Thursday, 11 September 2014

நார்த்தங்காயும் பல்வலியும்!!

பொதுவாய் கசப்புத்தன்மை சிறிது கொண்ட நார்த்தங்காய் எனக்குப் பிடிக்கும். நார்த்தங்காயில் உப்பு ஊறுகாய், மிளகாய்த்தூள் போட்ட ஊறுகாய் செய்வதுண்டு. நார்த்தங்காயை சற்று பெரிய துன்டுகளாய் அரிந்து வேக வைத்து, மிளகாய் அரைத்துப்போட்டு, புளியைக் கரைத்து ஊற்றி உப்பும் சேர்த்து செய்யும் ஊறுகாய் அத்தனை ருசியாக இருக்கும். தயிர் சாதத்திற்கு அமிர்தமாய் ருசிக்கும். இதைத்தவிர நார்த்தங்காய் ஜூஸ் எடுத்து, சிறிது எலுமிச்சை சாறும் வெல்லமும் அல்லது சீனியும் கலந்து குடிப்பது வழக்கம். எலுமிச்சை சாதம் போல நார்த்தங்காய் சாதமும் நன்றாக இருக்கும்.



மற்ற‌படி, அதன் மருத்துவப்பயன்கள் சிலவற்றையும் அறிந்திருக்கிறேன். ஆனால் ரொம்பவும் வித்தியாசமாக ஒரு பலனை சமீபத்தில் தான் அறிந்தேன்.

20 வருடங்களுக்கு முன் வெளி வந்த ஒரு பழைய புத்தகத் தொகுப்பில்  படிக்க நேர்ந்த ஒரு மருத்துவக்குறிப்பு இது. பல்வலிக்கு பல மருத்துவக்குறிப்புகள் படித்திருக்கிறேன். இது முற்றிலும் வித்தியாசமாக இருந்தது.

நகரத்தில் வாழ்ந்த ஒரு பெண்மணி, கிராமத்திற்குச் சென்றபோது பல்வலி வர, அங்குள்ள‌வர்கள் சொன்ன கை வைத்தியம் இது. உடனேயே வலியும் போய் பற்களும்  வலியில்லாமல் வலுவுடன் இருப்பதை உணர்ந்து அடுத்தவர்களுக்கும் பயன்பட எழுதிய விபரம் இது.

முன்பெல்லாம் உப்பு நார்த்தங்காய் போட்டு வீட்டில் பீங்கான் ஜாடியில் ப்த்திரப்படுத்தி வைத்திருப்பார்கள். வருடம் முழுவதும் கெடாமல் இருக்கும்.


பல் வலியின் போது, எந்தப் பல் வலிக்கிறதோ அந்த பல் முழுவதும் படுவது போல ஒரு உப்பு நார்த்தங்காய் துன்டை அமுக்கி வைத்துக்கொன்டு அப்படியே படுத்துறங்கி விடலாம். காலை வலி இருக்காது.காலை எழுந்ததும் வாய்க்கொப்பளித்து விட்டு உப்பு கலந்த வெதுவெதுப்பான வெந்நீரில் வாயைக்கொப்பளிக்க வேன்டும். இது போல 3 நாட்கள் செய்து வந்தால் நார்த்தையிலிருக்கும் உப்பும் கசப்பும் பல்வலிக்குக் காரணமான பூச்சிகளைக் கொன்று பற்களை முன்னை விட வலுவானதாக மாற்றி விடுகிறதாம்.

துபாயிலுள்ள என் உறவினருக்கு இந்த விஷயத்தைச் சொன்னேன். அடுத்த வாரமே அவர்கள் ஃபோன் செய்து, தனக்கு திடீரென்று பல்வலி வந்ததாகவும், இந்த வைத்தியத்தை செய்ததுமே பல்வலி காணாமல் போய்விட்டதாகச் சொன்னதும் எனக்கு ஏதோ அவார்ட் கிடைத்தது போல அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது.
உப்பு நார்த்தங்காய் செய்யும் விதம்:
நார்த்தங்காயை கழுவி துடைத்து, சுருள் சுருளாக நறுக்கவும். தனியாக வராமல் ஸ்பிரிங் போல் வரவேண்டும்.
கல் உப்பை சுருளுக்குள் திணித்து, 3 நாட்கள் அப்படியே ஜாடியில் போட்டு வேடு கட்டி வைக்கவும். தினமும் குலுக்கி மட்டும் விடவும்.
நான்காம் நாள் தண்ணீரிலிருந்து (உப்பு கரைந்து தண்ணீராக இருக்கும்) எடுத்து காயை மட்டும் வெய்யிலில் காய வைக்கவும்.
மாலையில் திரும்ப எடுத்து, அந்த தண்ணீருக்குள் போட்டு குலுக்கி வைக்கவும்.
இது போல் தண்ணீர் வற்றும் வரை செய்யவும்.
பிறகு வற்றல் நன்கு காயும் வரை வெயிலில் வைத்து எடுக்கவும். மேலே உப்பு பூத்து விடும். அப்போது எடுத்து ஜாடியில் எடுத்து வைத்துக் கொண்டால் வருடக்கணக்கில் கெடாமல் இருக்கும்.





நார்த்தங்காயின் மருத்துவ பலன்கள்:

இந்த ஊறுகாயில் ஒரு துண்டெடுத்து உப்பை நன்கு கழிவிய பின் காலை மாலை இரு வேளையும் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் குண‌மாகும்.
நார்த்தங்காயை எந்த விதத்திலும் உணவில் சேர்த்துக்கொண்டால் ரத்தம் சுத்தமாகும்.
பசியைத்தூன்டும்.
வாயுக்கோளாறை நீக்கும்.
அடிக்கடி ஏப்பம் வருவதுடன் இது சீரணமாக நெடு நேரமாகும். ஆனால் நார்த்தங்காயின் மருத்துவப்பலன்கள் அதிகம்.

புகைப்பட உதவி: கூகிள்

 

40 comments:

Menaga Sathia said...

அருமையான தகவல்கள்,பகிர்வுக்கு நன்றிம்மா..ஆனா இங்கு கிடைக்கமாட்டேங்குது..

உப்பு நார்த்தங்காயில் காரகுழம்பு செய்வது போல் சமைத்தால் குழம்பு ருசியாக இருப்பதுடன்,பசியும் நன்கு தூண்டிவிடும்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

நார்த்தங்காய் எனக்கும் மிகவும் பிடித்தமான ஊறுகாய் ஆகும்.

நானே அடிக்கடி இவற்றை வாங்கி வந்து, நானே அதன் விதைகளையும் நீக்கி, பொடிப்பொடியாக அழகாக நறுக்கியும் கொடுத்து விடுவதுண்டு.

அதில் உப்பு + காரம் மட்டும் சேர்த்து பாதுகாப்பது மட்டும் வீட்டில் உள்ள பெண்களின் வேலை.

இதிலுள்ள மருத்துவப்பயன்களைச் சொல்லியுள்ளது மேலும் மிகவும் பயனுள்ளது.

பகிர்வுக்கு நன்றிகள்.

Radha rani said...

மனோ மேடம் நலமா...:) இந்த பதிவு எனக்கு படிக்க சந்தோஷமாக இருந்தது.. நல்ல பயனுள்ள பதிவு.. ஏன்னென்றால் இரண்டு நாட்களுக்கு முன் பக்கத்து வீட்டு பெண்.. அக்கா பல் வலி தாங்க முடிய வில்லை..டாக்டரிடம் போனேன் அவர் பல்லை பிடுங்க வேண்டும் என்றார். எனக்கு பல் ஆட்டம் கொடுக்கவில்லை, பிடுங்கவும் பயமாக உள்ளது என்று சொல்ல நான் கிராம்பு வைக்க சொன்னேன் வெந்நீர் + உப்பு போட்டு கொப்பளிக்க சொன்னேன். நேற்று வலி சிறிது கேட்கவில்லை காது தலை எல்லாம் வலி எடுப்பதாக சொல்ல டாக்டரிடமே சென்று வா என்றேன்.. இப்பொழுது இந்த பதிவை படித்தேன். இதை முயன்று பார்க்க சொல்கிறேன்.பகிர்விற்கு நன்றி மேடம்.

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

பயனுள்ள பகிர்வு..குறித்துக் கொள்கிறேன்..ஏன்னா பல்வலி எப்போவரும்னு தெரியாது :)
நன்றிம்மா

சீனு said...

நார்த்தங்காய் பல்வலியைப் போக்குமா... புதிய மருத்துவ தகவல்..

தென்காசியில் எங்கள் வீட்டின் பின்புறம் மிகபெரிய நார்த்தங்காய் மரம் வைத்திருந்தோம், எப்பா பாரு நான் அதன் மீது ஏறி விளையாடுறேன்னு கொஞ்சம் வெட்டினாங்க, அப்புறம் என்னாச்சுன்னு தெர்ல மொத்தத்தையும் வெட்டிட்டாங்க...

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி மேனகா! நானிருக்கும் இடத்தில் [ அமீரகத்தில்]ஒரு தமிழ்க்கடையில் உப்பு நார்த்தங்காய் ஊறுகாய் கிடைத்தது. உடனேயே வாங்கி விட்டேன். இனி தஞ்சையிலிருந்து வேண்டிய அளவு எடுத்துச் செல்ல வேண்டும்.
நார்த்தங்காய் குழம்பு பற்றி நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இதுவரை செய்ததில்லை. விரைவில் செய்து பார்க்கிறேன்.

மனோ சாமிநாதன் said...

நார்த்தங்காய் பற்றி மிக அழகாய்ச் சொல்லியிருக்கிறீர்கள் சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்! வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி!!

நிலாமகள் said...

மிக்க நன்றி மேம்...

ஒரு வாரமாக பல்வலிக்கு நடையாய் நடக்கும் போது சமய சஞ்சிவிக் குறிப்பு தந்தமைக்கு.

கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்திருக்கிறோம்.

சிறிது உப்பையும் புளியையும் பிசைந்து உருட்டி வீங்கிய ஈறில் அழுத்திய அனுபவம் உண்டு. இது புதுசு.

மனோ சாமிநாதன் said...

ரொம்ப நாட்களுக்குப்பிறகு உங்களை இங்கு பார்ப்பது மகிழ்வாக இருக்கிறது ராதாராணி! உங்கள் பக்கத்து வீட்டுப்பெண்ணுக்குத் தகவல் சொன்னீர்களா? அவரின் பல்வலி குணமானதா? விபரம் எழுதுங்கள்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துக்கும் அன்பு நன்றி கிரேஸ்! நீங்கள் சொல்வது போல பல்வலி எப்போது வருமென்று தெரியாஅது. வந்து விட்டால் கொடுமையாக இருக்கும் அந்த வலி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சீனு! நீங்கள் சொல்வது போல அந்தக் காலத்தில் எல்லாம் பயனுள்ள மரங்கள் வீட்டிலேயே இருந்தன. இப்போது மார்க்கெட் சென்று தேடிப்பிடித்துத்தான் வாங்க வேண்டியிருக்கிறது!!

Angel said...

அருமையான பகிர்வு அக்கா ..
நார்த்தங்காய் ஊறுகாய் எங்க அப்பா நல்லா செய்வார் .தயிர் சாதத்துக்கு ரொம்ப உகந்த ஊறுகாய் .வயிற்று பொருமலுக்கும் நான் சாப்பிடுவேன் ..ஒரு சிறு உதவி உங்களுக்கு இந்த காய்கள் நார்த்தங்காய் /கடாரங்காய் /கிச்சிலிக்காய் இவை கிடைச்சா அவற்றின் படங்களை எடுத்து பதிவில் போடுகிறீர்களா ..எங்களுக்கு எது எந்த காய் என்று ஒரே குழப்பமா இருக்கு .சில நேரம் கடையில் பார்த்தும் இன்னது என்று தெரியாம மிஸ் செய்திருக்கிறேன் .

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

அருமையான முத்துகள். பல்வலி என்றால் இனி வைத்தியசாலை செல்லவேண்டிய அவசியம் இல்லை... வீட்டில் இருந்த படியே வைத்தியம் செய்திடலாம்

யாவருக்கும் பயன் பெறும் தகவலை சொல்லியமைக்கு நன்றிகள் பல..

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ஸ்ரீராம். said...

காய்ந்த நாரத்தை எங்கள் வீட்டில் இருக்கிறது. எங்கள் பிரியமான ஐட்டம் அது! இப்போது புதிய உபயோகமும் தெரிந்து கொண்டேன். நன்றி.

கரந்தை ஜெயக்குமார் said...

மிகவும் பயனுள்ள பதிவு சகோதரியாரே
நன்றி

பொன் மாலை பொழுது said...

வீட்டுக்கொல்லையில் அபரிமிதமாய் கிடைக்கும்.அம்மா புழங்கல் அரிசி சாதத்தில் நார்த்தங்காய் சாதம் நல்லெண்ணெய் விட்டு செய்வார்.ஆஹா... வீடே மணக்கும். நினைத்த நேரமெல்லாம் ஜீஸ்/ பானகம்,பழைய நினைவுகள் :-)

priyasaki said...

மிகவும் பயனுள்ள குறிப்பு.அத்துடன் கேள்விப்பட்டிராத குறிப்பும் கூட. எல்லோருக்கும் பயனளிக்கும் அக்கா. ரெம்ப நன்றிகள்.

சாகம்பரி said...

உப்பு நார்த்தங்காய் கடையில்கூட கிடைக்கிறது. சரியான சமயத்தில் பல்வலிக்கு பரிந்துரைத்திருக்கறீர்கள். இப்போது கிளைமேட் மாறுவதால் நிறைய பேருக்கு பல்வலி வருகிறது. பகிர்விற்கு நன்றி மேடம்.

'பரிவை' சே.குமார் said...

நல்ல மருத்துவத் தகவல்கள் அம்மா...

Geetha Sambasivam said...

நாரத்தை ஊறுகாய் சென்னையில் போட்டது இன்னமும் வைத்திருக்கேன். இங்கே திருச்சி, ஶ்ரீரங்கம் நாரத்தை அவ்வளவு நன்றாக இல்லை. கும்பகோணம் போனால் வாங்கிட்டு வரணும். :))) இரு நாட்கள் முன்னால் பல்லில் வலிக்கிறாப்போல் இருக்கவே நாரத்தங்காயைத் தான் கிள்ளி வாயில் அடக்கிக் கொண்டேன். :)

வெங்கட் நாகராஜ் said...

நெய்வேலியில் இருந்தவரை நார்த்தங்காய், எலுமிச்சை என தோட்டத்திலே விளையும்.... வீட்டில் எப்போதும் இருக்கும்.

மிகவும் பிடித்த ஒரு ஊறுகாய்.... [உப்பு மட்டும் போட்ட ஊறுகாய்!]

பல்வலிக்கு மருந்து என முன்னர் வைத்துக் கொண்டதுண்டு!

கரந்தை ஜெயக்குமார் said...

அன்புச் சகோதரிக்கு வணக்கம்.
விருது ஒன்றினைத் தங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்
நன்றி
http://karanthaijayakumar.blogspot.com/2014/09/blog-post_14.html

அ.பாண்டியன் said...

வணக்கம் சகோதரி
உங்கள் எழுத்துகளால் ஈர்க்கப்பட்டவன் என்ற முறையில் ஒரு விருதினைத் தங்களோடு பகிர்ந்திருக்கிறேன். அன்போடு பார்க்க அழைக்கிறேன் http://pandianpandi.blogspot.com/2014/09/the-versatile-blogger-

கே. பி. ஜனா... said...

அசத்தலான வைத்தியக் குறிப்பு. அனுபவத்திலும் நாரத்தை சிறந்ததாகவே தெரிகிறது.

saamaaniyan said...

அம்மா,

நீங்கள் குறிப்பிட்ட வெல்லம் கலந்த " நார்த்தங்காய் ஜூஸ், " எங்கள் ஊரில்
நார்த்தங்காய் சர்பத் என பிரபலமான ஒன்று. இனிப்பு, புளிப்பு என நார்த்தையில் இருவகை உண்டு.

நிறைய மருத்துவ குணங்கள் கொண்ட நார்த்தங்காய் இன்று ஆஸ்த்ரேலிய ஆரஞ்சுபழத்தின் வருகையால் மதிப்பிழந்து தவிக்கிறது !

நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr

மனோ சாமிநாதன் said...

சமய சஞ்சீவியாய் குறிப்பு தந்ததாகச் சொன்னத‌ற்கு அன்பு நன்றி நிலாமகள்!!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி ரூபன்!

மனோ சாமிநாதன் said...

அப்பா நார்த்தங்காய் ஊறுகாய் செய்து நீங்கள் சாப்பிட கொடுத்து வைத்திருக்கிறீர்கள் ஏஞ்சலின்!

நீங்கள் கேட்ட நார்த்த‌தங்காயின் படங்களை தாமதமாக இங்கே வெளியிடுவத‌ற்கு மன்னியுங்கள். பல ஊர்கள் சென்று வந்த அலைச்சலால் உடன் தங்களுக்கு பதிலளிக்க இயலவில்லை.

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!!

மனோ சாமிநாதன் said...

அம்மாவின் கைமணத்தையும் பழைய நினைவலைகளையும் ரசித்து எழுதியிருக்கிறீர்கள் மாணிக்கம் சட்டநாதன்! தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

முதல் வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி யாழ்ப்பாவணன்!

மனோ சாமிநாதன் said...

அன்பான பின்னூட்டத்திற்கு இனிய நன்றி பிரியசகி!

மனோ சாமிநாதன் said...

நீண்ட நாட்கள் கழித்து வருகையும் பின்னூட்டமும் தந்ததற்கு இனிய நன்றி சாகம்பரி!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி குமார்!!

மனோ சாமிநாதன் said...

முதல் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி கீதா சாம்பசிவம்!
நீங்கள் சொன்னது போல கும்பகோணம், மயிலாடுதுறை பக்கம் எல்லாம் நார்த்தங்காய் நல்லதாய் கிடைக்கும்! உங்களுக்கும் இந்த வைத்தியம் தெரிந்திருப்பது மகிழ்ச்சியைத்தருகிறது.

மனோ சாமிநாதன் said...

சொந்தத் தோட்டத்தில் விளைந்த நார்த்தங்காயை ருசித்திருக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் வெங்கட்! உங்களுக்கும் இந்த பல்வலி வைத்தியம் தெரிந்திருப்பது மகிழ்வைத்தருகிறது!!

மனோ சாமிநாதன் said...

அழகிய ஒரு விருதை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு மனம் கனிந்த‌ நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

அழகிய ஒரு விருதை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு மனம் கனிந்த‌ நன்றி பான்டியன்!!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு இனிய நன்றி ஜனா!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் க‌ருத்துரைக்கும் அன்பு நன்றி சாமானியன்!