Wednesday, 24 July 2013

மீன் குழம்பு!!


அசைவத்தில் நிறைய பேருக்கு மிகவும் பிடித்தது மீன் குழம்பு தான். தஞ்சைப் பக்கத்தில் கடல் மீன் குழம்பில் போட மாட்டார்கள். குறவை, ஜிலேபி கெண்டை இப்படி பல வகைகள் இருந்தாலும் குளத்தில் பிடித்து சுத்தம் செய்த விரால் மீன் தான் தஞ்சை ஸ்பெஷல் மீன் குழம்பு!! அதுவும் கிராமங்களில் இரவு நேரம் தான் மீன் பிடித்து வருவார்கள். அந்த நேரம் அம்மியில் மிளகாய் அரைத்துப்போட்டு சுடச்சுட மீன் குழம்பு பல வீடுகளில் தயாராகிக்கொண்டிருக்கும். இப்போது விரால் மீன் கிலோ 600 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
 


புதுப்புளியைக்கரைத்து ஊற்றி மாங்காய்த்துண்டுகள், அதுவும் ஒட்டு மாங்காய்த்துண்டுகள் செங்காயாகப் போட்டு தயாரிக்கப்படும் மீன் குழம்பு அலாதி ருசியாக இருக்கும்! சிலர் தேங்காய் அரைத்துச் சேர்ப்பார்கள். அதுவும் தனிச்சுவையாக இருக்கும். மண் சட்டியில் தான் கிராமங்களில் மீன் குழம்பைத் தயாரிப்பார்கள். மீதமிருக்கும் குழம்பை மறு நாள் வைத்து சாப்பிடுவது அத்தனை ருசி என்பார்கள்!!
நான் இங்கு எழுதும் குறிப்பு தேங்காய் போடாதது!  

இனி சமையலறைக்குச் செல்லலாம்!

தேவையானவை:

மீன் துண்டுகள்-10
புளி- ஒரு பெரிய எலுமிச்சம்பழம் அளவு
மிளகாய்த்தூள்- 1 மேசைக்கரண்டி
கொத்தமல்லித்தூள்- 1 ½ மேசைக்கரண்டி
மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்
தேவையான உப்பு
நல்லெண்ணெய்- கால் கப்+ 1 ஸ்பூன்
வெந்தயம்- 1 ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது
மாங்காய்த்துண்டுகள்-5
நறுக்கிய சிறிய வெங்காயம்- 1 கப்
பொடியாக அரிந்த தக்காளி- 1 கப் 

செய்முறை: 

புளியை போதுமான நீரில் ஊறவைத்து கெட்டியாக கரைக்கவும்.
அதில் தூள்களைப்போட்டு கரைத்து வைத்துக்கொள்ளவும்.
வாணலியில் நல்லெண்னையை ஊற்றி சூடாக்கவும்.
வெந்தயத்தைப்போட்டு அது பொரிய ஆரம்பித்ததும் வெங்காயத்தையும் கறிவேப்பிலையையும் போட்டு வதக்கவும்.
பிறகு தக்காளியை மஞ்சள் தூளுடன் சேர்த்துப் போட்டு அது நன்கு குழைந்து மேலே எண்ணெய் தெளியும் வரை வதக்கவும்.
இப்போது தூள்கள் கலந்த புளி நீரை ஊற்றி மாங்காய்த்துண்டுகள் சேர்த்து போதுமான உப்பும் போட்டு கொதிக்க விடவும்.
குழம்பு தண்ணீராகவும் இல்லாமல் கெட்டியாகவும் இல்லாமல் நடுத்தரமாக இருக்க வேண்டும்.
மாங்காய்த் துண்டுகள் முக்கால் வாசி வெந்ததும் மீன் தூண்டுகள் சேர்த்து தீயை மிதமாக வைக்கவும்.
மீன் வெந்ததும் குறைந்த தீயில் சில வினாடிகள் வைக்கவும்.
மீதமிருக்கும் 1 ஸ்பூன் எண்ணெயைப்பரவலாக ஊற்றவும்.

சுவையான மீன் குழம்பு தயார்!!

 

25 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் பிடித்த மீன் குழம்பு... ஒட்டு மாங்காய்த்துண்டுகளை சேர்த்து செய்ததில்லை... செய்முறை குறிப்பிற்கு நன்றி...

S.Menaga said...

படத்தை பார்த்த‌தும் மீன் குழம்பு சாப்பிட தோனுது,செம கலரா இருக்கு...

MANO நாஞ்சில் மனோ said...

படத்தை பார்த்ததும் பசி எடுக்கிறதே....!

Ramani S said...

படம் பார்த்ததும் செய்துபார்க்கவேண்டும்
என்கிற ஆவலைத் தவிர்க்க இயலவில்லை
படங்களுடனும் செய்முறை விளக்கம்
தந்த விதம் அருமை
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

கவியாழி கண்ணதாசன் said...

பார்க்கும்போதே சாப்பிட தூண்டும் பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றி

வெங்கட் நாகராஜ் said...

மீன் குழம்பு பிடிச்சவங்க எல்லாம் நல்லா சாப்பிடுங்க! சரியா.... :))))


ஸாதிகா said...

நாங்கள் வைக்கும் மீன் குழம்புக்கு இது சற்று வித்த்யாசம்.படத்தில் காணப்பட்ட குழம்பு பார்க்கவே கலர்ஃபுல் ஆக இருக்கும் அவசியம் இந்த முறையில் செய்து பார்க்கவேண்டும்.

திண்டுக்கல் தனபாலன் said...

Visit : http://blogintamil.blogspot.in/2013/07/3_25.html

வாழ்த்துக்கள்...

அமைதிச்சாரல் said...

ருசி நல்லாயிருக்கும்ன்னு தோணுது.

சே. குமார் said...

நாளைக்கு இந்த முறையில் செய்து பார்க்க வேண்டும் அம்மா. வாழ்த்துக்கள்.

கீத மஞ்சரி said...

மீன்குழம்பு படத்தைப் பார்த்தாலே பசியுண்டாகிறது. என் அம்மா வைக்கும் மீன்குழம்பில் எனக்காகவே மாங்காய் அல்லது தக்காளிக்காய் போடுவார்கள். செய்முறைப் பகிர்வுக்கு நன்றி மேடம்.

தி.தமிழ் இளங்கோ said...

வலையுலகில் கணினி அனுபவம் என்ற தலைப்பில் தொடர்பதிவு ஒரு சங்கிலித் தொடர் போல நீண்டு கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில் ஏற்கனவே இன்னொரு பதிவரால் தொடர் எழுத அழைக்கப்பட்டவரை, நானும் அழைத்து குழப்ப விரும்பவில்லை. எனவே தொடருக்கு அழைக்கப்படாத எனக்கு அறிமுகமானவர்களை அன்புடன் எழுத அழைக்கின்றேன். அவர்களுள் நீங்களும் ஒருவர்.

( எனது கணினி அனுபவங்கள் ( தொடர் பதிவு )
http://tthamizhelango.blogspot.com/2013/07/blog-post_25.html )

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் மீன் குழம்பை ரசித்து பின்னூட்டம் அளித்ததற்கும் அன்பு நன்றி சகோதரர் தனபாலன்! முக்கியமாய் வலைச்சரத்தில் என்னை அறிமுகம் செய்திருப்பதை வழக்கம்போல் அன்புடன் அக்கறையுடன் அறிவித்ததற்கு அன்பு நிறைந்த ஸ்பெஷல் நன்றி!!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் ரசித்துப் பாராட்டியத‌ற்கும் அன்பு நன்றி ஸாதிகா!

மனோ சாமிநாதன் said...

ரசித்து எழுதியதற்கு அன்பார்ந்த நன்றி மேனகா!

மனோ சாமிநாதன் said...

தொடர் பதிவிற்கு என்னை அன்புடன் அழைத்ததற்கு மனமார்ந்த நன்றி சகோதரர் இளங்கோ! விரைவில் எழுதுகிறேன்.

மனோ சாமிநாதன் said...

வருகைக்கு அன்பு நன்றி நாஞ்சில் மனோ! நாஞ்சில் நாட்டுக்காரராயிற்றே நீங்கள்!! நிச்சயம் மீனைப்பார்த்தால் பசியெடுக்கத்தான் செய்யும்!!

மனோ சாமிநாதன் said...

அழகிய கருத்துரைக்கும் பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் ரமணி!!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் மனம் நிறைந்த நன்றி சகோதர் கவியாழி கண்ணதாசன்!

மனோ சாமிநாதன் said...

செய்து பாருங்கள் சாந்தி! ருசிக்க நான் கியாரண்டி!

மனோ சாமிநாதன் said...

அவசியம் செய்து பார்த்து விட்டுச் சொல்லுங்கள் குமார்!

மனோ சாமிநாதன் said...

ரசித்துப்பாராட்டியதற்கு இனிய நன்றி கீதமஞ்சரி!

தி.தமிழ் இளங்கோ said...

முதல் பதிவின் சந்தோசம் (தொடர் பதிவு)
http://tthamizhelango.blogspot.com/2013/08/blog-post_5.html

தொடர்பதிவு என்றால் நானும் சில வலைப் பதிவர்களை அழைக்க வேண்டும். நான் எனக்கு அறிமுகமான வலைப் பதிவர்கள் ஆறு பேரை அன்புடன் அழைத்துள்ளேன்
சுப்புத் தாத்தா ( http://subbuthatha72.blogspot.in )
G M பாலசுப்ரமண்யம் (http://gmbat1649.blogspot.in )
மனோ சுவாமிநாதன் (http://muthusidharal.blogspot.in )
ஆரூர் மூனா செந்தில் ( http://www.amsenthil.com )
கவியாழி. கண்ணதாசன் (http://kaviyazhi.blogspot.in )
யுவராணி தமிழரசன் ( http://dewdropsofdreams.blogspot.in )

தி.தமிழ் இளங்கோ said...

ஒரு தகவலுக்காக மட்டும் இதனை பதிவு செய்துள்ளேன்.

அன்புள்ள ப்ளாக்கர் நண்பன் அப்துல்பாசித் அவர்களுக்கு வணக்கம்! எனது ” துள்ளித் துள்ளி ஓடும் வலைத்தளம் (http://tthamizhelango.blogspot.com/2013/07/blog-post_9497.html) என்ற பதிவிற்கு, தாங்களே முன்வந்து ஆலோசனை தந்து இருந்தீர்கள். உண்மையில் பயம் காரணமாக அதன்படி உடனே அதனை பின்பற்றவில்லை. இப்போது நீங்கள் சொன்னபடி எனது வலைப்பதிவில் மாற்றம் செய்து விட்டேன். தங்களுக்கு நன்றி! உங்களுடைய பதிவினை மேற்கோள் சொல்லி எனக்கு வழிகாட்டிய சென்னை பித்தன் அவர்களுக்கும், எனக்கு சொல்லுமாறு சொல்லிய ச்கோதரி அம்பாள் அடியாள் அவர்களுக்கும், மற்றும் இது விஷயமாக சுட்டிக் காட்டிய சகோதரிகள் கவிஞர் வேதா. இலங்காதிலகம் மற்றும் மனோ சாமிநாதன் அவர்களுக்கும் நன்றி!

அன்புடன் – தி.தமிழ் இளங்கோ
வலைப் பதிவு: எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL http://tthamizhelango.blogspot.com
நாள்: 06.08.2013

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள சகோதரர் தமிழ் இளங்கோ அவர்களுக்கு!

என்னை தொடர் பதிர்விற்கு தாங்கள் அழைத்திருப்பதற்கு அன்பான நன்றி! தற்போது தஞ்சையில் இருப்பதால் நான் எனது வசிப்பிடத்திற்குத்திரும்பிய பிறகு விரைவில் இந்த தொடர்பதிவில் இணைகிறேன்!!