சென்ற வாரம் புது வருடப்பிறப்பன்று இன்னொரு உலக சாதனையை முறியடித்து கின்னஸ் உலக சாதனை செய்தது துபாய். குவைத் தனது நாட்டு அரசு அமைப்பின் ஐம்பது ஆன்டுகள் நிறைவிற்காக 2012ம் ஆண்டு ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவிற்கு வாணவேடிக்கைகள் செய்து கின்னஸ் உலக சாதனை படைத்தது. இப்போது புது வருடப்பிறப்பன்று துபாய் தன் அழகிய அதிசயங்கள் அனைத்திலும் 99.4 கி.மீ சுற்றளவில் 4 லட்சத்து ஐம்பதாயிரம் வாணவேடிக்கைகள் நிகழ்த்திக்காட்டி கின்னஸ் சாதனை செய்து முடித்தது.
பல மாதங்களுக்கு முன்பே இந்த வாணவேடிக்கை நடப்பதாக அறிவிக்கப்பட்ட அத்தனை அதிசயங்களைச் சுற்றி அமைந்துள்ள சாதாரண ஹோட்டல்கள் முதல் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் வரை 100 சதவிகிதம் நிறைந்து விட்டது! நிகழ்ச்சி தொடங்குவதற்கு சில மணித்துளிகள் முன்பே அதைச்சுற்றியிருந்த முக்கிய சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு விட்டது.
துபாய் நகரின் பிரமிக்கத்தக்க, அழகிய அதிசயங்களைப் பார்க்கலாமா?
World Islands:
இது பற்பல சிறு சிறு தீவுகள் அடங்கிய ஒரு கூட்டமே. இது துபாய் கடற்கரைக்கு 4 கிலோ மீ தொலைவில் கடலினுள் அமைந்திருக்கிறது. உலக வரைபடத்தின் தோற்றத்தில் இருக்கும் இவை ஒவ்வொன்றும் உலக நாடுகளின் பெயரிலேயே விற்கப்படுகிறது. பல கோடி செலவில் உருவாக்கப்பட்டு வரும் இந்த சிறு தீவுக்கூட்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாகி வருகிறது.
Palm Jumeirah:
THE PALM ISLANDS என்பது பனைமர வடிவில் வில்லாக்கள் கட்டப்பட்ட பகுதி. மிகப்பெரிய செல்வந்தர்களால் மட்டுமே இந்த வில்லாக்களை வாங்க முடியும். இது Palm Jumeirah, Palm Jebel Ali and Palm Deira என்று மூன்று பிரிவாகக் கட்டப்படுகிறது. Palm Jumeirah முடிந்து விட்டது. தெற்கு ஆசியாவிலிருந்து வந்த, ஏறத்தாழ 40,000 தொழிலாளர்களைக் கொண்டு இத்தீவைக் கட்டமைத்தார்கள்.
.மற்ற இரண்டும் இன்னும் ஆயத்த வேலைகளில் இருக்கின்றன.
ATLANTIS, the Palm:
110 ஏக்கரில் அமைந்துள்ள, உலகப்புகழ் பெற்ற ஐந்து நட்சத்திர ரிஸார்ட் ஹோட்டல் இது. 1500 விருந்தினர் அறைகளும் 20 உணவகங்களும் மெஸபடோமியர் காலத்துக் கோவிலும் பல ஏக்கரில் அமைந்துள்ள பார்க், 65000 கடல் வாழ் உயிரினங்கள், மீன்கள் கொண்ட Aquarium மும் அடங்கிய மிகப்பெரிய ஹோட்டல் இது.
Burj Al Arab:
இது துபாயிலுள்ள ஜுமேரா கடற்கரையிலிருந்து 280 மீட்டர் தொலைவில் கடலில் அமைந்துள்ள செயற்கையான தீவு ஒன்றில் நிர்மாணிக்கப்பட்ட ஐந்து நட்சத்திர சொகுசு ஹோட்டல். அங்கிருந்து ஒரு பாலம் மூலம் கரைக்கு வருவது போல அமைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே ஒரு நாள் இரவிற்கு அதிக வாடகையை வசூலிக்கும் ஹோட்டலாக இது திகழ்கிறது. இதில் அமைந்துள்ள ராயல் சூட் ஒரு இரவிற்கு 48000 டாலர்கள் வாடகை என்று பிரமிக்க வைக்கிறது!!
BURJ KHALIFA [ BURJ DUBAI]:
828m, [2717 ]அடி உயரம் கொண்ட, உலகின் உயர்ந்த சாதனைச் சின்னம் இது. இதில் 30000 வீடுகள், ஏழு நட் சத்திர ஹோட்டல்கள், மிகப்பெரிய வணிக வளாகமாகிய துபாய் மால், 30 ஏக்கரில் அமைந்துள்ள BURJ LAKE எல்லாம் அடங்கியிருக்கிறது.
பல உலக சாதனைகளை இந்த BURF KHALIFA முறியடிக்கிறது. உலகின் மிக உயர்ந்த உணவகம், உலகில் அதிகதூரம் உயரே செல்லும் லிஃட் என்று பலவித சரித்திரங்கள் இதில் அடக்கம்.

வாண வேடிக்கைகளில் !!! |

வாண வேடிக்கைகளில் அட்லாண்டிஸ்!! |
இது துபாயிலுள்ள ஜுமேரா கடற்கரையிலிருந்து 280 மீட்டர் தொலைவில் கடலில் அமைந்துள்ள செயற்கையான தீவு ஒன்றில் நிர்மாணிக்கப்பட்ட ஐந்து நட்சத்திர சொகுசு ஹோட்டல். அங்கிருந்து ஒரு பாலம் மூலம் கரைக்கு வருவது போல அமைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே ஒரு நாள் இரவிற்கு அதிக வாடகையை வசூலிக்கும் ஹோட்டலாக இது திகழ்கிறது. இதில் அமைந்துள்ள ராயல் சூட் ஒரு இரவிற்கு 48000 டாலர்கள் வாடகை என்று பிரமிக்க வைக்கிறது!!
வாண வேடிக்கைகளில் பூர்ஜ் அல் அராப்!!! |
828m, [2717 ]அடி உயரம் கொண்ட, உலகின் உயர்ந்த சாதனைச் சின்னம் இது. இதில் 30000 வீடுகள், ஏழு நட் சத்திர ஹோட்டல்கள், மிகப்பெரிய வணிக வளாகமாகிய துபாய் மால், 30 ஏக்கரில் அமைந்துள்ள BURJ LAKE எல்லாம் அடங்கியிருக்கிறது.
பல உலக சாதனைகளை இந்த BURF KHALIFA முறியடிக்கிறது. உலகின் மிக உயர்ந்த உணவகம், உலகில் அதிகதூரம் உயரே செல்லும் லிஃட் என்று பலவித சரித்திரங்கள் இதில் அடக்கம்.
வாண வேடிக்கைகளில் பூர்ஜ் கலீஃபா!! |
35 comments:
வான வேடிக்கைகளை என் மூத்த மகன் வீடியோவாக அன்றைக்கே அனுப்பியிருந்தார். பார்த்து மகிழ்ந்தேன். மிகவும் ஆச்சர்யம் தான்.
>>>>>
//THE PALM ISLANDS என்பது பனைமர வடிவில் வில்லாக்கள் கட்டப்பட்ட பகுதி. மிகப்பெரிய செல்வந்தர்களால் மட்டுமே இந்த வில்லாக்களை வாங்க முடியும். இது Palm Jumeirah, Palm Jebel Ali and Palm Deira என்று மூன்று பிரிவாகக் கட்டப்படுகிறது. Palm Jumeirah முடிந்து விட்டது.//
இதன் திட்ட வரைபடத்தினையும், முதற்கட்ட பணிகளையும் 2004ம் ஆண்டு நேரில் சென்று பார்த்துள்ளேன்.
அதிசயமாக ஆச்சர்யமான தொழில்நுட்பம் தான்.
// உலகிலேயே ஒரு நாள் இரவிற்கு அதிக வாடகையை வசூலிக்கும் ஹோட்டலாக இது திகழ்கிறது. இதில் அமைந்துள்ள ராயல் சூட் ஒரு இரவிற்கு 48000 டாலர்கள் வாடகை என்று பிரமிக்க வைக்கிறது!!//
கேள்விப்பட்டுள்ளேன். எங்களை அதன் மிக அருகே எங்கள் மகன் காரில் கூட்டிச் சென்று காட்டியுள்ளார்.;)))))
மிகவும் COSTLY CITY !!!!!
>>>>>
"அழகிய அதிசயங்களும் உலக சாதனைகளும்!!!"
மிகவும் அழகான அதிசயமான சாதனைகளைச் சொல்லும் இனிய பதிவு. பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
அன்புடன் VGK
Superb....!
ஹய்யோ...! பார்க்கவேனும் கிடைத்ததே தங்கள் தயவில்!!
புர்ஜ் காலிஃபா பற்றி பாரதிக்குமாரின் 'அதிசயங்களின் ரகசியங்கள்' மூலம் அறிந்திருக்கிறேன்.
பார்க்க: http://bharathikumar.blogspot.in/2013/12/blog-post.html
புர்ஜ் அல் அராப்-ன் வாடகை மயங்கச் செய்கிறது. அதற்கும் ஆள் இருக்கிறார்களே...ஹூம்...!
படங்களுக்கும் பகிர்விற்கும் நன்றி!
Super.....Thanks for sharing...
ஒருமுறையேனும் "Dubai Shopping Festival உக்கு வரவேண்டுமென ஆவல் உள்ளது.. :)
படங்களும் செய்திகளும் அருமை.
துபாய் பற்றி அறிந்து கொள்ள மிகவும் உதவும் பதிவு.
பகிர்வுக்கு நன்றி.
படங்களும் பகிர்வும் அருமை.அக்கா நாங்க ஜுமைரா பக்கம் இருந்து world record பார்த்தோம்.ஆச்சரியமான விஷயம்.துபாய்க்கு ரெக்கார்ட் ப்ரேக் செய்வது தான் அல்வா சாப்பிடுவது ஆச்சே.
துபாயை நகரத்தைப் பற்றி மிகவும் அழகாக விளக்கியுள்ளீர்கள். அதுவும் கண்கவர் படங்களுடன். மிக்க நன்றி.
நான் 15 வருடங்களுக்கு முன் மஸ்கட்டில் ஒரு வருடம் இருந்தேன். ஆனால் துபாய்க்கு வர இயலவில்லை.
என்னுடைய மனைவி துபாயில் நடைபெறும் வருடாந்திர ஷாப்பிங் ஃபெஸ்டிவலுக்கு கூட்டிக்கொண்டு போங்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
கண்டிப்பாக ஒரு முறையாவது அங்கு வரணும். அது எப்பொழுது முடியும் என்று தான் தெரியவில்லை.
ரொம்ப அழகாக படங்களுடன் தகவல்களும் மிக அருமை, மனோ அக்கா.
வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்! புது ஆண்டு பிறந்த அன்றே இந்த வாண வேடிக்கைகளின் வீடியோவை நிறைய பேர் பதிவில் இணைத்திருந்தார்கள். அது துபாயில் இருப்பவர்களுக்கே முழுதாய் புரியும். வெளியில் இருப்பவர்களுக்கு விளக்கங்கள் கூறி படங்களை இணைப்பதுவே சுவாரசியத்தைத்தரும் என்றே விளக்கமாக கடந்து சென்ற வாண வேடிக்கைகள் பற்றி எழுதியிருக்கிறேன்.
என் மகனின் முதலாம் திருமண நிறைவு நாளை அட்லாண்டிஸ் ஹோட்டலில் தான் கொண்டாடினோம். பூர்ஜ் அல் அராப் ஹோட்டலிலுள்ள உணவகத்தில் தான் காலை உணவு எடுத்தோம். ஆனால் இதையெல்லாம் சுற்றிப்பார்க்க ஒரு நாள் போதாது என்ற உணர்வு தான் ஏற்பட்டது.
வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி தனபாலன்!
வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி நிலாமகள்!
வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி சகோதரர் இளங்கோ!
அருமையான புகைப்படங்கள்
ரசித்து மகிழ்ந்தேன் சகோதரியாரே
நன்றி
நல்ல பகிர்வு அம்மா.
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள், மனோ!
பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் ராமமூர்த்தி!
அவசியம் வாருங்கள் ஆனந்த்! வரவேற்க காத்திருக்கிறேன். அக்டோபரிலிருந்து நவம்பர் முடிய கிளைமேட் நன்றாக இருக்கும்!
பாராட்டிற்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி கோமதி!
பராட்டிற்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி ஆசியா!
முதல் வருகைக்கும் பாராட்டிற்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி சொக்கன் சுப்ரமணியன்!
அவசியம் ஷாப்பிங் ஃபெஸ்டிவலுக்கு வாருங்கள். வரவேற்க காத்திருக்கிறேன். அக்டோபர் மாதம் ஆரம்பித்து பிப்ரவரி வரை குளோபல் வில்லேஜ் என்ற இடத்தில் நடைபெறும் பன்னாட்டு அரங்கம் மிகவும் புகழ் பெற்றது. அதைப்பார்க்க உலகமெங்கிலிருந்தும் வ்ருவார்கள்.
பாராட்டிற்கு அன்பு நன்றி ஜலீலா!
புகைப்படங்களை ரசித்து மகிழ்ந்ததற்கு அன்பார்ந்த நன்றி சகோதரர் ஜெயகுமார்!
வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி குமார்!
பொங்கல் வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி ரஞ்சனி! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ம்னம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!
அழகிய படங்களுடன் எனக்குத் தெரியாத விவரங்கள். நன்றி.
அனைத்துமே மிக அருமை. எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.
அன்புடையீர்! வணக்கம்!
அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (05/07/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
இணைப்பு: http://gopu1949.blogspot.in/
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
திரு வை கோபாலகிருஷ்ணன் அவர்கள் தங்களின் தளத்தை அவரது தளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளதறிந்து மகிழ்ச்சி. உங்களது தளம் பற்றி நான் அறிவேன். பாராட்டுக்கள்.
http://www.drbjambulingam.blogspot.com/
http://www.ponnibuddha.blogspot.com/
Post a Comment