Monday, 14 May 2012

சமையல் குறிப்பு முத்துக்கள்


குறிப்பு முத்துக்களில் இன்று சமையல் சார்ந்த சில முக்கிய குறிப்புக்கள் இடம் பெறுகின்றன. நாம் அன்றாடம் அதிகமாகப் புழங்கும் சமையலறையில் இது போன்ற சின்ன சின்ன குறிப்புகள் சில முக்கியமான சமயங்களில் பெரிதும் உபயோகமாக இருக்கின்றன. இனி குறிப்புகள்......  


1.     உப்பு போட்டு வைக்கும் பாத்திரத்தில், அதன் அடியில் சிறிது அரிசியைத் தூவி அதன் மேல் உப்பை போட்டு வைத்தால் உப்பில் ஈரம் கசியாது.

2.     மீனைக்கழுவும்போது 1 மேசைக்கரண்டி உப்பைச் சேர்த்து கழுவி, பிறகு ஒரு ஸ்பூன் வினீகர் சேர்த்துக் கழுவினால் மீனின் நாற்றம் இருக்காது.


3.     சீதாப்பழ விதைகளை வெயில் நன்கு காயவைத்து பருப்பு, அரிசி டப்பாக்களில் போட்டு வைத்தால் புழு பூச்சிகள் அண்டாது.



4. வீட்டில் ஈ தொல்லை அதிகமாய் இருந்தால் அங்கங்கே புதினா இலைகளை போட்டு வைத்தால் ஈக்கள் வராது.



5. முருங்கைக்காய்களை செய்தித்தாளில் சுற்றி ஃபிரிட்ஜில் வைத்தால் அதிக நாட்களுக்கு பசுமையாகவே இருக்கும்.



6. பொரித்த அப்பளங்கள் நமுத்துப் போய் விட்டால், அவற்றை வெறும் வாணலியில் சிறிது வறுத்து தேங்காய், புளி, பச்சை மிளாகாய், கறிவேப்பிலை சேர்த்து அரைத்தால் அத்தனை சுவை! சில அப்பள வகைகளில் உப்பு அதிகம் இருக்கும். அதனால் உப்பு மட்டும் குறைவாகப்போட்டு அரைக்கவும். இதே போல, நமுத்துப்போன அப்பளங்களுடன் பச்சை மிலகாய், தேங்காய்த்துருவல், துளி இஞ்சி சேர்த்து கொரகொரப்பாக அரைத்து தயிரில் சேர்ட்து கலக்கினால் சுவையான அப்பளப்பச்சடி தயார்!!



7. குழம்பிலோ குருமாவிலோ காரம் அதிகமாகி விட்டால் 1 மேசைக்கரண்டி ஓட்ஸை குழைய வேக வைத்து அதில் சேர்த்தால் காரமும் தெரியாது, சுவையும் மாறாது.



8. சின்ன வெங்காயத்தின் தோலை சுலபமாக உரிக்க, முதல் நாளே அவற்றை ஃபிரிட்ஜில் வைத்து மறு நாள் உரிக்கவும். உரிக்க சுலபமாக வரும்.

9. புளித்தண்ணீரில் கையை நனைத்து விட்டு வெண்ணெயை கையிலெடுத்தால் கையில் வெண்ணெய் ஒட்டாமல் வரும்.

10. உப்பு கலந்த வெந்நீரில் துணியை நனைத்து டைனிங் டேபிளைத் துடைத்தால் ஈக்கள் வந்து மேசையில் அமராது.

படங்கள் உதவி: கூகிள் தேடுபொறி





     




41 comments:

ராமலக்ஷ்மி said...

அறிந்திராத உபயோகமான குறிப்புகள். நன்றி.

Usha Srikumar said...

Nice tips...

குறையொன்றுமில்லை. said...

நல்ல குறிப்புகள். கறிவேப்பிலையை கசக்கி டைனிங்க் டேபிளில் வைத்தாலும் ஈ வராது

இராஜராஜேஸ்வரி said...

பயனுள்ள குறிப்புகளுக்கு நன்றிகள்.. பாராட்டுக்கள்..

MANO நாஞ்சில் மனோ said...

என் வீட்டம்மாவுக்கு உங்கள் இந்த பதிவை படித்து காட்டினேன் நல்ல நல்ல டிப்ஸ் என்கிறாள் நன்றி...!!!!

Ananya Mahadevan said...

சூப்பர் டிப்ஸ்! ஒரு டவுட்டு. அரிசியில் எறும்பு வருகிறதே.. ஏதோ ஒரு பத்திரிக்கையில் காய்ந்த மிளகாயை போட்டு வைத்தால் எறும்பு அண்டாது என்று படித்துவிட்டு கா.மிளகாயை போட்டேன். ஆனால் பயனில்லை. எறும்பு வந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கு ஏதேனும் டிப் கொடுக்க முடியுமா?ப்ளீஸ்?

ஹுஸைனம்மா said...

பல டிப்ஸ்கள் அறிந்திராதவை. செயலப்டுத்திப் பார்க்கிறேன். நன்றிக்கா.

ஸாதிகா said...

மிகவும் உபயோகமான குறிப்புக்கள்..மனதில் இறுத்திக்கொள்ள வேண்டிய குறிப்புக்கள்,பகிர்வுக்கு நன்றிக்கா.

ஸாதிகா said...

மிகவும் உபயோகமான குறிப்புக்கள்..மனதில் இறுத்திக்கொள்ள வேண்டிய குறிப்புக்கள்,பகிர்வுக்கு நன்றிக்கா.

Menaga Sathia said...

அனைத்தும் பயனுள்ள குறிப்புகள்...சீதாப்பழ விதையை சீயக்காய் அரைக்கும் போது அரைத்து தலைக்கு குளித்தால் பேன்,பொடுகு தொல்லை இருக்காது,கூந்தலும் பளபளப்பா இருக்கும்...

ரிஷபன் said...

பயனுள்ள குறிப்புகளுக்கு நன்றி!

Asiya Omar said...

அத்த்னையும் அன்றாட வாழ்க்கையில் உபயோகமாகும் டிப்ஸ். நல்ல பகிர்வு மனோ அக்கா.

vanathy said...

very good tips akka.

'பரிவை' சே.குமார் said...

உபயோகமான தகவல்கள்.

இமா க்றிஸ் said...

உபயோகமான குறிப்புகள் அக்கா.

1 & 5 ஊரிலிருந்த போது இப்படித்தான் செய்வேன். குறித்து வைத்துக் கொள்கிறேன்.

சசிகலா said...

தங்கள் பதிவொன்றை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன் .

நிலாமகள் said...

அறிந்த‌தும் தெரிந்த‌தும் ஆயிர‌மிருந்தாலும் அனைவ‌ருக்கும் அவ்வ‌ப்போது அவ‌சிய‌மாகிற‌து இவையெல்லாம்... ந‌ன்றி ச‌கோ...

Anonymous said...

அருமையான குறிப்புகள் பயனுடைத்து. நல் வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி ராமலக்ஷ்மி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கும் முதல் வருகைக்கும் இனிய நன்றி உஷா!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கும் புதியதொரு குறிப்புக்கும் அன்பு நன்றி லக்ஷ்மிம்மா!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கும் பாராட்டுக்கும் இனிய நன்றி ராஜராஜேஸ்வரி!!

மனோ சாமிநாதன் said...

உங்கள் மனைவிக்கு என் அன்பான நன்றியைத் தெரிவித்து விடுங்கள் நாஞ்சில் மனோ!!

மனோ சாமிநாதன் said...

அனன்யா! ரொம்ப நாட்கள் கழித்து உங்களை இங்கே பார்க்கிறேன். மிக்க மகிழ்ச்சி. துபாயில் நாம் சந்தித்ததும் உங்களின் மெயில்களும் நினைவில் எழுகின்றன.
காய்ந்த வேப்பங்கொட்டைகளை ஒரு துணிப்பையில் போட்டுக்கட்டி அரிசி வைத்திருக்கும் டின்களில் போட்டு வைத்தால் புழு பூச்சிகள் அண்டாது. வசம்பு துண்டு ஒன்றை போட்டு வைத்தாலும் பூச்சி வராது என்பார்கள். நான் அதை பரிசோதித்துப் பார்த்ததில்லை.

மனோ சாமிநாதன் said...

செயல்படுத்திப் பார்த்து விட்டு சொல்லுங்கள் ஹுஸைனம்மா! வருகைக்கு அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு அன்பு நன்றி ஸாதிகா!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கும் புதியதொரு குறிப்புக்கும் அன்பு நன்றி மேனகா!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு இனிய நன்றி வானதி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ரிஷபன்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு அன்பு நனறி சகோதரர் குமார்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு மனமார்ந்த நனறி ஆசியா!!

மனோ சாமிநாதன் said...

நீங்கள் ஏற்கனவே இந்த குறிப்புகள் சிலவற்றை ஊரில் செய்து பார்த்திருப்பது மகிழ்வைத் தருகிறது இமா! வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

அழகான கருத்துரைக்கு இனிய நன்றி நிலாமகள்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி வேதா!

மனோ சாமிநாதன் said...

உங்களின் வருகைக்கும் என்னை வலைச்சரத்தில் அறிமுகம் செய்து வைத்திருப்பதற்கும் இதயங்கனிந்த நன்றி சசிகலா!

அனைவருக்கும் அன்பு  said...

அவசிய குறிப்புகள் படங்களோடு கண்ணுக்கு குளிர்ச்சியை தருகிறது தொடருங்கள் பயணத்தை வாழ்த்துக்கள்

கீதமஞ்சரி said...

எதையென்று குறிப்பிட? பகிர்ந்திருக்கும் அத்தனையும் மிக மிக பயனுள்ள குறிப்புகள். மிகவும் நன்றி மேடம்.

VijiParthiban said...

மிகவும் அருமையான குறிப்புக்கு நன்றி அக்கா . நானும் இதை மேற்கொள்கிறேன் அக்கா.

VijiParthiban said...

மிகவும் நல்ல குறிப்புகள் நன்றி அக்கா.

ம.தி.சுதா said...

அட எனக்கும் உதவும் போலா இருக்கே..

Jaleela Kamal said...

எல்லா குறிப்புகளும் அருமை