Wednesday, 6 November 2024

குளோபல் வில்லேஜ்-2023-2024!!!

 

குளோபல் வில்லேஜ்

அவர்களுடைய வலைத்தளத்தில் ‘ A WORLD WITHOUT BORDER ‘ என்னும் வாசகம் அமைந்திருக்கும். அது உண்மை தான்! ஒவ்வொரு ஸ்டாலையும் உலகின் ஒவ்வொரு நாட்டு மக்களும் ரசித்து அனுபவிப்பதுடன் அந்தந்த நாட்டு பொருள்களையும் வாங்கிச் செல்வார்கள்!!

சென்ற வருடம் வழக்கம்போல அக்டோபரில் குளோபல் வில்லேஜ் திறந்தது. இந்த வருடம் ஏப்ரலில் மூடியது. ஒவ்வொரு வருடமும் 90க்கும் மேற்பட்ட நாடுகள் தங்கள் ஸ்டாலை பிரம்மாண்டமாக, அசத்தும் அழகுடன் வடிவமைப்பது வழக்கம். அதே போல ஒவ்வொரு வருடமும் புதுமையான நிகழ்வுகளும் பொழுது போக்கு அம்சங்களும் கூடுதலாய் அமைந்திருக்கும். எப்போதும் இந்திய ஸ்டால் நம் நாட்டின் புகழ் பெற்ற ஏதேனும் கோட்டை  வடிவிலே தான் அமைந்திருக்கும்! இங்கே 200க்கும் மேற்பட்ட உணவகங்கள் பல நாடுகளின் உனவுகளை கொண்டாடிக்கொண்டிருக்கும். வாருங்கள், ஒவ்வொரு நாட்டையும் பார்க்கலாம்.



இந்தியாவும் லெபனானும் எதிர் எதிரே-நடுவே கால்வாய்



செளதி அரேபியா

ஈரான் ஸ்டாலின் வெளிப்பக்கம்

ஈரான் ஸ்டால் நுழைவாயில்-உள்ளே கடைகள்!!


எகிப்து, பஹ்ரைன், துருக்கி




தாய்லாந்து, வியட்நாம் நாடுகளில் கால்வாய்களின் இரு புறமும் கடைகளும் கால்வாயிலேயே மிதக்கும் கடைகளும் உண்டு. இங்கும் அதே ஸ்டைலில் floating market அமைத்திருக்கிறார்கள். நுழைவாயிலில் இருக்கும் அலங்காரம் இது!!


மிதக்கும் படகுகளில் பழங்கள், இளநீர், ஸ்நாக்ஸ் வியாபாரம்!!


ரஷ்யா, யூரோப்




அமெரிக்கா, கொரியா


ஒரு பகுதி நாடுகளின் படங்களைத்தான் இத்துடன் இணைத்திருக்கிறேன். இவற்றை பார்த்து, கடப்பதற்கே மூன்று மணி நேரம் ஆனதுடன் உடலும் களைத்து விட்டது. எந்த தடவையுமே அனைத்து நாடுகளையும் பார்த்ததில்லை. அடுத்த குளோபல் வில்லேஜ் தொடங்கி விட்டது. இந்த தடவையாவது நிறைய நாடுகளைப்பார்க்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்!!




மலேஷியா, இலங்கை, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ் நாடுகளை பார்ப்பதற்கு ROAD OF ASIAவில் நுழைய வேண்டும்!!




8 comments:

ஸ்ரீராம். said...

அருமையான படங்கள்.  கண்ணைக் கவர்கின்றன.  அந்த இடத்தின் அழகும் தெரிகிறது.  பார்த்துக் களைத்தீர்கள் சரி, என்னென்ன வாங்கினீர்கள், சுவைத்தீர்கள்?

பிலஹரி:) ) அதிரா said...

மனோ அக்கா நலம்தானே... குளோபல் ஸ்டால் மிக அருமை, ஒவ்வொரு நாடும் மிகவும் பிரமாண்டமாக இருக்கிறதே.. படங்களில் மிகவும் அழகாக இருக்குது.

மனோ சாமிநாதன் said...

படங்களை ரசித்து பார்த்ததற்கு அன்பு நன்றி ஸ்ரீராம்!!
ஏதாவது சிறிய அளவில் கலைப்பொருள் வாங்குவேன். படுக்கை விரிப்பு, தோல் சாமான்கள் எல்லாம் பாகிஸ்தான் ஸ்டாலில் அழகாய் கிடைக்கும். தாய்லாந்தில் தான் குட்டி குட்டி பொம்மைகள் கிடைக்கும்.
சாப்பிட என்றால் விதம் விதமாக நிறைய கிடைக்கும். செஸ்நட் எப்போதும் க்ரில் பண்ணி சுடச்சுட கிடைக்கும். அதைத் தவறாமல் வாங்கி சாப்பிடுவேன். தாய்லாந்து இளநீர் மிகவும் சுவையாக இருக்கும். நம் ஊர் பஜ்ஜி போண்டா , உருளைக்கிழங்கை சுருள் சுருளாக ஃப்ரை பண்ணித்தருவார்கள், இதெல்லாம் இந்திய ஸ்டால்களில் கிடைக்கும். ஸ்ரீலங்கா கடைகளில் பட்டை, சோயா உருண்டைகள் என்று மசாலா சாமான்கள் வாங்குவேன்.

மனோ சாமிநாதன் said...

வாருங்கள் அதிரா! ரொம்ப ரொம்ப நாளாயிற்று உங்கள் பின்னூட்டம் பார்த்து!!
ரசித்துப்பார்த்து பின்னூட்டமிட்டதற்கு அன்பு நன்றி அதிரா!

ராமலக்ஷ்மி said...

பிரமாண்டமாக அமைத்துள்ளார்கள் ஒவ்வொரு ஸ்டாலையும். ஜெய்ப்பூர் கோட்டை வடிவில் இந்திய ஸ்டால் அருமை. இந்த வருடம் எந்த கோட்டையை வடிவமைப்பார்கள் என அறிய ஆவல். ஆம், இத்தனை பெரிய காட்சிகளில் முழுதாகச் சுற்றி வருவது சிரமமே. ஸ்ரீராம் சரியான ஒரு கேள்வியை முன் வைக்க நீங்கள் தந்திருக்கும் தகவல்களுடனான பதில் சுவாரஸ்யம், மற்றும் பயனுள்ளது.

Thulasidharan V Thillaiakathu said...

மனோ அக்கா படங்கள் சொல்ல வைக்கின்றன ஆமாம் துபாய் க்ளோபல் வில்லேஜ் ரொம்ப ஃபேமஸ். ஆமாம் அக்கா ஒரே நாளில் பார்த்துவிட முடியாதுதான்.

//ய்லாந்து, வியட்நாம் நாடுகளில் கால்வாய்களின் இரு புறமும் கடைகளும் கால்வாயிலேயே மிதக்கும் கடைகளும் உண்டு. இங்கும் அதே ஸ்டைலில் floating market அமைத்திருக்கிறார்கள். நுழைவாயிலில் இருக்கும் அலங்காரம் இது!!//

ஆமாம் அதை அப்படியே இங்கு கொணர்ந்திருக்காங்களே சூப்பர்!

அனைத்தும் ரசித்தேன் மனோ அக்கா

இந்த முறை பல நாடுகளைப் பார்க்கும் வாய்ப்பும் எங்களோடு பகிரவும் கிடைக்கும்.

கீதா

மனோ சாமிநாதன் said...

அழகாய் பின்னூட்டமிட்டிருக்கிறீர்கள் ராமலக்ஷ்மி!
இங்கு குளிர்காலம் மிகவும் கடுமையாக இருக்கும். நவம்பர் வேறு தொடங்கி விட்டது. சீக்கிரம் கடுமையான குளிரை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதனால் சீக்கிரம் குளோபல் வில்லேஜ் செல்ல வேண்டும். இந்திய ஸ்டாலைப் பார்க்க நானும் மிகவும் ஆவலாக இருக்கிறேன்.

மனோ சாமிநாதன் said...

ரசித்துப்பார்த்து பின்னூட்டமிட்டிருப்பதற்கு அன்பு நன்றி கீதா!
இனி தான் குளோபல் வில்லேஜ் செல்ல வேண்டும்.