Friday, 30 April 2010

இல்லத்தில் ஒரு மருந்தகம்!

பகுதி-1

அன்றாடம் நாம் உண்ணும் உணவில் சேர்க்கும் தானியங்கள், மசாலாப்பொருள்கள், பழங்கள் எல்லாமே சிறந்த மருந்து பொருள்கள்தான். இவைகளை வைத்து, நம் உடலில் தோன்றும் சிறு சிறு கோளாறுகளுக்கு மருத்துவரிடம் போகாமல் நாமே நிவாரணங்களை செய்து கொள்ள முடியும். இவை போக நாட்டு மருந்துகள் எனப்படும் அரிசித் திப்பிலி, கண்டத் திப்பிலி, ஓமம், சித்தரத்தை, அதிமதுரம், வால் மிளகு, போன்றவை கண்கண்ட பொக்கிஷங்கள். இவற்றை சிறு சிறு அளவில் [ 50 கிராம் போல] வாங்கி சுத்தம் செய்து சமையலறையின் ஒரு ஷெல்ஃபில் வைத்துக்கொண்டால், தலைவலி, சளி, ஜுரம், உடல் வலி, வயிற்றுப்போக்கு, தலைவலி, இவற்றையெல்லாம் நாமே சரி செய்து விடலாம். உடலுக்கும் நல்லது. பணமும் மிச்சமாகும்.


இந்த மாதிரி மருத்துவ முறைகள் எல்லாம் தற்போது புழக்கத்தில் மிக மிகக் குறைந்து வருகிறது. சமீபத்தில் ஊரில் மளிகைச் சாமான்கள் வாங்கும்போது, கடைக்காரர் ‘இந்த காலப்பெண்கள் கொசுத்தொல்லைக்குக்கூட கொசுவர்த்தி காயில்கள்தான் வாங்கி உபயோகித்து, அதை சுவாசிப்பதால் குழந்தையின் உடல் நலத்திற்கும் கேடு விளைவிக்கிறார்கள். நம்ம சாம்பிராணியை விட ஒரு சிறந்த கொசுவர்த்தி இருக்கிறதா என்ன?” என்று குறைப்பட்டுக் கொண்டார். அது நூற்றுக்கு நூறு உண்மை.


இங்கே நம் வீட்டில் இருக்கும் பொருள்களைக்கொண்டே சில மருத்துவக் குறிப்புகளை எழுதியிருக்கிறேன்.

1. தொடர்ந்த வயிற்றுப்போக்கிற்கு:

ஒரு டம்ளர் சூடான டீ டிகாஷனில் ஒரு மூடி எலுமிச்சை சாறை கலந்து சிறிது தேனும் கலந்து குடிக்கவும். தினமும் இரு முறை குடிக்கலாம்.

2. நீர்க்கடுப்பிற்கு:

வெய்யில் காலங்களில் அதிக உஷ்ணத்தால் சிறு நீர் அதிகம் பிரியாது அதிக எரிச்சலுடன் வெளியேறும். அந்த மாதிரி சமயங்களில் உளுந்து மிகக் கண்கண்ட மருந்து! ஒரு பிடி உளுந்தைக் கழுவி ஒரு சொம்பு தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்துக் குடித்தால் குடித்த சில நிமிடங்களிலேயே எரிச்சல் அடங்குவதையும் தாராளமாக சிறு நீர் பிரியத் தொடங்குவதையும் காணலாம். ஒரு சொம்பு நீர் காலியானதும் அதே உளுத்தம்பருப்பிலேயே மறுபடியும் இன்னொரு தடவை நீர் ஊற்றி ஊறிய தண்ணீரைக் குடிக்கலாம்.

3. வயிற்றுப்பொருமல், வாயு முதலிய சங்கடங்களுக்கு:

சுக்கு 2 ஸ்பூன், ஓமம் 2 ஸ்பூன், மிளகு 2 ஸ்பூன், சீரகம் 2 ஸ்பூன், ஒரு பட்டாணி அளவில் பெருங்காயத்துண்டு-இவற்றை வெறும் வாணலியில் இலேசாக வறுத்து ஆறியதும் பொடிக்கவும். பெருங்காயத்தை மட்டும் சிறிது எண்னெயில் வறுத்துக் கொண்டு மற்ற பொருள்களுடன் சேர்த்துப் பொடிக்கவும். தினமும் சாப்பிட ஆரம்பிக்கும்போது ஒரு கை சூடான சாதத்தில் சிறிது நல்லெண்னெய் ஊற்றி இந்தப்பொடி ஒரு ஸ்பூன் கலந்து சாப்பிடவும். அதன் பின் மற்ற உணவுப்பொருள்களை சாப்பிடலாம்.

4. சிறுநீரகக் கல் தோன்றி வலியுடன் அவதிப்படுபவர்களுக்கு:

ஒரு கப் வாழைத்தண்டு துண்டுகளை சிறிது நீரில் மிக்ஸியில் அரைத்துப் பிழிந்து மோர், சிறிது உப்பு, 1 ஸ்பூன் எலூமிச்சை சாறு கலந்து தினமும் இரு வேளை குடித்து வந்தால் வலி அடங்குவதுடன் 15 நாட்களில் கற்கள் கரைந்து சிறு நீருடன் வெளியேறும். இந்த வலி இருப்பவர்கள் மட்டன், பால், ப்ளம்ஸ் பழம் இவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.

5. சளி, இருமல், தொண்டை வலிக்கு:

சித்தரத்தை, வால் மிளகு, அதிமதுரம், மிளகு, அரிசித்திப்பிலி இவை அனைத்தும் வகைக்கு ஒரு ஸ்பூன் எடுத்து மிக்ஸியில் ஒன்று பாதியாய் அடித்து வைத்துக்கொள்ளவும். 3 கடுக்காய்களை தோலை மட்டும் நீக்கி இந்த மருந்து பொள்களுடன் சேர்த்து, பனங்கல்கண்டு அரை கப், தண்ணீர் 3 கப் சேர்த்து கொதிக்கவிடவும். கஷாயம் பாதியாக சுண்டும்போது இறக்கவும். தினமும் இரு வேளை கால் கப் சூடாகக் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.26 comments:

Chitra said...

ஹையோ...... அப்படியே எங்கள் பாட்டிம்மா வைத்திய முறை படித்த மாதிரி இருக்குதுங்க. அந்த பழக்கத்தில், இன்னும் சுக்கு பொடி, ஊரில் இருந்து வாங்கி கொண்டு வந்து use செய்கிறேன். பகிர்வுக்கு ரொம்ப நன்றிங்க.

athira said...

மனோ அக்கா மிக அருமையான தகவல்கள். நிட்சயம் எல்லோருக்கும் பயன்படும்.

இமா said...

பயனுள்ள குறிப்புகள் அக்கா. மிக்க நன்றி.

Ammu Madhu said...

மிகவும் பயனுள்ள குறிப்புகள்.

அஹமது இர்ஷாத் said...

உபயோகமான குறிப்புகள்.. அதிலும் 2,5, Very important... மிக்க நன்றி அக்கா..

Jaleela said...

பயனுள்ள அருமையான மருந்தகம்.

Mrs.Menagasathia said...

அனைத்தும் உபயோகமான குறிப்புகள்!!

Vijis Kitchen said...

அத்தனையும் நல்ல பயனுள்ள குறிப்புகள்.

அநன்யா மஹாதேவன் said...

மனோம்மா,
உங்க தளத்தை தேடி வந்துட்டேன்.
:-) ரொம்ப அருமையா இருக்கு. ஃபாலொயர் ஆயாச்சு.

Geetha Achal said...

மிகவும் பயனுள்ள பகுதி...அருமை...பகுதி 2யும் விரையில் எதிர்பாக்கிறேன்...அருமை குறிப்புகள்...நன்றி

மனோ சாமிநாதன் said...

சித்ரா! நாட்டு மருந்தை நீங்கள் உபயோகிப்பதற்கு உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு!

பதிவிற்கு என் அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

பதிவிற்கு என் நன்றி, அதிரா!

இந்த மாதிரி பயனுள்ள குறிப்புகள் அனைவருக்கும் பலன் தரவேண்டும் என்ற நோக்கத்தால்தான் இந்த குறிப்புகளை வழங்க ஆரம்பித்துள்லேன்.

மனோ சாமிநாதன் said...

பதிவிற்கும் ஊக்கத்திற்கும் என் அன்பு நன்றி இமா!!

மனோ சாமிநாதன் said...

பகிர்வுக்கு என் அன்பு நன்றி, அம்மு!

மனோ சாமிநாதன் said...

நன்றி, இர்ஷாத்!

இந்தக் குறிப்புகள் எல்லாம் நான் இல்லத்தில் எப்போதும் செய்வதுதான். குறிப்பாக இந்தியா செல்லும்போது தினமும் இந்த உளுந்து தண்ணீர் ஊற வைக்காமல் இருப்பதில்லை. நீர்க்கடுப்பு வராமல் இருக்க எல்லோருமே இதை தினமும் குடிப்போம்.

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு என் அன்பு நன்றி, ஜலீலா!

மனோ சாமிநாதன் said...

அன்பு நன்றி, மேனகா!

மனோ சாமிநாதன் said...

பதிவிற்கு உளமார்ந்த நன்றி, விஜி!

மனோ சாமிநாதன் said...

நல் வரவு, அனன்யா!

பாராட்டிற்கும் பதிவிற்கும் என் அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

மனமார்ந்த பாராட்டுக்கு என் அன்பு நன்றி, கீதா! இதைப் பல பகுதிகளாய்ப் போட வேண்டுமென்றுதான் நினைத்துள்ளேன்.

Krishnaveni said...

Excellent post...looks great. Useful information for all. Congrats on all yuor awards.

asiya omar said...

இனி எனக்கும் கை மருந்து செய்து கொடுக்க தெரியும்,யாரும் கேட்டால் பெருமையாக மனோ அக்காவின் கை மருந்துன்னு சொல்வேனே.

சே.குமார் said...

அனைத்தும் உபயோகமான குறிப்புகள்!!

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கும் பாராட்டிற்கும் என் அன்பு நன்றி, கிருஷ்ணவேணி!!

மனோ சாமிநாதன் said...

ஆசியா! பதிவிற்கு நன்றி! இவையெல்லாமே அனுபவத்தில் செய்து பலன்களைக் கண்ட குறிப்புகள்!!

மனோ சாமிநாதன் said...

குமார் அவர்களுக்கு!


அன்பான பதிவிற்கு என் நன்றி,