Sunday, 2 June 2013

இந்தப்புன்னகை என்ன விலை?

வெகு நாட்களாக, தூரிகைக‌ளைத்தொடவில்லை. திடீரென்று இந்த ஓவியத்திற்கான புகைப்படம் மனதைக் கவர்ந்தது. அந்தப்பார்வையும் புன்னகையும் அடிக்கடி என் பார்வையில் படும்போதெல்லாம் கைகள் நமைச்சலெடுத்துக்கொண்டேயிருந்தன. ஒரு வழியாக வரைந்து விட்டேன்! வெறும் கறுப்பு, வெண்மை நிற வண்ணங்கள் மட்டும் தான்!! இதோ, உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்!!

26 comments:

இளமதி said...

மனோ அக்கா... எப்படிச்சொல்வது? எதைச்சொல்வது?

உண்மையில் என்னவிலை அக்கா இந்தப்புன்னகை???
அத்தனை அழகாக இருக்கிறது உங்கள் ஓவியம். மலைத்தே போனேன்...

அந்தக் கண்கள், சிரிப்பது தெரியாமல் சிரிக்கும் மெல்லிய புன்னகை இதழ்கள்... கண் புருவங்கள், மூக்கு, பளிச்சென அழகு முகம்.... இப்படியே அவ்வளவு அழகு. தத்ரூபமாய் மனதை, கண்களை ஈர்க்கின்றது.

அதிதிறமைசாலிதான் நீங்கள்!
வெறும் கறுப்பு வெண்மை நிறங்களில்... நினைக்கமுடியாத அழகோவியம்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா!
தொடருங்கள் இன்னும் இன்னும்...

கீத மஞ்சரி said...

அபாரம்... நேரிலே பார்ப்பதைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது. அற்புதமான இந்த ஓவியத் திறமையை அடிக்கடி மெருகூட்டி எம்மை மகிழ்விக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் மேடம். மனம் நிறைந்த பாராட்டுகள் தங்களுக்கு.

திண்டுக்கல் தனபாலன் said...

என்னவொரு அழகு...! வாழ்த்துக்கள்...

பார்வை ஒன்றே போதுமே...
பல்லாயிரம் சொல் வேண்டுமா...?

இமா said...

ஓவியம் உங்கள் கைவண்ணமல்லவா, வெகு அருமை அக்கா.
//இந்த ஓவியத்திற்கான புகைப்படம் // பற்றி எதுவும் சொல்லவில்லையே! அறிந்துகொள்ள ஆவல்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

விலை மதிக்க முடியாத புன்னகை ஓவியம் மிக அழகாக வரைந்துள்ளீர்கள். என் அன்பான பாராட்டுக்கள். இனிய நல் வாழ்த்துகள்.

வெங்கட் நாகராஜ் said...

இப்புன்னகைக்கு விலையேது......

அழகான ஓவியம். கலர் இல்லாததும் நன்றாகவே இருக்கிறது.

Ananya Mahadevan said...

மனோ அக்கா.. ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப அழகா வரைஞ்சிருக்கீங்க.. லக்ஷ்மி கோபால்ஸ்வாமி மாதிரி இருக்கு.. ரொம்ப அருமை! கருப்பு வெள்ளையில இவ்ளோ அற்புதமா வரைய முடியும்ன்னு இப்போத்தான் தெரிஞ்சுண்டேன். :)

விமலன் said...

நல்ல வரை படம்.அந்த விழிகளும்,புன்னகையும் நிறைய சொல்லிச்செல்கிறது.

கே. பி. ஜனா... said...

ரொம்ப அருமையாக வரைந்திருக்கிறீர்கள்!
அபாரமாக இருக்கிறது ஓவியம்!
பாராட்டுக்கள்!

கரந்தை ஜெயக்குமார் said...

கருப்பு வெள்ளையில் படம் அழகோ அழகு. மோனோலிசா புன்னகை. சகோதரிக்கு வாழ்த்துக்கள்

மனோ சாமிநாதன் said...

மனம் திறந்த பாராட்டுக்கு அன்பு நிறைந்த நன்றி இளமதி! ஒவ்வொன்றையும் குறிப்பிட்டு ரசித்து எழுதியிருக்கிறீர்கள்! இந்தப்பாராட்டு எனக்குள் விதைத்த உற்சாகம் இன்னும் நிறைய வரைய வேன்டும் என்ற ஆவலை ஏற்படுத்தியிருக்கிறது!!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்களுக்கு மனங்கனிந்த‌ நன்றி கீத மஞ்சரி!

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கும் அதன் மூலம் எனக்குக் கொடுத்திருக்கும் ஊக்கத்திற்கும் குட்டிப்பாடலை எழுதி வர்ணித்திருப்பத‌ற்கும் அன்பார்ந்த‌ நன்றி சகோதரர் தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

இதன் மூலம் ஒரு நடிகையின் புகைப்படம் இமா! நான் கண்களையும் இதழ்களையும் என் பாணிக்கு மாற்றி விட்டேன். நான் வரைய விரும்பியது அந்தப் புன்னகையையும் அந்த பாவத்தையும் தான்! அன்பான பாராட்டுக்கு இனிய நன்றி இமா!

மனோ சாமிநாதன் said...
This comment has been removed by the author.
மனோ சாமிநாதன் said...

என்னைப் பாராட்டுவத‌ற்காக‌ ரொம்ப‌ நாட்க‌ளுக்குப்பிற‌கு வ‌ருகை தந்திருக்கும் அன‌ன்யாவிற்கு என் அன்பார்ந்த‌ ந‌ன்றி!!

மனோ சாமிநாதன் said...

சிறு க‌விதை போல அழ‌குற‌ பாராட்டியிருக்கும் ச‌கோத‌ர‌ர் விம‌ல‌னுக்கு இனிய‌ ந‌ன்றி!!

மனோ சாமிநாதன் said...

நிறைந்த‌‌ பாராட்டுரைக்கு இத‌ய‌ம் கனிந்த‌ ந‌ன்றி ச‌கோத‌ர‌ர் ஜ‌னா!

மனோ சாமிநாதன் said...

ம‌ன‌ம் உவந்து பாராட்டியிருக்கும் சகோதரர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு அன்பு நிறைந்த நன்றி!!

மனோ சாமிநாதன் said...

விலை‌ ம‌திக்க‌ முடியாத‌ புன்ன‌கை ஓவிய‌ம் என்று வாழ்த்திய‌ உங்க‌ளின் விலை ம‌திக்க‌ முடியாத‌ பாராட்டுரைக்கு என் ம‌ன‌ம் நிறைந்த‌‌ ந‌ன்றி ச‌கோத‌ர‌ர் வை.கோபால‌கிருஷ்ண‌ன்!

மனோ சாமிநாதன் said...

இனிய‌ பாராட்டுரைக்கு அன்பு ந‌ன்றி ச‌கோத‌ர‌ர் வெங்க‌ட்!

Asiya Omar said...

அக்கா,இந்த ஓவியத்திற்கு,இந்தப் புன்னகைக்கு விலை ?
அன்போடு கூடிய இந்த அழகிய புன்னகைக்கு ஈடு எதுவும் இல்லை.
மிக தத்ரூபம்.

நிலாமகள் said...

மகிழ்வு ததும்பும் இப்புன்னகைக்கு விலையேது?!

வரையத் தூண்டிய மனசுக்கும் நினைத்ததை முடித்த கைகளுக்கும் பாராட்டுகள்.

கோமதி அரசு said...

எவ்வளவு அழகாய் வரைந்து இருக்கிறீர்கள்!
கண்கள் சிரிக்கிறது.
வாழ்த்துக்கள்.

Anonymous said...

I kept this oviyam. one day I will use this on your name - like before.-
excelet figure.
congratz.
Vetha.Elangathilakam

கவியாழி கண்ணதாசன் said...

மௌனப் புன்னைகைக்கு மொழியேது விலையேது .அருமையாகப் படைத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்