Friday, 3 February 2012

அர்த்தமுள்ள ரசனைகள்!!

சமீபத்தில் ரசித்த சில விஷயங்களின் தொகுப்பு இது! ஒவ்வொரு விஷயமும் ஒவ்வொரு விதத்தில் பாதித்தது மனதை!




இயக்குனர் லிங்குசாமி தன் வாழ்க்கையை செம்மையாக்கியது ஒரு புத்தகம்தான் என்கிறார். இவர் ஒரு வார இதழில் எழுதிய கருத்துக்கள் மிகவும் யோசிக்க வைத்தது.

உண்மை தான்! பிரச்சினைகள் எல்லோரது வாழ்க்கையிலும் ஒன்றல்ல, நிறையவே இருக்கின்றன. சில சமயங்களில் எதை சரியாக்குவது, எதை சமாளிப்பது, எதைத் தீர்த்தால் எது சரியாகும் என்று குழம்பவே செய்கிறோம். இவரின் அனுபவமும் யோசனையும் நிச்சயம் எல்லோருக்குமே பலனளிக்கும், எனக்கும் சேர்த்துத் தான்!!

வேலையில்லாமல் தொடர் நிகழ்வுகளாக ஏமாற்றங்களும் அதிர்ச்சிகளும் நிர்ப்பந்தகளும் வாழ்க்கையைத் தாக்கிக்கொண்டேயிருந்தபோது, இயக்குனர் லிங்குசாமி ஒரு பலவீனமான மன நிலையில் தற்கொலையைப்பற்றியும்கூட யோசித்திருக்கிறார். பணப்பற்றாக்குறை, சினிமா வாய்ப்பு தேடி அலைந்து தொடர்ந்த ஏமாற்றங்கள், சிறு வயதிலேயே முடிந்த திருமணத்தால் இரண்டு வீட்டிலும் மனைவியை சென்னைக்கு அழைத்துப்போகச் சொல்லி தொடர்ந்த நெருக்கடி என்று மனம் தவித்துக்கொண்டிருந்த நிலையில்தான் ‘ நீ இறந்தால் உனக்காக அழுபவர் யாரோ?’ என்ற மொழிபெயர்ப்பு புத்தகத்தை [who will cry when you die?] படிக்க நேர்ந்திருக்கிறது. இந்தப் புத்தகம் தன் வாழ்க்கையையே புரட்டிப்போட்டதாகச் சொல்லுகிறார் இவர். தன்னம்பிக்கைத் தொடர்களும் பிரச்சினைகளைக் குறித்த அலசல்களும் ஆய்வுகளும் புத்தகங்களாக ஏற்கனவே நிறைய வந்திருந்தாலும் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் ராபின் ஷர்மா பிரச்சினைகளைக் கையாளும் விதம் பற்றி எழுதியிருந்த விதம் அவரை மிகவும் ஈர்த்திருக்கிறது. ராபின் ஷர்மா எழுதியிருந்ததன் முக்கிய சாராம்சம்:

“பிரச்சினைகளைப்பற்றியே சிந்திக்காமல் அவற்றை முதலில் பட்டியலிடுங்கள். அவற்றில் எது தலையாய பிரச்சினை என்று அப்போது தான் உங்களுக்கு புலப்படும். அதைத் தீர்க்க முற்பட்டால் உங்கள் வாழ்க்கையில் வெற்றி கிட்டும்.’

மீண்டும் மீண்டும் படிக்க, மனதில் தெளிவு ஏற்பட்டது அவருக்கு. தன் பிரச்சினைகளை பட்டியலிட்டார். ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் மூன்று பிரச்சினைகள் தான் தலையாய பிரச்சினைகள் என்று புலப்பட்டது.

1. மனைவியை சென்னைக்கு எப்போது அழைப்பது?

2. படம் எப்போது செய்வது?

3. அதே கதையா அல்லது புதிய கதையா?

நன்கு யோசித்ததில் முதலில் படம் செய்தால் போதும், மற்றவை தானாகவே அமைந்து விடும் என்ற உண்மை புலப்பட்டது. எந்தெந்த கம்பெனிகளில் கதை சொல்லியிருக்கிறோம், எங்கெங்கு சொல்லவில்லை என்று கடும் முயற்சி எடுத்து இன்னொரு பட்டியலிட்டபோது, மறுபடியும் வெளிச்சம் தென்பட்டது. இந்த பட்டியல் தயாரித்த இருபதாம் நாள் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரித்த ‘ஆனந்தம்’ திரைப்படத்தில் இயக்குனராக அமர்ந்து விட்டார் இயக்குனர் லிங்குசாமி. அதற்கப்புறம் தன் வாழ்க்கையில் ஆனந்தம்தான் என்று சொல்லும் இவர், இந்தப் புத்தகத்தை தான் வாசித்தேன் என்று சொல்வதை விட, நேசித்தேன் என்று சொல்வதை விட, சுவாசித்தேன் என்று சொல்வது தான் சரியானது என்றும் மகிழ்வுடன் குறிப்பிடுகிறார்.



2. தேவர் மகன் படத்தில் வரும் வசனம் கூட இன்றைய வாழ்க்கைக்கு எது அர்த்தமுள்ளது என்பதை எத்தனை அழகாகக் காட்டுகிறது!! நாம் விதைக்கும் ஒவ்வொரு நல்ல விஷயமும் எத்தனை தலைமுறைக்கு பயன் தருகின்றது!!

ரசித்த தேவர் மகன் திரைப்படத்தில் வரும் ஒரு வசனம்:

"எல்லா பயபுள்ளையும் ஒரு நாளைக்கு சாக வேண்டியது தான். வாழறது முக்கியம்தான். ஆனா மத்தவங்களுக்கு பயனுள்ள வாழ்க்கையா வாழ்ந்துட்டு செத்துட்டு போறது தான் அந்த சாவுக்கே பெருமை!!


விதை விதைச்சவுடனேயே பழம் சாப்பிடணும்னு நினைக்க முடியுமோ? இன்னிக்கு நான் விதைக்கிறேன். நாளைக்கு நீ பழம் சாப்பிடுவே. அப்புறம்? உன் பையன் சாப்பிடுவான். அதற்கப்புறம்? அவன் பையன் சாப்பிடுவான். அதையெல்லாம் பார்க்கறதுக்கு நான் இருக்க மாட்டேன். ஆனா விதை நான் போட்டது."

3. ரசித்த வாசகம்:

ஒரு மரத்தால் ஆயிரம் தீக்குச்சிகளை உருவாக்க முடியும்.

ஒரு தீக்குச்சியால் ஆயிரம் மரங்களை அழிக்க முடியும்.


4. பொதுவாக இனிப்பு வகைகள், சாக்கலேட்டுகள் சாப்பிடுவதால் உடல் நலத்திற்கு தீங்கு, உடல் பருக்கும் என்று தான் கேள்வியுற்றிருக்கிறோம். ஆனால் இந்த ஆய்வு நம்மை திகைக்க வைக்கிறது!

பெண்கள் சாக்கலேட் சாப்பிட வேண்டும்!!!

33000 பெண்களிடம் எடுக்கப்பட்ட புதிய ஆய்வின்படி, சர்க்கரை, பால் குறைவாகவும் கோக்கோ அதிகமாயும் உள்ள சாக்கலேட்டுகள் தினமும் 45 கிராம் சாப்பிட்டு வருபவர்களில் 1000 பேர்களில் 3 பேருக்கு மட்டுமே பக்கவாதத்துக்கான அறிகுறிகள் தென்படுவதாக ஸ்வீடன் நாடு சொல்கிறது.

படங்கள் உதவி: கூகிள்

31 comments:

சத்ரியன் said...

சிறந்த பகிர்வு.

Yaathoramani.blogspot.com said...

தங்கள் பதிவின் பெயருக்கேற்றார்ப்போல
எப்போதும் போல இப்போதும் அழகிய
முத்துக்களை எளிமையாக கோர்த்துக் கொடுத்துள்ளீர்கள்
மனம் கவர்ந்த பதிவு
பகிர்வுக்கு நன்றி

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ஒரு மரத்தால் ஆயிரம் தீக்குச்சிகளை உருவாக்க முடியும்.

ஒரு தீக்குச்சியால் ஆயிரம் மரங்களை அழிக்க முடியும்.//

அருமையான கருத்து. ;)))))

வை.கோபாலகிருஷ்ணன் said...

//"எல்லா பயபுள்ளையும் ஒரு நாளைக்கு சாக வேண்டியது தான். வாழறது முக்கியம்தான். ஆனா மத்தவங்களுக்கு பயனுள்ள வாழ்க்கையா வாழ்ந்துட்டு செத்துட்டு போறது தான் அந்த சாவுக்கே பெருமை!!//

அழகான வசனம் தான் இது. நானும் மிகவும் ரஸித்தேன் அந்தப்படத்தில்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//விதை விதைச்சவுடனேயே பழம் சாப்பிடணும்னு நினைக்க முடியுமோ? இன்னிக்கு நான் விதைக்கிறேன். நாளைக்கு நீ பழம் சாப்பிடுவே. அப்புறம்? உன் பையன் சாப்பிடுவான். அதற்கப்புறம்? அவன் பையன் சாப்பிடுவான். அதையெல்லாம் பார்க்கறதுக்கு நான் இருக்க மாட்டேன். ஆனா விதை நான் போட்டது."//

மனதில் விதையாகப் பதிந்து போய் அனைவருக்கும் பழமளிக்கும் (பலனளிக்கும்) விஷயம் தான். நினைவூட்டியதற்கு மகிழ்ச்சி. ;)))))

வை.கோபாலகிருஷ்ணன் said...

//தன் வாழ்க்கையை செம்மையாக்கியது ஒரு புத்தகம்தான் //

வாழ்க்கையைச் செம்மையாக்கும் புத்தகங்கள் வெளியிடப்பட வேண்டும். அவற்றைத் தேடிக் கண்டுபிடித்துப் படித்து மகிழ்ந்து வாழ்க்கையைச் செம்மையாக்கிக்கொள்ள நாமும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.

சந்தோஷம் தரும் பகிர்வு தந்தமைக்கு பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

ஆமினா said...

இந்த போஸ்ட்க்கு நீங்க தலைப்பு வைக்கலையா?

அருமையான தொகுப்பு. அடிமட்டத்திலிருந்து கடும் உழைப்பால் வந்தவர்களுக்கு நிச்சயம் நல் வாழ்க்கை உண்டு

ADHI VENKAT said...

நல்ல பகிர்வு.

லிங்குசாமி பற்றி நானும் படித்தேன்.....அவரின் வாழ்வில் ஆனந்தம் தொடரட்டும்....

ரசித்த வாசகத்தை ரசித்தேன்....

குறையொன்றுமில்லை. said...

உண்மையிலேயே அர்த்தமுள்ள ரசனைகள்தான். நல்லா சொல்லி இருக்கீங்க வாழ்த்துகள்.

ஸாதிகா said...

விதை விதைச்சவுடனேயே பழம் சாப்பிடணும்னு நினைக்க முடியுமோ? இன்னிக்கு நான் விதைக்கிறேன். நாளைக்கு நீ பழம் சாப்பிடுவே. அப்புறம்? உன் பையன் சாப்பிடுவான். அதற்கப்புறம்? அவன் பையன் சாப்பிடுவான். அதையெல்லாம் பார்க்கறதுக்கு நான் இருக்க மாட்டேன். ஆனா விதை நான் போட்டது."
/////

ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்த ரசனைகளக்கா!

வெங்கட் நாகராஜ் said...

அர்த்தமுள்ள ரசனைகள்...

தேவர் மகன் சிவாஜி வசனமும், தீக்குச்சி விளக்கமும் அருமை... ரசித்தேன்..

Asiya Omar said...

//“பிரச்சினைகளைப்பற்றியே சிந்திக்காமல் அவற்றை முதலில் பட்டியலிடுங்கள். அவற்றில் எது தலையாய பிரச்சினை என்று அப்போது தான் உங்களுக்கு புலப்படும். அதைத் தீர்க்க முற்பட்டால் உங்கள் வாழ்க்கையில் வெற்றி கிட்டும்.’//

மனோ அக்கா பகிர்வு யோசிக்க வைத்தது.நல்ல பகிர்வு.

RAMA RAVI (RAMVI) said...

நீங்க ரசித்ததை நாங்களும் ரசிக்க கொடுத்ததற்கு நன்றி.
முத்தான பதிவு.
பெண்கள் சாக்லேட் சாப்பிடலாம் என்ற தகவலுக்கு நன்றி மேடம்.

ஹுஸைனம்மா said...

சாக்கலேட்டின் உண்மையான ருசியென்பது கசப்பும் துவர்ப்பும் கலந்ததுதான் - இனிப்பு அல்ல!! அதில் தயாரிப்பு நிறுவனங்கள்தான் சுவைக்காக சீனியும், பாலும் சேர்த்து இனிக்கவைத்து தருகின்றனர். இயற்கையான சாக்லேட் உடல்நலத்துக்கு மிகவும் நன்மையானது.

புத்தக்ம சொல்லும் கருத்துகள் யோசிக்க வைக்கின்றன.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அது சரி..பெண்கள் மட்டும் தான் சாக்லெட் சாப்பிட வேண்டுமா..ஆண்கள் நாங்கள் என்ன பாவப் செய்தோம்....

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டுக்கும் அன்பு நன்றி சத்ரியன்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கும் கருத்துக்கும் அன்பு நன்றி சகோதரர் ரமணி!!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுரைக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுடன் கூடிய கருத்துரைக்கு அன்பு நன்றி ஆமினா!
நிஜமாகவே தலைப்பு வைக்க மறந்து விட்டேன். நினைவூட்டியதற்கு தனியானதொரு நன்றி ! தலைப்பு உடனே வைத்து விட்டேன்!!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு அன்பு நன்றி ஆதி!

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரி லக்ஷ்மி!!

மனோ சாமிநாதன் said...

அன்பான பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி ஸாதிகா!

மனோ சாமிநாதன் said...

மனந்திறந்த பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி ஆசியா!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுடன் கூடிய கருத்துரைக்கு அன்பு நன்றி ரமா!

மனோ சாமிநாதன் said...

சாக்லேட் பற்றிய கருத்துக்களுக்கு அன்பு நன்றி ஹுஸைனம்மா!

மனோ சாமிநாதன் said...

நீங்கள் சொல்வது சரியானது தான்! ஆனாலும் சாக்லேட்டையும் பெண்களையும் ஏன் அந்தக் காலத்திலிருந்து சம்பந்தப் ப‌டுத்தி வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை! ஆண்கள் சாக்லேட் சாப்பிட்டார்கள் என்று எங்காவது படித்திருக்கிறேனா என்று நினைத்துப் பார்க்கிறேன், படித்ததாக நினைவு வரவேயில்லை சகோதரர் ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி!!

kowsy said...

திரைப்படம் வெறும் பொழுதுபோக்கு என்று பார்ப்பவர்களுக்கு அது பொழுதுபோக்கு. அறிவு என்று பார்ப்பவர்களுக்கு அது அறிவு. அதேபோல் தான் தேவர் மகனும். சிறப்பான முத்துக்கள் . இவை அனைத்தும் எமது மனதில் மாலை ஆகும். நீங்கள் முத்திட்டவர் . நாங்கள் அணிபவர்

வை.கோபாலகிருஷ்ணன் said...

http://gopu1949.blogspot.in/2012/02/liebster-blog-award-german.html

அன்புடையீர்,

மேற்படி தளத்திற்கு தயவுசெய்து வருகை தாருங்கள்.

விருது ஒன்று தங்களுக்காகக் காத்திருக்கிறது.

அன்புடன் vgk

யுவராணி தமிழரசன் said...

அருமையான பகிர்வு!!!
நன்றி!

ஜெய்லானி said...

ஒவ்வொருவருக்கும் வாழ்வில் ஏதாவது ஒரு புத்தகம் வழிகாட்டியாகத்தான் இருந்திருக்கிறது ...!! அது இதுதான் என்று உணரும் வரை :-) .

அதிலும் சுயசரிதை..... !! :-)