Monday 9 November 2015

ஆப்பிள் பாசந்தி! !!!

அனைவருக்கும் என் மனங்கனிந்த  தீபாவளி நல்வாழ்த்துக்கள்!



வழ்க்கமான இனிப்பு வகைகளிருந்து மாறுபட்டு, வித்தியாசமான, மிக சுவையான ஒரு இனிப்பை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

பொதுவாய் பாசந்தி சாப்பிட்டிருப்பீர்கள். முன்பெல்லாம் இது மிகவும் பிரசித்தமான ஒன்று. அதுவும் வட இந்தியாவில் இது ' ரபடி' அல்லது ரப்ரி என்ற பெயருடன் இருக்கும். மதுரா நகரில் கிடைக்கும் ரப்ரி அத்தனை சுவையானது. மதுரா கோவிலுக்கு வெளியே மண் கலயத்தில் வைத்து விற்பார்கள்.


ஒரு பெரிய இரும்பு வாணலியில் பாலை ஊற்றி மெதுவான தணலில் காய்ச்ச வேன்டும் இதற்கு. பால் மெதுவாய் சுண்டிக்கொண்டே இருக்கும்போது, சுற்றிலும் படல் படலாக படர்ந்திருக்கும் பாலை சுரன்டி சுரண்டி அந்தப்பாலில் போட்டுக்கொன்டேயிருப்பார்கள். இறுதியில் பால் நன்கு கெட்டியானதும் சீனி கலந்து கிளறி குங்குமப்பூ, மிகக் குறைந்த அளவில் ஏலம் போட்டுக்கிளறி வேலையை முடிப்பார்கள். இதுவே ரப்ரி ஆகும்.

 

நம் தமிழ்நாட்டிலும் இதே செய்முறை தான். ஆனால் பெயர் என்னவோ பாசந்தி என்று ஆகி விட்டது. அதையே ஆப்பிள்கள் வைத்து செய்வது தான் ஆப்பிள் பாசந்தி!

இப்போது ஆப்பிள் பாசந்தி செய்முறையைப் பார்க்கலாம்!

ஆப்பிள் பாசந்தி



தேவையானவை:

ஆப்பிள் 3
ஏலப்பொடி 1 ஸ்பூன்
பாதாம் பருப்பு, முந்திரிப்பருப்பு, உலர்ந்த திராட்சை சில‌
நெய் மூன்று மேசைக்கரண்டி
சீனி அரை கப்
தண்ணீர் சேர்க்காத பால் 8 கப்
குங்குமப்பூ ஒரு சிட்டிகை

செய்முறை:

ஆப்பிள்களைத்துருவவும்.
இந்தத்துருவலை சிறிது வெந்நீரில் போட்டு வைக்கவும்.
முந்திரி, பாதாம்பருப்பு, திராட்சையை நெய்யில் இளவறுவலாக வறுத்து வைக்கவும்.
பாலை ஒரு அகலமான பாத்திரத்தில் ஊற்றி நிதானமாகக் காய்ச்சவும்.
பால் பாதியாக சுண்டுமளவிற்குக் காய்ச்சவும்.
பின் ஆப்பிள் துருவலைச் சேர்த்து சமைக்கவும்.
இக்கலவை சற்று கெட்டியானதும் சீனியை சேர்த்துக் கிளற‌வ்ம்.
ஏலம், பாதாம், முந்திரி, திராட்சை சேர்த்து சிறிது நேரம் கிளறி இற‌க்கவும்.
சுவையான ஆப்பிள் பாசந்தி தயார்!!

நன்றி கூகிள்

35 comments:

priyasaki said...

தீபாவளிக்கு ஏற்ற ஸ்வீட்..
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் மனோக்கா.

வை.கோபாலகிருஷ்ணன் said...

சுவையான ஆப்பிள் பாசந்தி செய்முறை அருமை. :)

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்...

ஸ்ரீராம். said...

இதிலேயே வெல்லம் போட்டுச் செய்தால் திரட்டுப்பால்! கிட்டத்தட்ட இதே செய்முறைதான். இல்லையா? இனிப்புடன் தீபாவளிக் கொண்டாட்டங்கள்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்.

துரை செல்வராஜூ said...

அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!..

ராமலக்ஷ்மி said...

இனிய குறிப்பு.

தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்!

Anonymous said...

இன்பத் தீபாவளி உங்களிற்காகட்டும்
அன்புடன் இனிய வாழ்த்துகள்.!
இன்னமுத நன்றியுடன் தீபமொளிரட்டும்.

சாரதா சமையல் said...

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் மனோக்கா.

”தளிர் சுரேஷ்” said...

தீபாவளி ஸ்விட்டுக்கு நன்றி! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அம்மா
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் உளம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

சீராளன்.வீ said...

வணக்கம் அம்மா !

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !

நல்லுணவும் செய்து நயம்பட வாழ்த்துரைத்து
இல்லாமை போக்கும் இனியவளே - சொல்லின்
சுவைதன்னில் சொட்டும் சுகந்தத்தில் ஆன்றோர்
அவைகூட்டும் அன்னைத் தமிழ் !

வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !



KILLERGEE Devakottai said...

பாசந்தி அழகாக இருக்கின்றது தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்.

தி.தமிழ் இளங்கோ said...

நன்றி! தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

கரந்தை ஜெயக்குமார் said...

தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்

Thulasidharan V Thillaiakathu said...

துளசி : அட புதுவிதமா இருக்கு. அருமை சகோ..


கீதா: பாசந்தி, ராப்ரி என்று வட இந்தியாவில் சொல்லப்படுவது,நீங்கள் சொல்லியிருப்பது போல் மதுராவில் மண்கலயத்தில் மிக் மிகச் சுவையுடன் இருக்கும் சாப்பிட்ட அனுபவம் உண்டு. அதெல்லாம் பழைய கதை...இப்போது னானே ஸ்வீட்டாகிப் போனதால்..சுவைக்க முடியவில்லை..

நீங்கள் சொல்லி யிருக்கும் குறிப்பு செய்ததுண்டு ஆனால் ஆப்பிள் பாசந்தி என்று நினைத்துச் சொன்னதில்லை...ஹஹ்ஹ் மில்கி ஆப்பிள் என்று சொல்லி பையனுக்குச் சின்ன வய்தில் கொடுத்ததுண்டு. இனி இப்படிச் சொல்லுகின்றேன். அருமையான குறிப்பு சகோ...அளவு குறித்துக் கொண்டேன். சகோ இதில் நேச்சுரல் சுகர் என்று சொல்லப்படும் டயபட்டிக் சர்க்கரை - சென்னையில் சுந்தர் டயபட்டிக் ஸ்வீட் கடை இருக்கின்றதே அங்கு கிடைக்கின்றது. சேர்த்துச் செய்ய முடியும்தானே? இதுவரை பாயாசம் தவிர வேறு ஸ்வீட் இந்தச் சர்க்கரையில் செய்ய முயன்றதில்லை.

மிக்க நன்றிக்

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இருவரின் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துகள்

வெங்கட் நாகராஜ் said...

ஆப்பிள் பாசந்தி.... பார்க்கும்போதே சாப்பிடத் தோன்றுகிறது...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துகள்.

ஸ்ரத்தா, ஸபுரி... said...

பாஸந்தி செய்முறை விளக்கம் நன்றாக இருக்கிறது. வீட்டில் பண்ணிப்பார்த்துவிடலாம்.

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி பிரியசகி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

ஆமாம், திரட்டுப்பால் இதே செய்முறை தான். கடைசியில் சீனிக்குப்பதிலாக வெல்லம் போடுவார்கள்!

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

தீபாவளி வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி சகோதரர் துரை செல்வராஜ்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி ராமலக்ஷ்மி!

மனோ சாமிநாதன் said...

இனிய வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி வேதா!

மனோ சாமிநாதன் said...

தீபாவளி நல்வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி சாரதா!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி தளிர் சுரேஷ்!

மனோ சாமிநாதன் said...

இனிய தீபாவளி வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி ரூபன்!

மனோ சாமிநாதன் said...

இனிய கவிதையாய் தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லியதற்கு அன்பு நன்றி சீராளன்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்களுக்கும் அன்பு வாழ்த்துக்கள் கில்லர்ஜி!

மனோ சாமிநாதன் said...

தீபாவளி வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி சகோதரர் தமிழ் இளங்கோ!

மனோ சாமிநாதன் said...

தீபாவளி வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி துளசிதரன்! தாமதமான பதிலுக்கு மன்னியுங்கள் கீதா! வீட்டில் பெரியவர்களுக்கு உடல்நலமில்லாமல் கடந்த 10 நாட்களாய் அலைச்சல்!
டயபட்டிக் சர்க்கரை சேர்த்து நான் இதுவரை எந்த இனிப்பும் செய்ததில்லை. முயன்று பார்க்கலாம்! பாயசம் உங்களுக்கு இந்த சர்க்கரை சேர்த்து நன்றாக வந்திருப்பதால் இந்த பாஸந்தியும் நன்றாகத்தான் வரும்!

தீபாவளி வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி!!



மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் இனிய வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி வெங்கட்!

மனோ சாமிநாதன் said...

முதல் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி truefriend!

மனோ சாமிநாதன் said...

இனிய தீபாவளி வாழ்த்துக்களுக்கு அன்பார்ந்த நன்றி யாழ்ப்பாவணன்!