Monday 18 June 2012

தயிர் சாதம்

நல்லதொரு சமையல் குறிப்பு கொடுத்து நாளாகி விட்டதால் இந்த வாரம் முத்துச்சிதறல் சமையல் முத்தாக மலருகிறது.

சாத வகைகளில் புளியோதரை, எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம், மாங்காய் சாதம், எள் சாதம், கத்தரிக்காய் சாதம், தக்காளி சாதம் என்று பல வகைகள் உண்டென்றாலும் தயிர் சாதத்தை கடைசியில் ஒரு விழுங்கு விழுங்கினால்தான் நிறைய பேருக்கு ஆத்ம திருப்தியே ஏற்படும். அந்தத் தயிர்சாதத்துக்குத் தொட்டுக்கொள்ள ஏற்ற பக்கத்துணை மாவடு ஊறுகாயா, மாங்காய்த்தொக்கா, நச்சென்ற காரத்துவையலா அல்லது வெறும் சின்ன வெங்காயமா என்ற ஒரு debate  எப்போதும் சாப்பாட்டுப்பிரியர்களிடையே நடக்கும் வழக்கம் இருக்கிறது. மாங்காயை சிறு சிறு துண்டுகளாய் நறுக்கி அதில் பச்சை மிளகாய், இஞ்சியைத் துருவிப்போட்டு உப்பும் சிறிது கலந்து சிறிது நேரம் வைத்திருந்து தயிர் சாதத்துடன் சாப்பிட்டால் வேறு பக்கத்துணையே வேண்டாமென்பார்கள் சிலர். என் ஓட்டு எப்போதுமே மாங்காய் தொக்கிற்குத்தான்!

நல்ல வெயில் கொளுத்தும் இந்த ஆனி மாதத்தில் தயிர் சாதம் போன்றதொரு அருமையான, ஆரோக்கியமான உணவு வேறேதுமில்லை. அதனால் தயிர் சாதம் பற்றித்தான் குறிப்பு கொடுக்கப்போகிறேன்.

தயிர் சாதம் என்பது வெறும் தயிரை மட்டும் கிளறி, கடுகு காயம் தாளித்து வைப்பதல்ல. அதை சுவை படச் செய்வதற்கு பல விஷயங்கள் இருக்கின்றன.


தயிர் சாதத்திற்கு தேவையான பொருள்கள்:

பச்சரிசி- 1 கப்

பால்- 1 கப்

தயிர்- 1 1/2 கப்
நல்லெண்ணெய்- 2 ஸ்பூன்

பெருங்காயத்துண்டு- சிறியது

கடுகு- 1 ஸ்பூன்

பச்சை மிளகாய்-2

இஞ்சி- ஒரு சிறு துண்டு

கறிவேப்பிலை- 1 கொத்து

தேவையான உப்பு
 செய்முறை:
 பாலை தண்ணீர் சேர்க்காமல் காய்ச்சி ஆற வைக்கவும். நல்ல பால் கிடைக்காதவர்கள் ஒரு கப் தண்ணீரில் 5 ஸ்பூன் பால் பவுடர் சேர்த்துக் கரைத்து காய்ச்சலாம். சுவையில் எந்த மாற்றமும் இருக்காது. தமிழ்நாட்டில் அமுல்யா பால் பவுடர் நன்றாக இருக்கும். வெளி நாட்டில் இருப்பவர்கள் நிடோ, ரெயின்போ, டானா என்று எந்த பால் பவுடர் வேண்டுமானாலும் சேர்த்துக் காய்ச்சலாம்.
 பச்சரிசியை நன்கு கழுவி பாலும் 2 கப் நீரும் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.
 ஆறியதும் உப்பு, தயிர் கால் கப் சேர்த்து நன்கு குழையக் கலக்கவும்.
 சாதம் குழைவாகவும் தளர்வாகவும் இருக்க வேண்டும்.
 சாதத்தை இரவு அப்படியே வைக்கவும்.
 காலையில் சாதத்தில் எல்லா தயிரையும் கலந்து கிளறவும்.
 பச்சை மிளகாயையும் இஞ்சியையும் சற்று பெரிய துண்டுகளாக அரிந்து சேர்க்கவும்.
 கறிவேப்பிலையைக் கிள்ளிப்போடவும்.
 போதிய உப்பை சேர்த்துக் கிளறவும்.
 ஒரு சிறிய வாணலியில் நல்லெண்ணெயை ஊற்றி அடுப்பில் வைக்கவும்.

எண்ணெய் சூடானதும் கடுகைப்போடவும்.
 கடுகு வெடித்ததும் காயம் போட்டுப் பொரிந்ததும் தயிரில் இந்தத் தாளிதத்தைக்கொட்டவும்.
 நன்கு கலந்து சிறிது நேரம் வத்திருந்து பிறகு உபயோகிக்கவும்.

பின்குறிப்பு:

பொதுவாய் தயிர் சாதத்தில் காரட், சிறிய வெங்காயம், மாதுளை முத்துக்கள் சேர்ப்பதுண்டு. அவைகளை சேர்ப்பது தயிர் சாதத்தின் சுவையை சிறிது மாற்றி விடும்.
 மாங்காய்த்துண்டுகள் மட்டுமே சுவையை மாற்றாமலிருக்கும்.





35 comments:

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

தயிர்சாதம் சூப்பர் !

மாதுளை முத்துக்கள் வேண்டாம் !!

சரி..பச்சை திராட்சை போடலாமா?

அது சுவையை மாற்றுமா?

MARI The Great said...

வாசம் தூக்குகிறது,

pudugaithendral said...

நானும் இப்படித்தான் தயிர்சாதம் செஞ்சு வைப்பேன். பசங்களுக்கு ரொம்ப பிடிக்கும். தயிரை கலந்து தயிர் சாதம் செய்வதை விட இதில் ருசி அதிகம். தொட்டுக்கொள்ளக்கூட எதுவும் வேண்டாம்.

இமா க்றிஸ் said...

வித்தியாசமாக இருக்கிறது இந்த தயிர்சாதம். சுவை பிடிக்கும் என்று தோன்றுகிறது. நிச்சயம் முயற்சித்துப் பார்ப்பேன்.

கீதமஞ்சரி said...

நினைத்தாலே வாயூற வைக்கும் தயிர்சாதமும் மாங்காய்த்தொக்கும். இதுவரை இந்த முறையில் தயிர்சாதம் செய்ததில்லை. செய்முறையைப் பார்த்தாலே ருசிக்கிறது. பகிர்வுக்கு நன்றி மனோ மேடம்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

தங்களின் செய்முறைப் பக்குவத்தால் தயிர் சாதம் தனி ருசி பெற்றுள்ளது.

பகிர்வுக்கு நன்றிகள், மேடம்.

Angel said...

அக்கா !!! இது எனக்கு மிகவும் பிடித்த உணவு .என்னதான் வெறுமனே தயிர் கலந்து சாப்பிட்டாலும் இந்த முறையில் செய்தால்தான் நன்கு ருசியாக இருக்கும் .
எனக்கு பிடித்த ரெசிப்பி .மிக்க நன்றி .இன்றிரவே ரெடி செய்ய போகிறேன்

கே. பி. ஜனா... said...

Timely recipe!

'பரிவை' சே.குமார் said...

நல்ல குறிப்பு அம்மா.
பால் சேர்த்து செய்ததில்லை. அடுத்த முறை பால் சேர்த்து செய்து பார்க்கலாம்.

வெங்கட் நாகராஜ் said...

இப்பவே தயிர்சாதம் சாப்பிடத் தோன்றுகிறது.... ஆனா தோசை சாப்பிட்டு வயிறு ஃபுல்.... :)

நாளை செய்து பார்த்துடறேன்....

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு அன்பு நன்றி சகோதரர் ராமமூர்த்தி! நிச்சயம் திராட்சை கூட ஒரு அந்நியப்பொருள் தான்! அதோடு தயிர் சாதத்தை சேர்த்து சாப்பிட்டுப் பாருங்களேன், தயிர் சாதத்தின் சுவை தெரியாது!

ஹுஸைனம்மா said...

தயிர்சாதம் மை ஃபேவரைட்!! அதிலும் இஞ்சி சேர்த்து சாப்பிடும்போது... ஸ்ஸ்ஸ்...

பார்சல் கட்டவென்றால், இந்த முறையிலும் செய்வதுண்டு.

//அவைகளை சேர்ப்பது தயிர் சாதத்தின் சுவையை சிறிது மாற்றி விடும்.//
மிக உண்மை!!

Yaathoramani.blogspot.com said...

எது சாப்பிட்டாலும் முடிவில்
தயிர் சாதத்துடன் முடித்தால்தான்
விருந்து நிறைவுற்ற மன நிலையைத் தருவது நிஜம்
அதற்கு சரியான பக்குவம் தந்தமைக்கு
மனமார்ந்த நன்றி

மனோ சாமிநாதன் said...

உண்மை தான். நம் தமிழ் நாட்டில் தயிர் சாதம் சாப்பாட்டில் கடைசியில் கொஞ்சமாவது சேர்த்துக்கொண்டால்தான் மனம் நிறைவுறும். கருத்துக்கும் வருகைக்கும் அன்பு நன்றி சகோதரர் ரமணி!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி ஹுஸைனம்மா! இஞ்சியையும் சேர்த்து சாப்பிடுவீர்களா?பாராட்டுப்பத்திரம் தான் உங்களுக்கு வழங்க வேண்டும்.

மனோ சாமிநாதன் said...

@// வரலாற்றுச் சுவடுகள்//
பாராட்டுதலுக்கு அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

@ புதுகைத் தென்றல்
//நானும் இப்படித்தான் தயிர்சாதம் செஞ்சு வைப்பேன். பசங்களுக்கு ரொம்ப பிடிக்கும். தயிரை கலந்து தயிர் சாதம் செய்வதை விட இதில் ருசி அதிகம். தொட்டுக்கொள்ளக்கூட எதுவும் வேண்டாம்.//

நீங்களும் இப்படி தயிர் சாதம் செய்வதறிய மகிழ்ச்சியாக இருக்கிறது! வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி!!

விச்சு said...

பசிக்குது.

Asiya Omar said...

மனோ அக்கா நான் சாதம் செய்த பின்பு பால் பாதி,கெட்டி தயிர் பாதி சேர்த்து மிக்ஸ் செய்து, பின்பு தாளித்து கொட்டுவேன்.சிறிய மாற்றம். உங்க முறை அருமை.

திண்டுக்கல் தனபாலன் said...

தயிர்சாதம் அருமை !

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை !

இனி தொடர்வேன். நன்றி !

ஸ்ரீராம். said...

தயிர் சாதம் ரெசிப்பி சூப்பர் . ஆனா பாருங்க சாதத்தை எடுத்தோமா மோர் விட்டுப் பிசைந்தோமா சின்ன காய்ந்த நார்த்தங்காத் துண்டு, அல்லது சின்ன வெங்காயம் + ஒரு குட்டி ப.மிளகாய் சேர்த்து நசுக்கி உப்பு சேர்த்துத் தொட்டுகிட்டோமான்னு இல்லாம எவ்வளவு வேலை! மோர் சாதத்துல அல்லது தயிர் சாதத்துல சும்மா வெறும் நாலைந்து சின்ன வெங்காயம் நறுக்கிப் போட்டு கலந்து பசங்களுக்கு ஸ்கூலுக்குக் கொடுத்தனுப்பினாப் போதும் பசங்க.. 'நாளைக்கும் எனக்கு அதுவே வைம்மா... நண்பர்களே எடுத்துச் சாப்பிட்டுட்டாங்க'ம்பாங்க !! :)))

Mahi said...

வெயிலுக்கேற்ற குறிப்பு! சாதத்துடன் பாலை சேர்த்து வேகவைப்பது புதிதாக இருக்கிறது. நல்ல ரிச் தயிர்சாதமாக இருக்கும் என நினைக்கிறேன். :)

மனோ சாமிநாதன் said...

அவசியம் முயற்சித்துப்பாருங்கள் இமா! வருகைக்கு அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

இனிமையான கருத்துரைக்கு அன்பு நன்றி கீதா!

மனோ சாமிநாதன் said...

அன்பான கருத்துரைக்கு இனிய நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

மனோ சாமிநாதன் said...

தயிர் சாதம் என் குறிப்புப்படி செய்து பார்த்து விட்டீர்களா ஏஞ்சலின்? எப்படி இருந்தது?

மனோ சாமிநாதன் said...

Thanks a lot for the nice compliment Mr.Jana!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் குமார்!

மனோ சாமிநாதன் said...

அவசியம் செய்து பார்த்து விட்டுச் சொல்லுங்கள் சகோதரர் வெங்கட் நாகராஜ்!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி விச்சு!

மனோ சாமிநாதன் said...

விரிவான கருத்துரைக்கு இனிய நன்றி ஆசியா!

மனோ சாமிநாதன் said...

முத்கல் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பான யோசனைக்கும் மனமார்ந்த நன்றி சகோதரர் தனபாலன்! விரைவில் நீங்கள் குறிப்பிட்டிருக்கிற யோசனையை பின்பற்றுகிறேன்.

Anonymous said...

ம்...ம்...நாவில் நீ ஊறுகிறது. மிகக நன்றி சகோதரி.
நல்வாழ்த்து.

வேதா. இலங்காதிலகம்.

சேகர் said...

தயிர் சாதம் சூப்பர்.. அடிக்குற வெயிலுக்கு இது போன்று தயிர் சாதம் ககுளுகுளுவென இருக்கும்..

ராமலக்ஷ்மி said...

பால் விட்டுப் பிசைந்து சிறிது தயிர் சேர்த்து செய்வோம். பாலிலேயே வேக வைப்பது அருமை. சுவையான குறிப்புக்கு நன்றி.

நல்ல பதிவுகள் என்றும் தொடர வாழ்த்துகிறது தங்களை அதீதம்:
http://www.atheetham.com/?p=1344