Tuesday, 13 April 2010

இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!


என் ‘முத்துச்சிதறலுக்கு’ வருகை தந்து கருத்துரைகளும் வழங்கி வரும் என் அன்பு சகோதர, சகோதரியர்க்கு இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!


ரஸ மலாய்

சமையல் பகுதியில் முதன்முதலாக ‘ரஸ மலாய்’ என்னும் இனிப்புடன் ஆரம்பிக்கிறேன். இதில் பல வகைகள் இருக்கின்றன. ரிக்கோட்டா சீஸ் வகையை உபயோகித்தும் ரஸ மலாய் செய்யப்படுகிறது. ஆனால் எல்லா வகைகளையும் விட இந்த பக்குவம் மிகவும் சுவையானது மட்டுமல்ல, சுலபமானதும்கூட. என் நெருங்கிய உறவினரிடம் இதை நான் 30 வருடங்களுக்கு முன்னர் கற்றுக்கொண்டேன். இதன் சுவை அறிந்த பின், நான் மற்ற ரஸ மலாய் வகைகளிடம் போனதேயில்லை.



செய்யத் தேவையான பொருள்கள்:


பால் பவுடர் [full cream]- 1 1/4 கப்+20 டீஸ்பூன்
மைதா மாவு- 1 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர்- 1 டீஸ்பூன்
சீனி- 8 மேசைக்கரண்டி
குங்குமப்பூ- ஒரு சிட்டிகை
மெல்லியதாக சீவிய பாதாம் பருப்பு- 1 மேசைக்கரண்டி
மெல்லியதாக சீவிய பிஸ்தா- 2 மேசைக்கரண்டி
ஏலக்காய் பவுடர்- அரை டீஸ்பூன்
எண்ணெய்-1 மேசைக்கரண்டி
முட்டை-1
தண்ணீர் - 4 கப்
செய்முறை:

1 1/4 கப் பால் பவுடர், பேக்கிங் பவுடர், மைதா மூன்றையும் மூன்று முறை சலிக்கவும்.
எண்ணெய், முட்டை கலந்து பிசையவும்.
சில சமயம் முட்டை பெரியதாய் அதிக நீர்ப்பசையுடன் இருந்தால் பிசையும் மாவு கொழகொழவென்று போகலாம்.
அந்த மாதிரி சமயத்தில் மேலும் சிறிது பால் பவுடர் சேர்க்கலாம்.
பிசைந்த மாவு கிளாஸ் போல பளபள்ப்பாகவும் மிருதுவாகவும் இருக்கும்.
சிறிய அரை நெல்லிக்காய் அளவு உருண்டைகள் செய்யவும்.
உருண்டைகள் உருட்டும்போது கைகளுக்கு அதிகம் அழுத்தம் கொடுக்காமல் உருட்டவும்.
மீதி பால் பவுடரை தண்ணீரில் கரைத்து கொதிக்க வைக்கவும்.
கொதிக்கும்போது குங்குமப்பூவையும் சீனியையும் சேர்க்கவும்.
இப்போது ஐந்து உருண்டைகள் கொதிக்கும் பாலில் போடவும்.
உருண்டைகள் உடனேயே வெந்து மேலெழும்பி வரும்.
உடனேயே ம்றுபடியும் ஐந்து உருண்டைகள் போடவும்.
இதுபோல அனைத்து உருண்டைகளும் பாலில் போட்டு வெந்து மேலெழும்பியதும் சிறு தீயில் ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவும்.
ஏலப்பொடியை தூவி மெதுவாக கலக்கவும்.
பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்புகளைத் தூவி குளிர்சாதனப்பெட்டியில் வைத்து நன்கு குளிர்ச்சியடைந்ததும் பரிமாறவும்.

49 comments:

'பரிவை' சே.குமார் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்.

முதல் சமையல் குறிப்பு அருமை. தொடருங்கள் அம்மா.

இமா க்றிஸ் said...

உங்களுக்கும் குடும்பத்தார்க்கும் எனது இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா!!

எளிமையாக, அழகாகக் குறிப்புக் கொடுத்திருக்கிறீர்கள். ;)

Ahamed irshad said...

உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தார்க்கும் என் உளமார்ந்த இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அழகான படத்துடன் சமையல் குறிப்பு அருமை... தொடர்ந்து அசத்துங்க....

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள குமார் அவர்களுக்கு!

பாராட்டிற்கு மிக்க நன்றி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு இதயங்கனிந்த நன்றி, இமா!

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள இர்ஷாத் அவர்களுக்கு!

படத்துக்கும் சமையல் குறிப்புக்குமான பாராட்டிற்கு என் அன்பு நன்றி!!

ஸாதிகா said...

அக்கா எனக்கு மிகவு பிடித்த ஸ்வீட்டுடன் வாழ்த்து.மகிழ்ச்சியாக உள்ளது.உங்களுக்கு உங்கள் குடும்பத்தினருக்கும் என் வாழ்த்துக்கள்!

Chitra said...

முதன் முதலில் உங்கள் பதிவுக்கு வருகிறேன். ரஸ்மலாய் ரெசிபி மற்றும் நாவில் நீரூறும் படம் போட்டு அசத்தி விட்டீர்கள். :-)
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Menaga Sathia said...

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா!!

ரசமலாய் குறிப்பு மிக அருமையாக இருக்கு.அப்படியே அந்த பவுலோடு எடுத்துக்கிட்டேன்...

prabhadamu said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் சித்திரை திருநாள் வாழ்த்துக்கள் அம்மா..

ரசமலாய் எனக்கு மிகவும் பிடித்த ஸ்வீட்டு. நன்றி அம்மா.

Vijiskitchencreations said...

அக்கா சூப்பர் இனிப்போட சமையலை தொடங்கியிருக்கிங்ல. என் அன்பான இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். எனக்கு மிகவும் பிடித்த இனிப்பு. நான் ரிக்கோட்டா சீஸில் செய்திருக்கேன். பால் பௌடரில் வேற மாதிரி செய்துள்ளேன். உங்கள் செய்முறை நன்றாகவும் எளிதாகவும் இருக்கு. நிங்க கேட்ட கேள்விக்கு விரைவில் உங்களுக்கு இமெயில் அனுப்பறேன்.

Anonymous said...

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Jaleela Kamal said...

மனோ அக்கா சூப்பர் ரசமலாய், நானும் பால் பவுடரில் தான் செய்வேன் ஆனால் முட்டை சேர்த்து , உங்கள் முறையிலும் செய்து பார்க்கிறேன்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும், உங்க செல்ல பேரனுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

சரியா ஒப்பனே ஆகல் இப்ப தான் ஓப்பன் ஆச்சு

மனோ சாமிநாதன் said...

ஸாதிகா!

உங்களுக்கு மிகவும் பிடித்த ஸ்வீட்டா இது? அப்படியானால் ஷார்ஜா அவசியம் வந்து விடுங்கள். ரஸமலாய் பண்ணித் தருகிறேன்.

மனோ சாமிநாதன் said...

அன்பு சித்ரா!

முதல் வருகைக்கும் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் என் அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

மேனகா!

வாழ்த்துக்களுக்கு என் அன்பு நன்றி!
ஸ்வீட் இன்னும் இரண்டு மடங்கு செய்து தருகிறேன்!

மனோ சாமிநாதன் said...

அன்பு பிரபா!

பதிவிற்கு என் அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

அன்பு விஜி!

பதிவிற்கும் பாராட்டிற்கும் என் அன்பு நன்றி!
ஈமெயில் பார்த்து பதில் எழுதுகிறேன்.

மனோ சாமிநாதன் said...

அன்பு அம்மு!

வருகைக்கு என் அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

அன்பு ஜலீலா!
வாழ்த்திற்கும் ரசிப்பிற்கும் என் அன்பு நன்றி!!
நான் மதியமே சொன்ன மாதிரி, அந்த சமயம் சில பிரச்சினைகள் இருந்தன. இப்போது பழைய மாதிரி இருக்கிறது.

GEETHA ACHAL said...

மிகவும் அருமையான ஸ்வீட்... இங்கு இருக்கும் எங்களுடைய American நண்பர்கள் பலருக்கும் இந்த ஸ்வீட் ரொம்பவும் பிடிக்கும்..எப்பொழுது அவர்களை வீட்டுக்கு பார்டிகளுக்கு நாங்கள் அழைக்கும் பொழுது கண்டிப்பாக ரசமலாயையும் குலோப் ஜாமுனையும் செய்துவிடுவேன்...இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

vanathy said...

மனோ அக்கா, இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

மனோ சாமிநாதன் said...

கருத்திற்கும் பதிவிற்கும் என் அன்பு நன்றி, கீதா!

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்கு என் அன்பு நன்றி, வானதி!

அண்ணாமலையான் said...

சுப்பர் ஸ்வீட்... வாழ்த்துக்கள்...

ஜெயா said...

ஸ்வீட் பார்க்கின்ற போதே நன்றாக இருக்கின்றது.செய்து பார்ப்போம். இனிய சித்திரைப் புத்தாண்டுவாழ்த்துக்கள் மனோ அக்கா....

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள அண்ணாமலையான் அவர்களுக்கு!

தங்கள் முதல் பதிவிற்கும் கருத்திற்கும் வாழ்த்துக்களுக்கும் என் அன்பு நன்றி!

Kanchana Radhakrishnan said...

ரஸ்மலாய் ரெசிபி குறிப்பு மிக அருமையாக இருக்கு.

Starjan (ஸ்டார்ஜன்) said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

மனோ மேடம், உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

Krishnaveni said...

wow...what a lovely dish. Rasamalai looks really great. I'm going to try. Thanks for the recipe

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள காஞ்சனா அவர்களுக்கு!

வருகைக்கும் பதிவிற்கும் என் அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள ஸ்டார்ஜன் அவர்களுக்கு!

தங்களது முதல் வருகைக்கும் பதிவிற்கும் தங்களது வாழ்த்திற்கும் என் மனமார்ந்த நன்றி!

தங்களது வலைச்சரத்தில் என் தளத்தைக் குறிப்பிட்டு எழுதியதற்கு என் இதயங்கனிந்த நன்றியையும் மகிழ்வையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மனோ சாமிநாதன் said...

Dear Krishnaveni!

Thanks a lot for the nice feedback! Really this rasamalai is a delicious one. Try this and give me the feedback again.

ஜெயா said...

மனோ அக்கா எனது பின்னூட்டத்தை கண்டு கொள்ளவே இல்லை. நானும் பின்னூட்டம் இட்டுள்ளேன்.

மனோ சாமிநாதன் said...

ஸாரிம்மா ஜெயா!

பின்னூட்டங்களுக்கு பதில் எழுதிக்கொண்டிருக்கும்போதே இங்கும் அங்கும் எழுந்து போய் பல வேலைகளை கவனிப்பேன். அதில்தான் எப்படியோ உங்களை மிஸ் பண்ணி விட்டேன்.

உண்மையில் உங்களின் வலைத்தளம் ஏதாவது இருக்கிறதா, அதில் வந்து பதில் சொல்லலாமே என்று முன்னால் தேடிப் பார்த்திருக்கிறேன். எதுவும் அப்படி கிடைக்கவில்லை. உங்களை அடையாளம் காட்டும் புகைப்படம் ஆரம்பத்திலிருந்தே என்னை மிகவும் ரசிக்க வைத்து விட்டது, தெரியுமா?

உங்களுக்கும் என் இனிய இதயங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்! இந்த இனிப்பு என் நண்பர்கள், உறவுகள் இடையே மிகவும் புகழ் பெற்ற ஒன்று! செய்து பாருங்கள், உங்களுக்கும் மிகவும் பிடிக்கும். பின்னூட்டத்திற்கு என் அன்பு நன்றி!!

selvieam said...

Aunty,

rasamalai receipe looks very interesting, also seems to be very easy. definitely try for the next party.

thanks a lot for giving the nice receipe.

Asiya Omar said...

ரசமலாய் இதுவரை செய்தது இல்லை.நிச்சயம் செய்து பார்க்கணும்.நன்றி மனோஅக்கா.

மனோ சாமிநாதன் said...

Selvi!

Thanks a lot for the nice feedback!

மனோ சாமிநாதன் said...

செய்து பாருங்கள் ஆசியா! சுலபமானதும் கூட! அதிக சுவையான டெஸர்ட் இது.

R.Gopi said...

மனோ மேடம்...

என்னோட ஒன் ஆஃப் த ஃபேவரிட் ஸ்வீட் போட்டு அசத்திட்டேள் போங்கோ...

தங்களுக்கும், குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய “விக்ருதி” புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

என் “விக்ருதி” புத்தாண்டு சிறப்பு பதிவு இதோ :

மனம் கனிந்த இனிய “விக்ருதி” தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் http://edakumadaku.blogspot.com/2010/04/blog-post.html

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள கோபி அவர்களுக்கு!

பாராட்டிற்கும் பதிவிற்கும் வாழ்த்திற்கும் என் அன்பு நன்றி!!

பாரணை முடிச்ச:) அதிரா said...

மனோ அக்கா இனிய, தாமதமான புத்தாண்டு வாழ்த்துக்கள். ரசமலாய் சூப்பராக செய்து காட்டியிருக்கிறீங்கள். நான் இதுவரை சாப்பிட்டதேயில்லை. உடனே செய்யவேணும்போல இருக்கு.

இதில் கட்டாயம் முட்டை சேர்க்க வேண்டுமோ? அதற்குப் பதிலாக வேறு ஏதாவது சேர்க்கமுடியுமோ?

மனோ சாமிநாதன் said...

அதிரா! உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
பாராட்டுக்கு என் அன்பு நன்றி!
கட்டாயம் முட்டை சேர்க்க வேண்டும். சேர்த்தால்தான் நன்றாக வரும்.

இமா க்றிஸ் said...
This comment has been removed by the author.
raja said...

உங்கள் குறிப்புகள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளன.

ரஸ மலாய் எனக்கு மிகவும்.... பிடித்தது.படத்தைப் பார்த்தாலே உடனே செய்யத் தூண்டுகிறது.

நீங்கள் பால் பவுடர் உபயோகித்திருக்கும் கப் அளவு என்பது 200ml or 250ml.

பால் பவுடரில் full cream என்றால் என்ன?

உங்கள் பதில் கண்டதும் உடனே செய்துவிடுவேன்.Expecting your reply very eagerly.Thanks.

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள ராஜா!

ஒரு ஸ்டாண்டர்ட் கப் அளவு- ௨00 கிராம் பால் பவுடர் இதற்குத் தேவை. பொதுவாக எல்லா பால் பவுடர்களும் full creamஆகத்தான் இருக்கும். இருந்தாலும் வெளி நாடுகளில் Low fat, Non fat என்று பால் பவுடர்களில் பல விதம் உன்டு. அதனால் தான் full cream என்று குறிப்பிட்டுள்ளேன். நம் ஊரில் அமுல்யா நன்றாக வரும். இதில் குறிப்பிட்டுள்ள‌ அள‌வுகளை சரியாக உபயோகித்து செய்தால் ரசமலாய் நிச்சயம் அருமையாக வரும். செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள்.

raja said...

அம்மா, உங்களின் உடனடி பதிலுக்கு மிகவும் நன்றி.நான் ஊரில் இல்லை, project ற்காக வெளிநாடு வந்திருக்கிறேன்.என் roommate க்கு வரும் வியாழக்கிழமை பிறந்தநாள்,இந்த sweet செய்யப்போகிறேன்.

//ஒரு ஸ்டாண்டர்ட் கப் அளவு- ௨00 கிராம்// என்று கூறியுள்ளீர்கள்.

ஒரு கப் அளவு =200 கிராம் தானே. 200 கிராமில் '2' க்கு பதிலாக ' உ' என்று type ஆகி உள்ளது என எண்ணுகிறேன்.

நீங்கள் recipe ல் குறிப்பிட்டுள்ள
பால்பவுடர்
1 1/4 கப் = 250 கிராம் எடுக்க வேண்டும் என எண்ணுகிறேன்,சரிதானே அம்மா.

தொந்தரவுக்கு மன்னிக்கவும், நேரம் கிடைக்கும்போது பதில் தருவீர்கள் என ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

நன்றி.

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள ராஜா!

எழுத்துப்பிழை தான் அது! நீங்கள் 1 1/4 கப் என்று எடுத்தாலும் சரி அல்லது 250 கிராம் என்று எடுத்தாகும் சரி, சரியாகவே இருக்கும்.

raja said...

அம்மா,பதிலுக்கு மிக நன்றி. நீங்கள் கூறியுள்ள அளவுகள்,செய்முறையின்படி அப்படியே செய்தோம்.அமுல்யா பால்பவுடர்
கிடைக்கவில்லை,ஆனாலும் மிக ருசியாகவே இருக்கிறது.

நேற்றே செய்து fridgeல் வைத்து விட்டோம்,இன்று சாப்பிடுவதற்கு.எங்களால் நம்பவே முடியவில்லை,நாங்கள் தான் செய்தோமா என்று,அவ்வளவு ருசி,அனைத்தும் உங்களையே சாரும்.

உங்களின் உதவிக்கும்,ருசியான குறிப்புக்கும் மிக நன்றி அம்மா.