Wednesday, 25 January 2012

நல‌மோடு வாழ!!

இன்றைக்கு நாட்டில் பரவலாக எல்லோரையும் ஒரு வழி பண்ணிக்கொண்டிருப்பது சர்க்கரை நோய் தான். அதை அனுபவிப்பவர்களுக்குத்தான் இந்த நோய் எத்தனை கடுமையானது என்பது தெரியும். அதைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க மருந்துகள், முறையான உனவு முறைகள், உடற்பயிற்சி, நடைப்பழக்கம் என்று எத்தனை, எத்தனை வழிமுறைகள்! இத்தனை வழிமுறைகளை முறையாக கடைப்பிடித்தாலும்கூட, சில சமயம் சிலருக்கு சர்க்கரையின் அளவு அதிகமாகவே காட்டும். இன்னும் சிலருக்கோ வெறும் வயிற்றில் அதிகம் ஏறி சாப்பிட்டதும் குறையும். திருவள்ளுவரின் ‘ நா காக்க ’ இப்போது நினைவுக்கு வருகிறது. அவர் கூற்றுப்படி, கடுஞ்சொல் கூறாமல்கூட நா காக்க முடியும். ஆனால் சுவையான உணவு வகைகளை விலக்கி நா காப்பது எத்தனை கடினம்!! அது ஒரு தவம் மாதிரி! எல்லோருக்கும் இந்த தவம் கைவரப்பெறுவதில்லை.

இப்படியெல்லாம் தவமிருந்து கூட சர்க்கரை நோய்ப்பாதிப்பிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. கண் அழுத்த நோயும் சர்க்கரை நோயும் ஒன்று. இரண்டையுமே சரியான அளவில்தான் வைத்துக்கொள்ள முடியுமே தவிர, முழுவதுமாக சரி செய்ய முடியாது. அப்படி சரியான அளவில் வைத்துக்கொள்ள ஒவ்வொருத்தரும் போராட வேண்டியிருக்கிறது.
சமீபத்தில் எங்கள் குடும்பத்திற்கு வேண்டிய இரு நபர்கள் இதற்கான சில வழிமுறைகளைச் சொன்னார்கள். இதனால் கடந்த ஆறு மாதங்களாகவே அவர்கள் சர்க்கரை நார்மலுக்கு திரும்பி விட்டதாகச் சொன்னார்கள். விபரங்களை முழுமையாக அறிந்த போதுதான் இதைப்பதிவாக எழுதி, அதனால் பலரும் பயனடைய வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.


முதலாவது மருத்துவம்:

சட்டீஸ்கர் மாநிலத்திலிருக்கும் துர்க் என்னும் நகரத்திலுள்ள ஜும்மா மசூதியில் இதற்காக ஒரு மருந்து தருகிறார்கள். இங்கு சென்று முதல் நாளே ஒரு நபருக்கு 35 ரூபாய் என்று பணம் கட்டி முன்பதிவு செய்து டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்தத் தொகை ஒட்டகப்பாலுக்கு என்று கூறப்படுகிறது. மருந்து காலை 7.30 மணியிலிருந்து மதியம் 11 மணி வரை தருகிறார்கள்.
மறுநாள் காலை எழுந்து காலைக்கடன்களை முடித்து தண்ணீர்கூடக் குடிக்காமல் ஜும்மா மசூதி 7 மணியளவில் செல்ல வேண்டும். முன்பதிவு நம்பர்படி சுமார் 50 நபரக்ளை அழைத்து அமரச் செய்து, உள்ளங்கையில் சூரண மருந்தைக்கொட்டி அதனை ஒரு பெரிய டம்ளரில் கொட்டி அதில் ஒட்டகப்பாலை ஊற்றி சூரண மருந்து தீரும்வரை குடிக்கச் செய்கிறார்கள். குடித்த பிறகு ஒரு வாய்த் தண்ணீர் மட்டும் குடிக்க வைத்து உட்கார வைக்கிறார்கள்.
இந்த மருந்துக்கு கட்டணமாக ஒவ்வொருத்தரிடமிருந்தும் 120 ரூபாய் பெற்றுக்கொள்கிறார்கள்.

அவர்கள் கூறும் அறிவுரைகள்:

மருந்து சாப்பிட்டதிலிருந்து 4 மணி நேரம் வரை தண்ணீர், உணவு, புகை பிடிப்பது என்று எதையும் எடுத்துக்கொள்ளக்கூடாது.
2. 4 மணி நேரம் கழிந்த பின் நீங்கள் ஒதுக்கி வைத்திருக்கும் இனிப்பு, உனவு எல்லாவற்றையும் வயிறு நிறைய சாப்பிட வேண்டும்.
3. மருந்து குடித்த பின் ஊறும் உமிழ்நீரைத் துப்பக்கூடாது.
4. வீட்டுக்குச் சென்ற பின் சர்க்கரை அளவு அதிகமாகத் தெரிந்தால் இரண்டு நாட்களுக்கு மட்டும் அதுவரை பயன்படுத்தி வந்த மருந்துகளை சாப்பிட்டு அதன் பின் நிறுத்தி விட வேண்டும்.30 நாட்களுக்குப்பிறகு இரத்தப்பரிசோதனை செய்து பார்த்தால் சர்க்கரையின் அளவு நிச்சயமாகக் குறைந்து நார்மல் அளவிற்கு வந்திருக்கும்.
5. இன்சுலின் எடுப்பவர்கள் மட்டும் இந்த மருந்தை இரண்டு நாட்களுக்குத் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

குறிப்பு:

சென்னை செண்ட்ரலிலிருந்து துர்க் நகரத்திற்கு கோர்பா எக்ஸ்பிரஸ் வாரம் இரு முறையும் விலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் வாரம் ஒரு முறையும் செல்கிறது.
இது சம்பந்தமான தகவல்களுக்கு:
Baba’s address: SHEIK ISMAIL, Jamia masjid Street, Jawahar Chouk, DURG
Call: 09826118991, 09424107655 between 6.00pm to 7.30 pm.


இரண்டாவது மருத்துவம்:


பிரபல கம்பெனியான AMWAY தயாரிக்கும் NUTRILITE FIBER சர்க்கரையின் அதிக அளவைக் குறைத்து நார்மல் நிலைக்கு கிட்டத்தட்ட இரண்டே மாதங்களில் கொண்டு வருகிறது. இதைத் தொடர்ந்து 6 மாதங்களுக்கு எடுத்து வந்தால் அப்புறம் சர்க்கரையின் அளவு உயராமல் நார்மல் நிலையிலேயே இருப்பதாக எங்கள் மேலாளர் சொன்னார். அவரின் வேலையில் நடைப்பழக்கத்திற்கோ, உடற்பயிற்சியோ தொடர்ந்து செய்ய முடியாத நிலையில் இது ஒரு வரப்பிரசாதமாக இருப்பதாகச் சொன்னார். இதில் உள்ள ஒரே குறைபாடு, இது விலை அதிகமானது என்பது தான். எல்லோராலும் தொடர்ந்து வாங்கி உபயோகிக்க முடியாது. ஒரு டப்பா விலை ரூ 900 க்கு மேலாக உள்ளது. இதை காலை, இரவு உணவிற்குப்பிறகு அதிலுள்ள ஒரு ஸ்பூனால் ஒன்று எடுத்து 200 மில்லி தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும்.
சர்க்கரை நோயால் மிகுந்த அவதியுறுபவர்களுக்கு இந்த இரண்டு குறிப்புகளும் பலனளித்தால் மனதிற்கு நிச்சயம் நிறைவாயிருக்கும். இந்தப்பதிவின் நோக்கம் நிறைவேறி விடும்.

35 comments:

இராஜராஜேஸ்வரி said...

"நல‌மோடு வாழ!!"அருமையான பயனுள்ள பகிர்வுகள்.... பாராட்டுக்கள்..

Asiya Omar said...

முதல் தகவல் புதிது.இரண்டாவது தகவல் தெரிந்தது.இரண்டாவதை பயன்படுத்தும் குடும்ப ந்ண்பர் பலன் இருப்பதாக சொன்ன நினைவு.மனோ அக்கா இந்தப் பதிவு பலருக்கு பயன் தரும்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிகச் சரியான தருணத்தில் எல்லோருக்கும் மிக மிக அவசியமான தகவல்களைத் தந்து உதவிஉள்ளீர்கள் மனோம்மா.மிகவும்
அத்தியாவசியமான பதிவு இது.
மிக்க நன்றி.

Chitra said...

நல்ல பதிவு.
முதல் பாக தகவல்கள் அருமை.

AMWAY products recommend செய்பவர்கள் எல்லாம், AMWAY agents ஆகவும் இருப்பதால், எந்த அளவுக்கு நம்ப முடியும் என்று தெரியவில்லை.

Anonymous said...

புதிய இதுவரை நான் அறியாத தகவல்கள் .
பகிர்விற்கு நன்றி !

வை.கோபாலகிருஷ்ணன் said...

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி. இதைப்படிக்கும் ஒருசிலராவது இந்த வைத்திய முறைகளை துணிந்து மேற்கொண்டு பயன் அடைந்து நலமோடு வாழ்ந்தால் மகிழ்ச்சியே.

குறையொன்றுமில்லை. said...

நல்ல விழிப்புணர்வு பதிவு. நிறையபேரைச்சென்று அடையனும் இந்தப்பதிவு.

ஸாதிகா said...

விழிப்புணர்வு ஊட்டும் இடுகை.மிகவும் அவசியமான தகவல்களை பகிர்ந்து இருக்கின்றீர்கள் அக்கா.பகிர்தலுக்கு நன்றி!

MANO நாஞ்சில் மனோ said...

முதலாவது மருந்தை எங்க அண்ணாச்சி சாப்புட்டுட்டு இருக்கார் நலமாக இருப்பதாக சொன்னார்....!!!

மகேந்திரன் said...

பயனுள்ள பதிவு அம்மா..
பகிர்வுக்கு நன்றிகள் பல.

கீதமஞ்சரி said...

இதுவரை கேள்விப்படாத தகவல்கள். பயனடைந்தவர்கள் சொன்னதை மற்றவர்களும் பயனடையும் விதத்தில் பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி, மேடம்.

RAMA RAVI (RAMVI) said...

பயனுள்ள தகவல் பதிவு மேடம்,நன்றி பகிர்வுக்கு.

நிலாமகள் said...

அருமையான‌ யோச‌னை! சாத்திய‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கு!

ச‌மீப‌ கால‌மாய் நான் செல்லும் நாட்டு வைத்திய‌ர் சொன்ன‌ குறிப்புக‌ள் இர‌ண்டு:

1. ப‌ழுத்து வீழ்ந்த‌ ப‌லா இலைக‌ள் ( ம‌ஞ்ச‌ள் நிற‌த்திலிருக்கும்) சில‌ எடுத்து நீரிலிட்டு கொதிக்க‌ வைத்து தின‌ச‌ரி காலை ப‌தினைந்து நாட்க‌ள் குடிக்க‌ ச‌ர்க்க‌ரை அள‌வு க‌ட்டுப்ப‌டும்.

2. மாந்துளிர் இலைக‌ளை ப‌த்து ப‌தினைந்து எடுத்து, ஒரு ஸ்பூன் துவ‌ர‌ம்ப‌ருப்போடு நிறைய‌ நீர் விட்டு கொதிக்க‌ வைத்து பாதியாக‌ சுண்டிய‌ பின் குடித்து வ‌ர‌ ச‌ர்க்க‌ரை அள‌வு க‌ட்டுப்பாட்டில் இருக்கும்.

ம‌ர‌மிருந்து நேர‌மிருப்ப‌வ‌ர்க‌ள் முய‌ன்று பார்க்க‌லாம்.

ச‌ட்டீஸ்க‌ர் போய்வ‌ர‌ ச‌ம‌ய‌ம் கிடைக்குமா பார்க்க‌லாம்.

மனோ சாமிநாதன் said...

மனமார்ந்த பாராட்டுக்களுக்கு அன்பு நன்றி ராஜராஜேஸ்வ‌ரி!

மனோ சாமிநாதன் said...

இரன்டு தகவல்களுமே, அவற்றை உபயோகித்து, இன்னும் பல மாதங்கள் வரை சர்க்கரையின் அள‌வு அதே நிலையில் இருப்பதாகச் சொன்ன பிறகு தான் இந்தப்பதிவை வெளியிட்டிருக்கிறேன் ஆசியா!! கருத்துரைக்கு அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

ஒவ்வொருத்தரும் அவதிப்படுவதை பல நாட்கள் நேரில் பார்த்ததன் விளைவு தான் இந்த பதிவு புவனேஸ்வ‌ரி!! இனிய கருத்திற்கு அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

கருத்துக்கும் நீன்ட நாட்களிற்குப்பிறகு தந்த வ‌ருகைக்கும் அன்பு நன்றி சித்ரா!

இந்த NUTRILITE FIBER- ஐ உபயோகித்து அதன் பிறகும் ஆறு மாதங்கள் வரை சர்க்கரையின் அள‌வு நார்மலாகவே இருப்ப்தாக என் மேலாலர் ஆதாரப்பூர்வமாகச் சொன்ன பிறகு தான் நான் இதைப்பற்றி எழுதியிருக்கிறேன்.

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி ஸ்ரவாணி!!

மனோ சாமிநாதன் said...

அன்பான‌ கருத்துரைக்கு இனிய‌ நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!!

மனோ சாமிநாதன் said...

அன்பார்ந்த கருத்துரைகளுக்கு இனிய நன்றி சகோதரி லக்ஷ்மி!!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு இனிய நன்றி ஸாதிகா!!

மனோ சாமிநாதன் said...

தகவலுக்கு அன்பு நன்றி நாஞ்சில் மனோ! இப்படிப்பட்ட பின்னூட்டங்கள் படிப்பவர்கள் மனதிற்கு மேலும் மேலும் நம்பிக்கை தரும்!!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு இனிய நன்றி மகேந்திரன்!!

மனோ சாமிநாதன் said...

தெளிவான, அன்பான பின்னூட்டத்திற்கு மனமார்ந்த நன்றி கீதா!!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு இனிய நன்றி ரமா!!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கும் மருத்துவக் குறிப்புகளுக்கும் அன்பார்ந்த நன்றி நிலாமகள்! சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்களுக்கு மேலும் சில நல்ல குறிப்புக்கள் கிடைத்திருக்கின்றன!!

Angel said...

இரண்டாவது இந்தியாவில் இப்ப பிரபலமாகிகிட்டு வருகிறது .முதல் மருத்துவம் இப்போதான் தெரிந்துகொண்டேன் .
சிறு வயதிலேயே நிறைய பேருக்கு இப்ப இந்த பிரச்சினை வருகின்றது
ஆரம்பத்திலேயே கவனித்தால் மிகவும் நல்லது பயனுள்ள தகவல் பகிர்வு அக்கா .மிக்க நன்றி

ஜெய்லானி said...

முதல் தகவல் 100% சரிதான் . என் உறவினர் ஒரு தடவை போய் வந்தார் . அதன் வீரியம் கிட்டதட்ட 6 மாதம் வரை இருக்கிறது .எந்த ஸ்வீட் எவ்வளவு சாப்பிட்டாலும் நோ பிராப்ளம்

(( ஒருவருக்கு ஒரு மாதம் வரை கண்ட்ரோலில் இருப்பதே பெரிய விஷயம்தானே ))

ஜெய்லானி said...

ஆம்வே பற்றி நிறைய பதிவர்கள் முன்பே எழுதி இருக்கிறார்கள். மருந்தை பற்றி இல்லை http://moonramkonam.com/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82/

ஜெய்லானி said...

வந்த பின் அவஸ்தைபடுவதை விட வரும் முன் காப்பதே நல்லது , நல்ல நினைவூட்டல் :-)

vimalanperali said...

நல்ல பதிவு.வாழ்த்துக்கள்.

சாகம்பரி said...

எனக்கு தெரிந்தவர்களிடம் சொல்கிறேன். வட இந்தியாவில் இருக்கும் உறவினர்களுக்கு பயன் தரும் என்று நினைக்கிறேன். பகிர்விற்கு நன்றி மேடம்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

நல்ல உபயோகமான பதிவு.. நன்றி மேடம்

Jaleela Kamal said...

பகிர்வுக்கு நன்றி, அனைவருக்கும் பயன் படட்டும்

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வட இந்தியர்கள் தான் அதிகமாய் ஸ்வீட் சாப்பிடுவார்கள் என்று நினைத்தோம்..இப்போது நம் தென்னிந்தியாவின் நிலையும் அவ்வளவு ஸ்வீட்டாக இல்லை...