Monday, 8 January 2018

மாதுளை சூப்!!!!

சமையல் குறிப்பில் இந்த முறை ஒரு சத்தான சூப். அதுவும் மாதுளை சாறு கலந்த சூப்.



பொதுவாய் சூப் வகைகள், மதியம் சாப்பிடுவதற்கு  முன் ஒரு பதினோரு மணி வாக்கில் சூடாகக் குடித்தால் நன்றாக இருக்கும். இந்த சூப் கூட அந்த வகையை சேர்ந்தது தான். அன்னாசிப்பழ சாற்றிலும் இப்படி செய்யலாம். ஆனால் மாதுளையில் இனிப்புடன் துவர்ப்பும் இருப்பதால் சூப் செய்வதற்கு மிகவும் ஏற்றது. மாதுளையின் பயன்கள் பற்றி எல்லோருக்குமே தெரியும். இந்த செய்முறையில் தினம் ஒரு சூப் குடித்து வந்தால் உடல் நலம் சிறக்கும். ஒரு நாள் மாதுளை, ஒரு நாள் ஒரு கை வாழைப்பூ, ஒரு நாள் முடக்கத்தான், ஒரு நாள் பிஞ்சு முருங்கைக்காய் என்று செய்து அருந்தலாம்.

இப்போது மாதுளை சூப் செய்யும் விதம் பற்றி...

POMEGRANATE SOUP:




தேவையான பொருள்கள்:

மாதுளை முத்துக்கள்‍ ஒரு பழத்திற்கானது
பொடியாக அரிந்த சின்ன வெங்காயம்-8
பொடியாக அரிந்த தக்காளி- ஒரு கப்
புதினா- ஒரு கை
கறிவேப்பிலை- 2 கொத்து
கொத்தமல்லி இலை- ஒரு கை
நசுக்கிய இஞ்சி- 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் -அரை ஸ்பூன்
மிளகு- ஒரு ஸ்பூன்
சீரகம் -ஒரு ஸ்பூன்
கிராம்பு- 2
நெய்‍- 2 ஸ்பூன்
தேவையான உப்பு
எலுமிச்சை சாறு- 2 ஸ்பூன்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி கிராம்புகளைப்போடவும்.
அவை பொரிய ஆரம்பித்ததும் 5 கப் நீரை சேர்க்கவும்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும்போது அனைத்துப்பொருள்களையும் மாதுளை முத்துக்களுடன் சேர்க்கவும்.
உப்பு சேர்க்கவும்.
மிளகு, சீரகம் இரண்டையும் கொரகொரப்பாக பொடித்து சேர்க்கவும்.
நன்கு கொதித்து மாதுளை முத்துக்களும் இலைகளும் நிறம் மாறியதும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
சூப்பை ஒரு பாத்திரத்தில் வடிகட்டவும்.
வடிகட்டியில் தங்கும் பொருள்களை MASHERஆல் நசுக்கி அதையும் வடிகட்டி சூப்பில் சேர்க்கவும்.
இப்போது எலுமிச்சை சாற்றினை ஊற்றி கலக்கவும்.
மாதுளை சூப் இப்போது தயார்!!



20 comments:

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

இது புதுசாக இருக்கே... நன்றாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.

Angel said...

மாதுளை இங்கே நிறைய கிடைக்கும். வித்யாசமான சுவையாக இருக்கும்னு நினைக்கிறேன் soup செய்து பார்த்து சொல்றேன்க்கா

ஸ்ரீராம். said...

"சூப்"பர்!

Chitra J said...

Thank you very much Mano Madam. I will definitely try this. and thank you for the response for my last request. Will try the Madhulai rasam the same way you have suggested. Thank you so much again!!

துரை செல்வராஜூ said...

மாதுளையின் சுவை அதன் முத்துக்களில் தான்..

கூடுதலாக அவற்றின் மீது சிறிது உப்பையும் மிளகுத் தூளையும் தூவிக் கொள்வதுண்டு..

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

ரசித்தோம், ருசித்தோம்.

இளமதி said...

வணக்கம் அக்கா!

வித்தியாசமான சூப்.
மாதுளம் பழமென்றாலே சுவைமிக்கது. அதிலும் இந்த சூப் செய்வது புதியது எனக்கு!
செய்து பார்க்க வேண்டும்!

நல்ல பகிர்வு! நன்றியுடன் வாழ்த்துக்கள் அக்கா!

வெங்கட் நாகராஜ் said...

வித்தியாசமான சூப்... முடிந்தா செய்து பார்க்கிறேன்.

நிலாமகள் said...

அடுத்த விருந்தினருக்கு ஒரு புது ஸ்டாட்டர் கிடைத்தது! அதற்குள் நமக்கும் அடிக்கடி! நன்றி சகோ.

ராமலக்ஷ்மி said...

புதுமையான சூப். செய்து பார்க்கிறேன். குறிப்புக்கு நன்றி.

தைத்திருநாள் வாழ்த்துகள்!

மனோ சாமிநாதன் said...

நிச்சயம் நன்றாக இருக்கும் அதிரா! அவசியம் செய்து பாருங்கள்!!

மனோ சாமிநாதன் said...

வாருங்கள் ஏஞ்சல்! சூப் செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள்!!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டுக்கும் அன்பு நன்றி ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

மாதுளை சூப் செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள் சித்ரா!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் துரை செல்வராஜ்!

மனோ சாமிநாதன் said...

ரசித்ததற்கும் ருசித்ததற்கும் அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!

மனோ சாமிநாதன் said...

அவசியம் செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள் இளமதி!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி வெங்கட்!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி நிலாமகள்!

Thulasidharan V Thillaiakathu said...

அட! சூப்பரான ஒரு குறிப்பு..மாதுளை ரசம் செய்ததுண்டு
இது சூப்!!! குறித்துக் கொண்டாயிற்று..மனோ அக்கா


கீதா