Saturday 30 June 2012

நம் உயிர் நமக்குச் சொந்தமா?

வர வர, மருத்துவ மனைகளில் ஏற்படும் அனுபவங்களும் அவற்றைத் தொடர்ந்த அவலங்களும் சங்கிலித் தொடர்களாய் நீண்டு கொண்டே போகின்றன. என் நெருங்கிய சினேகிதியின் அனுபவமொன்று....

இவர் கோவையிலிருக்கிறார். இவரின் கணவருக்கு சர்க்கரை வியாதி இருந்து வந்திருக்கிறது. 3 மாதங்களுக்கு ஒரு முறை பரிசோதனைக்குச் செல்வது வழக்கம். ஒரு முறை, கணவருக்கு தொடர்ந்து 3 நாட்களுக்கு நல்ல ஜுரமும் வலது காலில் வீக்கமும் இருந்திருக்கிறது. மருந்து மாத்திரைகளுக்கு சரியாகவில்லை. அந்த சமயம் இவரின் சகோதரி மகன், தஞ்சையில் மருத்துவராய் இருப்பவர், தொலைபேசியில் நிலைமைகளை அறிந்ததும் காலில் சிறு சிறு கொப்பளங்கள் இருக்கிறதா என்று கண்டறியச் சொல்லியிருக்கிறார். இவரும் அதே போல காலை நுணுக்கமாய் தடவிப்பார்க்க, ஒரே ஒரு சிறு கொப்பளம் கண்ணில் பட்டிருக்கிறது. தன் சகோதரி மகனுக்கு அதை தொலைபேசியில் சொல்ல, அவர் நிச்சயம் சர்க்கரையின் அளவு அதிகமாய் இருக்க வேண்டும் என்று சொல்லி உடனேயே பரிசோதனை செய்யச் சொல்லியிருக்கிறார். பரிசோதனையில் சர்க்கரையின் அளவு முன்னூறுக்கும் மேல் இருந்ததும் உடனேயே தெரிந்த நண்பரொருவரின் மருத்துவமனையில் சேர்த்து வைத்தியம் பார்க்க ஆரம்பித்தார்.

அதன் பிறகு தான் சோதனை தொடர்ந்தது. ஓரிரு நாட்களிலேயே அந்த கொப்பளம் மிகப்பெரியதாக, அதை சுரண்டி சுத்தம் செய்ய ஆரம்பித்தனர் அங்கே. தினமும் சுரண்டி சுத்தம் செய்வதும் பிறகு மருந்து போடுவதுமாக அந்தப் பெரியவருக்கு நரக வேதனை தொடங்கியது. புண் இருந்த இடம் பெரிய குழியாக, மருத்துவ மனையின் தலைமை மருத்துவர், ‘ இந்தக் குழி நன்கு ஆறியதும் தொடையிலிருந்து சதை எடுத்து வைத்துத் தைத்து விடலாம்’ என்று சொல்லவும் என் சினேகிதி சம்மதித்திருக்கிறார். அதைப்போல ஒரு நாள் புண் நன்கு ஆறி விட்டது என்று சொல்லி, அவரை தியேட்டருக்கு அழைத்துச் சென்று மயக்க மருந்து செலுத்தி தொடையிலிருந்து சதை எடுத்திருக்கிறார்கள். சதையைப்பொருத்தப் போகும்போது தான் தெரிந்திருக்கிறது புண் நன்கு ஆறவில்லை என்பதும், புண்ணிலிருந்து நீர் இன்னும் வடிந்து கொண்டிருக்கிறது என்பதும்! வெளியில் வந்து என் சினேகிதியிடம் ‘ புண் ஆறாததால் தோலிலிருந்து எடுத்த சதையை வைத்துத் தைக்க முடியவில்லை. சதையை குளிர்ப்பதன வசதியில் வைத்துப் பாதுகாப்போம். புண் முழுவதுமாக ஆறியதும் அதை வைத்து தைத்து விடுவோம்’ என்று கூறியிருக்கிறார்கள். உடனே என் சினேகிதி அவரை வீட்டில் வைத்தே புண்னை ஆற்றிக் கொண்டு வருகிறேன் என்று சொல்லி கணவரை வீட்டில் வைத்தே மருந்துகளைத்தடவி, சுத்தம் செய்து புண்ணை ஆற்றியிருக்கிறார்.

அதன் பிறகு கணவரை திரும்பவும் அந்த மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று, அழைத்துச் சென்று, அங்கே மருத்துவர் பரிசோதனைகளுக்குப் பிறகு மறுபடியும் அவரை தியேட்டருக்கு அழைத்துச் சென்று பாதுகாத்து வைத்த சதையைப் பொருத்தி பெரிய கட்டு போட்டு, கொண்டு வந்து கட்டிலில் போட்டு, நான்கு நாட்களுக்குப்பிறகு தான் கட்டைப் பிரிக்க வேண்டும், அதற்குள் சதை பொருந்தி விடும் என்று சொல்லியிருக்கிறார்கள். இடையே வந்து அனைத்து செய்திகளும் அறிந்த அவரின் சகோதரி மகன், ‘ உடனேயே பொருத்தாவிட்டால், குளிர்ப்பதன வசதியில் வைத்தெல்லாம் சதையைப்பொருத்த முடியாது’ என்று சொல்லியிருக்கிறார். அதே போல, நான்கு நாட்களுக்குப்பிறகு, கட்டு பிரிக்கப்பட்டு, பொருந்த முடியாத சதைப்பகுதிகள் கீழே கிடக்க, இவரின் கணவர் பரிதாப நிலையில் இருந்திருக்கிறார். எந்தக் காரணத்தாலோ, மருந்துகள், தொடர்ந்த அதிர்ச்சியான் நிகழ்வுகள் ஒத்துக்கொள்ளாமலோ, அவர் மன நிலையும் பிறழத்தொடங்கி விட்டது. என் சினேகிதியையும் அடையாளம் தெரியாமல் போனது. மன நல மருத்துவரும் அழைக்கப்பட்டு அவர் பங்கிற்கு மருந்துகள் கொடுக்க, என் சினேகிதி கணவருக்கு மேலும் நிலைமைகள் மோசமாகவே, மருத்துவரிடம் கேள்விகள், சண்டைகள் எல்லாம் முடிந்த பின் தன் கணவரை வீட்டுக்கு அழைத்து வந்து விட்டார் என் சினேகிதி.

தெரிந்த நர்ஸ் மூலம் தொடர்ந்து சுத்தம் செய்தலும் மருந்து தடவுவதுமாக கண்காணித்து, புண் முழுவதுமாக ஆறி அந்தக் குழியே மூடி விடும் அளவு அசராமல் கணவரை வைத்துக் கவனித்தாராம். இருந்தாலும் அவர் கணவர் தொடர்ந்து மன நிலை பிறழ்ந்தவராகவே, தொடர்ந்த உளறல் பேச்சுக்களும் என் சினேகிதி உள்பட யாரையும் அடையாளம் தெரியாதவராகவே இரண்டு மாதங்களுக்கு இருந்திருக்கிறார். மெல்ல மெல்ல குணம் அடைந்து, மன நிலையும் சரியாகி, ஆறு மாதங்களுக்குப் பிறகு தன் கணவரை அதே மருத்துவரிடம் அழைத்துச் சென்று மூடிப்போன குழியைக் காண்பித்தாராம்.

அந்த மருத்துவர் ‘ எப்படியம்மா இந்த இடம் குழியே தெரியாமல் மூடிக்கொண்டது? சதையே வைக்காமல் எப்படி மூடிக்கொண்டது? ரொம்ப நன்றாக ஆற வைத்து விட்டீர்களே!’ என்று கேட்டாரம்! எதுவுமே தெரியாதது போல எப்படி அவரால் அந்தக் கேள்வியைக் கேட்க முடிந்தது? சதையை வைத்து தைக்காமலேயே சதை மூடிக்கொள்ளும் என்பது அந்த மருத்துவருக்குத் தெரியாதா? ஒரு சாதாரண குடிமகனால், நிகழ்ந்து விட்ட கொடுமைகளுக்கு சம்பந்தப்பட்ட மருத்துவர் மேல் வழக்கு போட முடியுமா? அதற்கான பொருளாதார வசதியும் பக்க பலமும் இல்லாத பொது ஜனம் என்ன தான் செய்ய முடியும்?

30 comments:

இராஜராஜேஸ்வரி said...

சதையை வைத்து தைக்காமலேயே சதை மூடிக்கொள்ளும் என்பது அந்த மருத்துவருக்குத் தெரியாதா?

நம் உயிர் நமக்குச் சொந்தமா?"

வை.கோபாலகிருஷ்ணன் said...

நம் உயிர் நமக்குச் சொந்தமா?

அதுவும் இன்று நிச்சயமில்லாமல் தான் உள்ளது.

மருத்துவ விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேறி இருப்பதாகச் சொன்னாலும், இது போல ஆங்காங்கே சில மருத்துவமனைகளும், சரிவர முடிவெடுக்கத்தெரியாத ஒரு சில மருத்துவர்களும் உள்ளனர். அவர்கள் நம் உயிரோடு விளையாடுகின்றனர். நம்மை சோதனைக்கு பயன் படுத்துகிறார்களோ என பயமாகத்தான் உள்ளது.

//சதையை வைத்து தைக்காமலேயே சதை மூடிக்கொள்ளும் என்பது அந்த மருத்துவருக்குத் தெரியாதா? //

அதானே! என்ன ஒரு கொடுமை பாருங்கள். படிக்கவே மனதுக்கு மிகவும் வருத்தமாகவும், மன உலைச்சல் தருவதாகவும் உள்ளது.

ஹுஸைனம்மா said...

படித்து நெஞ்சம் கொதிப்பதைத் தவிர என்ன செய்வது??!! :-((

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

எப்ப ஆஸ்பத்திரி பக்கம் போனாலும், நம் உயிர் நமக்கு சொந்தமா? என்கிற கேள்வி நம்மை மீறி வந்து விடுகிறது என்பது தான் இன்றைய யதார்த்தம்.
சிதம்பரம் ஸ்வாமிகளின் ‘ நோயுற்று அடறாமல்.. நொந்து மனம் வாடாமல்..பாயில் கிடவாமல் ..பாவியேன் காயத்தை..” என்கிற பாடல் தான் ஞாபகம் வருகிறது..

Yaathoramani.blogspot.com said...

யாரைத்தான் நம்புவது ?
மருத்துவரின் பேச்சையெல்லாம் தெய்வ வாக்காக
நினைத்து இன்னும் எப்படியெல்லாம் ஏமாந்து கொண்டிருக்கிறோம்
என்பதை அருமையாகச் சொல்லிப் போகும் பதிவு
யாரோ ஒரு சிலரால் மருத்துவர்களின் மீதுள்ள
நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக தகர்ந்து கொண்டிருப்பது நிஜம்
மனம் கனக்கச் செய்து போகும் பதிவு

கே. பி. ஜனா... said...

கேட்கவே கவலையாக இருக்கிறது...

குறையொன்றுமில்லை. said...

அவதிப்படுகிரவர்களுக்கு தகுந்த மருத்துவ உதவி கிடைக்கலேன்னா ரொம்ப கஷ்ட்டம் தான்.

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

இந்த மருத்துவரைப் பார்த்து ‘நெஞ்சம் பொறுக்குதில்லையே...இந்த நிலைகெட்ட மனிதரை நினைக்கையிலே’ என்று கூறத்தோன்றுகிறது.....இவரிடம் மாட்டிக்கொண்ட அந்த சகோதரருக்கும் அவர் குடும்பத்தார்க்கும் எத்தனை மன உளைச்சல் ஏற்பட்டிருக்கும்....ம்ம்ம்..

Athisaya said...

இப்படி எத்தனை தவவறுகள்.மருத்துவரே இப்படியென்றால்????
சந்தேகம் வலுக்கத்தான் செய்கிறது சொந்தமே...!

காதல் இங்கும் ஒளிந்திருக்கும்..!!!!

ஸாதிகா said...

மருத்துவ உலகுக்கு மேலும் ஒரு கரும்புள்ளி.//நம் உயிர் நமக்குச் சொந்தமா?// நிச்சயமாக இல்லை.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அன்புடையீர்,

வணக்கம்.

என்னுடைய கீழ்க்கண்ட பதிவுக்கு
தயவுசெய்து வருகை தாருங்கள்.

http://gopu1949.blogspot.in/2012/07/blog-post.html

தங்களுக்கான விருது ஒன்று காத்துள்ள்து.

அன்புடன்
vgk

நிலாமகள் said...

ல‌ட்ச‌ங்க‌ளை கொட்டிக் கொட்டி ப‌டித்து வ‌ந்த‌ ம‌ருத்துவ‌ர்க‌ள் ப‌ல‌ர் போட்ட‌ முத‌ல் எடுக்க‌ வ‌ரும் நோயாளிக‌ளை ப‌ய‌முறுத்தி ப‌றிப்ப‌து அவ‌ல‌ம்தான். தேறினால் போதுமென‌வும் வேறு யாரையும் தேடி அலைய‌ இய‌லாம‌லும் ப‌ல‌ர் ப‌லியாகி விடுகின்ற‌ன‌ர். எரிகிற‌ கொள்ளியில் எந்த‌ கொள்ளி ந‌ல்ல‌து என்ற‌ க‌தையாகி விடுகிற‌து ப‌ல‌ ச‌ம‌ய‌ங்க‌ளில்.

என‌து அண்ணிக்கு ஊசி போட்ட‌ இட‌ம் ம‌ருந்து ப‌ர‌வாம‌ல் க‌ட்டியாகி அது கீற‌ப்ப‌ட்டு புண் ஆறாம‌ல் குழியாகி இதே போல் தொடையில் தோல் ஜ‌வ்வு எடுத்து பொருத்த‌ வேண்டுமென்று கூற‌ப்ப‌ட்ட‌து. ப‌ய‌ம் மிகுதியில் வீட்டிலேயே செவிலிப்பெண் ஒருவ‌ரிட‌ம் தின‌ம் சுத்த‌ம் செய்து ம‌ருந்திட்டு இர‌ண்டு மூன்று மாத‌ங்க‌ள் மெல்ல‌ மெல்ல‌ குழி தூர்ந்து ச‌ம‌மான‌து அப்ப‌ப்பா... உட‌ல் நோய‌ற்றிருப்ப‌துதான் முத‌ண்மையான‌ இன்ப‌ம் இவ்வுல‌கில்!

cheena (சீனா) said...

அன்பின் மனோ சாமிநாதன் - என்ன நடக்கிறது இம்மருத்துவ மனைகளில் - இதெல்லாம் யாரும் தட்டிக் கேட்க மாட்டார்களா ? மருத்துவர்களில் சிலர் இப்படிக் காசாசை பிடித்து அலைகிறார்கள். ம்ம்ம்ம் - ஒன்றும் செய்வதற்கில்லை - நட்புடன் சீனா

Anonymous said...

அன்புள்ள மனோ அவர்களுக்கு,
உங்கள் வலைப்பதிவுக்கு என் முதல் வருகை இது. உங்கள் சிநேகிதியின் நிலைமை மிகவும் வருத்தத்திற்குரியது.
ஏன் கணவருக்கும் இதேபோல் ஒரு முறை காலில் மிகமிகச் சிறிய கட்டியாக ஆரம்பித்து அதை சுரண்டி எடுத்தார்கள். சுமார் 2 மாதங்கள் bed rest. அவருக்கும் குழி மூடவில்லை எனில் வேறு இடத்திலிருந்து சதையை எடுத்து வைக்கலாம் என்று மருத்துவர் கூறினார். நல்ல வேளை அதுவாகவே மூடிக் கொண்டது.
சர்க்கரை நோயாளிகள் இதற்காகவே தங்கள் கால்களைப் பராமரிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் திரும்பத்திரும்ப கூறுகிறார்கள்.
உங்கள் சிநேகிதியின் கணவர் நலமானது கேட்க ஆறுதலாக இருக்கிறது.
அன்புடன்,ரஞ்ஜனி

மனோ சாமிநாதன் said...

வருகைக்கு அன்பு நன்றி ராஜராஜேஸ்வரி!

மனோ சாமிநாதன் said...

விரிவான கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்! நீங்கள் சொல்வது மாதிரி, இப்போதெல்லாம் மருத்துவ மனைக்கு செலும்போதெல்லாம் ஏகப்பட்ட யோசனைகளும் சந்தேகங்களும் பின்னாலேயே வருவதைத் தவிர்க்க முடியவில்லை!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி ஹுஸைனம்மா!

மனோ சாமிநாதன் said...

//சிதம்பரம் ஸ்வாமிகளின் ‘ நோயுற்று அடறாமல்.. நொந்து மனம் வாடாமல்..பாயில் கிடவாமல் ..பாவியேன் காயத்தை..” என்கிற பாடல் தான் ஞாபகம் வருகிறது..//

இந்த அருமையான வரிகளை ரொம்ப நாட்களுக்குப்பின்னால் ஞாபகப்படுத்தியதற்கு அன்பு நன்றி சகோதரர் ராமமூர்த்தி!!

மனோ சாமிநாதன் said...

உண்மை தான்! யாரோ சில மருத்துவர்களும் சில மருத்துவ மனைகளும் செய்யும் குளறுபடிகளினால் வர வர மருத்துவ உலகின் மீது நம்பிக்கை குறைவதென்னவோ நிஜமே! கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ரமணி!!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜனா!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி லக்ஷ்மிம்மா!!

மனோ சாமிநாதன் said...

நீண்ட நாட்களுக்குப்பின் வருகை புரிந்ததற்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி சகோதரர் எல்லென்!!

மனோ சாமிநாதன் said...

முதல் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் இனிய நன்றி அதிசயா!!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ஸாதிகா!

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன் அவ‌ர்க‌ளுக்கு,

அழ‌கிய‌ விருதினை ப‌கிர்ந்த‌‌ளித்ததற்கு மனமார்ந்த நன்றி!!

மனோ சாமிநாதன் said...

நல்ல வேளை, உங்கள் அண்ணிக்கு பெரிய சோதனைகள் இது போல எதுவும் நேரிடாமல் காயம் குணமாகி விட்டது பெரிய அதிர்ஷ்டமே! கருத்துரைக்கு அன்பு நன்றி நிலாமகள்!

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள சீனா அய்யா அவர்களுக்கு!

முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி!

த‌ட்டி கேட்க‌மாட்டார்க‌ள் என்ற‌ தைரிய‌த்தினாலும் கோர்ட்டுக்கு மான அவ‌மான‌த்துக்குப் பயந்து போக மாட்டார்கள் என்ற நினைப்பினாலும்தான் இன்றைக்கு பல மருத்துவ மனைகளில் இத்தைகைய அவலங்கள் நடக்கின்றன! இந்த மாதிரி நிகழ்வுகளைத் தடுக்கும் சக்தி எங்கிருந்து வரும் என்பது தான் இன்றைய தேடுதலாய் இருக்கிறது!!

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள ரஞ்சனி!

உங்களின் முதல் வருகைக்கும் இதமான பின்னூட்டத்திற்கும் இதயங்கனிந்த நன்றி!
உண்மை தான்! இன்றைய மருத்துவ உலகில் நமக்கான விழிப்புணர்வு அதிகமாய் இருக்க வேண்டியது மிக மிக‌ அவசியம். படித்தவர்களே இந்த மாதிரி நிலைமைகளை சமாளிக்கத் திணரும்போது, பாவம், ஒன்றுமறியாத படிக்காத பாமர மக்களின் நிலையை நினைத்தால் தான் மிகுந்த பரிதாபமாக இருகிறது!!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

பெரும்பாலான மருத்துவர்கள் மெடிகல் ஷாப்புடன் டீல் வைத்துக்கொண்டு செயல்படுகிறார்கள் என்பது ஊரறிந்த உண்மை.விதிவிலக்குகளும் உண்டு.

cheena (சீனா) said...

அன்பின் மனோ சாமிநாதன்

வலைச்சர அறிமுகம் மூலமாக இங்கே வந்தேன் - வந்து பார்க்கும் போதுதான் இது ஏற்கனவே படித்து மறுமொழியும் இடப்பட்ட பதிவெனத் தெரிந்தது - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா