Monday, 21 May 2012

முத்துக்குவியல்கள்


இந்த முறை முத்துக்குவியல்கள் ஒரு விழிப்புணர்வு முத்தையும், ஒரு மருத்துவ முத்தையும் தாங்கி வருகின்றன.
கடந்த வாரம் படித்த ஒரு தகவல் தான் முத்துக்குவியலின் முதல் முத்தாக வருகிறது. பல கோடி ரூபாய்களை பரிசுத்தொகையை பரிசாகவும் மக்களின் ஆசையை முதலீடாகவும் வைத்து இன்றைக்கு சில தொலைகாட்சி நிகழ்ச்சிகள் எந்த அளவிற்கு பணம் புரட்டுகின்றன என்பதை இந்தத் தகவல்கள் புட்டு புட்டு வைக்கின்றன. இனி அதைப்பற்றி விளக்கமாக....
‘ மக்களின் ஆசையை, பலவீனத்தை மூலதனமாக்கி பல்வேறு தொலைகாட்சி சானல்கள் லாட்டரிக்கு இனையான கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன. ஏதாவது ஒரு பரிசு திட்டத்தை அறிவித்து குறிப்பிட்ட எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ் அனுப்புங்கள் என்று சொல்வதை ஏற்று பல லட்சம் பேர்கள் எஸ்.எம்.எஸ் அனுப்புகிறார்கள். அதில் கிடைக்கும் வருமானம், நிறுவனம் தரப்போகும் பரிசுத்தொகையைக் காட்டிலும் பல நூறு மடங்கு அதிகமாக உள்ளது என்பது நிறைய பேருக்குத் தெரிவதில்லை. 
சில சமயம், திரையில் ஒரு பாடலில் சில காட்சிகளை ஓட்டி விட்டு அது தொடர்பான கேல்வியைக் கேட்டு, அதற்கு விடையைக் கேட்கிறார்கள். எந்த ஒரு நபரும் மிக எளிதாக இதற்கான பதிலைக்கூற முடியும். இதில் சரியான விடை எதுவாக இருக்கும் என்பதையும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களே மறைமுகமாகக் கூறி விடுகிறார்கள். எனவே 5000 முதல் ஒரு லட்சம் வரையிலான பரிசுப்பணத்தினைப் பெற நேயர்கள் தொலைபேசியில் அழைக்கத் தொடங்கி விடுவார்கள். அது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும்போதே, கீழே ஒரு வரி ஓடிக்கொண்டிருக்கிறது. “ உங்கள் தொலைபேசி அழைப்பிற்கு ஒரு நிமிடத்திற்கு 10 ரூபாய் கட்டணம் உண்டு. அதிக நேரம் தொடர்பில் இருக்க விரும்பாதவர்கள் இணைப்பைத் துண்டித்து விடுங்கள்” என்பது தான் அது. திரையில் குறிப்பிட்டுள்ள எண்ணுக்கு நீங்கள் தொடர்பு கொண்டால் உடனே நீங்கள் பதிலைக்கூறி விட முடியாது. சில நிமிடங்க்ள் காத்திருப்புக்குப்பிறகே பதிலைக் கூற முடியும். நீங்கள் 2 நிமிடம் இணைப்பில் இருந்தால் உங்களுக்கு 20 ரூபாய் ஆகி விடும். இதில் ரூ.10 முதல் 14 ரூ வரை நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனத்திற்குப் போய் விடும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
ஒரு லட்சம் பேர் தொடர்பு கொண்டால்  மொத்த வருமானம் 20 லட்சம். நிகழ்ச்சி நடத்தும் நிறுவனத்திற்கு 14 லட்சம் கிடைக்கும். பாக்கி தனியார் தொலைபேசி நிறுவனத்துக்குப் போகும். இந்த 14 லட்சத்தில் பரிசுத் தொகை, மற்ற செலவுகள் போக, கொள்ளை லாபம் நிகழ்ச்சி நடத்தும் நிறுவனத்துக்கு கிடைக்கிறது. இப்படித்தான் கோடிக்கணக்கில் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டு, பல கோடி இலாபங்களை அள்ளுகின்றன தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள். சில தொலைகாட்சி நிறுவனங்கள், சானல்கள், அலைபேசி நிறுவனங்கள், தனியார் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கைகோர்த்து லாட்டரிக்கு இனையான கொள்ளையில் ஈடுபட்டு வருகிறார்கள். எஸ்.எம்.எஸ் மூலம் நடத்தப்படும் இந்த பலகோடி மோசடியை அரசு ஏன் வேடிக்கை பார்க்கிறது?’
இரண்டாவது ஒரு மருத்துவ உதவி பற்றியது.
பொதுவாய் சர்க்கரை வியாதியினால் உடலின் பல பாகங்கள் நாளடைவில் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. இதில் மிக முக்கியமானவை சிறுநீரகம், இதயம் மட்டுமே. சிறுநீரகம் பாதிக்கப்பட்டு செயலிழந்து போனால் மாற்றுச் சிறுநீரகம் பொருத்துவதற்கு அதிகம் செலவாவது மட்டுமல்ல, அதற்குத் தேவையான பொருத்தமான சிறுநீரகம் கிடைப்பதும் சுலபமானதில்லை. பாதிக்கப்பட்ட சிறுநீரகத்துடன் உயிருடன் வாழ வாரம் அதை இரண்டு முறையாவது சுத்தகரிக்கப்பட வேண்டியதாகிறது. ஒரு தடவை சுத்தகரிக்க, அதாவது டயாலிஸிஸ் செய்ய குறைந்தது இன்றைய மருத்துவ உலகில் 2500 ரூபாய் ஆகிறது. மாதம் சுமார் 20000 ரூபாய் தேவைப்படுகிறது. இந்த அளவு செலவு தனது மாத வருமானத்தில் செய்ய இயலாமல் கலங்குபவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டி அரவளைக்கிறது சென்னை நுங்கம்பாக்கம் அருகேயுள்ள மகாலிங்கபுரத்தில் செயல்பட்டு வருகிற SURAKSHA டயாலிஸிஸ் செண்டர். ஒரு தடவைக்கு 500 ரூபாய் மட்டுமே பெற்றுக்கொள்கிறது இந்த நிறுவனம். அதோடு டயாலிஸிஸ் செய்யத்தேவைப்படும் பொருள்களுக்கும் கட்டணம் எதையும் இந்த நிறுவனம் வசூலிப்பதில்லை.

38 comments:

Angel said...

இரண்டுமே அருமையான முத்துக்கள் அக்கா

Yaathoramani.blogspot.com said...

இரண்டு தகவல்களும் அவசியம் அனைவரும்
அறிந்து கொள்ளவேண்டியவை
பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி

vanathy said...

நல்ல தகவல்கள். பகிர்ந்தமைக்கு நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

முத்தான தகவல்கள்.. பாராட்டுக்கள்

சீனு said...

ஏமாறும் கூட்டம் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இறுகத் தானே செய்வார்கள். நம் மக்கள் என்று தான் திருந்துவார்களோ. மருத்துவம் முத்தான முத்து.

Asiya Omar said...

முத்துக்கள் இரண்டும் நல்ல விழிப்புணர்வுள்ள பயனுள்ள பகிர்வு மனோ அக்கா.

ஸாதிகா said...

அருமையான தகவல்கள்.இரணடாவது தகவல் பாதிக்கப்பட்டோருக்கு கண்டிப்பாக மிகவும் பிரயோஜனமாக இருக்கும்.

குறையொன்றுமில்லை. said...

முதல்முத்து தொலைக்காட்சிகள் எப்படி எல்லாம் ஜனக்களை முட்டாளடிக்கிரார்கள் என்பதை தெளிவாக சொல்கிரது. அப்படியும் நம்ம ஜனங்க எங்க திருந்துராங்க.இரண்டாவது முத்தும் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ள தகவல். சென்னையில் உள்ளவர்களுக்கு மட்டும்தானே பயன்படும்.

MANO நாஞ்சில் மனோ said...

அருமையான தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி மட்டுமில்லை அந்த நிறுவனத்துக்கு என் வாழ்த்துக்களையும் சொல்லிக்கிறேன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

இன்று தந்துள்ள முத்துக்கள் இரண்டுமே மிகச்சிறப்பானவை. பயனுள்ளவை. விழிப்புணர்வு தருபவை. பாராட்டுக்கள்.

Under the Mango Tree said...

the second part is very very useful.the first part makes us aware of the true happenings of the commercial world.

'பரிவை' சே.குமார் said...

இரண்டுமே அருமையான முத்துக்கள் அம்மா...

middleclassmadhavi said...

Necessary pearls! Thanks

pudugaithendral said...

நல்ல தகவல்கள். மிக்க நன்றி

கீதமஞ்சரி said...

ஏமாற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களின் மோசடியை நினைத்து ஆதங்கப்படும் வேளையில் மனதுக்கு இதம் தரும் மருத்துவ செய்தி கண்டு மகிழ்ச்சி உண்டாகிறது. எத்தனை வசதியற்றோர் இதனால் பயன்பெறக்கூடும்! அவர்களது தொண்டு மிகவும் பாராட்டுக்குரியது. பகிர்வுக்கு நன்றி மேடம்.

மனோ சாமிநாதன் said...

இனிமையான பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி ஏஞ்சலின்!

மனோ சாமிநாதன் said...

இனிய க‌ருத்துரைக்கு அன்பான நன்றி சகோதரர் ரமணி!!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கும் வருகைக்கும் அன்பு நன்றி வானதி!

மனோ சாமிநாதன் said...

இனிமையான பாராட்டுக்களுக்கு அன்பான நன்றி ராஜராஜேஸ்வரி!

மனோ சாமிநாதன் said...

விரிவான பின்னூட்டத்திற்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் சீனு!

மனோ சாமிநாதன் said...

க‌ருத்துரைக்கு இனிய‌ ந‌ன்றி ஆசியா!

மனோ சாமிநாதன் said...

அன்பு நன்றி ஸாதிகா! நானும் இந்த டயாலிஸிஸ் தகவல் படித்த போது இது எத்தனையோ பேருக்கு உபயோகப்பட வேண்டுமே என்றெண்ணித்தான் இந்தத் தகவலை இங்கு பதிவாய் எழுதினேன். யாராவது ஒருத்தருக்கு உபயோகமாக இருந்தால்கூட அது எத்தனை மன‌திருப்தியான விஷயம்!

மனோ சாமிநாதன் said...

ஆமாம் லக்ஷ்மிம்மா! சென்னையில் மட்டுமல்ல, இதைப்படிக்கும் யாராவது ஒருத்தருக்கு உபயோகமாயிருந்தாலும் அது எத்தனை நல்ல விஷயம் என்றெண்ணித்தான் இந்தத் தகவலை எழுதினேன்!

மனோ சாமிநாதன் said...

உங்கள் வாழ்த்துக்கள் மனதுக்கு இதமளிக்கிறது சகோதரர் நாஞ்சில் மனோ!!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்களுக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

மனோ சாமிநாதன் said...

Under the Manogo tree said:
//the second part is very very useful.the first part makes us aware of the true happenings of the commercial world//

Thanks a lot for the warm feedback!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் குமார்!!

மனோ சாமிநாதன் said...

Thank you very much for the nice feedback Madhavi!!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கும் வருகைக்கும் அன்பு நன்றி புதுகைத் தென்றல்!

காமாட்சி said...

நல்ல முத்தாகத்தான் அளித்திருப்பது. அணிந்து ,தெறிந்து கொள்ள,உதவி பெற்றுக்கொள்ள அழகான முத்துச் சிதறல்.

நிலாமகள் said...

முத‌ல் முத்து ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்டோரை உறுத்த‌ட்டும்! இர‌ண்டாவ‌தை எங்கோ ப‌டித்திருக்கிறேன் ச‌கோ... குறிப்பிட்ட‌ எண்ணிக்கை ம‌ட்டுமே அவ‌ர்க‌ளால் இய‌ன்ற‌தென்று... இருப்பினும் தொட‌ர்பு கொள்ளும் இய‌லாதோருக்கு அருமையான‌ ப‌ல‌ன‌ளிக்க‌ வ‌ல்ல‌ அபூர்வ‌ முத்து தான்! இல்லாமையால் இறுதி நாட்க‌ளை அரும்பாடுப‌ட்டு க‌ழிக்கும் ஒருசில‌ரேனும் ப‌ல‌ன‌டைவ‌ர்.

ஸ்ரீராம். said...

நல்ல இரு தகவல்கள். குறிப்பாக இரண்டாவது தகவல் முதல் தகவல் ஏற்கெனவே படித்திருக்கிறேன்.
இரண்டாவது தகவல் குறித்துக் கொண்டேன். தேவைப் படுபவர்களுக்குச் சொல்ல. நன்றி.

Anonymous said...

மிக நல்ல தகவல்கள் இரண்டும். நல்வாழ்த்து சகோதரி.
வேதா. இலங்காதிலகம்.

மனோ சாமிநாதன் said...

முதல் வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி காமாட்சி!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பார்ந்த நன்றி நிலா!

மனோ சாமிநாதன் said...

இரண்டாவது தகவலைக் குறித்து வைத்துக்கொண்டதற்கு அன்பு நன்றி ஸ்ரீராம்! இப்படித்தான் இந்தத் தகவல் சிலருக்காவது உபயோகமானதாக இருக்க வேண்டுமென்று விரும்பினேன்!

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்கும் கருத்துக்கும் அன்பு நன்றி வேதா!

VijiParthiban said...

இரண்டு கருத்துக்களுமே மிகவும் பயனுள்ள அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய கருத்தான முத்துக்கள் நன்றி அக்கா..