ஆச்சரியப்பட வைத்த முத்து:
நோபல் பரிசு பற்றி நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அந்தப்பரிசு என்ன காரணத்தால் உருவாக்கப்பட்டது என்பதை அறிந்த போது மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. இயற்கையான முறையில் எல்லோருக்கும் உதவ வேன்டும் என்ற உந்துதலில் அவை ஏற்படுத்தப்படவில்லை. தன் பெயருக்கு விளைந்த களங்கத்தைத் துடைக்கவே நோபல் பரிசுகளை வருடா வருடம் தரும் முறையை ஏற்படுத்தினார் நோபல்!
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்ஃப்ரெட் நோபல் முதன் முதலாக டைனமைட்டை கண்டுபிடித்தார். சிறிது நாட்களில் அவர் சகோதரர் இறந்த போது, இவர் இறந்ததாக தவறாகப் புரிந்து கொண்ட ஒரு பிரெஞ்சு நாளிதழ், டைனமைட் கண்டு பிடித்த இவர் ஒரு மரண வியாபாரி என்று குறிப்பிட்டிருந்தது. தன் பெயர் உலக சரித்திரத்தில் தவறாக இடம் பெறப்போகிறது என்று அஞ்சினார் ஆல்ஃப்ரெட் நோபல். தீர யோசித்தவர் தன் உயிலை எழுதினார். அதன் படி, தன் சொத்துக்களில் பெரும் பங்கை இயற்பியல், வேதியல், மருத்துவம், இலக்கியம், சமாதானம் என்ற ஐந்து பிரிவுகளில் உலகளாவிய பரிசுகள் ஒவ்வொரு ஆண்டும் தன் பெயரில் வழங்கப்பட வேண்டும் என்று உயில் எழுதி விட்டு இறந்து போனார். நோபல் இறந்து ஐந்து வருடங்கள் கழித்து 1901ஆம் ஆண்டு டிசம்பர் 10ந்தேதியிலிருந்து முதன் முதலாக நோபல் பரிசுகள் வழங்கப்பட்டன. முதன் முதலாக எக்ஸ்ரேயைக் கண்டு பிடித்த ராண்ட்ஜன் பரிசு பெற்றார்.
ரசித்த முத்து:
வீழ்ந்தால் விதையாக விழு.
எழுந்தால் மரமாக உயர்ந்து எழு.
ஓடினால் ஆற்றைப்போல ஓடு.
தேடினால் கடல் கடந்து தேடு.
நேசித்தால் மனித நேயத்தை நேசி.
வாசித்தால் உழைப்பின் மகத்துவத்தை வாசி!
[அவசியமான] குறிப்பு முத்து:
கரப்பான் பூச்சிக்கு பயப்படாதவர் யார்? வீட்டிற்கு வீடு அரசாட்சி செய்யும் இதை அழிக்க ஒரு குறிப்பு: சினேகிதி சொன்னது இது.
வெள்ளரி தோல்களை ஒரு அலுமிய பாத்திரத்தில் போட்டு வைத்தால் இந்த வாசனைக்கு கரப்பான் பூச்சிகள் கிட்டே வராது.
மருத்துவ முத்து:
மூக்கிலிருந்து நீர் கொட்டுவதற்கு:
மண் சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்றி, சமையல் மஞ்சளை எண்ணெயில் நனைத்து பிறகு விளக்கில் சுட்டால் வரும் புகையை முகர்ந்தால் மூக்கிலிருந்து நீர் கொட்டுவது நிற்கும்.
SMART SOCKS:
சாதாரணக்குழந்தைகளை விட, எடை குறைவாக, மூச்சுத்திணறல் போன்ற பல்வகைப் பிரச்சினைகளுடன் பிறக்கும் குழந்தைகளை பொதுவாய் மருத்துவ மனைகளில் இன்குபேட்டரில் வைத்து பாதுகாக்கிறார்கள். இந்தக் குழந்தைகள் சுவாசிக்கும் ஆக்ஸிஜன் அளவை, இதயத்திடிப்பினை தாய் அறிந்து கொள்ளும் விதத்தில் அமெரிக்காவில் ஒரு பிரபல நிறுவனம் ' ஸ்மார்ட் ஸாக்ஸ்' தயாரித்துள்ளது.
இந்த ஸாக்ஸை குழந்தைக்கு அணிவித்து விட்டால் இந்த ஸாக்ஸிலுள்ள ஒரு கருவி குழந்தையின் இதயத்துடிப்பு, தோலின் தன்மை, உடலின் வெப்ப அளவு, தூக்கத்தின் நிலைகள், போன்றவற்றை பதிவு செய்து அதன் பெற்றோர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் ஃபோனுக்கு அந்தத் தகவல்களை இணைய தளம் மூலம் அனுப்பி வைக்கிறது. குழந்தைக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டாலோ இதயத்துடிப்பில் மாறுதல்கள் ஏற்பட்டாலோ இந்தக் கருவியின் மூலம் ஸ்மார்ட் ஃபோனுக்கு எச்சரிக்கை அலாரம் வடிவில் உடனடியாக வந்து சேரும். பெற்றோரும் உடனடியாக மருத்துவரை அழைக்க முடியும்.
கலங்க வைத்த முத்து:
இந்தப்புகைப்படத்தை என் சினேகிதி அனுப்பியிருந்தார். குழந்தையை அதன் தாய் அன்போடு கொஞ்சும் பின்னணியில் ஒரு கவிதை! முதியோர் இல்லத்தில் வாடும் ஒரு தாயில் கண்ணீர் தான் தலைப்பு!
நீ இருக்க ஒரு கருவறை
இருந்தது என் வ்யிற்றில்!
நான் இருக்க ஒரு இருட்டறை
கூடவா இல்லை உன் வீட்டில்?

24 comments:
அனைத்து முத்துக்களும் அருமை.
கலங்க வைத்த முத்து உண்மையிலேயே கலங்கத்தான் வைக்கிறது.;(
பகிர்வுக்கு நன்றிகள்.
முத்துக்கள் ஒவ்வொன்றும் அருமை ...
//////நான் இருக்க ஒரு இருட்டறை
கூடவா இல்லை உன் வீட்டில்?///
இருண்ட மனதிற்குச் சொந்தக்காரர்கள்
அனைத்து முத்துகளும் அருமை.....
இருட்டறை - கலங்க வைத்தது!
அருமையான முத்துக்கள்... நன்றி அம்மா...
நோபல் முத்து அறிவை வளர்த்தது.. கடைசி முத்து நெஞ்சை கனக்க வைத்தது.
ஆல்பிரட் நோபெல்ப்றிய செய்திக் குறிப்பு நான் அறியாதது.கரப்பான் பஊச்சி ஒழிக்க நான் கையாளும் முறை
போரிங் பவுடர் ( கேரம்போர்டிற்கு போடும் பவுடர்) கோதுமை மாவி இரண்டையும் கலந்து தண்ணீர் விட்டுப் பிசைந்து சின்ன சின்ன உருண்டைகளாக செய்து அங்கங்கே போட்டு வைத்தால் கரப்பான் நம் வீட்டுப் பக்கம் அண்டவே அண்டாது.
வீட்டில் குழந்தைகள் இருந்தால் இதை நடைமுறைப் படுத்ஹுவது கடினம் தான்.
எல்லா முத்துக்களும் அருமையாய் ஜொலிக்கிறது.
அனைத்து முத்துக்களும் அருமை...கடைசி முத்து கலங்க வைத்தது...
அனைத்து முத்துக்களுமே அருமை...
மருத்துவ முத்தில்- மூக்கிலிருந்து நீர் கொட்டுவதற்கு கொடுத்துள்ள குறிப்பில் கண்ணிலிருந்து நீர் கொட்டுவது நிற்கும் என்று எழுதியுள்ளீர்களே...பார்க்கவும்... இது எதற்கான வைத்தியம்...
நோபல் பரிசு விபரம் கேள்விப்பட்டிருக்கிறேன்.
ரசித்த முத்து அபாரம்.
கரப்பான்பூச்சிக்கான ட்ரீட்மென்ட் முயற்சி செய்து பார்க்க வேண்டும்.
கலங்கவைத்த முத்து பிரமாதம் (எ.பி உள்பெட்டியிலும் முன்பு பகிர்ந்திருக்கிறோம்!)
பகிர்ந்த முத்துக்கள் அனைத்தும் அருமை.மனதை தொட்டன.
கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!!
வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி மகேந்திரன்!
கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!!
பாராட்டிற்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி வெங்கட்!
பாராட்டிற்கும் வருகைக்கும் அன்பார்ந்த நன்றி தனபாலன்!
இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி ஆனந்த்!
நீங்கள் கூறியுள்ள மாதிரி நானும் செய்வதுண்டு ராஜலக்ஷ்மி! கரப்பான் பூச்சிகளின் தொல்லையே பல மாதங்களுக்கு இருக்காது.
பாராட்டிற்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி!
இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி மேனகா!
என் தவறை குறிப்பிட்டுக் காட்டியதற்கு அன்பு நன்றி ஆதி! பிழையை சரி செய்து விட்டேன்.
வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி ஸ்ரீராம்!!
அருமையான கருத்துரைக்கு அன்பு நன்றி ஆசியா!
முத்துக்கள் அருமை...
முத்துக்கள் அருமை...
Post a Comment