முத்துக்குவியலில் மறுபடியும் மனதை நெகிழ வைத்த சில நிகழ்வுகள்தான் முத்துக்களாய் சிதறுகின்றன!
முதலாம் முத்து.
வாழ்க்கை முழுவதும் ஆச்சரியங்கள் நம்மைப் பின்னிப் பிணைந்தே வருகின்றன. சமீபத்தில் படித்து வியந்த செய்தி இது. எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும் எனத் தெரியவில்லை.
கடலூர் மாவட்டம் நெய்வேலிக்கு மிக அருகிலுள்ள வடலூரில் இருக்கிறது சத்திய தருமசாலை. ‘வாடிய பயிரைக் கண்டு வாடிய’ வள்ளலார் வாடிய வயிற்றையும் கண்டு வாடி 1867-ல் இதைத்தோற்றுவித்தார். அவர் ஏற்றிய அடுப்பு 143 வருடங்களாக அணயாது எரிந்து கொண்டிருக்கின்றது. அன்றாடம் பசித்திருப்பவர்களுக்கு அன்னதானம் செய்விக்கிறது.
காலையில் பொங்கல், மதியம் சாம்பார், கூட்டு, பொரியல் ரசத்துடன் சாப்பாடு, இரவு சாதம் என்று மூன்று வேளைகளும் பசியோடு வருபவர்களுக்கு சாப்பாடு போடுகிறார்கள். பசியோடு யார் வந்தாலும், குணம், குற்றம் பாராது, யார் என்று கேளாது, பசித்திருப்பவனின் பசி போக்கு' என்ற வள்ளலாரின் உபதேசப்படி, பசிக்கிற நேரம் மட்டுமல்லாது எந்த நேரத்தில் யார் பசி என்று வந்தாலும் அன்னதானம் செய்து பசியைப்போக்குகிறார்கள் இங்கு! தினந்தோறும் நிறைய பேர் வந்து அரிசி, மற்ற பொருள்கள் என்று தந்து செல்வதாலும் வருடத்தில் ஒவ்வொரு நாள் என்று யாராவது அன்னதானப்பொறுப்பை ஏற்றுக்கொள்வதாலும் வள்லலார் ஏற்று வைத்த ஜோதி இன்னும் அணையாமல் எரிந்து கொண்டேயிருக்கிறது. தினமும் ஆயிரம் பேருக்கு சமையல் செய்ய விறகும் கிடைப்பது ஆச்சரியம்தான். மாட்டு வண்டி ஒன்று சுற்றியிருக்கும் கிராமங்களுக்குச் செல்கிறது. வண்டியைப் பார்த்ததுமே கிராமத்தார் தங்களிடமுள்ள விறகுகளை வண்டியிலேற்றி அனுப்பி வைக்கிறார்கள். இங்கே காலடி வைத்ததுமே முதலில் எதிர்படுகிற கேள்வி ‘சாப்பிடுகிறீர்களா?’ என்பதுதான். தானத்திலே சிறந்தது என்று சொல்லப்படுகின்ற அன்னதானம் இங்கே எத்தனை உன்னதமாக நடைபெறுகிறது!
இரண்டாம் முத்து:
அனுபவப்பட்டவர் ஒருத்தர் எழுதியிருந்தார். அவர் ஒரு முறை ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சாப்பிடச் சென்ற போது, பலரும் பலவிதமாக சாப்பாட்டு வகைகளைச் சொல்ல, அதில் பாதிக்கும் மேல் யாருமே தொடாமல் இருந்த சாப்பாட்டு வகைகளை, இவரது தோழி பேரர் உதவியுடன் pack up செய்து, வெளியே வந்ததும் சாலையோரத்தில் அமர்ந்திருந்த ஒரு பிச்சைக்காரரிடம் கொடுத்தாராம். பெற்றுக்கொண்ட பிச்சைக்காரரின் கண்களில் கண்ணீர் மின்னியதாம். மனசுக்கு நெகிழ்வாக இருந்தது படித்தபோது. நாம் செலவு செய்ததும் வீணாகாது, மற்றவர் பசி போக்க இதுவும் ஒரு வழி!
மூன்றாம் முத்து:
மனம் மிகவும் கலங்கிப்போன சமீபத்திய செய்தி. கணவன் வெளி நாட்டில் இருக்க, மனைவி[தமிழ் நாடு] வேறு ஒருவருடன் முறையற்ற உறவு கொண்டிருக்க, புரிந்தும் புரியாத அவளது ஆறு வயதுக் குழந்தை பக்கத்து வீட்டில் அதைப்பற்றிப்பேசியதை அறிந்ததும் கோபம் கொண்ட அந்த தாய் [ தாய் என்று எழுத அருவருப்பாக உள்ளது] அடுப்பூதும் ஊதுகுழலால் சூடு வைத்தும் ஆத்திரம் அடங்காது அயர்ன் பாக்ஸை சூடு பண்ணி முதுகில் இழுத்திருக்கிறாள். குற்றுயிராகக் கிடந்த குழந்தையை மீட்டு, அந்தப் பெண்ணையும் அவள் காதலனையும் காவல்துறையினர் சிறையில் அடைத்திருக்கிறார்கள்.
இதைப்படித்தபோது மனம் துடித்து விட்டது. மலரை விட மெல்லியது குழந்தையின் மனமும் உடலும். எப்படித் துடித்திருக்கும் அது! தூக்கு தண்டனை வேண்டுமா, வேண்டாமா என்று வாதங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. இந்த மாதிரி தாய்மையின் உன்னதமான அர்த்ததைக் கெடுக்கும், பிஞ்சுக்குழந்தையை சித்திரவதை செய்யும் ஒருத்தருக்கு உடனேயே அந்த மாதிரி தண்டனைதான் தரவேண்டும்.
நான்காம் முத்து:
நான் ரசித்த ‘ஓஷோ’வின் ஒரு குட்டிக்கதை:
ஒரு துறவி தன் சீடர்களிடம் ‘கோபமாக நாம் இருக்கும்போது நாம் ஏன் கத்துகிறோம்?’ என்று கேட்டாரம்.
அவரது சீடர்கள் ‘ அமைதியை இழந்து விடுவதால்தான் கத்துகிறோம்’ என்றார்களாம்.
அந்தத் துறவி, ‘கேள்வி அதல்ல. கோபமாக இருக்கும்போது நாம் கோபம் கொள்பவர் அருகிலேயே இருந்தாலும் ஏன் கத்துகிறோம்? மென்மையான குரலில் பேசினால் அவருக்குக் கேட்காதா?’ என்று கேட்டாராம். சீடர்கள் பதில் சொல்லத் தெரியாமல் விழிக்கவே துறவி மீண்டும் தொடர்ந்தாராம்.
“ ஒருவர் மீது மற்றவர் கோபப்படும்போது இருவரது இதயங்களிலும் அகங்காரம் தலை தூக்குவதால் அவர்கள் மனதளவில் தொலைதூரம் விலகிப்போய் விடுகிறார்கள். அதனால்தான் கத்திப் பேசுகிறார்கள். ஆனால் ஒருத்தரை மற்றவர் நேசிக்கும்போது அங்கே அகந்தை அற்றுப்போய் இதயங்கள் நெருங்கிப்போகின்றன. அதனால் மென்மையாகவே அவர்களால் பேச முடிகிறது. தன்னலமற்ற அன்பில் அகந்தை முழுவதுமாய்க் கரைந்து காணாமல் போகிறது”
எத்தனை சத்தியமான வார்த்தை!
66 comments:
//அடுப்பூதும் ஊதுகுழலால் சூடு வைத்தும் ஆத்திரம் அடங்காது அயர்ன் பாக்ஸை சூடு பண்ணி முதுகில் இழுத்திருக்கிறாள். //
இப்படிக் கூட பெண்களா?? என் பிள்ளைகளுக்கு சின்ன கீறல் விழுந்தாலே மனது கஷ்டமா இருக்கும்.
கொஞ்ச நாளைக்கு ஜெயிலில் இருந்துட்டு, ஜாலியா வெளியே வந்துடுவாங்க. ஆனால், அந்தக் குழந்தை பாவம்.
திரும்பவும் அருமையான அனுபவ நிகழ்வுகளை எங்களுடம் பகிர்ந்து கொண்டதில் நன்றி...
கண்டிப்பாக அந்த பொன்னுக்கு தூக்குதண்டை தந்தாலும் யாரும் பரிதாபம் படமாட்டார்கள்...என்ன கொடுமை...எப்படி தான் பெற்ற குழந்தையிற்கு இப்படி செய்ய மனம் வந்ததோ...பாவம் குழந்தை...
அருமை.முத்துக்கள் நான்கும் சிந்திக்க வைத்தது.
மூன்றாவது முத்து மனதை ரணமாக்கிவிட்டது மனோஅக்கா,இப்படி கூட பெண்கள் இருக்கிறார்களா,என்ன?
தாயே குழந்தைக்கு சூடு வைத்த நிகழ்வுதான், மனதை என்னமோ செய்தது!
முத்துக் குவியல் நன்றாக இருந்தது.
குழந்தை செய்தி மட்டும் வருத்தம். முதல் இரண்டும் நெகிழ்வை தந்தன.
பதிவு அருமை வாழ்த்துகள்
Interesting one, visited vadalur once, a nice place to see and give something to help others. Third one is really bad. fourth one, true sayings, great
அம்மா........
அத்தனை முத்துக்களும் அருமை.........ஓஷோவின் குட்டிக்கதை எல்லோரும் வாசித்து உணரவேண்டிய விசயம்...!
நன்றிகள் அம்மா!
nalla pathivu nankum nalmuthukkal
anbudan
NELLAI P. NADESAN
DUBAI
மூன்றாவதை முத்து என்று சொன்னது சரியா.
என்ன கொடுமை அக்கா இது படிக்கவே நமக்கு நெஞ்சம் பதறுகிறது...அதை செய்ய அந்த பெண்ணிற்கு எப்படித்தான் மனசு வந்ததோ தெரியல....பாவி....!
அருமையான குட்டிக் கதை.
முதலாம் முத்து: உன்னத முத்து
இரண்டாம் முத்து: நெகிழ்ச்சி முத்து
மூன்றாவது: கண்ணீர் முத்து
நான்காம் முத்து: அனைவரும் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய முத்து
முத்துக்களுக்கு நன்றி மனோ மேடம்
நான்குமே நல்முத்து. வள்ளலார் ஏற்றி வைத்த அடுப்பு பற்றிய குறிப்பு மகிழ்வை தந்தது, நான் நெய்வேலி என்பதால். ஒரு சிறிய தவறு - சொல்வதற்கு மன்னிக்கவும். வள்ளலார் இந்த அன்னதானத்தை ஆரம்பித்த வருடம் 1867 மே 23 அன்று. 1987 அல்ல!
மூன்றாம் முத்துக்கு பச்சை பிள்ளையை கொடுமை படுத்திய அப்பாதகர்களுக்கு
மரணதண்டனை கண்டிப்பாக வேண்டும் அதை விட அரபு நாடுகளில் செய்வதைப்போல தண்டனை கொடுத்தால் காமகொடுரர்கள் திருந்துவார்களா
முதல் முத்து அருமை அம்மா தானத்திலே சிறந்த தானம் அன்னதானம் கர்ணன் தானத்திலே சிறந்தவன் அப்பிறவியில் கர்ணனுக்கு மோட்சம் கிடைக்காததால் மறுபிறவியில் சிறுதொண்டு நாயனாராக அன்னதானம் செய்ததாக படித்ததுண்டு நானும் கடலூர் மாவட்டம் என்பதால் அம்மக்களும் ஒருவனாக தங்களுக்கு மனமார்ந்த வணக்கங்களுடன் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் அம்மா
http://marumlogam.blogspot.com/2010/12/blog-post_3727.html
அணையாத அடுப்பு குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன். விவரங்கள் இப்போதுதான் அறிகிறேன். இதை அணையாமல் எரிய வைத்திருக்கும் அன்பர்களை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்.
//வள்ளலார் வாடிய வயிற்றையும் கண்டு வாடி 1987-ல் இதைத்தோற்றுவித்தார்.//
1897-ஆ அக்கா?
ஹோட்டல்களில் வீணாக்கப்ப்டும் உணவைக் கண்டால் வயிறெரியும். ஆனால், இப்போ பலரும் மிஞ்சிய உணவை பேக் செய்து எடுத்துச் செல்கிறார்கள். ஐந்து நட்சத்திர உணவகங்களிலும் இதுபோல நல்ல விஷயம் நடப்பதறிந்து மகிழ்ச்சி. தொடர்கின்றதா இச்செயல் அக்கா?
முதல் இரண்டு முத்துகள் அருமை.
முன்றாவது முத்து மனதை வேதனை படுத்திவிட்டது.
நான்காவது முத்து சிந்திக்க தூண்டுகிறது.
முத்து குவியலின் தகவல்கள் அருமை.
மூன்றாம் தகவல் , படித்து விட்டு கொதிக்குது
//அடுப்பூதும் ஊதுகுழலால் சூடு வைத்தும் ஆத்திரம் அடங்காது அயர்ன் பாக்ஸை சூடு பண்ணி முதுகில் இழுத்திருக்கிறாள். //
இப்படிக் கூட பெண்களா?
அத்தனை முத்துக்களும் அருமை அம்மா.
மூன்றாம் முத்து மனதை பிசைய வைத்தது. இப்படியும் ஒரு தாயா?
பாக்கி முத்துக்கள் நெகிழ வைத்தன. பகிர்வுக்கு நன்றி.
ப்ளாக்குக்கு முத்து சிதறல் என்று பெயர் வைத்து விட்டு, சிதறிய முத்துக்களை அள்ளி அள்ளி தருகிறீர்கள்.. நீங்கள் தந்ததை அப்படியே பெற்றுக் கொண்டோம். அத்தனையும் அருமை மனோக்கா!!
“ ஒருவர் மீது மற்றவர் கோபப்படும்போது இருவரது இதயங்களிலும் அகங்காரம் தலை தூக்குவதால் அவர்கள் மனதளவில் தொலைதூரம் விலகிப்போய் விடுகிறார்கள். அதனால்தான் கத்திப் பேசுகிறார்கள். ஆனால் ஒருத்தரை மற்றவர் நேசிக்கும்போது அங்கே அகந்தை அற்றுப்போய் இதயங்கள் நெருங்கிப்போகின்றன. அதனால் மென்மையாகவே அவர்களால் பேச முடிகிறது. தன்னலமற்ற அன்பில் அகந்தை முழுவதுமாய்க் கரைந்து காணாமல் போகிறது”
True
ஆமாம் வானதி! அயர்ன் பாக்ஸை சூடாக்கி ஒரு பச்சிளங்குழந்தையின் முதுகில் தேய்க்க எத்தனை குரூரம் மனதில் இருந்திருக்க வேன்டும் அந்தப் பெண்ணுக்கு? மனது தாங்கவில்லை நினைக்கும்போதெல்லாம்!
ஆமாம் கீதா! இந்த செய்தியை என் கணவரிடம் சொன்னபோது, 'தூக்கு தண்டனைகூட ஒரே நிமிடத்தில் உயிரை எடுத்து விடும். இந்த அளவு சித்திரவதை செய்த ஒருத்தருக்கு அதையும்விட மோசமான சித்திரவதைதான் சரியான தண்டனை!' என்று சொன்னார்கள்!
ஆமாம் ஆசியா, பெண்ணினத்துக்கே, அதுவும் தாய்மை என்ற உன்னதமான சொல்லுக்கே இழுக்கு தேடித்தந்து விட்டாள் அந்தப்பெண்!இந்த மாதிரியும் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்!
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாருக்கு அடிவாரத்திலிருப்பதால் பெருமிதம் முதல் முத்தில். இரண்டாவது மனிதம் மிச்சமிருக்கும் அடையாளம். மூன்றாவது...என்ன சொல்ல... திகிலும் திகைப்புமாக சிலிர்ப்பு. தாய்மை உன்னதமெல்லாம் கலி முற்றிய இந்நாளில் போகுமிடம் பகீரென்கிறது . ஓஷோவின் கதை அறிவுத் திறவுகோல். தங்கள் அக்கறையான தேர்வும் தேடலும் தேடி வரும் எங்களுக்கு நற்செய்தி எப்போதும்.
அந்தக் குழந்தையை பற்றிய செய்தி மனதை பதற வைத்தது. வெளியில் வந்தது ஒன்று ,வெளியில் வராத செய்திகள் ???
http://lksthoughts.blogspot.com/2010/12/blog-post_15.html
கலையுரைத்த கற்பனையே நிலைஎனக்கொண்டடும் கண்மூடி பழக்க மெல்லாம் மண்மூடிப் போக ...
என நம் அறிவுக்கண்ணை திறந்தவர் வள்ளலார் செய்திக்கு பாராட்டுகள்
அம்மா,
சத்திய தர்மசாலையைப் பற்றிப் படித்தவுடன் வயிறு நிறைந்தது மாதிரி தோன்றியது! மனமும் நிறைந்தது.
//1987-ல் இதைத்தோற்றுவித்தார்//
1865 என்று படித்த நியாபகம். (143 வருடங்கள் கணக்கும் பொருந்தி வருகிறது)
//பெற்றுக்கொண்ட பிச்சைக்காரரின் கண்களில் கண்ணீர் மின்னியதாம்//
நெஞ்சை உருக வைத்தது.
மூன்றாம் தகவல் படிக்கவே கொடுமையாக இருந்தது.
ஓஷோவின் குட்டிக்கதை.....பிரமாதம் :)))
முதல் முத்து நெகிழச்செய்தது.
இரண்டாம் முத்து மகிழ்வைத்தந்தது.
மூன்றாம் முத்து வெறுப்பைத்தந்தது.
நான்காம் முத்து நல்லுபதேசத்தை தந்தது.
இன்னும் இன்னும் முத்துக்களை சிதற விடுங்கள் அக்கா.
இந்த செய்தி என் மனதையும் கலங்க வைத்து விட்டது சித்ரா!
பகிர்வுக்கு அன்பு நன்றி மோகன்குமார்!
வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி சகோதரர் குரு!
Thanks a lot for the nice comments Krishnaveni!
dheva said...
அம்மா........
"அத்தனை முத்துக்களும் அருமை.........ஓஷோவின் குட்டிக்கதை எல்லோரும் வாசித்து உணரவேண்டிய விசயம்...!"
பாராட்டுக்கு அன்பு நன்றி!
எனக்கும் இந்த 'ஓஷோ'வின் குட்டிக்கதை மிகவும் பிடித்தது!
NADESAN said...
"nalla pathivu nankum nalmuthukkal "
பாராட்டிற்கு இனிய நன்றி!!
நிச்சயம் மூன்றாவது செய்தி நல்ல முத்தில்லைதான் சகோதரர் தமிழ் உதயம்! ஆனால் இங்கே நான் முத்து என்று நான் குறிப்பிடுவது என்னைப் பாதித்த செய்திகளைத்தான். அந்த வகையில்தான் அதை முத்து என்று எழுதினேன்.
ஆமாம் கெளசல்யா! படிக்கும்போதே நம் மனசு பதறுகிறது! இந்தக் கொடுமைக்கு ஆளான அந்தக் குழந்தை எப்படி துடித்திருக்கும்!
அன்பு நன்றி புவனேஸ்வரி!
மனந்திறந்த பாராட்டுக்கு அன்பு நன்றி ராஜி!!
அருமையான பதிவு..
நலமா.. கொஞ்ச நாளாய் பதிவுகள் படிப்பது குறைகிறது வேறென்ன வேலைப்பளுதான்..இன்றைக்குதான் உங்கள் தளத்தில் நிறைய பதிவுகளை படித்தேன்..அருமையா இருக்கிறது..
நல்ல அருமையான மார்கழி மாச சுடச்சுட பொங்கலில்
கல் இருந்து பல்லில் பட்டது போல் அந்த மூன்றாவது முத்து என் கண்களை காயப் படுத்தி விட்டது!
அத்தனை முத்துக்களும் அருமை.
பாராட்டுக்கு அன்பு நன்றி தினேஷ்குமார்!
தவறைச் சுட்டிக்காண்பித்ததற்கு மிக்க நன்றி சகோதரர் வெங்கட நாகராஜ்! 143 வருடங்களைச் சரியாக எழுதி விட்டு, வருடத்தை டைப் செய்தபோது தப்பாக அடித்திருக்கிறேன். தவறைத் திருத்தி விட்டேன் இப்போது!!
கருத்துக்கு அன்பு நன்றி ஹுஸைனம்மா!
பொதுவாக இங்குள்ள உணவகங்களில் மிகுந்த உணவை கட்டித்தருவார்கள். வீட்டுக்கு எடுத்துப்போய் நிறைய பேர் சாப்பிடுவதுன்டு. ஊரில் இதுபோல கட்டி வாங்கி நலிந்தவர்களுக்குக் கொடுக்க முடிவது அருமையான விஷயம்!
கருத்துரைக்கு அன்பார்ந்த நன்றி சகோதரர் இளம் தூயவன்!!
ஆமாம் ஜலீலா! எனக்கும் அந்த மூன்றாம் தகவல் மனதை மிகவும் கஷ்டப்படுத்தியது!
அன்பான கருத்துக்களுக்கு மகிழ்வான நன்றி!!
அன்பான பாராட்டிற்கு இதயங்கனிந்த நன்றி சகோதரர் குமார்!
பாராட்டிற்கு உளமார்ந்த நன்றி கோவை2தில்லி!
அன்பார்ந்த பாராட்டிற்கு மிக்க நன்றி சகோதரர் அப்துல் காதர்!
கருத்துரைக்கு அன்பு நன்றி வித்யா சுப்ரமண்யம்!!
பகிர்ந்து கொண்டதும் பாராட்டியதும் மகிழ்வாக இருக்கிறது நிலாமகள்! என் அன்பு நன்றி உங்களுக்கு!
கருத்துக்கு அன்பு நன்றி எல்.கே!
கருத்துக்கு அன்பு நன்றி சகோதரர் போளூர் தயாநிதி!!
அன்பான பாராட்டுக்கும் பகிர்தலுக்கும் மகிழ்வான நன்றி சுபத்ரா!
அன்பு நன்றி காஞ்சனா!
அருமையான கருத்துப்பகிர்தலுக்கு அன்பு நன்றி ஸாதிகா!
எப்படி இருக்கிறீர்கள் சகோதரர் இர்ஷாத்? உங்கள் தளத்தை பார்க்கவே முடிவதில்லை என்று நான் மெயில் கூட அனுப்பியிருந்தேன். அன்பான கருத்துரைக்கு மகிழ்வான நன்றி!!
பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரி லக்ஷ்மி!
அந்த மூன்றாம் தகவல் தந்த பாதிப்பை மிக அழகான வரிகளில் வெளிப்படுத்தியிருப்பதற்கு என் அன்பு நன்றி சகோதரர் ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி!!
இப்பதிவை இன்டிலியில் இணைத்து கூடவே அன்பான ஓட்டையும் அளித்த அன்புச் சகோதரர் ஹைஷ் அவர்களுக்கு என் மனங்கனிந்த நன்றி!! இணைந்து ஓட்டளித்த தோழமைகள் Amina, Sriramanthaguruji, Anandkaruppaiyah, Simbu, Kousalya, Guru, Chithra, Anandhi, Romesh, Dev, Maragatham, Yuvraj, Venkatanagaraj, Shruvish, Kovai2delhi, jem dhinesh, Chuttiyar, Ramalakshmi, Jolleyjegan, Ganpath, Ambuli, Makizh, karthi6, Gopi, Subam, jegdish, Bhavan, Abdul kadhar, KarthikVk அனைவருக்கும் அன்பு நன்றி!!
அருமையான முத்துக்களை அழகாக தொகுத்து அட்டகாசமான மாலையாக்கிய மனோ மேடத்திற்கு என் பாராட்டுக்கள்...
படிக்கும் போதே மிக்க நெகிழ்வாக இருந்தது மேடம்...
வாழ்த்துக்கள்....
Post a Comment