அன்பென்பது தண்மை என்று புலவர் சொன்னார்- ஆனால்
அதுவும் தணலாய் சுட்டது சில நேரம்!அன்பென்பது அழகென்று அறிஞர் சொன்னார்-ஆனால்
அதுவும் சிதைந்து அழிந்தது சில நேரம்!
அன்பென்பது மலரென்று கவிஞர் சொன்னார்-ஆனால்
அதுவும் சருகாய் உதிர்ந்தது சில நேரம்!
அன்பென்பது உண்மையென்று கற்றோர் சொன்னார்-ஆனால்
அதுவும் பொய்யாய்க் கரைந்தது சில நேரம்!
அன்பென்பது தெய்வமென்று பெரியோர் சொன்னார்-ஆனால்
அதுவும் சிலையாய்ப் போனது சில நேரம்!
அன்பென்பது அமுதமென்று சிலர் சொன்னார்-ஆனால்
அதுவும் விடமாய்ப்போனது சில நேரம்!
அன்பென்பது இசையென்று பலர் சொன்னார்-ஆனால்
அதுவும் ஸ்ருதி கலைந்து போனது சில நேரம்!
அன்பென்பது யாதென்று அலைந்து நின்றேன்!
அறிந்தபோது உனர்ந்தபோது அசந்து நின்றேன்!
அன்பென்ற தண்மைதான் மழலைதன் விரல் தொடுகை!
அன்பென்ற உண்மைதான் மழலைதன் புன் சிரிப்பு!
அன்பென்ற அழகுதான் மழலைதன் தளிர் நடை!
அன்பென்ற கடவுள்தான் மழலைதன் குளிர்ப்பார்வை!
அன்பென்ற மலர்தான் மழலைதன் எழில்முகம்!
அருஞ்சுவைக் கற்கண்டும் அருமருந்தும் தோற்குமே
அன்பென்ற அமுதமாம் அழகு மழலைப் புன்சிரிப்பில்!
அன்பென்பதற்கு பல இலக்கணங்களுண்டு. அரச காலப் புலவர்கள் முதல் இன்றைய கவிஞர்கள் வரை அன்பைப்பற்றி பாடாத பாடல்கள் இல்லை. அதை செவிப்புலன் அற்றவர் கூட கேட்க முடியும். குரலிழந்தோர்கூட பேச முடியும். பார்வையிழந்தோர்கூட பார்க்க முடியும். அன்றைய காலத்தில் அன்பை முன் வைத்துத்தான் திரைபப்டங்கள், நாவல்கள், பாடல்கள் தோன்றின. காதலும் பாசமும் நட்பும் உண்மையான அன்பையும் சத்தியத்தையும் பிரதானமாக வைத்து வளர்ந்தன. இன்றைக்கு எல்லாமே முன்னணியில் நிற்கின்றன, உண்மையான அன்பைத்தவிர!
சிறு வயதில் பெற்றோர் பாசம், பள்ளி வயதில் ஆசிரியரிடம் அன்பு, இளம் வயதில் காதல், அதன்பின் குழந்தையிடம் பாசம்-இப்படி வலைப்பின்னல்களாய் அன்பு ஏதாவது ரூபத்தில் நம்மை பின்னிப் பிணைந்து மனதின் ஈரத்தைக் காத்துக்கொண்டேயிருக்கிறது. ஆனால் பல வருடங்களின் வாழ்வியல் அனுபவங்களுக்குப் பின்னாலும் அன்பின் இலக்கணம் முழுமையாகப்புரிவதில்லை. இதயத்தின் தேடலுக்கு மனதில் எழுந்த பதில் சிறு முயற்சியாக, கவிதையாக இங்கே வெளிப்பட்டிருக்கிறது!
படத்திற்கு நன்றி தமிழாக்கம் வலைத்தளத்திற்கு!
34 comments:
அன்பை பற்றிய கவிதை மிக அருமை!!
சிறு வயதில் பெற்றோர் பாசம், பள்ளி வயதில் ஆசிரியரிடம் அன்பு, இளம் வயதில் காதல், அதன்பின் குழந்தையிடம் பாசம்-இப்படி வலைப்பின்னல்களாய் அன்பு ஏதாவது ரூபத்தில் நம்மை பின்னிப் பிணைந்து மனதின் ஈரத்தைக் காத்துக்கொண்டேயிருக்கிறது.
.....அன்பை பற்றிய உங்கள் கவிதை வரிகளும், அன்பை பற்றிய ஈர வரிகளும் அழகு. பாராட்டுக்கள்!
கவிதை வரிகள் உண்மை. ;)
ரசித்தேன் அக்கா. ;)
மனோ அக்கா. சில நாட்கள் பார்க்க முடியவில்லை, புதுத்தளம் மாற்றியிருக்கிறீங்கள்.
அன்புபற்றி நல்ல தத்துவங்கள் சொல்லியிருக்கிறீங்கள். அன்பு இல்லையெனில் உலகில் உயிர்களே இருக்க முடியாது. ஒவ்வொருவரும் ஒவ்வொருவரிலும் காட்டும் அன்பால்தான் எமக்கு உற்சாகம், மனசந்தோஷம், தைரியம்.... எல்லாமே கிடைக்கிறது.
நல்ல கவிதை.
பதிவுக்கு என் நன்றி, மேனகா!
உங்களின் ரசனை மிகுந்த பாராட்டிற்கு என் அன்பு நன்றி, சித்ரா!
ரசிப்புக்கும் அன்புப் பதிவிற்கும் என் அன்பு நன்றி, இமா!
அன்பு அதிரா!
ரொம்ப நாட்களுக்குப் பின் உங்கள் பதிவைப்பார்த்ததும் மகிழ்வாக இருந்தது. அன்பு பலவிதமாக இருந்தாலும் பெரும்பாலும் அனைத்து வகை அன்பிலும் ஏதாவது எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கிறது. குழந்தையிடம் நாம் வைக்கும் அன்பிலும் குழந்தைக்கு நம்மிடம் உள்ள பிரியத்திலும்தான் எந்த எதிர்பார்ப்புகளும் இல்லை.
அன்புப்பதிவிற்கு என் நன்றி!
அன்பு நன்றி, விஜி!
அன்பென்பது தெய்வமென்று பெரியோர் சொன்னார்-ஆனால்
அதுவும் சிலையாய்ப் போனது சில நேரம்.... அத்தனையும் உண்மையான கவி வரிகள் மனோ அக்கா.
மனோ அக்கா அன்பை பற்றி என்ன அருமையான முத்துக்கள், உங்கள் எழுத்துக்கள் அனைத்துமே நன் முத்துக்கள்.
நீங்களும் எனக்கு ரொம்ப பிடித்த முத்து,
அன்பைப்பற்றி அன்பா எழுதி இருக்கிங்க!
//அன்பென்பதற்கு பல இலக்கணங்களுண்டு.குரலிழந்தோர்கூட பேச முடியும். பார்வையிழந்தோர்கூட பார்க்க முடியும்.//..... உண்மைதான் Mam!
ஜெயா!
ஜெயா!
அன்பு ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு அனுபவமாய் மனதைப் பாதிக்கும். பல சமயங்களில் தீயாய் சுடும். சில சமயங்களில் குளிர்ச்சியாய் இதம் தரும். ஆனால் உண்மையான அன்புக்கு என்றுமே அழிவில்லை என்பதுதான் வாழ்க்கை நமக்குக் கற்றுத்தரும் உண்மை!.
அன்பு ஜலீலா!
என் முத்துக்களை வைத்தே எனக்கு ஒரு முத்துச்சரம் அணிவித்து விட்டீர்கள்!
உங்களின் நட்பென்ற நல்முத்தும் எனக்குக் கிடைத்திருக்கிறது!
உங்கள் அன்புப்பதிவிற்கு என் நன்றி1
அருமையான பதிவு.
ரொம்ப நல்லாயிருக்கு
வருகைக்கும் ,கருத்துக்கும் மிக்க நன்றி. உங்கள் கவிதை அருமையாக உள்ளது.
"ஆனால் பல வருடங்களின் வாழ்வியல் அனுபவங்களுக்குப் பின்னாலும் அன்பின் இலக்கணம் முழுமையாகப்புரிவதில்லை. இதயத்தின் தேடலுக்கு மனதில் எழுந்த பதில் சிறு முயற்சியாக, கவிதையாக இங்கே வெளிப்பட்டிருக்கிறது!"----
கவிதை அருமை.அதைவிட இந்த வரிக்ள் என் மனதை தொட்டது.அன்பிற்கும் அடைக்கும் தாழ் உண்டோ ? காலம் பதில் சொல்லும்.
அன்புள்ள குமார் அவர்களுக்கு!
பாராட்டுக்கும் பதிவிற்கும் அன்பு நன்றி!!
பாராட்டுக்கு மிக்க நன்றி, மலர்விழி!
அன்புள்ள ஆசியா!
வழக்கம்போல வரிகளைத் தேர்ந்தெடுத்து பாராட்டியிருக்கிறீர்கள்!
என் அன்பு நன்றி!
//அன்பென்ற தண்மைதான் மழலைதன் விரல் தொடுகை!
அன்பென்ற உண்மைதான் மழலைதன் புன் சிரிப்பு!///
சூபர் மேடம்
/அன்பென்ற தண்மைதான் மழலைதன் விரல் தொடுகை!
அன்பென்ற உண்மைதான் மழலைதன் புன் சிரிப்பு!//
ம்ம்.. பேரன் எழுத வைக்கிறாரா இப்படிலாம்?? :-))
சந்தோஷம்!!
குழந்தையின் புன்சிரிப்போடு கவிதையையும் படிக்கும்போது ..... அருமை...
Kavidhai romba nalla irukku madam. Kutty pappa photo superb.
பதிவிற்கும் பாராட்டிற்கும் நன்றி, மங்குனி அமைச்சரே!!
ஆமாம், பேரன் தான் இப்படியெல்லாம் எழுத வைக்கிறார் ஹுசைனம்மா! கல்லூரிக்காலத்தில் எழுதி பரிசு வாங்கியபின் மறந்தே போன விஷயம்! வாழ்க்கையின் அனைத்து அனுபவங்களுக்குப்பிறகு அன்பின் விஸ்வரூபத்தை இந்த மழலையிடம் தரிசித்த நிதர்சனம்தான் இங்கே கவிதையாக மலர்ந்திருக்கிறது!!
ரசனையான பதிவிற்கு என் அன்பு நன்றி, இர்ஷாத்!!
பாராட்டிற்கு என் அன்பு நன்றி, கிருஷ்ணவேணி!!
Madam, Please collect your awards from my blog
ரொம்ப நல்ல இருந்தது கவிதை....
இன்றுதான் பதிவுகளை பார்தேன்...
முதல் வருகைக்கும் பாராட்டிற்கும் என் அன்பு நன்றி, மலர்!
அன்புக்கு இலக்கணம் தேடும் தங்களது இந்தப்பதிவினை வலைச்சரத்தில் அறிமுகம் செய்து இருக்கிறேன்.நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கவும்.
நன்றி.
Post a Comment