காலை உணவுகளில் பலவகை இருக்கின்றன இட்லி, இடியாப்பம், தோசை, பொங்கல், பூரி என்று! ஆனால் இப்போதெல்லாம் மாவுப்பொருளைக்குறைக்கும் விதமாக சிறு தானியங்களான கேழ்வரகு, வரகு, திணை, கம்பு, சாமை போன்றவற்றில் இட்லி, தோசை, உப்புமா, பொங்கல் என்று செய்யும் வழக்கம் பரவலாக வந்து விட்டது.
காலை நேரத்தில் ஆவி பறக்க இட்லிகளும் தொட்டுக்கொள்ள காரசாரமாக இட்லி மிளகாய்த்தூளும் பூண்டு சட்டினியும் சாப்பிடுபவர்கள் ஒரு மாறுதலாக காலையில் இந்த ஓட்ஸ் சாலட் ஒரு நாள் காலை உணவாக எடுத்துக்கொள்ளலாம். சத்து மிக்க பழங்களும் ஓட்ஸ் மற்றும் பால் கலந்த பூண்டு சட்டினியும் சாப்பிடுபவர்கள் ஒரு மாறுதலாக காலையில் இந்த ஓட்ஸ் சாலட் ஒரு நாள் காலை உணவாக எடுத்துக்கொள்ளலாம். சத்து மிக்க பழங்களும் ஓட்ஸ் மற்றும் பால் கலந்த அருமையான உணவு இது. ஓட்ஸ் தானியத்தில் கனிமச்சத்துக்கள், வைட்டமின்கள் உள்ளன. இதில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் அதிகம். இவை கொழுப்புச்சத்தையும் இரத்த சர்க்கரை அளவையும் குறைக்கின்றன. ஓட்ஸிலுள்ள அதிக அளவிலான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இரத்தத்தை சுத்தகரிக்கின்றது. பழங்களிலுள்ள சத்துக்களைப்பற்றியும் அனைவருக்கும் தெரியும். இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து உணவாகும்போது அது உடலுக்குக் கொடுக்கும் நன்மைகள் பல.
இது தனியாக அறைகளில் தங்கி உணவு செய்து சாப்பிடும் இளைஞர்களும் சுலமாக செய்து கொள்ள முடியும்.
இனி ஓட்ஸ் சாலட் செய்யப்போகலாம்.
ஓட்ஸ் பழ சாலட்
தேவையானவை:
மாம்பழங்கள், ஆப்பிள்கள், பேரீச்சை, மாதுளை, வாழைப்பழங்கள் சேர்ந்த கலவை 2 கப்
பால் 2 கப்
ஓட்ஸ் கால் கப்
சிட்டிகை உப்பு
தேன் 2 மேசைக்கரண்டி
உலர்ந்த திராட்சை 2 மேசைக்கரண்டி
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ஏற்கனவே காய்ச்சிய பாலை மிதமான சூட்டில் ஊற்றி
பால் கொதிக்கும்போது தீயை மட்டுப்படுத்தி ஓட்ஸ் மற்றும் உப்பைச் சேர்க்கவும். ஒரு சில நிமிடங்களில் ஓட்ஸ் வெந்து குழைந்து விடும். இறக்கி ஆற வைத்து ஓட்ஸ் கலவை கெட்டியாக இருந்தால் மேலும் பால் ஊற்றி தளர இருக்குமாறு கலக்கவும். பழக்கலவைகள், திராட்சை தேன் சேர்த்து கலக்கவும். கிண்ணங்களில் ஊற்றிப் பரிமாறவும்.
பி.கு:
சர்க்கரை நோய் உள்ளவர்கள் மாம்பழங்கள், வாழைப்பழங்களை நீக்கி விடவும்.

21 comments:
நல்லதோர் குறிப்பு. செய்து பார்க்க வேண்டும்.
புகைப்படமே ஆசையைத்தூண்டுகிறது அருமை.
அருமை
அருமையான பதிவு அக்கா. கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்.
ஓட்ஸ் பற்றிய தகவல்களுடன் நல்லதொரு சமையல் குறிப்பு..
எனினும் -
ஓட்ஸில் ஒன்றுமில்லை.. வியாபார தந்திரம் என்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்..
நெஞ்சில் உரமுமின்றி.. எனும் இன்றைய பதிவினை வாசிக்க அன்புடன் அழைக்கின்றேன்..
அவசியம் செய்து பாருங்கள் வெங்கட்! வயிற்றுக்கு இலேசாகவும் உடம்பிற்கு தெம்பாகவும் இருக்கும். நான் அடிக்கடி செய்வதுண்டு.
பாராட்டுடன் கூடிய கருத்துரைக்கு அன்பு நன்றி கில்லர்ஜி!
பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!
அவசியம் செய்து பாருங்கள் சாரதா! பாராட்டிற்கு அன்பு நன்றி!
பாராட்டிற்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் துரை செல்வராஜ்!ஓட்ஸ் ஒரு வியாபார தந்திரம் என்று பதிவுகளை நானும் படித்திருக்கிறேன். வெளி நாட்டுப்பொருளாக இருந்தாலும் உள் நாட்டுப்பொருளாக இருந்தாலும் உடலுக்கு நன்மை பயக்குமென்றால் அதை எடுத்துக்கொள்வது தவறில்லை அல்லவா? ஓட்ஸ் குறைந்த அளவில் பசியைக் குறைப்பதுடன் அதிக அளவிலும் நன்மைகள் தருகிறது. எங்கள் இல்லத்திலும் இதை அடிக்கடி உணவில் எடுத்துக்கொள்கிறோம்.
ருசித்தேன்.
நல்லதோர் உணவுக்குறிப்பு! நன்றி!
நல்ல ஆலோசனை. நன்றி.
சுவையாக இருக்கும் என்று தெரிகிறது. நான் தினமும் காலை ஏதாவது ஒரு பச்சைக் காய்கறி, ஓட்ஸ் கெட்டியாக மோர், பெருங்காயம், சிறிதளவு உப்பிட்டு, சில சமயங்களில் வெங்காயம் நறுக்கிச் சேர்த்து சாப்பிடுவதை வழக்கமாகி கொண்டிருக்கிறேன்!
:)))
புகைப்படப் பார்த்தாலே ருசியாக இருக்கிறது. அவசியம் செய்து பார்க்கிறேன்!!
ருசித்ததற்கு அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!
இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி தளிர் சுரேஷ்!
கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் தமிழ் இளங்கோ!
உங்கள் காலை உணவு மிகவும் அருமை ஸ்ரீராம்!
இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி அருள்மொழிவர்மன்! அவசியம் செய்து பாருங்கள்!
Post a Comment