Friday 17 July 2015

முத்துக்குவியல்-37!!!

தகவல் முத்து:

கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு மேல் இணையத்தொடர்பு விட்டுப்போய் விட்டது. காடராக்ட் அறுவை சிகிச்சை வலது கண்ணில் நடந்து அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி இப்போது தான் சிறிது நேரம் வலைத்தளப்பக்கம் வர முடிந்தது. இன்னும் சில நாட்கள் அதிக நேரம் உலவ முடியாது. அதன் பிறகு முன்போல வரலாம். நெருங்கிய சினேகிதியை சந்திக்க முடியாதது போன்ற உணர்வு. இன்று தான் அந்தக் குறை தீர்ந்தது.

குறிப்பு முத்து:



சில பெண்களுக்கு முன் நெற்றியில் வழுக்கை உண்டாகும். காரணம் புரியாது. அதற்காக‌ கேச வளர்ச்சிக்காக விதம் விதமான எண்ணெய்களை உபயோகித்தும் பலன் இருக்காது.   என் உறவினரும் திடீரென்று ஏற்பட்ட தன் முன்வழுக்கைக்கு காரணம் புரியாது கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்.  யதேச்சையாக ஒரு இதழில் படித்த தகவல் அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.அவருக்கு தினமும் உறங்கும்போது கேசத்தை க்ளிப்பால் முடிந்து உறங்குவது நெடுநாள் பழக்கமாக இருந்து வந்தது.தன்னுடைய நெடுநாள் பழக்கமே தன் முன் வழுக்கைக்கு காரணம் என்பது புரிந்ததும் உறங்கும்போது க்ளிப் கொண்டு கேசத்தை முடிந்து வந்ததை நிறுத்தி விட்டார். கொஞ்ச நாட்களில் அவரின் முன் வழுக்கை குறைந்து நாளடைவில் சரியானது!!

இசை முத்து:





சில மாதங்களுக்கு முன் வலைச்சர ஆசிரியராக இருந்தபோது, மோகன ராகம் பற்றி விரிவாக எழுதியிருந்தேன். அழகு நிறைந்த இடத்தில் இருப்பது மோகனம், மென்மையான உனர்வுகளை, அதுவும் அன்பை வெளிப்படுத்தும் ராகம் மோகனம் என்று எழுதியிருந்தேன். அன்பு, அழகு, மென்மை அனைத்தும் ஒருங்கே இணைந்திருக்கும் இந்த காட்சியில் மோகனம் அத்தனை அருமையாக இசைக்கப்படுகிறது. கேட்பது சுகமா அல்லது பார்த்து ரசிப்பது சுகமா என்று பிரமித்துப்போனேன் நான்! நீங்களும் பார்த்து, கேட்டு ரசியுங்கள்!!

ருசித்த முத்து:

சமீபத்தில் திருச்சி சென்றிருந்தோம். ஏற்கனவே ' சினேகிதி ' மாத இதழ் மண்பாண்ட சமையல் செய்து மெஸ் நடத்தும் ஒரு உணவகம் பற்றி எழுதியிருந்தது. அங்கு போய் மதியம் உணவருந்தலாம் என்று சென்றோம். 'செல்லம்மாள் மெஸ்' என்ற அந்த உணவகம் திருச்சி அரசு மருத்துமனை எதிரே ஒரு சந்தில் உள்ள திரெளபதி அம்மன் கோவில் எதிரே அமைந்திருக்கிறது. அரசு மருத்துவமனை அருகே எந்த ஆட்டோ ஓட்டுனரைக்கேட்டாலும் வழி சொல்லுகிறார்கள்.




நாங்கள் சென்றபோது கரை வேட்டிகள், குடும்பங்கள், குழந்தைகள் என்று நல்ல கூட்டம்.
சுத்தமான இலை போட்டு வெட்டிவேர் போட்டு ஊறவைத்த‌ நீர் வைக்கிறார்கள். சிறிது நேரத்தில் மண் குடுவையில் புழுங்கலரிசி சாதம் வருகிறது. தொடர்ந்து சிறு சிறு மண் கிண்ண‌ங்களில் சாம்பார், வத்தல் குழம்பு, வாழைப்பூ உருண்டைக்குழம்பு, பருப்பு உருண்டைக்குழம்பு, ரசம், கீரையில் பலவித கறி வகைகள், கூட்டு, மண் சட்டி தயிர், வெண்ணை நீக்கிய மோர், என்று ஏப்ரன் அணிந்த பெண்கள் எடுத்து வருகிறார்கள். ஒவ்வொரு கிண்ண‌மும் 10 ரூபாய். உங்களுக்கு எது வேண்டுமோ அதை எடுத்துக்கொள்ள‌லாம். அன்றைய ஸ்பெஷல் உணவு வகைகளை போர்டில் எழுதி வைத்திருக்கிறார்கள். அவை ஒவ்வொன்றும் 15 ரூபாய். எது வேண்டுமோ அதைக்கேட்டுப் பெறலாம். வித்தியாசமாகவும் புதுவிதமாகவும் இருந்தது இந்த ஏற்பாடு.




மூன்று வருடங்களாக இந்த உணவகம் நடைபெற்று வருகிறது. சாப்பாட்டின் சுவை பரவாயில்லை. இன்னும் மெருகேற வேண்டும். விதிமுறைகள் புதிதாக வருபவர்களுக்குப்புரியவில்லை. பரிமாறுபவர்களும் விளக்கம் சொல்லவில்லை. சாப்பாட்டில் இவை எல்லாமே அடக்கம் போலிருக்கிறது என்று நினைத்து நாங்கள் எங்களுக்குப்பிடித்ததை எடுத்துக்கொண்டோம். அப்புறம் தான் தெரிந்தது ஒவ்வொரு கிண்ண‌மும் 10 ரூபாய் என்பது! இந்தக்குறையை நீக்கச்சொல்லி உரிமையாளரிடம் சொல்லி வந்தேன்.

மேலே ஆஸ்பெஸ்டாஸ் கூரை என்பதால் மின் விசிறிகளையும் மீறி உள்ளே அனத்தியது. மற்ற‌படி ஒரு வித்தியாசமான சமையல் வித்தியாசமான அனுபவம். நீங்களும் ஒரு முறை சென்று ருசித்துப்பார்க்கலாம்!

விலாசம்:
செல்லம்மாள் சமையல்
ஆபீஸர்ஸ் காலனி
புத்தூர்
திருச்சி
தொலைபேசி:  9865356896
 

38 comments:

KILLERGEE Devakottai said...

Nalam pera vazthukal.

திண்டுக்கல் தனபாலன் said...

இனிமையான இசை முத்து...

அடுத்த முறை திருச்சி செல்லும் போது செல்லம்மாள் மெஸ் தான்... நன்றி...

வலைத்தளம் எங்கே போய்விடப் போகிறது... கண்களுக்கு அதிக சிரமம் தர வேண்டாம்...

Thulasidharan V Thillaiakathu said...

குறிப்பு முத்து தெரிந்து கொண்டோம்...முன் நெற்றி வழுக்கை...தலை முடியை ஃப்ரீயாக வைத்து உறங்குவதுதான் நல்லது என்று ஏற்கனவே தெரியும் என்றாலும் இது புதிய தகவல்

இசை முத்து ஏற்கனவே படமும் பார்த்து கேட்டும் இருந்தாலும் மீண்டும் மோஹனத்தைக் கேட்க கசக்குமா என்ன...அதுவும் இந்தப் படப் பாடல்...ஆஹா...ரசித்தோம்

செல்லம்மாள் மெஸ் குறித்துக் கொண்டோம்...

உங்கள் கண்ணைப் பார்த்துக் கொள்ளுங்கள் கெட் வெல் சூன்...

கோமதி அரசு said...

அருமையான முத்துக்குவியல் . திண்டுக்கல் தனபாலன் அவர்கள் சொல்வதையே நானும் சொல்கிறேன்.

Iniya said...

மோகன ராகம் கேட்டு மனம் குளிர்ந்தது இந்த அதிகாலையில்.எனக்கு பிடித்த ராகம். நன்றி ! வாழ்த்துக்கள் ...!

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

பூரண நலம் பெற வாழ்த்துகள்

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான தகவல்கள்! பகிர்வுக்கு நன்றி!

'பரிவை' சே.குமார் said...

அனைத்து முத்துக்களும் அருமை.
இசை முத்து இனிமை...
உடல் நலம் பார்த்துக் கொள்ளுங்கள் அம்மா.

தி.தமிழ் இளங்கோ said...

இன்றைய முத்துக்கள் அனைத்தினையும் திரும்பத் திரும்ப படித்தேன். எல்லாம் பயனுள்ள தகவல்கள்.

வெளியூரிலிருந்து வந்திருந்த என் மகளிடம் தங்கள் பதிவில் உள்ள, தூங்கும்போது, தலைமுடிக்கு கிளிப் போடுவதால் ஏற்படும் தீமை குறித்து சொன்னேன்.

திரு V.G.K (வை.கோபாலகிருஷ்ணன்) அவர்களிடம் எனக்கு செய்ய வேண்டிய கண் சிகிச்சை பற்றி கேட்டபோது, உங்களுக்கு நடக்க விருக்கும் கண் சிகிச்சை பற்றியும் தெரிவித்து இருந்தார். நீங்கள் சிகிச்சை முடிந்து வலைப்பக்கம் மீண்டும் வந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. நல்ல ஓய்விற்குப்பின், இந்த கண் சிகிச்சை பற்றிய உங்களது அனுபவத்தினை ஒரு பதிவாக எழுதினால் என் போன்றவர்களுக்கு வழிகாட்டியாய் இருக்கும்.

திருச்சி செல்லம்மாள் மெஸ் பற்றிய தங்களது தகவலுக்கு நன்றி அந்த மெஸ் போனதில்லை; இப்போது உங்கள் மூலம்தான் அறிந்தேன். அங்கே சென்று பார்க்கிறேன்.

வெங்கட் நாகராஜ் said...

மோகன ராகத்தில் பாடல் கேட்டு உள்ளம் மகிழ்ந்தது....

செல்லம்மாள் மெஸ் - இது வரை கேள்விப்பட்டதில்லை. அடுத்த முறை செல்லும்போது அங்கே செல்ல முயல்கிறேன்.

வலையுலகம் எங்கே சென்றுவிடப் போகிறது. வரலாம்..... மெதுவாக!

Jaleela Kamal said...

மண் வாசனையுடன் சாப்பிட அருமையாக இருக்குமே. இது வரை திருச்சி சென்றதில்லை
திருச்சி யில்எங்க கடை கஸ்டமர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

முன் மண்டை வழுக்கை தகவல் புதுமை.

மொத்தத்தில் மனோ அக்காவின் முத்துகுவியல் அருமையோ அருமை

ஸ்ரீராம். said...

எல்லாத் தகவல்களும் அருமை. திருச்சி செல்லும்போது இந்த மெஸ் செல்ல வேண்டும். உங்கள் உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள். கண்ணுக்கு ஒய்வு கொடுங்கள்.

துரை செல்வராஜூ said...

தங்கள் நலத்தைக் கவனத்தில் கொள்ளுங்கள்..

விரைவில் நலமடைய வேண்டிக் கொள்கின்றேன்..

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

வருகையறிந்து மகிழ்ச்சி. வழக்கம்போல் முத்துக்குவியல் அருமை.இப்படியும் வழுக்கையாகும் வாய்ப்பு உள்ளதா? திருச்சி மெஸ் அறிமுகம் நன்று.

saamaaniyan said...

அம்மா...

நீங்கள் இன்னும் நலமாய் வலைப்பூவினை தொடர வாழ்த்துகிறேன்.

குறிப்பு முத்து ஆலோசனைக்கு உதவுமென்றால், இசைமுத்தில் லயித்து போனேன். மிக அருமையான மோகன ராக பாடலை கொடுத்தமைக்கு நன்றி. இப்போது இங்கு நள்ளிரவு. இந்த நேரத்தில் மோகன ராகம் ஏற்படுத்தும் ஏகாந்த சூழல்.... நன்றி

நன்றி
சாமானியன்

எனது புதிய பதிவு : " காலம் திருடிய கடுதாசிகள் ! "
http://saamaaniyan.blogspot.fr/2015/07/blog-post_18.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி

Chitra J said...

Please take care. Good to have you back :)

இளமதி said...

வணக்கம் அக்கா!

முத்துக்குவியல் முப்பத்தேழில் நீங்கள் நலக்குறைவுற்றமை கண்டு மனம் கலங்கினேன்.
இன்னும் கண்கள் பூரண நலமாகும் வரை கொஞ்சம் பொறுத்திருங்கள். அதிக ஸ்ரெயின் வேண்டாமே! நலம் பெறப் பிரார்த்திக்கின்றேன் அக்கா!

மோகனராகப் பாடல் காட்சியும் கானமும் மனசைக் கொள்ளை கொண்டுபோய்விட்டது.
அப்படியே சொக்கிப் போனேன்! அருமை!
ஏனைய தகவற் பகிர்வுகளும் சிறப்பு!

நன்றியுடன் வாழ்த்துக்கள் அக்கா!

saamaaniyan said...

வணக்கம்

தங்களின் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை மகிழ்வுடன் தெரிவித்துகொள்கிறேன்.

http://blogintamil.blogspot.fr/2015/07/blog-post_29.html

நன்றி
சாமானியன்

saamaaniyan said...

வணக்கம்

இன்றைய வலைச்சரத்தில் என் நன்றியுரை...

http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post.html

உங்கள் வரவை ஆவலுடன் எதிர்நோக்கும் சாமானியன் !

நன்றி

மனோ சாமிநாதன் said...

அன்பு நன்றி கில்லர்ஜி!

மனோ சாமிநாதன் said...

அக்கறைக்கு அன்பு நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

அன்பான அக்கறைக்கு இனிய நன்றி துளசிதரன்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கும் அக்கறைக்கும் அன்பு நன்றி கோமதி அரசு!

மனோ சாமிநாதன் said...

மோகன ராகம் கேட்டு ரசித்ததற்கு அன்பு நன்றி இனியா!

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கும் என் மீதான அக்கறைக்கும் அன்பு நன்றி கிரேஸ்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சுரேஷ்!

மனோ சாமிநாதன் said...

அழகிய பின்னூட்டத்திற்கும் என் மீதான அக்கறைக்கும் அன்பு நன்றி குமார்!

மனோ சாமிநாதன் said...

விரிவான அருமையான பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி சகோதரர் தமிழ் இள‌ங்கோ! கண் அறுவை சிகிச்சை பற்றி விரைவில் விரிவாக எழுதுகிறேன்.

மனோ சாமிநாதன் said...

மோகன ராகத்தை ரசித்ததற்கு அன்பு நன்றி வெங்கட்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அருமையான பின்னூட்டத்திற்கும் அன்பு நன்றி ஜலீலா!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கும் என் மீதான அக்கறைக்கும் அன்பு நன்றி ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி யாழ்ப்பாவணன்!

மனோ சாமிநாதன் said...
This comment has been removed by the author.
மனோ சாமிநாதன் said...

தங்களுடைய பிரார்த்தனை மனம் நெகிழச் செய்தது சகோதரர் துரை செல்வராஜ்! என் மனம் நிறைந்த நன்றி!

மனோ சாமிநாதன் said...

மோஹன ராகப்பாடலை ரசித்து எழுதியிருந்த விதம் ம‌னதிற்கு மிகவும் மகிழ்வையும் நெகிழ்வையும் கொடுத்தது சாமானியன்! அதற்கும் என் மீதான அக்கறைக்கும் அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!

மனோ சாமிநாதன் said...

உங்களின் அதீத ரசிப்பில் நான் மோகன ராகப் பாடலை வெளியிட எடுத்துக்கொண்ட சிரமம் மறைந்து போய் அப்ப‌டி ஒரு மகிழ்ச்சி மனதில் ஏற்பட்டது இளமதி! இது என்னைப்போலவே இன்னொருவரும் ரசிப்பதால் ஏற்பட்ட மகிழ்ச்சி! இதற்காகவும் என் மீதான அக்கறையுடன் பிரார்த்தித்தற்காகவும் மனம் நிறைந்த அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

Dear Chithra!

It is such a pleasure to have a sister like you as my follower! My heartfelt thanks for your kind concern!