அசத்திய தகவல் முத்து:
நவரத்தினங்களின் உண்மைத்தன்மையைக் கண்டு பிடிக்க:
1. நல்ல முத்தென்பது நுரையற்ற பாலில் மிதக்கும்.
2. மரகதத்தை குதிரையின் முகத்தருகே கொண்டு சென்றால் அது தும்ம வேண்டும்.
3. கோமேதகத்தை பசும் நெய்யில் போட்டால் குங்குமப்பூ வாசனை வரும்.
4. நீலக்கல்லை பச்சிலை சாற்றில் போட்டால் மெதுவாக சப்தம் எழுப்பும்.
5. வைடூரியத்தை பச்சிலை சாற்றில் போட்டால் அது நீல நிறமாக மாறும்.
6. புஷ்பராகத்தை சந்தனம் அரைக்கும் கல்லில் வைத்தால் தாமரைப்பூ மணம் கமழும்.
7. பச்சைக்கல்லை குத்து விளக்கின் முன்னே வைத்தால் சிவப்பாக தெரியும்.
ரசித்த முத்து:
பாரதி பாஸ்கர் நடுத்தர வயதில் அல்லாடும் பெண்களைப்பற்றி எழுதியதில் சில வரிகள்!
ஒரு அம்மாவிடம் காட்டும் எரிச்சலை, எரிந்து விழுகிற சிடுசிடுப்பை வீட்டில் யாரிடமும் காட்டி விட முடியாது. அம்மா? அவள் மீது தான் பூமாதேவி என்ற லேபிள் குத்தியிருக்கிறதே, அதனால் அவள் தாங்கிக் கொள்வாள்.
குடும்பமே ஹாலில் கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருக்க, இரு அடுப்புகளில் இரு தோசைக்கல்களைப் போட்டு மாற்றி மாற்றி தோசை ஊற்றி, அடுக்களைக்கும் ஹாலுக்கும் ஓடி ஓடி சுடச்சுட பரிமாறியதும் இவளே. இன்று திருமணம் ஆன மகன், தன் மனைவி அடுக்களையில் இருந்தாலும் தானே வந்து காப்பி போட்டுக்கொண்டு, அவளுக்கும் ஒரு தம்ளர் கொடுப்பதை பார்த்தும் பாராமல் இருக்கிறவளும் இவளே!
ஆரம்பத்தில் மாமியாரிடம் பேச்சு வாங்கி கஷ்டப்பட்டு, இன்றைக்கு மருமகளிடம் பேச முடியாது நயத்தகு நாகரீகம் பாராட்டும் இவள் வாழ்வு ஒரு எழுதப்படாத சரித்திரம்.
இளமையில் எதையும் தாண்டி ஓடி விட முடிகிறது. நடுத்தர வயதிலோ உரிய மரியாதை இல்லாத உழைப்பு விழலுக்கு இரைத்த நீரோ என்ற ஏமாற்றம் தாக்குகிறது. தனக்கான அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் தேடும் பெண்ணின் வலியும் ஆழ்மன எக்கமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது!
ரசித்த கவிதை:
இது ஒரு சினேகிதியிடமிருந்து வந்த எஸ்.எம்.எஸ்!
நிலவை நேசி மறையும் வரை!
கனவை நேசி கலையும் வரை!
இரவை நேசி விடியும் வரை!
மலரை நேசி உதிரும் வரை!
நட்பை நேசி உயிர் பிரியும் வரை!
புன்னகைக்க வைத்த வாசக முத்து:
காதல் திருமணம்: தானாய் போய் கிணற்றில் விழுவது.
பெரியவர்கள் செய்து வைக்கும் திருமணம்: பலர் சேர்ந்து கிணற்றில் தள்ளுவது.

33 comments:
பாரதி பாஸ்கர் நடுத்தர வயதில் அல்லாடும் பெண்களைப்பற்றி எழுதியதில் சில வரிகள்!
அருமையோ அருமை.
மிகவும் ரஸித்தேன்.
அவர்கள் பட்டி மன்றங்களில் பேசினாலே எனக்கு மிகவும் பிடிக்கும்.
>>>>>
அசத்திய தகவல் முத்து:
படிக்கும் எங்களையும் அசத்தியது.
ரஸித்த கவிதையும் நன்றாக் உள்ளது.
//கனவை நேசி கலையும் வரையும் வரை!//
‘வரையும்’ என்ற சொல்லை எடுத்து விடலாமே!
>>>>>
புன்னகைக்க வைத்த வாசக முத்து:
நல்ல நகைச்சுவையாக உள்ளது.
மொத்தத்தில் முத்துக்குவியல்-22
மிகவும் ஜோராக உள்ளது.
பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.
நட்பை நேசி உயிர் பிரியும் வரை!
தாங்கள் ரசித்த கவிதை அருமை.சகோதரியாரே. உண்மை.
தாங்கள் வலைப் பூ வின் மேல் கொண்டுள்ள பாசமும், உழைப்பும் வியக்க வைக்கின்றது. லாப் டாப் இல்லாமல் தமிழகம் வந்தபிறகும் தங்களின் பதிவு தொடர்கிறது.
தங்களைச் சந்தித்ததும் உரையாடியதும் மறக்க இயலா நிகழ்வு. நன்றி சகோதரியாரே.
என்றும் வேண்டும் இந்த அன்பு.
அனைத்து முத்துக்களும் மிக அருமை .. புன்னகைக்க வைத்த முத்து மிகவும் ரசித்தேன் . வாய் விட்டு சிரித்தேன்..:))
முத்துக்கள் ரசிக்க வைத்தன....
முத்துக்களின் தன்மை அறிய தாங்கள் சொன்னதை அறிந்து கொண்டோம் அம்மா...
அருமை...
வணக்கம் அம்மா .... தங்களின் முத்துக்குவியல் மிகவும் அருமை ... அறிந்து கொள்ளவேண்டிய முத்து... தெரிந்து கொள்ளவேண்டிய முத்து.... மதிக்க வேண்டிய முத்து ... மிகவும் அருமை.......
நவரத்தினங்கள் பற்றிய தகவல்களுக்கு மிக நன்றி,அசத்தல் முத்துகள்!!
முத்துக்குவியலில் பகிர்ந்த அனைத்தும் ந்ன்றாக இருக்கிறது.
ஒவ்வொரு முத்துகளும் அருமை. குறிப்பாக அன்னை பற்றிய முத்து ஜொலித்தது.
சிதறல் ஒளிர்கிறது .
அனைத்தும் அருமை .
வாழ்த்துக்கள் !
அனைத்தையும் ரசித்தேன்.....
திருமணம் : ஹா ஹா ஹா ஹா.... சரியாத் தான் சொல்லியிருக்காங்க!
மனோ அக்கா!
நினைவிலும் நிகழ்விலும் நிலையாய்
எமக்குள் எம்முடன் என்றும்
உணர்விலும் உள்ளதை உரைத்த
முத்தான முத்துக்குவியல்!
அத்தனையும் சிறப்பு!
வாழ்த்துக்கள் அக்கா!
நவரத்தின சோதனை அருமை. குதிரை கிடைப்பது மட்டும்...
பாரதி பாஸ்கரும் நடுத்தர வயதை எட்டிவிட்டிருக்கிறார்!
வணக்கம்!
சுதந்திர வாழ்த்தினைக் சூடுகிறேன்! வாழ்க
இதந்தரும் வாழ்வில் இனித்து!
கொத்தெனக் கொட்டியது
முத்துக் குவியல்! வாழ்த்துக்கள்!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
எல்லா முத்துக்க்களுமே அருமை. பாரதி பாஸ்கர் சொல்லியிருப்பது சரி. இன்னும் இரண்டு மூன்று தலைமுறைகள் கடந்தபின் மொத்தக் காட்சிகளுமே மாறி விடுமோ!
முத்துக்குவியலை ரசித்ததற்கும் பாராட்டியதற்கும் உளமார்ந்த நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!
ரசித்த கவிதையில் ' வரையும்' என்ற வார்த்தை தவறுதலாக விழுந்து விட்டது. அதை இப்போது சரி செய்து விட்டேன்!
அன்பான பின்னூட்டத்திற்கு இனிய நன்றி சகோதரர் ஜெயக்குமார்!
உங்களையும் உங்களின் இல்லத்தரசியையும் சந்தித்தது மறக்க இயலா நிகழ்வு எனக்குமே! அன்பிற்கும் நட்பிற்கும் என்றுமே அழிவில்லை. நம் நட்பும் என்றுமே தொடர்ந்திருக்கும்!
ரசித்துப் பாராட்டியதற்கு அன்பு நன்றி ராதா!
ரசித்து பின்னூட்டமளித்ததற்கு மனமார்ந்த நன்றி குமார்!
வருகைக்கும் பாராட்டிற்கும் இனிய நன்றி விஜி!!
பாராட்டுக்கு அன்பு நன்றி மேனகா!
வருகைக்கும் பாராட்டிற்கும் உளமார்ந்த நன்றி கோமதி!
ரசித்துப் பாராட்டியதற்கு அன்பு நன்றி கோவை ஆவி!
வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் அன்பு நன்றி ஸ்வராணி!
உங்களை சிரிக்க வைத்தது எனக்கு சந்தோஷமாயிருக்கிறது சகோதரர் வெங்கட்!
வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்கவிதைக்கும் அன்பு நன்றி இளமதி!
கருத்துரைக்கு இனிய நன்றி நிலாமகள்!!
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் பாரதிதாசன்!!
கருத்துரைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்!!
எல்லா முத்துக்களுமே சுவாரஸ்யம். ரொம்பவும் பிடித்த முத்து SMS கவிதை, அடுத்து திருமணம் பற்றிய முத்து.
பாரதி பாஸ்கர் எப்பவுமே நான் ரசிக்கும் முத்து.
அழகான முத்துக்கள்!
Post a Comment