Friday 11 June 2021

அந்த நாள் ஞாபகம்...!!!

 சமீபத்தில் கேட்ட‌ ஒரு பழைய ஹிந்தி பாடல் நிறைய பழைய நினைவலைகளை கிளறி விட்டது.

அது 1974ம் வருடம். என் கணவர் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பன்வேல் என்னும் சிறு நகரத்தில் ஒரு பைப் கம்பெனியில் மேலாளராக வேலை பார்த்த நேரம். முதன் முதலாக மொழி தெரியாத, புரியாத இடத்தில் நுழைந்த போது ஏகப்பட்ட பிரமிப்பு, தயக்கம் எல்லாம் இருந்தது. தமிழ், ஆங்கிலம் தவிர வேறு மொழியறியாத நிலை. அருகே கேரளத்தினர், எதிரே மராத்தியர், சற்று தள்ளி பீஹாரி குடும்பம், பின்னால் உத்திரப்பிரதேச தம்பதியினர் என்று இந்தியாவின் அனைத்து மாநிலத்தவர்களும் சங்கமித்திருந்த இடம் அது. பல வித கலாச்சாரங்கள், பழக்க வழக்கங்கள், சமையல் முறைகள் எல்லாம் பழகிப்போக, ஹிந்தியும் உருதுவும் சரளமாக பேச முடிந்த‌து.மராத்தியும் சிறிது சிறிதாகப்பேச முடிந்தது. பீஹாரி பேசினால் புரிந்தது. 

ஹிந்தியில் அத்தனைப்பாடல்களும் ரசிக்க முடிந்தது. நிறைய மனம் கவர்ந்த பாடல்கள் அப்போதைய கேசட் வடிவில் பதியப்பெற்றன. சஞ்சீவ்குமார், ஜெயபாதுரி, ஷர்மிளா டாகூர் படங்களை விழுந்து விழுந்து ரசித்த நாட்கள் எத்தனை எத்தனையோ! அந்த ஊரில் தான் மிகவும் புகழ் பெற்ற ' ஷோலே' படம் எடுத்தார்கள். 

அந்த நாட்களில் நான் மிகவும் அனுபவித்து ரசித்த சில பாடல்கள் இங்கே!


12 comments:

முற்றும் அறிந்த அதிரா said...

மனோ அக்கா நலம்தானே.

உண்மைதான், சில பாடல்கள் காதில் ஒலித்தால், உடனே நம்மை அந்த இடத்துக்கே கொண்டுபோய்ச் சேர்த்து விடும் நம் ஞாபகங்கள்...

நான், நம் மொழி தவிர வேறு எந்தப் பாடலையும் பெரிதாக விரும்பியதில்லை இதுவரை.. ஏனைய மொழிகளை [ஆங்கிலம் உட்பட]மேலோட்டமாகவே ரசிப்பேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மனோ, இசை வெள்ளத்தில் மூழ்க அடித்து விட்டீர்கள் மா. அதுவும் பர்வீன் சுல்தானா
குரல் எத்தனை அமைதியும் இனிமையும் நிறைந்திருக்கிறது!!!
எல்லாப்பாடல்களும் அந்தந்த காலக் கட்டத்தை அருகில்
கொண்டு வருகின்றன.
இசை என்பது அந்தப் பாடலுக்காக மட்டும் இல்லை.
அதைக் கேட்கும் காலத்தில்
நாம் எங்கே இருந்தோம் ,வாழ்வில்
என்ன நடந்தது, யாருடன் இருந்தோம்,
எந்தக் குழந்தைக்கு இந்தப் பாடல் பிடிக்கும்
இதெல்லாம் நினைவுக்கு வரும்.
அந்த அதிசயம் திரைப் பாடல்களுக்கு உண்டு.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மனோ, இசை வெள்ளத்தில் மூழ்க அடித்து விட்டீர்கள் மா. அதுவும் பர்வீன் சுல்தானா
குரல் எத்தனை அமைதியும் இனிமையும் நிறைந்திருக்கிறது!!!
எல்லாப்பாடல்களும் அந்தந்த காலக் கட்டத்தை அருகில்
கொண்டு வருகின்றன.
இசை என்பது அந்தப் பாடலுக்காக மட்டும் இல்லை.
அதைக் கேட்கும் காலத்தில்
நாம் எங்கே இருந்தோம் ,வாழ்வில்
என்ன நடந்தது, யாருடன் இருந்தோம்,
எந்தக் குழந்தைக்கு இந்தப் பாடல் பிடிக்கும்
இதெல்லாம் நினைவுக்கு வரும்.
அந்த அதிசயம் திரைப் பாடல்களுக்கு உண்டு.

வல்லிசிம்ஹன் said...

தேவ் ஆனந்த் பாடல்,60களிலும்
அமிதாப் பாடல்,ஷர்மிளா ராஜேஷ் கன்னா பாடல்கள் 70 களுக்கு மகிழ்வைத்தந்தன.
உங்களுக்கு என் நன்றிகள்.

வல்லிசிம்ஹன் said...

அதுவும் கபி கபீமேரே தில் மே.....மறக்க முடியாத 74 ஆம்
வருடப்பாடல்.

ஸ்ரீராம். said...

அனைத்துமே மிக மிக அருமையான பாடல்கள்.  வடநாட்டுப்பக்கம் போகாமலேயே எல்லாமே நானும் ரசிக்கும் பாடல்கள்!!

வெங்கட் நாகராஜ் said...

வடக்கே இருந்த சில வருடங்களின் நினைவுகள், ரசித்த பாடல்கள் என பதிவு இனிமை. நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் பாடல்கள் அனைத்துமே இனிமை.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

Geetha Sambasivam said...

எல்லாமே அந்தக்கால கட்டத்தில் மிகவும் ரசிக்கும் பாடல்கள். அதிலும் அபிமான் படப்பாடலும், கபி கபி பாடலும் மிகவும் ரசித்துப் பார்த்த/கேட்ட பாடல்கள்/படங்கள். அருமையான இனிமையான பகிர்வுக்கு நன்றி.

Thulasidharan thilaiakathu said...

மனோ அக்கா ஆமாம் சில நம் நினைவுகளை எழுப்பி விடும். உங்கள் நினைவுகள் அருமை. எனக்கும் இப்படிப் பல மாநிலத்தவர் இருப்பது பிடிக்கும் நிறைய தெரிந்து கொள்ளலாம். மொழிகள் அவர்கள் சமையல் விழாக்கள் என்று பல. சுவாரசியமாக இருக்கும்.

ஹிந்திப் பாடல்கள் அதிகம் கேட்டதில்லை இங்கு பகிர்ந்திருக்கும் பாடல்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன மனோ அக்கா.

கீதா

Thulasidharan thilaiakathu said...

இரண்டாம் பாடலும் மூன்றாம் பாடலும் கொஞ்சம் ஒரே போல இருந்தாலும் அருமை. தமிழ்ப்பாடல்களை நினைவுபடுத்துகிறது.

மற்ற பாடல்களும் தமிழ்ப் பாடல்களை நினைவுபடுத்துகின்றன. தமிழ்ப்பாடல்கள் வரிகள் டக்கென்று நினைவுக்கு வரலை. அதுவும் கடைசிப் பாடல் தாசேட்டன் பாடுவது..உட்பட

கீதா

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான பாடல்கள்