Saturday 4 July 2015

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே.......!!

யதேச்சையாக என் பழைய பொக்கிஷங்களைக் கிளறிக்கொண்டிருந்த போது அந்த ஆட்டோகிராஃப் கிடைத்தது. 25 வருடங்களுக்கு முன் அதில் சில முக்கியமான, புகழ் பெற்ற முகங்களை வரைந்து கையெழுத்து வாங்கியிருந்தேன். அவற்றில் சில உங்களீன் பார்வைக்கு!


1983ல் இந்தியா கிரிக்கெட்டில் முதல் உலகக் கோப்பையை வென்று பயங்கர புகழ் பெற்றிருந்த சமயம். அதே சூட்டில் ஷார்ஜா வந்து சில முக்கிய நாடுகளை வென்று கோப்பையைக் கைப்பற்றியது. அப்போது சுனில் கவாஸ்கரை வரைந்து பின் அவரை நேரில் சந்தித்து வரைந்ததைக் காண்பித்தேன். ' காதோர நரையைக்கூட விடாமல் அப்படியே என்னை வரைந்திருக்கிறீர்கள்!' என்று சொல்லி பாராட்டி கையொப்பமிட்டுக்கொடுத்தார். அது இந்த கருப்பு வெள்ளை வண்ணங்க‌ளால் குழைத்த ஓவிய‌ம்.


அடுத்தது கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஓவியம். அதிரடி விளையாட்டால் புகழ் பெற்றிருந்த இவர், கொஞ்ச நாட்களுக்கு முன்னால் தான் ஹெல்மெட் போடாமல் விளையாடியதால் ஒரு புகழ்பெற்ற பெளலரின் பால் அவரின் முகவாயைக்கிழித்திருந்ததால் அங்கே சில தையல்கள் போடவேண்டியிருந்ததாக சிரித்துக்கொண்டே குறிப்பிட்டார். இது அவரின் பென்சில் ஓவியம்.


கவிஞர் வைரமுத்து அப்போது தான் வளர்ந்து கொண்டிருந்த காலம். ஷார்ஜாவில் ஒரு உணவகத்தைத் திறந்து வைக்கவும் வேறு சில நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கவும் 1989ல் வந்திருந்தார். அவரை கருப்பு வெள்ளை வண்ண‌க்கலவையில் வரைந்து அவரிடம் காண்பித்தேன். 'ஏதாவது ஒரு தலைப்பைச் சொல்லுங்கள். அதைப்பற்றி எழுதி கையெழுத்திடுகிறேன்' என்றார். நான் 'அன்பு' என்றேன். அவர் அன்பைப்பற்றி மிக அருமையாக எழுதி கையொப்பமிட்டார். அந்த கவிதை:
அன்பு
உயிரின் உயிர்!
அன்பு
வாழ்வின் அர்த்தம்!
அன்பு
உலகின் சுவாசம்!
அன்பு மட்டும் இல்லையென்றால்
மனிதனை இலக்கணம் அஃறிணையில் சேர்த்திருக்கும்!
அன்பு
வாழ்வின் பரிசு!
 

32 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஒவ்வொன்றும் பிரமாதம்... பொக்கிசங்கள்... வாழ்த்துகள்...

UmayalGayathri said...

அழகான ஒவியங்களும்
சுவையான நினைவுகளும்
அழகு சகோ...!!!

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மையிலேயே பொக்கிஷங்கள்தான் சகோதரியாரே

துரை செல்வராஜூ said...

அருமை..

உண்மையில் பொக்கிஷங்கள் தான்!..

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அம்மா
ஒவ்வொன்றும் அழகிய பொக்கிஷங்கள்.. பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

middleclassmadhavi said...

Congrats!! Oviyangal arumai!!

வை.கோபாலகிருஷ்ணன் said...

எல்லா ஓவியங்களும் மிகவும் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளன. மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உள்ளது. அதைவிட மகிழ்ச்சி அந்தப்பிரபலங்களின் கையொப்பத்துடன் பொக்கிஷமாகப் பாதுகாத்து இங்கு எங்கள் பார்வைக்கு இன்று பதிவாக இட்டுள்ளது மட்டுமே. :)

தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

என்றும் அன்புடன்
வை. கோபாலகிருஷ்ணன்

yathavan64@gmail.com said...

அன்புடையீர்! வணக்கம்!
அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (02/07/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
இணைப்பு: http://gopu1949.blogspot.in/

நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com

yathavan64@gmail.com said...

அன்புடையீர்! வணக்கம்!
அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (05/07/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
இணைப்பு: http://gopu1949.blogspot.in/

நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com

தி.தமிழ் இளங்கோ said...

அன்புள்ள சகோதரி திருமதி. மனோ சாமிநாதன் அவர்களுக்கு வணக்கம்! தங்களது பதிவுகளை (தமிழ்மணத்தில்) தொடர்ந்து படித்து வரும் வாசகர்களில், நானும் ஒருவன்.

நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.

தங்களின் வலைத்தளத்தினை இன்று (05.07.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:
நினைவில் நிற்போர் - 35ம் நிறைவுத் திருநாள்
http://gopu1949.blogspot.in/2015/07/35.html

ஸ்ரீராம். said...

அருமை. சுவாரஸ்யம். நீங்கள் விகடனில் எந்தத் தொடர்கதைக்கு வரைந்துள்ளீர்கள் மேடம்? மீண்டும் ஜீனோ வுக்கு வரைந்த மனோ நீங்களா?

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

மிக இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி உமையாள் காயத்ரி!

மனோ சாமிநாதன் said...

மனம் திறந்த பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் துரை செல்வராஜ்!

மனோ சாமிநாதன் said...

இனிய வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி ரூபன்!

மனோ சாமிநாதன் said...

ரொம்ப நாட்கள் கழித்து வந்திருக்கிறீர்கள் மாதவி! மகிழ்ச்சியாக உள்ள‌து! உங்களின் பாராட்டு கூடுதல் மகிழ்ச்சி!

மனோ சாமிநாதன் said...

வழக்கம்போல உங்களின் பாராட்டு மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்! கூடவே வாழ்த்துக்களுக்கும் மனம் நிறைந்த நன்றி!

மனோ சாமிநாதன் said...

தங்களின் தகவலுக்கு அன்பு நன்றி சகோதரர் தமிழ் இளங்கோ!

சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் என்னை மீண்டும் அவரின் இன்றைய பதிவில் அடையாளம் காட்டவிருப்பது பற்றி முன்னரே எனக்கு தகவல் தெரிவித்திருந்தார். அதனால் இன்று அவரின் பதிவைக்கண்ட பின் அவருக்கும் என் நன்றியையும் தெரிவித்து எழுதி விட்டேன்!


மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி ஸ்ரீராம்!

நான் விகடனின் தொடர்கதை எதற்கும் ஓவியம் வரைந்ததில்லை. சில சிறுகதைகளுக்குத்தான் ஓவியம் வரைந்துள்ளேன். அவர்களுக்கு என்னைப்பிடித்துப்போனதால் என்னை நிரந்தரமாக பணியாற்ற‌ அழைத்தார்கள். அப்போது தான் நான் வெளிநாட்டிலிருப்பதை வெளியிட்டேன். அதன் பின் ஒரு சிறுகதையை அனுப்பி என்னை ஓவியம் வரைந்தனுப்பச் சொல்லியிருந்தார்கள். அதற்குள் என் வலது கை கட்டை விரலில் விபத்து ஏற்பட்டு விட்டதால் அதன் பின் ஓவியங்கள் வரைவது நீண்ட நாட்களுக்கு நின்று போய் விட்டன.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

கே.பாலசந்தர், பாரதிராஜா ஆகியோர் எனக்கு எழுதியுள்ள கடிதங்களை நான் வைத்துள்ளேன். உண்மையில் இவை போன்ற பொக்கிஷங்கள் நமக்குப் பெருமையைத் தருகின்றன. தங்களின் ஓவியக்கலை ஈடுபாட்டிற்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள். பகிர்வுக்கு நன்றி.

ராமலக்ஷ்மி said...

அருமை.

Usha Srikumar said...

உங்கள் ஓவியத்திறமை அற்புதம்...என் மனமார்ந்த பாராட்டுக்கள் .

பானு said...

மிக அருமையான ஓவியங்கள் அக்கா... வரைவதில் ஆர்வம் கொண்டுள்ள என் மகனிடம் காட்டி மகிழ்ந்தேன். நன்றி.

Thenammai Lakshmanan said...

அஹா அட்டகாசம் மனோ மேடம். !!! ப்ரமாதம் !!!

வெங்கட் நாகராஜ் said...

அனைத்தும் அருமையான ஓவியங்கள். பாராட்டுகள் மேடம்.

'பரிவை' சே.குமார் said...

பொக்கிஷங்கள் அம்மா...

கே. பி. ஜனா... said...

அருமை அருமை அந்த ஓவியங்கள்...

Asiya Omar said...

ஆஹா ! அசத்தலான உயிரோட்டமான ஓவியங்கள். பகிர்வுக்கு மகிழ்ச்சி.

Thulasidharan V Thillaiakathu said...

அனைத்தும் வெகு அருமையான உள்ளன சகோதரி!! வாழ்த்துகள்! பாராட்டுகள்!

”தளிர் சுரேஷ்” said...

உங்களுடைய இந்த பதிவு இன்றைய வலைச்சரம் http://blogintamil.blogspot.com/2015/07/thalir-suresh-day-7-part-2.html இல் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. நேரமிருப்பின் சென்று பார்க்கவும். நன்றி!

Muruganandan M.K. said...

உண்மை
பொக்கிஷங்கள் தான்