Sunday 31 December 2017

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! !!!

அன்பு சகோதரர்கள், சகோதரிகள்   அனைவருக்கும் அன்பிற்கினிய            புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!  




வரவிருக்கும் 2018, அனைவருக்கும் அனைத்து      வளங்களையும் மகிழ்ச்சியையும் அள்ளித்தரட்டும்!




புத்தாண்டில் சிரிக்கவும் சிந்திக்கவும் இரு வாட்ஸ் அப் செய்திகள்! 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


Johny johny..*
                    *"Yes papa!*
  *New GST..*
           *"      More Papa..!* 
*Purchase Price..*
                 *" High Papa..!*
*Petrol Price..*
         *""       Rocket Papa!*
*Subsidies are...*
                 *" Nil Papa..!*
*Monthly income..*
                      *Low Papa..*
*Family outing..*
                     *Fear Papa..*
*Lot of tension..*
                     * Yes papa!*
*Too much work..*
                      *Yes papa!*
*Bp-sugar..*
                     *High papa!*
*Yearly bonus..*
                    *Joke papa!*
*Pension Income..*
                      *No papa!*
*Total Life*

                *Ha Ha Ha*.    

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

கஷ்டம், கஷ்டம், கஷ்டத்துக்கு மேல் கஷ்டம், தாங்க முடியலே… 

எதுக்குத் தான்பா இந்த கஷ்டம்என்கிற கேள்வி மனதில் இல்லாதவர்கள் இல்லை. 

இந்தப் பதிவு அதற்கு விடையளிக்கக் கூடும். சமீபத்தில்  படித்த ஒரு அற்புதமான கதையை இங்கு உங்களிடம் பகிர்கிறோம்.

 அனைவருக்கும் தேவையான ஒரு நல்ல பாடம்

பாலுக்கு ஒரு பெரிய வருத்தம். 

பசுவின் வயிற்றில் நான் இருந்தேன். 

என்னை ஒருத்தி கறந்து பாத்திரத்தில் ஊற்றினாள். 

அடுப்பைப் பற்றவைத்து,அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சூடாக்கினாள். 

எனக்கு சூடு தாங்கவில்லை. துடித்துப் போனேன். 

பசுவின் வயிற்றில் பத்திரமாக இருந்த எனக்கு இப்படி ஏன் ஒரு சோதனை?”  என்று என்னை நானே நொந்து கொண்டேன். பொங்கிய நிலையில் என்னை அடுப்பிலிருந்து இறக்கிவைத்தாள். 

நேரமாக, நேரமாக நான் ஆறியதும், புளித்த மோரைக் கொண்டு வந்து என்னோடு சேர்த்தாள். இது என்னடா புது தண்டனை?” என்று வருத்தப்பட்டேன். 

அதன் பிறகு யாரும் என்னைப் பற்றிக் 
கவலைப்படவில்லை. 

திரவமாக இருந்த நான் திடமாக மாறிப்போனேன். எனக்குத் தயிர் என்று புதிதாக ஒரு பெயரை வைத்தார்கள்.

அத்துடன் நிறுத்தினார்களா? என்னை ஒரு பானையில் ஊற்றி
மத்து கொண்டு கடைய ஆரம்பித்தார்கள். 

நான் மறுபடி மோர் என்ற திரவமானேன்.

என்னுள்ளிருந்தே ஒரு திடப்பொருளை வரவழைத்து
அதற்கு வெண்ணெய் என்று பெயர் வைத்தார்கள். 
பட்டர்என்ற பெயரைக் கேட்டதும், அப்பாடா! இனியாவது என் வாழ்க்கை பெட்டர்ஆகுமா?” என்று ஏங்கினேன்.

அத்துடன் தீர்ந்ததா என் கஷ்டம்

அந்த வெண்ணெயை, மறுபடி அடுப்பில் வைத்து உருக்கினார்கள். 
எனக்கு நெய் என்று இன்னொரு புதுப் பெயரை வைத்தார்கள்.
 உருக்கிய நெய்யை ஒரு ஜாடியில் ஊற்றி
அந்த வீட்டில் ஜன்னலுக்குப் பக்கத்தில் வைத்தார்கள்.

பாலாக இருந்த நான், பட்ட கஷ்டங்களையும், இப்போதுள்ள நிலைமையையும் நினைத்தபடியே இருந்த நேரத்தில்ஜன்னலுக்கு வெளியில் இரண்டு பெண்கள் ஏதோ பேசிக்கொண்டே செல்வதை நான் கவனித்தேன். 
ஒருத்தி உங்க ஊர்ல பால் என்ன விலை?” என்று கேட்டாள். 

அதற்கு அடுத்தவள், அரை லிட்டர் 20 ரூபாஎன்றாள். 

உடனே முதல் பெண்மணி, ஆனா இந்த நெய் விற்கிற விலையைப் பார்த்தியா

அரை லிட்டர் கேட்டால் கடைக்காரன் 250 ரூபா விலை சொல்றான்என்றாள்.

ஜன்னல் பக்கத்திலே, ஜாடிக்குள்ளே இருந்த நான் அவர்கள் பேசிக்கொண்டதைக் கேட்டு ஆச்சர்யப்பட்டேன். 

பாலாக இருந்தபோது என் மதிப்பு வெறும் 20 ரூபாதான்

ஆனால், பல கஷ்டங்களை அனுபவித்து, நெய்யான பிறகு, என் மதிப்பு 250 ரூபாயாகக் கூடிவிட்டதே! 

இதை நினைக்கிறபோது
நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை!என்று உணர்ந்நதது அந்த நெய்.

இந்தக் கதை மூலம் நமக்குக் கிடைக்கிற பாடம் என்ன?

நாம் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களும், கஷ்டங்களும்தான் நம்முடைய வாழ்க்கையின் தரத்தை, மதிப்பை உயர்த்துகிற அம்சங்கள்

16 comments:

KILLERGEE Devakottai said...

வணக்கம் சகோ இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
கதை அருமையான வாழ்வியல் உண்மையை சொல்லியது.

வெங்கட் நாகராஜ் said...

பாலின் கதை - நன்று.

வாழ்த்துகளுக்கு நன்றி.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

யுவராணி தமிழரசன் said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

Thulasidharan V Thillaiakathu said...

நாம் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களும், கஷ்டங்களும்தான் நம்முடைய வாழ்க்கையின் தரத்தை, மதிப்பை உயர்த்துகிற அம்சங்கள்//

மிக மிக அருமையான கருத்துடன் கூடிய புத்தாண்டு வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி மனோ அக்கா!!

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

நீங்கள் சொல்லியிருந்த அந்த அட்டப்பாடி பதிவுக்குச் செல்கிறேன்...

கீதா

Angel said...

உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா .இரண்டாவது செய்தி மிகவும் ரசித்தேன் ..கஷ்டப்பட்டாதான் வாழ்வில் முன்னேறலாம் என்ற தத்துவத்தை அழகாய் உணர்த்தியது நெய்

saamaaniyan said...

அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்

எனது புத்தாண்டு பதிவு : ஒரு நொடி சிந்திப்போம்...
http://saamaaniyan.blogspot.fr/2017/12/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடவும்

நன்றியுடன்
சாமானியன்

ராமலக்ஷ்மி said...

நன்றி. தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

கதை சொல்லும் பாடம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. நல்லதொரு பகிர்வு.

Nagendra Bharathi said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

கரந்தை ஜெயக்குமார் said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

இளமதி said...

வணக்கம் அக்கா!

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர்க்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

அருமையான கதை!
வாழ்த்திற்கும் நன்றி அக்கா!

துரை செல்வராஜூ said...

நலம் பெருகட்டும்..
நன்மைகளும் சூழட்டும்..

அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

பூ விழி said...

கருத்துள்ள கதை, இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Chitra J said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் Mano Madam.
New Year request:
Can you post a recipe for மாதுளை ரசம்? The pomegranates that we get in USA are deep red, juicy , strong in sweet as well as துவர்ப்பு taste. I am not sure how to balance off the துவர்ப்பு taste in the fruit while making the rasam. Does the துவர்ப்பு taste fade off if we add the juice lastly and let it stand for 20-30 minutes in a closed vessel? Adding more toor dal would lessen the taste of the fruit? Please share us your expertise on this. Nandri.

Anuprem said...

இந்த புதிய ஆண்டு மகிழ்வோடு அமைய எனது வாழ்த்துக்களும்...

மனோ சாமிநாதன் said...

புதிய ஆண்டிற்கு நல்வாழ்த்து அளித்த சகோதரர்கள் கில்லர்ஜி, வெங்கட், துளசிதரன், சாமானியன் சாம், நாகேந்திர பாரதி, கரந்தை ஜெயக்குமார், துரை.செல்வராஜ், சகோதரியர் ராமலக்ஷ்மி, பூவிழி, ஏஞ்சலின், அனுராதா பிரேம்குமார், யுவராணி தமிழரசன், கீதா, இளமதி, சித்ரா அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!!

மனோ சாமிநாதன் said...

Dear Chithra!

உங்களுக்கும் மனம் நிறைந்த இனிய புத்தான்டு வாழ்த்துக்கள்!!!

I am going to post Pomegranate soup for you now. I will post a recipe for POMEGRANATE RASAM within a few days in my cookery blog, that is www.manoskitchen.blogspot.com
மாதுளையில் இருக்கும் துவர்ப்பிற்கு பாலன்ஸ் செய்ய எலுமிச்சை சாற்றை சேர்த்துப்பாருங்கள். ரசத்தை அடுப்பிலிருந்து இறக்கிய பிறகு சற்று ஆறியதும் கொஞ்சம் கொஞ்சமாய் அரை ஸ்பூனிலிருந்து ஆரம்பித்து சேர்த்து ருசித்துப்பாருங்கள். ஒரு கட்டத்தில் சுவை சரியாக இருக்கும் பட்சத்தில் எ.சாறு சேர்ப்பதை நிறுத்தி விடுங்கள்.

தாமதமாக பதில் எழுதுவதற்கு வருந்த மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.