Monday 30 November 2015

பிரமிக்க வைக்கும் கண்காட்சி!!

 
ஒவ்வொரு வ‌ருடமும் துபாயில் நடைபெறும் குளோபல் வில்லேஜ் கண்காட்சியைப்பற்றிய தகவல்களும் புகைப்படங்களும்  நான் வெளியிடுவது வழக்கம். இந்த கண்காட்சி அக்டோபர் அல்லது நவம்பரில் தொடங்கி ஏப்ரல் 15 வரை நடக்கிறது.  உலக நாடுகள் பல த‌ங்கள் அரங்கினை மிக அழகாக உருவாக்கி அதனுள் தங்கள் கலாச்சாரத்தை ஒட்டிய பொருள்களை விற்கின்றன. கோடிக்கணக்கான சதுர அடிகளில் இந்த உலக அரங்கு நிர்மாணிக்கப் பட்டிருக்கிறது. உலகமெங்கிலிருந்தும் மக்கள் இதனைப்பார்த்து ரசிக்க எப்போதுமே வருவார்கள். ஒவ்வொரு வருடமும் 5 கோடி மக்களுக்கு மேல் வருவதாகச் சொல்லுகிறது புள்ளி விபரம். 

ஒவ்வொரு வருடமும் இதை நான் பார்த்து ரசிக்காமல் விட்டதில்லை. இந்த முறை அதிக குளிர் வருவதற்கு முன்பேயே சென்று விட்டோம். நாங்கள் மாலை 4 மணிக்கு உள்ளே சென்று இரவு 10 மணி போலத்த்ன் வெளியே வந்தோம்.  மொத்தம் 70 நாடுகள் பங்கேற்றிருந்தாலும் நாங்கள் உள்ளே சென்று பார்த்ததென்னவோ ஐந்தாறு நாடுகளின் அரங்கங்கள் மட்டுமே!! அதற்குள்ளேயே இர‌வு 10 மணியாகி விட்டது! இதை ரசிக்க இரண்டு நாட்களாவது வேண்டும்!! இனி புகைப்படங்கள்...! நீங்களும் பார்த்து ரசியுங்கள்!!


தூரத்திலிருந்து முகப்பு!

முகப்புத்தோற்றம் மிக அருகில்!!!

 
நுழைவாயில்!!
உள்ளே நுழைந்ததும் பிரமிக்க வைத்தது இரு புறமும் காட்சியளித்த உலக அதிசயங்கள்!!!
அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை
பாரீஸ் நகரின் 'ஈஃபில் ட்வர்'!!!

 
துருக்கி நாடு!!!
இந்தோனேஷியா அரங்கம்!!

குவைத் அரங்கம்!!!
அமெரிக்க அரங்கம்!!
பாகிஸ்தானிய அரங்கம்!!
ஐக்கிய அமீரக அரங்கம்!!
நாங்கள் இரவு 10 மணிக்கு வெளியே வந்த போது, இரவில் முகப்பழகு!!!
தொடரும்!!

32 comments:

KILLERGEE Devakottai said...

படங்கள் அழகு எல்லாம் சரி எங்கே நமது இந்திய அரங்கம்.....

ஸ்ரீராம். said...

ஆஹா! நேரில் பார்ப்பது போல அழகாய்ப் புகைப்படங்கள் எடுத்து அசத்தி உள்ளீர்கள். அழகு. மிக அழகு.

ஹுஸைனம்மா said...

ஒவ்வொரு முறையும் போகவேண்டுமென என ஆசையாக இருக்கும். ஆனால், பின்விளைவாக வரும் கால்வலியை நினைத்தால்தான்.... :-( அதனாலேயே பல வருடங்களாகப் போகவில்லை!!

வை.கோபாலகிருஷ்ணன் said...

அழகழகான படங்களுடன் அற்புதமான பதிவாக உள்ளது. பாராட்டுகள். தொடரை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். பகிர்வுக்கு நன்றிகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

ஆகா...! ஆகா...! சொல்ல வார்த்தைகள் இல்லை...

கரந்தை ஜெயக்குமார் said...

பிரமிப்பாக இருக்கிறது
தொடருங்கள் சகோதரியாரே

வெங்கட் நாகராஜ் said...

பிரமிக்க வைக்கும் படங்கள்.....

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

வெகு அழகு படங்கள்...

மனோ சாமிநாதன் said...

பொறுத்திருங்கள் கில்லர்ஜி! இரண்டாம் பாகத்தில் நம் இந்திய அரங்கின் படங்களை வெளியிடுவேன். எப்போதுமே இந்திய அரங்கம் பிரம்மாண்டமான அழகுடன் இருக்கும். அவை அனைத்தும் அடுத்து வருகின்றன!

மனோ சாமிநாதன் said...

ரசித்ததற்கும் பாராட்டியதற்கும் அன்பு நன்றி ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

நிச்சயம் கால் வலி ஆளைக் கொன்று விடும் ஹுஸைனம்மா! ஆனால் எங்களின் ஆவல் அந்தக்கவலையையெல்லாம் ஓரம் கட்டி விடும். ஆனால் ஒன்று அல்லது இரண்டு அரங்க‌ங்கள் பார்த்ததும் வெளியே போடப்பட்டிருக்கும் உணவு ஸ்டால்களில் எதையேனும் வாங்கிக் கொண்டு சற்று நேரம் அமர்ந்து சாப்பிட்டு விட்டு பின் தொடர்வது வழக்கம்! அவ்வப்போது இது போல அமர்ந்து கொள்வதால் கால் வலியை சமாளிக்க முடியும்!!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு மனமார்ந்த நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்! ஓய்விலிருக்கும் நீங்கள் அவ்வப்போது வந்து இதமான பின்னூட்டம் கொடுப்பது உற்சாகமாகவும் மகிழ்வாகவும் உள்ளது!!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி தனபாலன்!!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் ரசித்து எழுதியதற்கும் அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!!

மனோ சாமிநாதன் said...

ரசித்து கருத்துரை எழுதியதற்கு அன்பு நன்றி வெங்கட்!

துரை செல்வராஜூ said...

சென்ற மாதம் அங்கிருந்தேன்.. கண்காட்சியோ இப்போது தான் நடக்கின்றது..
வண்ணமிகும் படங்களுடன் இனிய பதிவு.. வாழ்க நலம்..

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அம்மா
இரசிக்கவைக்கும் அழகிய படங்கள் பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Yaathoramani.blogspot.com said...

துபாய் வருகிற திட்டம் இருக்கிறது
ஏப்ரல் வரை இருக்குமென்ற தகவல்
மகிழ்விக்கிறது
புகைப்படங்கள் நேரடியாகப் பார்க்கிற
உணர்வைத் தருகிறது
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

shameeskitchen said...

படங்கள் மிகவும் அழகு.
இந்திய அரங்கு படங்களை தான் நானும் தேடினேன்.

priyasaki said...

படங்கள் அழகா இருக்கு மனோக்கா. அரங்கங்கள் எல்லாமே வெகு அழகு.

நிலாமகள் said...

அரங்குகளின் பிரம்மாண்டம் அதன் பின் ஒளிந்துள்ள உழைப்பையும் உற்சாகத்தையும் காட்டுகின்றன. நன்றி சகோ...

சீராளன்.வீ said...

ஆஹா இப்படியெல்லாமா நடக்குது ???? முகப்பே சொர்க்கம் போல இருக்கே ( நீ சொர்க்கத்தைப் பார்த்திருக்கியா டா முன்னப் பின்ன என்று எல்லாம் கேட்கக் கூடாது )
உலக அதிசயங்கள் எல்லாம் வைத்து இருக்காங்களா அப்போ தாஜ்மஹால் கூட இருந்திருக்கும் இல்லையா ????? மிக அழகு பகிர்வுக்கு நன்றிகள் வாழ்க வளமுடன்

saamaaniyan said...

புகைப்படங்களே இவ்வளவு பிரமிப்பை தருகின்றன என்றால் உண்மையில் எவ்வளவு அழகாக இருக்கும் ?!

" காணக்கண் கோடி வேண்டும்... " என்பது இதுதானோ ?!

ஆனால் இந்திய அரங்கம் ?...

நன்றி
சாமானியன்

எனது புதிய பதிவு : " க்ளிஷே ! "
http://saamaaniyan.blogspot.fr/2015/11/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி

மனோ சாமிநாதன் said...

அவசியம் அடுத்த முறை வரும்போது நவம்பரிலிருந்து மார்ச் மாதத்திற்குள் இருப்பது போல வாருங்கள் சகோதரர் துரை.செல்வராஜ்! புகைப்படங்களை ரசித்துப் பாராட்டியதற்கு அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

புகைப்படங்களை ரசித்துப் பாராட்டியதற்கு இனிய நன்றி ரூபன்!!

மனோ சாமிநாதன் said...

எப்போது வருகிறீர்கள் சகோதரர் ரமணி!! நவம்பரிலிருந்து மார்ச் மாதத்திற்குள் இருப்பது போல வாருங்கள். பொருள்களெல்லாம் விற்றுப்போகாமலிருக்கும்! அவசியம் வரும் திட்டத்தை தெரிவியுங்கள்!

மனோ சாமிநாதன் said...

ர‌சித்துப்பாராட்டியதற்கு அன்பு நன்றி ஷாமி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டியதற்கு இனிய நன்றி பிரியசகி!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி நிலாமகள்!

மனோ சாமிநாதன் said...

ரசித்து அழகிய பின்னூட்டம் கொடுத்ததற்கு அன்பு நன்றி சீராளன்! உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் அங்கே இல்லை! நானும் அதைப்பற்றி நினைத்தேன். ஒரு வேளை அதன் முழுமையான‌ அழகை கட்டிடக்கலை நிபுணர்களால் கொண்டு வரமுடியவில்லையோ என்னவோ!

மனோ சாமிநாதன் said...

ரொம்ப நாட்கள் கழித்து உங்களின் பின்னூட்டத்தைப் பார்க்கும்போது மகிழ்வாக இருக்கிறது சாமானியன்! ரசித்துப்பாராட்டியதற்கு அன்பு நன்றி! இந்திய அரங்கம் இதோ வருகிறது!!


Thulasidharan V Thillaiakathu said...

நிஜமாகவே பிரமிக்க வைக்கின்றாது. முகப்பழகு மனதை அள்ளுகின்றது. படங்கள் மிக அழகு...சகோ