அசத்திய முத்து!
ஜப்பான் நாட்டின் நிஸான் நிறுவனம் தற்போது சுற்றுப்புறச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வண்ணம் வாகனத் தயாரிப்பில் அக்கறை செலுத்தி வருகிறது. சிறிதும் புகையைக் கக்காத மின்சார எஞ்சின்களை கார்களில் பொருத்தி வருகிறது. அந்த வரிசையில் எட்டாவது மின்சார எஞ்சின் காரை தயாரித்துள்ளது. இதற்கு பிவோ-3 என்று பெயர். டோக்கியோவில் வாகனக் கண்காட்சியில் இந்தக் கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நம்மிடம் இருக்கும் ஸ்மார்ட் ஃபோன் மூலம் இந்தக் காரை இயக்க முடியும். உலகின் பல முன்னணி நகரங்களில் தானியங்கி பார்க்கிங் வசதிகள் உள்ளன. இந்த வளாகத்திற்குள் வந்த பின் நாம் காரை விட்டிறங்கிச் சென்று விடலாம். இந்த கார் தன்னிடம் உள்ள G.P.S வசதியைப் பயன்படுத்தி காலியாக உள்ல இடத்தில் தானே சென்று நின்று விடும். பிறகு எந்த இடத்தில் நிற்கிறது என்பதை மெஸேஜ் மூலம் நமக்கும் தெரிவித்து விடும். நாம் வேலையை முடித்து திரும்பும்போது நாம் இருக்கும் இடம் தேடி இந்தக் கார் வந்து விடும்!!!
நாவூறச் செய்த முத்து!!
புத்தகத்தில் படித்த செய்தி இது.
நாஞ்சில் நாட்டில் எல்லோரது வீட்டிலும் அடுப்புக்கு நேர் மேலே கருப்பட்டியறை’ என்ற ஒரு அறை இருக்கும். அதற்குள் கருப்பட்டியை வைத்து மூடி விடுவார்கள். அன்றாடம் அடுப்பின் கதகதப்பில் கருப்பட்டி நன்கு உலர்ந்து மேல் பகுதி கருத்துப்போயிருக்கும். நான்கைந்து மாதங்கள் கழித்து உடைத்துப்பார்த்தால் உள்ளே மஞ்சள் நிறத்தில் இருக்கும். சாப்பிட்டால் சுவை நரம்புகளை சுண்டி இழுக்கும்.
யாரேனும் நாஞ்சில் நாட்டு நண்பர்கள் இது பற்றி மேலும் விபரங்கள் தெரிவித்தால் நன்கிருக்கும்!
ரசித்த முத்து:
மழை நீர் உயிர் நீர்
அணை நீர் பயிர் நீர்
இலை நீர் தேனீர்
பதநீர் நலநீர்
குலை நீர் இளநீர்
மது நீர் கண்ணீர்!!!
உபயோகமான முத்து!
ஏழிலைக்கிழங்கு:
மரவள்ளிக்கிழங்கு, ஆல் வள்ளிக்கிழங்கு, கப்பக்கிழங்கு என்றழைக்கப்படுவதுடன் ஏழிலைக்கிழங்கு என்றும் அழைக்கப்படுகிறது.
100 கிராம் கிழங்கில் 160 கலோரி ஆற்றல் கிடைக்கிறது. விட்டமின் கே நிறைந்ததுள்ளது இதில் சுக்ரோஸ் என்னும் சர்கரைச் சத்து அதிகமாகவும் அமைலேஸ் என்னும் சர்க்கரைச் சத்து கணிசமாகவும் உள்ளன. கொழுப்புச்சத்து குறைவாகவும் புரதச் சத்து அதிகமாகவும் நிறைந்துள்ளது. குளூடன் இல்லாத புரதச்சத்து உள்ளதால் குளூடன் வியாதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதை மருந்துப்பொருளாக பயன்படுத்துகிறார்கள். அத்துடன் அல்சீமர் என்னும் ஞாபகமறதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது மருந்துப்பொருளாகப் பயன்படுகிறது. 100 கிராம் கிழங்கில் 271 மில்லி கிராம் பொட்டாசியமும் நிறைந்திருக்கிறது. இது இதயத்துடிப்பு சீராவதற்கும் ரத்த அழுத்தம் சரியாக இருக்கவும் உதவுகிறது.

32 comments:
முத்துச் சிதறல் அருமை..
கருப்பட்டி மற்றும் மரவள்ளி செய்திகள் புதுசு...
நீர் கவிதை அழகு...
Tapioca predominantly consists of carbohydrates, with each cup containing 135 grams for a total of 544 calories, and is low in saturated fat, cholesterol and sodium. Folic acid (vitamin B9) is present in the amount of 6.1 mcg, along with iron 2.4 mg and calcium 30.4 mg. One cup of tapioca also includes 1.5 mg of omega-3 acids, 3 mg of omega-6 fatty acids and 1 gram of dietary fiber.
தானே பார்க்கிங் செய்து கொள்ளும் கார், நாம் வெளியே வந்ததும் நம்மைத் தேடி தானே வரும் விவரம் .... ஆச்சர்யம்!
ரசித்த முத்து ரசிக்க வைக்கிறது.
arumai!
nalla thakavalkal....
எல்லா முத்துக்களுமே சுவாரசியமா இருக்கு
அத்தனையும் அருமையான முத்துக்கள்.
//யாரேனும் நாஞ்சில் நாட்டு நண்பர்கள் இது பற்றி மேலும் விபரங்கள் தெரிவித்தால் நன்கிருக்கும்!// நானும் ஆவலுடன் விபரம் அறியக்காத்திருக்கிறேன்.
அடடா...அருமையான அழகான விதவிதமான முத்துக்கள்....
பயனுள்ள நல்ல தகவல்கள்...:)
பகிர்வுக்கு மிக்க நன்றி!
அனைவருக்கும் இனிய நத்தார் புதுவருட நல் வாழ்த்துக்கள்!!!
தானாகப் பார்க் செய்து கொள்ளும் வசதியுடனான கார் அசத்துகிறது:).
நல்லதொரு தொகுப்பு.
தானாகவே பார்க் செய்து கொள்ளும் கார் மிக வசதியே.
ஆல்வள்ளிக்கிழங்கின் சத்துக்கள் பற்றிய முத்து மிகவும் உபயோகமானது.
மொத்தத்தில் எல்லா முத்துக்களுமே அசத்தல்.
ராஜி
அறியாத தகவல்களுடன் அருமையான முத்துக்கள்
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்
அருமையான விதவிதமான முத்துக்கள்.... பயனுள்ள நல்ல தகவல்கள்.
நல்ல தகவல்கள்!நன்றி.
எல்லாமே அருமை. கப்பக்கிழங்கும் மரவள்ளியும் ஒன்றா?
பாராட்டுக்கு அன்பு நன்றி சகோதரர் குமார்!
மரவள்ளிக்கிழங்கைப்பற்றி மேலும் தகவல்கள் அளித்ததற்கு இனிய நன்றி சகோதரர் பழனி கந்தசாமி!
ரசித்து கருத்துரையும் அளித்ததற்கு அன்பு நன்றி ஸ்ரீராம்!
பாராட்டுக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சீனி!
கருத்துரைக்கு அன்பு நன்றி லக்ஷ்மிம்மா!
பாராட்டுக்கு அன்பு நன்றி ஸாதிகா!
வாழ்த்துக்களுக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி இளமதி!
பாராட்டுடன் கூடிய கருத்துரைக்கு இனிய நன்றி ராமலக்ஷ்மி!
வருகைக்கும் பாராட்டுக்கும் அன்பு நன்றி ராஜி!
பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் இனிய நன்றி சகோதரர் ரமணி!
முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் அன்பு நன்றி மதுரைத்தமிழன்!
கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜனா!
பாராட்டிற்கு இனிய நன்றி நிலா! கப்பக்கிழங்கும் மரவள்ளியும் ஒன்று தான்! ஏழிலைக்கிழங்கும் அது தான் என்றறிந்தது போது தான் எனக்குப் புதுமையாக இருந்தது!
அனைத்து முத்துக்களும் அருமை.
முதல் முத்து அருமையோ அருமை.
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
பகிர்வுக்கு நன்றிகள்.
அன்புடன் VGK
வணக்கம்!
முத்துச் சிதறல் மூளையினை
முழுதும் பறித்துக் கொண்டதுவே!
சத்து மிக்க கிழங்குணவு!
தண்ணீா்.. கண்ணீா்.. சிறுகவிதை
பித்து கொடுத்து என்னெஞ்சைப்
பிரட்டிப் போடும்! மகிழ்ந்துனக்குக்
கொத்து மலா்கள் தருகின்றேன்
கோலத் தமிழைத் தொடருகவே!
கவிஞா் கி. பாரதிதாசன் - பிரான்சு
kambane2007@yahoo.fr
முத்துக்கள் ஒவ்வொன்றும் அருமை கார் பற்றிய செய்தி வியப்பைத் தருகிறது!
தானாகப் பார்க் செய்துகொள்ளும் காரைப் பலரும் பாராட்டியிருப்பது, நாட்டில் ‘பார்க்கிங்’ எந்தளவு பிரச்னையாக இருக்கீறது என்று சொல்கிறது!! நம்ம நாட்டுக்கு (& அமீரகத்த்திற்கும்) இந்தக் காரெல்லாம் வேண்டாம், பார்க் பண்ண இடம் மட்டும் கிடைத்துவிட்டால் போதும் என்கிற நிலைமைதான்!! :-))))
கருப்பட்டியறை புதிய தகவல். திருநெல்வேலியிலும் கருப்பட்டி புழக்கம் அதிகமுண்டு (முன்பு). எனினும், கருப்பட்டியை சிப்பம் என்கிற பனையோலைப் பெட்டியில் மச்சுவீட்டில்தான் (அப்போதைய ஸ்டோர் ரூம்)வைத்திருப்போம்.
அப்போ கருப்பட்டி மலிவு விலை, சீனி கொள்ளை விலை. இப்போ தலைகீழ்!! (இப்போ சீனி மலிவான்னு கேக்கப்படாது, கருப்பட்டியை ஒப்பிடும்போது குறைவுதான்) :-)))
மரவள்ளிக்கிழங்கும் நாஞ்சில்காரர்களின் அபிமான உணவு. சோற்றுக்குப் பதிலாக, மீன் குழம்புடன் இதை அவித்து ஒரு பிடிபிடிப்பார்கள்!!
தானாகவே பார்க் செய்து கொள்ளும் கார்
வியப்பளித்தது ...
நீர் கவிதை ஊருணி நீர் போல் சுவை நீர்!
சிப்பியில் விழுந்த முத்தாய்ச் சிதறி வெளிவந்த கவிதை.
Post a Comment