக்கடைந்து ஊற்றி சாப்பிட வேண்டும்.

சோறு வெதுவெதுப்பாக இருக்கையில் பசும் பால் ஊற்றி சாப்பிட்டால் தண்ணீர்த்தாகம் ஏற்படுவதும் பித்தம் உண்டாவதும் நீங்கும்.

பச்சரிசி சோற்றில் பால் சேர்த்துச் சாப்பிட வாதம், பித்தம் நீங்கும். சிலர் சாம்பார், ரசம், வற்றல் குழம்பு என்று சாதத்தில் பிசைந்து சாப்பிட்டு மோர் போட்டு சாப்பிடாமல் எழுந்து விடுவார்கள். இது உடம்புக்கு மிகவும் கெடுதல். மோர் சாதம் செரிமானக்கோளாறுகளை நீக்கி, வாதம், பித்ததை தணிக்கிறது.

மாதாந்திர பிரச்சினை உள்ள பெண்களுக்கு சிவப்பரிசி சாதம் மிகவும் நல்லது. சம்பா சோறு வயிற்றுப்பொருமலுக்கு மிகவும் நல்லது.

வாழையிலையில் சாப்பிவதால் அதிலுள்ள துவர்ப்பு சத்து உடலில் சேர்ந்து நன்மை செய்கிறது.

37 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

அதே சாதம் தான் என்றாலும் அதை எப்படிச்சாப்பிட்டால் நல்லது என நயம்படச்சொல்லியுள்ளது மிகவும் பயனுள்ளது.

பகிர்வுக்கு நன்றிகள்.

இளமதி said...

சாதம் சாப்பிடச் சாதகமான விடயங்களைச்
சத்தியமாக நான் இதுவரை கேட்டதில்லை...

மோருடன் சாதம் தீர்த்திடும் தாகம் அதனுடன்
ஊறுகாயையும் இட்டுக் குழைத்து...:)

அருமையான பயனுள்ள பகிர்வு அக்கா!
பலவிடயங்களை இப்போதான் அறிகிறேன்.

பகிர்விற்கு நன்றியும் வாழ்த்துக்களும் அக்கா!

என்னை மறந்ததேனோ...:))) ம்..;)

Jaleela Kamal said...

மிக அருமையான பகிர்வு மனோ அக்கா.
தெரியாத விஷமையங்களை தெரியபடுத்தியமைக்கு நன்றி.

கரந்தை ஜெயக்குமார் said...

மிகவும் பயனுள்ள பதிவு
நன்றி சகோதரியாரே

Yaathoramani.blogspot.com said...

அனைத்தும் அறியாத தகவல்
அறிந்திருக்கவேண்டிய தகவல்
பதிவாக்கி அறியத் தந்தமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

கவியாழி said...

நிறைய பேருக்கு சரியாக உட்கார்ந்து சாப்பிடவும் தெரியவில்லை என்பதுதான் உண்மை

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் அருமையான விளக்கம்... நன்றி அம்மா...

வாழ்த்துக்கள்...

Unknown said...

#எல்லாவற்றையும் விட கொடுமையானது, அன்பில்லா பெண்டிர் கைகளால் பரிமாறப்படும் உணவை உண்பது தான்#
அவ்வையார் தீர்க்கதரிசி போலிருக்கே !

ராஜி said...

நான் பால் சாதம் சாப்பிட மாட்டேன். மத்தப்படி சாதம் வடிச்ச தண்ணி, பழைய சாதம் சாப்பிடுவேன். பசங்களும் சாப்பிடுவாங்க. பகிர்வுக்கு நன்றி

Menaga Sathia said...

அருமையான பகிர்வு....தெரியாததை தெரிந்துக்கொண்டேன்,நன்றிம்மா!!

சாந்தி மாரியப்பன் said...

அருமையான குறிப்புகள். நன்றி மனோம்மா..

ADHI VENKAT said...

பயனுள்ள தகவல்கள்..சிறு வயதில் பால் சாதம் எனக்கு மிகவும் பிடிக்கும்..

மனோ சாமிநாதன் said...

அழகிய கருத்துரை தந்த அன்பு சகோதரர் வை.கோபாலகிருஷ்னன் அவர்களுக்கு அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி இளமதி! மறக்கவிலையென்பதை உங்கள் வலைத்தளம் வந்து சொல்லி விட்டேன்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி ஜலீலா!

மனோ சாமிநாதன் said...

அன்பான பாராட்டிற்கு இனிய நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் நல்வாழ்த்துக்களுடன் கூடிய கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ரமணி!

மனோ சாமிநாதன் said...

சரியான கருத்து சொல்லியிருக்கிறீர்கள் சகோதரர் கவியாழி கண்ணதாசன்! இதைப்பற்றி தனியே பதிவு தான் போட வேன்டும்.

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பார்ந்த ந‌ன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

உண்மையில் ஒளவையாரின் கருத்துக்கள் அனைத்துமே நெத்தியடியாகவே இருக்கும். வரவிற்கும் கருத்துரை சொன்னதற்கும் அன்பு நன்றி சகோதரர் பகவான்ஜி!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி ராஜி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் மனமார்ந்த நன்றி மேனகா!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் அன்பான நன்றி சாந்தி!!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி ஆதி! இப்போது 60 வயதிற்கு மேலும் கூட, எங்கள் குடும்ப நண்பர் பால் சாதம், தொட்டுக்கொள்ள‌ மாம்பழம் என்று விளாசுவார்!

நம்பள்கி said...

"கஞ்சியை வடிக்காமல் சாதம் சாப்பிடுவதால்தான் நீரிழிவு ஏற்படுகிறது."

இது சரியான புரிதல் அல்ல! புளுங்கள் அரிசி பச்சை அரிசை விட நல்லது!

அவ்வையாருக்கும பதிவிற்கும் +1

நம்பள்கி said...

நான் சொல்லவந்தது--கஞ்சியை வடித்தாலும் அரிசி அரிசி தான்; மேலாக இருக்கும் கஞ்சியை எடுத்தாலும் மீதி உள்ள அரிசி முழுவதும் இருப்பது என்ன?

வருண் said...

எப்படி சாப்பிட்டாலும் பரவாயில்லை. ஆனால் ஒரு நாளைக்கு ஒரு நேரம் மட்டும் சாதம் சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள ட்ரைக்ளிசரைட் குறையும். மேலும் ஆண்களுக்கு தொப்பை விழுவது கொறையும். பசியடங்க சாப்பிட்டால் போதும், வ்யிறு நெறைய சாப்பிடுவது தேவையில்லாதது. சாப்பாட்டை (சாதத்தை) வேஸ்ட் பண்ணக்கூடாதுனு எல்லாத்தையும் வயிற்றில் கொட்டி காலி செய்வது அடிமுட்டாள்த்தனம்னு நான் எங்கம்மாவிடம் சொல்லுவேன்! :)

தி.தமிழ் இளங்கோ said...

சாதம் சாப்பிடுவதும் ஒரு கலைதான் என்பதைச் சொன்னீர்கள். விதம் விதமான சாதம் பற்றி சொல்லும் போது அதன் சுவை நினைவில் வந்து நாவில் தோன்றுகிறது.

'பரிவை' சே.குமார் said...

நல்ல பகிர்வு அம்மா...
வாழ்த்துக்கள்..

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு.......

பயனுள்ள பகிர்வு - பாராட்டுகள்.

மனோ சாமிநாதன் said...

நம்பள்கி சொன்னது:

//"கஞ்சியை வடிக்காமல் சாதம் சாப்பிடுவதால்தான் நீரிழிவு ஏற்படுகிறது."

இது சரியான புரிதல் அல்ல! புளுங்கள் அரிசி பச்சை அரிசை விட நல்லது!நான் சொல்லவந்தது--கஞ்சியை வடித்தாலும் அரிசி அரிசி தான்; மேலாக இருக்கும் கஞ்சியை எடுத்தாலும் மீதி உள்ள அரிசி முழுவதும் இருப்பது என்ன? //

இது பற்றி ஒரு விள்க்கம்.

பச்சை அரிசியை விட புழுங்கல் அரிசி உண‌விற்கு நல்லது. புழுங்கல் அரிசியை விட சிகப்பரிசி மிக மிக நல்லது நீரிழிவிற்கு. ஆனால் எந்த‌ அரிசியாக இருந்தாலும் அதை கஞ்சி வடித்து சமைக்கும்போது அதிலுள்ள‌ கார்போஹைட்ரேட் [ மாவுச் சத்து] 30 லிருந்து 40 சதவிகிதம் குறைந்து விடுகிறது. ஆனால் குக்கரில் சமைக்கும்போது மாவு சத்து பூராவும் அதிலேயே தங்கி விடுகிறது. இந்த வித்தியாசத்தை ரத்தப்பரிசோதனை தொடர்ந்து செய்து பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் ஒரு கப் அளவு சாதம் பரிந்துரைப்பதும் உண்மை. அதை சாப்பிடும் முறையில் தான் சர்க்கரை குறைவதும் அதிகரிப்ப‌தும் இருக்கிற்து.

தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

நல்ல கருத்துக்களி சொல்லியிருக்கிறீர்கள் வருண்! வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

கனிவான பின்னூட்டத்திற்கு மனமார்ந்த நன்றி சகோதரர் இளங்கோ!!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி குமார்!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பார்ந்த நன்றி வெங்கட்!

Asiya Omar said...

சாதத்தின் மகத்துவம் சூப்பர் பகிர்வு.

unmaiyanavan said...

மிகவும் உபயோகமான ஒரு பதிவு. இன்று தான் படிக்க முடிந்தது.

பகிர்ந்துக்கொண்டதற்கு மிக்க நன்றி