Wednesday, 15 February 2012

விருதுக்கு நன்றி!!!

அன்புச் சகோதரர் திரு.வை.கோபாலகிருஷ்ணன் அவர்களும்
http://gopu1949.blogspot.com/

அன்புச் சகோதரி திருமதி.வேதாவும்
http://kovaikkavi.wordpress.com/

எனக்கு இந்த விருதை அன்புடன் வழங்கியுள்ளார்கள்.



ஒரு சின்ன கைக்குலுக்கல்போல், நேசமான சிறு அக்கறை போல, ஊக்கமும் உற்சாகப்படுத்தும் விதமாய் இனிமையான உணர்வுகளை இந்த விருதுகள் கொடுத்திருக்கின்றன! இருவருக்கும் என் இதயங்கனிந்த நன்றி!!






எனக்குப் பிடித்த சிலவற்றைப் பகிர்ந்து கொள்வதுடன் எனக்குப்பிடித்த சிலருக்கு இந்த விருதினை வழங்கி இந்த விருதினை ஒரு சங்கிலித் தொடராக தொடர வேன்டுமென்ற நிபந்தனை!

எனக்கு எப்போதுமே பிடித்த சிலவற்றை இங்கே பகிர்கிறேன்.

1. இசை.

கர்நாடக இசை, மெல்லிசை, திரையிசை, இவற்றைத் தவிர மலையாள திரைப்படங்களின் பாடல்கள், பாகிஸ்தானிய இசை, குறிப்பாக மெஹ்தி ஹாஸன் பாடல்களில் மெய்மறந்து லயிப்பதில் விருப்பம் அதிகம்

2. புத்தகங்கள் படிப்பது.

இது எனக்கு சாப்பாடு போல. தமிழிலும் ஆங்கிலத்திலும் இலக்கியங்களும் கவிதைகளும் புதினைங்களும் எப்போதுமே படித்துக்கொண்டேயிருப்பேன்.

3. சமையல்.

இந்த நிமிடம் வரை, புதிது புதியாய் சமையல் வகைகளை செய்து பார்க்கும் ஆர்வம் குறைந்ததில்லை.

4. ரசித்தவற்றை அன்புக்குரியவர்களிடம் பகிர்ந்து அதை மறுபடியும் ரசிப்பது.

5. ஓவியம்.

6. பாரதியின் கவிதைகள்.

7. இதமான நட்பு.

இனி எனக்குப்பிடித்த சில வலைப்பூக்களுக்கு இந்த விருதினை அளிக்க வேண்டும். எல்லா வலைப்பூக்களுமே தனிச்சிறப்புக்கள் கொண்டவை. எதையுமே தனித்துப்பார்க்க இயலாது. நிறைய வலைப்பூக்களை இங்கே பட்டியலிட முடியாதென்பதால் வித்தியாசமான சில வலைப்பூக்களை மட்டும் இங்கே குறிப்பிட்டு இந்த விருதினை அளிக்கிறேன்.

1. ஆறறிவு உள்ள மனிதர்களைக்காட்டிலும் ஐந்தறிவுள்ள ஜீவன்கள் பால் மிகுந்த பிரியமும் கிட்டத்தட்ட அவற்றுக்காகவுமே ஒரு வலைப்பூவை நடத்தி வருபவர் அதிரா. இவரின் வலைப்பூ: என் பக்கம்- www.gokisha.blogspot.com


2. சுந்தரத் தமிழின் சுவை குன்றாது தன் அனுபவங்களை அழகுற எழுதி வருபவர் நிலாமகள். இவரின் வலைப்பூ: பறத்தல்-பறத்தல் நிமித்தம்- www.nilaamagal.blogspot.com


3. தன் ஒவ்வொரு வலைப்பூவிலும் நகைச்சுவை மிளிர, படிப்பபவர்களை சிரிக்க வைக்கும் சகோதரர் ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி. இவரின் வலைப்பூ: “ஆரண்யநிவாஸ்” ஆர்.ராமமூர்த்தி- www.aaranyanivasrramamurthy.blogspot.com


4. வண்ணக்குழைவுகளிலும் பென்சில் கோடுகளிலும் உயிர்ச் சித்திரங்களை உருவாக்கி நம்மை அசத்தி வருபவர் ப்ரியா. இவரின் வலைப்பூ: என் மனதிலிருந்து- www.enmanadhilirundhu.blogspot.com


5. எழுத்தாளரும் கவிஞருமான கே.பி.ஜனா. இவரின் வலைப்பூ: கே.பி.ஜனா- www.kbjana.blogspot.com


விருது பெற்ற அன்புத் தோழமைகள் அனைவருக்கும் இதயங்கனிந்த அன்பு வாழ்த்துக்கள்!!


19 comments:

RAMA RAVI (RAMVI) said...

விருதுகளுக்கு வாழ்த்துக்கள்,மேடம்.
உங்களால் விருது பெற்ற மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

கே. பி. ஜனா... said...

நீங்கள் பெற்ற விருதுக்கு மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்!
அன்புடன் அளித்த விருதுக்கு மனமுவந்த நன்றி!

Yaathoramani.blogspot.com said...

தாங்கள் விருது பெற்றமைக்கும்
தங்கள் மனம் கவர்ந்த பதிவர்களுக்கு
விருதினை பகிர்ந்தமைக்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள்

மகேந்திரன் said...

விருது பெற்ற தங்களுக்கும்
தங்களால் விருது பெறப்பட்ட அனைவருக்கும்
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

ஒரு சின்ன கைக்குலுக்கல்போல், நேசமான சிறு அக்கறை போல, ஊக்கமும் உற்சாகப்படுத்தும் விதமாய் இனிமையான உணர்வுகளை இந்த விருதுகள் கொடுத்திருக்கின்றன! இருவருக்கும் என் இதயங்கனிந்த நன்றி!!

விருதுகளுக்கு வாழ்த்துக்கள்

ஜெய்லானி said...

பெற்ற விருதை கலை ரசனையுடன் பகிர்ந்த விதம் அருமை :-). விருது பெற்ற உங்களுக்கும் அதை அழகுடன் உங்களிடமிருந்து பெற்றவர்க்கும் வாழ்த்துக்கள் :-)

பிலஹரி:) ) அதிரா said...

நீண்ட காலத்தின் பின்பு, விருது என்பது தலைகாட்டத் தொடங்கியிருக்கின்றது, எல்லா வலைப்பூவிலும் இதைப் பார்க்க மிக்க மகிழ்வாக இருக்கு.

விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் மனோ அக்கா.

பிலஹரி:) ) அதிரா said...

//ஆறறிவு உள்ள மனிதர்களைக்காட்டிலும் ஐந்தறிவுள்ள ஜீவன்கள் பால் மிகுந்த பிரியமும் கிட்டத்தட்ட அவற்றுக்காகவுமே ஒரு வலைப்பூவை நடத்தி வருபவர் அதிரா. //

இதைப் பார்த்ததும் சிரித்திட்டேன்... மிக்க நன்றி விருதை எனக்காகவும் தந்தமைக்கு.

வை.கோபாலகிருஷ்ணன் said...

விருதினை ஏற்றுக்கொண்ட தங்களுக்கு முதலில் என் மனமார்ந்த நன்றிகள்.

ஒரே நேரத்தில் இருவர் மூலம் விருது பெற்றதற்கு அன்பான வாழ்த்துகள்.

தங்களின் மூலம் இந்த விருதினைப் பெற்றுள்ள அனைவருக்கும் என் மனமார்ந்த மகிழ்ச்சியுடன் கூடிய வாழ்த்துகள்.

அன்புடன் vgk

ADHI VENKAT said...

விருதுகளுக்கு வாழ்த்துகள் அம்மா. தங்கள் மூலம் விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

ஸாதிகா said...

விருது வாங்கிய உங்களுக்கும் விருது பெற்ற ஏனையோருக்கும் வாழ்ந்த்துக்கள்!

வெங்கட் நாகராஜ் said...

வாழ்த்துகள்....

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

மிக்க நன்றி, மேடம்!
விருது அளித்ததிற்கு..
தங்கள் பெற்ற விருதிற்கு பாராட்டுக்களும்!

Asiya Omar said...

வாழ்த்துக்கள்,மனோ அக்கா.கலையுணர்வுடன் கூடிய இந்த பகிர்வு மிக அருமை.

Anonymous said...

விருது பெற்ற தங்களுக்கும்
தங்களால் விருது பெறப்பட்ட அனைவருக்கும்
என் மனமார்ந்த வாழ்த்துக்கள் sakothary. Vetha. Elangathilakam.

raji said...

விருதுகளுக்கு வாழ்த்துக்கள்,மேடம்.
உங்களால் விருது பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

Priya said...

தங்கள் பெற்ற விருதிற்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!அன்புடன் அளித்த விருதுக்கு மிக்க நன்றி, மேடம்!

கீதமஞ்சரி said...

விருது பெற்றமைக்கும் அதைத் தேர்ந்தவர்களுக்கு வழங்கியமைக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் மேடம்.

நிலாமகள் said...

அன்பு த‌தும்பும் த‌ங்க‌ள் ஆசியில் குளிர்கிறேன். வாழ்த்துக‌ள்... ச‌க விருதாள‌ர்க‌ளுக்கு! எது கிடைத்தாலும் என் ச‌கோத‌ரிக்கும் ஒன்றென்னும் த‌ங்க‌ள் சீரிய‌ ம‌னோபாவ‌த்தில் சிலிர்க்கிற‌தென் நேச‌ம். சிபி அடுத்த‌ மாத‌ இறுதியில் வீடு வ‌ந்த‌தும் த‌ங்க‌ள் விருதைப் ப‌திவு செய்து கொள்கிறேன் என‌து வ‌லைப்பூவில்.