Tuesday 17 January 2012

குழந்தையென்னும் பொக்கிஷம்!!

சமீப காலமாக, குழந்தையின்மை என்ற பிரச்சினை அதிகமாக இருக்கிறது. அது தொடர்பான பிரச்சினைகள், ஏசல்கள், கண்ணீர்கள், சிகிச்சைகள் என்று ஒவ்வொருத்தரின் கதைகளை கேட்கும்போது மலைப்பாக இருக்கிறது. எல்லோருக்கும் தாய்மை என்ற வரம் உடனேயே கிடைத்து விடுவதில்லை. அந்தக் காலத்தில் கதைகளில் ஏழு கடல் தாண்டி, ஏழு மலைகள் தாண்டி, பல இடர்கள் தாங்கி கதாநாயகன் பொக்கிஷத்தைக் கைப்பற்றுவது போல முடிவு வரும். அது போல ஒரு குழந்தை பெற ஒவ்வொரு பெண்ணும் பல சோதனைகளை இந்த காலத்தில் தாங்க வேண்டியிருக்கிறது.





அப்படி அற்புதமாய்க் கிடைத்த அந்தக் குழந்தையென்னும் பொக்கிஷம் இன்றைக்குக் கண்ணும் கருத்துமாய் பாதுகாக்கப்படுகிறதா? மலர் போன்ற குழந்தையின் மனசுக்கு பாதுகாப்பும் அன்பும் புரிகிற மாதிரி நம்பிக்கை ஊட்டப்படுகிறதா? ? அது தான் இந்தப் பதிவின் கேள்வி!!

நான் வசிக்கும் இந்த ஐக்கிய அரபுக் குடியரசில் பலதரப்பட்டவர்கள், பல நாட்டவர்கள் எல்லோருமே வசிக்கிறார்கள். இங்கே பெரும்பாலான கணவர்கள் அலுவலகத்தில் வேலை செய்ய, பொருளாதாரச் சிக்கல்களை முன்னிட்டோ, அல்லது தேவைகளை முன்னிட்டோ அவர்களின் மனைவிகள் வெளியில் வேலை செய்கிறார்கள். நம் ஊரைப்போலத்தான் இது என்றாலும் நம் ஊரைப்போல தனியே இருக்கும் குழந்தைகளை கவனித்துக்கொள்ள உற்ற உறவுகள் அருகிலிருப்பதில்லை. ஊரிலிருந்து பெற்றவர்களையோ, உற்றவர்களையோ வரவழைத்துக்கொள்ள எல்லோருக்கும் பொருளாதார வசதிகள் இங்கே இருப்பதில்லை. இந்த சூழ்நிலையில் முக்கியமாக பாதிக்கப்படுவது குழந்தைகள் தான்.  தனிமை பல மன மாறுதல்களை அவர்களிடம் ஏற்படுத்துகிறது. பல விபரீத எண்ணங்களையும் ஏற்படுத்துகிறது. வேலை செய்து வந்த அலுப்பில் கணவனும் மனைவியும் சோர்ந்து படுத்து விட, அப்போதும் குழந்தைக்குத் துணை தனிமை தான் அல்லது தொலைகாட்சி தான். தொலைக்காட்சியின் பாதிப்பு அவர்களை பல விதங்களில் மாற்றி ஆழ்மனத்தில் சிக்கல்களை உண்டாக்குகிறது.



சமீபத்தில் இங்கு வசிக்கும் என் சினேகிதியின் பெண் சொன்ன தகவல் மனதை அப்படியே உறைய வைத்தது. அவரின் மகனோடு படிக்கும் 11 வயது மாணவன் அந்தப் பையன். தாயார் பள்ளியில் ஆசிரியையாக பணி புரிவதால் தினமும் பள்ளியிலிருந்து மகன் வந்து 45 நிமிடங்கள் கழித்துத்தான் அம்மா தன் பள்ளியிலிருந்து வந்து சேருவார். அன்றைக்கும் அதே போல சீக்கிரமே வீட்டுக்கு வந்து விட்ட பையன் தன் கராத்தே பெல்டை எடுத்து அதன் ஒரு புறத்தை வாசல் கதவின் உள்புறத்திலுள்ள கொக்கியில் மாட்டி [ பொதுவாய் எல்லோரும் ஏதேனும் பைகளை மாட்ட உள் கதவில் கொக்கி பதித்திருப்பதுண்டு.] மறுபுறத்து கொக்கியை தன் கழுத்தில் மாட்டிக் கொண்டு ஒரு நாற்காலியில் ஏறி நின்று கொண்டு தான் அடிக்கடி தொலைக்காட்சியில் பார்த்து ரசிக்கும் ‘சூப்பர்மேன்’ போல தாவிக் குதிக்க, கழுத்தில் மாட்டியிருந்த கராத்தே பெல்ட்டின் கூர்மையான நுனி அவன் கழுத்தைத் தாக்கி, முக்கால் மணி நேரம் கழித்து அவனின் தாயாரும் மற்றவர்களும் கதவை உடைத்துக் கொண்டு வந்து பார்த்த போது அவன் நினைவிழந்து கிடந்தான். மருத்துவ மனைக்குச் செல்லும் வழியில் அவன் உயிர் பிரிந்து விட்டது. அவன் தாயாரின் இரத்தக்கண்ணீருக்கு பதிலேது?

இன்னொன்றும் அவர் நேரே பார்த்தது. இங்கேயெல்லாம் பிளாட்பாரங்களில் அங்கங்கே வண்டிகளையும் பெராம்புலேட்டர்களையும் தள்ளிச் செல்வதற்காக சற்று சரிவான வழிகள் உண்டு. சாலையில் இறங்க இது போல வசதி செய்து வைத்திருப்பார்கள். அந்த மாதிரி ஒரு ஸ்லோப் அருகே ஒரு பெராம்புலேட்டரில் ஒரு பச்சிளங்குழந்தை படுத்திருக்க, அதைச் சுற்றிலும் நிறைய பைகள் மாட்டியிருந்தனவாம். யாராவது போகிற போக்கில் இலேசாக இடித்தால் போதும் அந்த வண்டி கீழே சரிவில் இறங்கி சாலைக்கு வந்து விடும். பல கார்கள் வேகமாகப் போகும் அந்த சாலையில் அந்த வண்டி இறங்கினால்.. .. ..நினைத்துப்பார்க்கவே பயமாக இருக்கிறது. அந்தக் குழந்தையின் பெற்றோர் எங்கே என்று என் சினேகிதியின் பெண் தேடிப்பார்க்கையில் அவர்கள் சிறிது தூரத்தில் நிற்கும் டாக்ஸி ஒட்டுனரிடம் பேரம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்!! இந்தக் குழந்தையைப்பற்றிய கவலையோ பயமோ இல்லாமல்!! எத்தனை அஜாக்கிரதை! என் சினேகிதியின் பெண் “ எப்படி இருக்கிறார்கள் பாருங்கள்! குழந்தையென்பது வரமல்லவா? எல்லோருக்குமா நினைத்தவுடன் குழந்தை பிறக்கிறது? ஒவ்வொருத்தர் எத்தனை சோதனைகளை சந்தித்து குழந்தையைப் பெறுகிறார்கள்?  இப்படி அலட்சியமாக விடுவதற்கா? “ என்று குமுறியது இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.



என் உறவினர் சொன்ன மற்றுமொரு தகவல். குழந்தை தூங்கி விட்டதே என்று அப்படியே குழந்தையை காரில் படுக்க வைத்து ஏஸியையும் ஆன் பண்ணி விட்டு, பெற்றோர் சூப்பர்மார்க்கெட் உள்ளே ஷாப்பிங் செய்யச் சென்று விட்டார்கள். கார் பூட்டாது இருப்பதை கவனித்த ஒருவன் குழந்தையை கவனிக்காமல் வேகமாக வெளியே ஓட்டிச் சென்றிருக்கிறான். குழந்தை விழித்துக் கொண்டு சப்தமிட்டதும் அப்படியே காரை விட்டு விட்டு ஓடி விட, அப்புறம் போலீஸ் வந்து, பெற்றோருக்கு தகவல் சொல்லி அவர்கள் வருவதற்குள் அந்தக் குழந்தை எந்த அளவு படாத பாடு பட்டிருக்கும்?

அதேபோல இங்கே வேற்று நாட்டவர்கள் இருந்த ஒரு பிளாட்டில் நெஞ்சைக் கலங்க வைக்கும் ஒரு நிகழ்வு! குழந்தை திறந்திருந்த ஜன்னல் வழியே ஷுவைத் தூக்கி எறிந்திருக்கிறது. அந்த குழந்தையின் மூளையில்லாத தாயார், ஷுவை எடுப்பதற்காக, அப்படியே குழந்தையை விட்டு விட்டு 16ஆவது மாடியிலிருந்து இறங்கி ஷுவை எடுத்திருக்கிறார். எடுத்துக் கொண்டு நிமிரும்போது, திறந்திருந்த ஜன்னல் வழியே அந்த குழந்தை 16 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து ஒரு விநாடியில் அவர் கண்ணெதிரே இறந்து போனது.



குழந்தையென்னும் அற்புதமான பொக்கிஷத்தை எத்தனை பேர் தன் உயிருக்கும் மேலாக பாதுகாக்கிறார்கள்? எத்தனை பேர் கண்ணும் கருத்துமாய் அதன் ஒவ்வொரு பருவத்திலும் கவனித்து, நற்பண்புகளை சொல்லிக்கொடுத்து ஒரு முழுமையான மனிதனாக உருவாக்குகிறார்கள்? மனதை மிகவும் வேதனையுடன் யோசிக்க வைக்கிறது இந்த நிகழ்வுகள்!!

படங்கள் உதவி: கூகிள்

34 comments:

Angel said...

//அற்புதமாய்க் கிடைத்த அந்தக் குழந்தையென்னும் பொக்கிஷம் இன்றைக்குக் கண்ணும் கருத்துமாய் பாதுகாக்கப்படுகிறதா?
மலர் போன்ற குழந்தையின் மனசுக்கு பாதுகாப்பும் அன்பும் புரிகிற மாதிரி நம்பிக்கை ஊட்டப்படுகிறதா? //


மனதே உடைந்து போனதக்கா ,அந்த ஷூவின் விலை கேவலம் சில நூறு ருபாய் தானிருக்கும் அந்த பச்சிளம் குழந்தை நெஞ்சே வெடிக்கும் போலிருக்கு .இன்றும் கூட நியூசில் படித்தேன் அமீரகத்தில் ஒரு குடும்பம் தற்கொலை தந்தையும் ஐந்து வயது மகளும் மரணம்(suicide) .அந்த சின்ன மலர் என்ன பாவம் செய்தது .அந்த தகப்பனுக்கு என்ன உரிமை அந்த உயிரை கொல்ல.

இங்கே நேற்று எங்க பக்கத்து வீட்டில்நேற்றுஒரேசத்தம்.பிரிட்டிஷ்காரர்கள் ,அவங்க மகள் எங்க மகள் வயதுதான் என்னிடம் வந்து இன்று சொன்னா "" நேற்றிரவு நான் மிகுந்த சத்தம் போட்டேன் என்னை மன்னியுங்க இதனை காலம் living together ஆக இருந்த தாயும் தந்தையும் பிரிந்து விட்டனர் ஆனால் எனக்கு அவங்க ஒன்றாக எங்களுடன் இருக்கணும் ஆனா என் பெற்றோர் புரிந்துகொள்ள மாட்டேங்கறாங்க "".அந்த பிள்ளையை பார்த்தா பரிதாபமா இருந்தது .

vimalanperali said...

குழந்தையின் உலகம் எப்போதுமே தனிதான்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

தாங்கள் சுட்டிக்காட்டியுள்ள ஒவ்வொரு நிகழ்வும், படிக்கும்போதே என் மனதை மிகவும் பிசைந்து கண்ணில் கண்ணீர் வரவழைப்பதாகவே உள்ளது.

குழந்தைகள் விஷயத்தில் பெற்றோர்கள், குறிப்பாக அந்தத் தாய் மிகவும் கவனமாகவேதான் இருக்க வேண்டும்.

பெற்றால் மட்டும் போதுமா? கஷ்டப்பட்டு பெற்ற அந்தக் குழந்தையைப் பேணிக்காப்பதும் மிக மிக முக்கியமே, என்பதை வெகு நன்றாகவே ஒரு சில உதாரணங்களுடன் சொல்லியுள்ளீர்கள்.

விழிப்புணர்வு ஏற்படுத்தும் நல்ல பதிவு.
பாராட்டுக்கள். நன்றிகள். vgk

==========================

[திருச்சி அருகே காவிரியை ஒட்டி கொள்ளிடம் என்று ஒரு நதி உள்ளது.

காவிரி நீர்வரத்து அதிகரிக்கும் போது, இந்த கொள்ளிடத்திற்கு நீர் பிரித்து விடுவதுண்டு.

மற்ற நாட்களில் இது நீர் இல்லாமல் வரண்ட மணலுடன் தான் காணப்படும்.

எப்போதும் சிறிதளவு தேங்கி ஓடும் இந்தக் கொள்ளிட நீரில் சலவைத்தொழிலாளிகள் வெள்ளாவி வைத்து துணிகளை சலவை செய்து, வரண்ட மணல் பரப்பில், பெரிய அளவில் கொடிகள் கட்டி, அவற்றை வெய்யிலில் காய வைத்து எடுத்துச் செல்வார்கள்.

என் சின்ன வயதில் இந்தக்கொள்ளிடம் பற்றி ஒருவர் ஒரு கதை சொல்லி நான் கேள்விப்பட்டுள்ளேன்.

அதாவது நிறைய நீர் கொள்ளும் இடமானதால் அதற்கு கொள்ளிடம் என்ற பெயர் ஏற்பட்டுள்ளது என்பதே உண்மையாக இருக்க வேண்டும்.

எனக்குக் கதை சொன்னவர், அதைக் ’கொல்லிடம்’ என்றார். அதற்கு ஓர் காரணமும் தன் கதையில் சொன்னார்:

ஒரு தாய் தன் குழந்தையுடன், ஒரு கோடையில், காலில் செருப்பு கூட அணியாமல், கொள்ளிட மணலின் குறுக்கே நடந்து, அக்கரை சேர நினைக்கும் போது, அவள் கால்கள் வெப்பம் தாங்காமல் துடித்தாளாம்.

மிகவும் தாங்க முடியாத நிலையில், தன் குழந்தையை கீழே போட்டு அதன் மேல் ஏறி நின்று விட்டாளாம். அந்தக் குழந்தையும் வெப்பமும், தாயின் பாரமும் தாங்காமல் இறந்து போனதாம்.

அவள் அதனை இவ்வாறு கொலை செய்ததனால், அந்த இடம் ’கொல்லிடம்’ ஆனது என்றார்.

இந்தக்கதையைக் கேட்டுவிட்ட, நான் அந்தச் சின்ன வயதில் எவ்வளவோ நாட்கள் எனக்குள் அழுதுள்ளேன்.

குழந்தைகளுக்கு கதை சொல்லும் போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்; அவர்கள் மனம் எந்த விதத்திலும் பாதிக்கவே கூடாது, என்பதற்காக இதை இங்கு குறிப்பிட்டேன்.

தொலைகாட்சிகள் தாங்கள் சொல்வது போல தனிமையில் உள்ள குழந்தைகளை பலவிதத்தில் பாதிக்கவே செய்யும்.]

அன்புடன் vgk

RAMA RAVI (RAMVI) said...

மனதை கலங்க வைக்கும் நிகழ்வுகள்.
அற்புதமாக கிடைக்கும் குழந்தைகளை பொக்கிஷமாக பாதுகாக வேண்டும்.

தமிழ் உதயம் said...

ஒவ்வொரு வரிகளும் சுடும் உண்மை. குழந்தைகள் விஷயத்தில் நிறைய அஜாக்ரதையாக தான் இருக்கிறார்கள். எவ்வளவு பணம் இருந்தாலும் இழந்ததை பெற முடியுமா?

CS. Mohan Kumar said...

நீங்கள் சொல்லும் சம்பவங்கள் திடுக்கிட வைக்கிறது. நமக்கு சாதாரணம் எனும் விஷயம் குழந்தைக்கு பெரிய ரிஸ்க் ஆக இருக்கும். குழந்தை வளர்ப்போர்
ரொம்ப யோசித்து யோசித்து தான் வளர்க்கணும்

குறையொன்றுமில்லை. said...

குழந்தையை பெற்றால் மட்டும் போதுமா ஒவ்வொரு நிமிஷமும் கண்காணிப்பில் வைத்திருக்கனும் என்று சொன்ன விழிப்புணர்வு பதிவு.

மகேந்திரன் said...

நீங்கள் கூறிய அத்தனையும் சத்தியமான உண்மைகள் அம்மா.
பொத்திவைத்து பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம் மழலைகள்..
அவர்களுக்கான அறிவேற்றல் விஷயத்தில் நாம் இன்னும் அதிக கவனம் செலுத்தவேண்டும் என உரைக்கும் அழகான கட்டுரை.

தளிகா said...

அன்பு மனோ ஆண்ட்டி
மிகவும் வருத்தமான விஷயம்..எனக்கு பல சமயமும் கோபத்தை கட்டுப்படுத்த முடியாத ஒரு விஷயம் இது தான்.
எத்தனை எத்தனை குழந்தைகள் ஜன்னல் வழியே குதித்து உயிரை விடுகிறது...என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய விஷயம் நிறைய பேர் சின்ன குழந்தைகளை டிவி போட்டுவிட்டு அல்லது தூங்க போட்டுவிட்டு ஷாப்பிங் அல்லது அலுவலகத்துக்கு கிளம்பி விடுகிறார்கள்..என்ன மாதிரியான மனசு படைத்தவர்கள் என்று யோசிக்கவே முடியவில்லை.
எனது ஃப்லாட்டுக்கருகிலுள்ளவர்களிடம் பல முறை நானே சொல்லிவிட்டேன் குழந்தைகள் ஜன்னல் திறந்து எட்டி பார்த்து சத்தம் போடும்..நான் பயந்து கொண்டு கதவை தட்டி குழந்தைகளை கவனிக்க சொல்வேன் என்னையும் அலட்சியப்படுத்திவிட்டு தலையாட்டி கதவை மூடி விடுவார்கள்.எத்தனை பேரை மாளில் பிறந்த குழந்தைகளை அலட்சியமாக ப்ராமில் போட்டுவிட்டு கண்காணாஅத இடத்தில் ஷாபிங் செய்வதை பார்க்கிறோம்..எத்தனை குழந்தைகள் வீறிட்டு அழும்போது எந்த கூசலும் இல்லாமல் அவங்க பாட்டுக்கு தமது ஷாப்பிங்கில் மும்முறமாக ஈடுபடுவதை பார்க்கிறோம்..
அடிப்படை விஷயமான குழந்தைக்கு ஆபத்தான பொருட்கள் எதையும் கைக்கெட்டும் தூரத்தில் வைக்கக் கூடாது என்பதையே எனக்கு தெரிந்து முக்கால் வாசி பேர் அலட்ச்சியப்படுதத் தான் செய்கிறார்கள்..இன்னும் எத்தனையோ பேர் விவரம் தெரியாத பிள்ளைகளை பள்ளி விட்டு தானே ஏறி தனியாக லிஃப்ட்டில் வருகிறார்கள்...எனக்கு பயமாக இருப்பதால் பலமுறை தெரிந்தவர்களிடம் சொன்னேன் என்னை தான் ரொம்பவே பயப்படுவதாக ஏளனம் செய்கிறார்கள்.
என்னமோ எனக்கும் இதெல்லாம் ஒரு புரியாத புதிர்...நல்லதொரு பதிவுக்கு நன்றி..பலரையும் யோசிக்க வைக்கும்

கீதமஞ்சரி said...

குழந்தையெனும் அரிய பொக்கிஷத்தின் அருமை புரியாமல் அதைத் தங்கள் அலட்சியத்தால் தவறவிட்டுவிடும் பல பெற்றோரைப் பற்றியும் படித்து மனம் மிகவும் பாரமாகிவிட்டது. இப்பதிவில் தாங்கள் சொல்லியிருக்கும் ஒவ்வொரு கருத்தும் கவனத்தில் கொள்ளவேண்டியவை.

இங்கும் பல பெற்றோர் கைக்குழந்தைகளை காரிலேயே விட்டுவிட்டு ஷாப்பிங் சென்றுவிட, வெப்பம் தாளாமல் குழந்தைகள் இறந்த செய்தி அடிக்கடி படிக்கிறேன். அப்போது அந்தக் குழந்தைகள் எப்படித்துடித்திருக்கும் என்ற நினைப்பே மகாவேதனை தருகிறது.

குழந்தைகள்தானே என்ற அலட்சிய மனோபாவம் மாறி அவர்களைப் பொக்கிஷமாய்ப் பாதுகாத்தால் மட்டுமே இதுபோன்ற துயர நிகழ்வுகளைத் தடுக்கமுடியும். நல்லதொரு விழிப்புணர்வுக் கட்டுரைக்குப் பாராட்டுகள் மேடம்.

ADHI VENKAT said...

ஒவ்வொரு நிகழ்வும் மனதை என்னவோ செய்தது.....

இப்படிப்பட்டவர்களும் இருக்கிறார்களா.....

பொக்கிஷமாக கிடைத்த குழந்தையை பாதுக்காக்க வேண்டாமா....
ஒரு குழந்தைக்காக எத்தனை பேர் ஏங்கி தவிக்கிறார்கள். அவமானங்களை சந்திக்கிறார்கள்.

மனோ சாமிநாதன் said...

இந்த விவாகரத்து பிரச்சினை குழந்தைகளுக்கு அடுத்தபடியான மன உளைச்சலைத் தரும் பாதிப்பு ஏஞ்சலின். அதை அழகான உதாரணத்துடன் எழுதியிருக்கிறீர்கள். நம் ஊரிலேயே இதெல்லாம் பரவலாக வந்து விட்டது. சின்னக்குழந்தைகளுக்கு அப்பா, அம்மா சற்றும் சத்தம் போட்டு விவாதித்துக்கொன்டாலே பிடிக்காது. பிரிவு வரை உற‌வு போனால் கேட்கவா வேன்டும்?

அன்பான கருத்துரைக்கு இனிய நன்றி!!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு இனிய நன்றி விமலன்!!

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள‌ சகோதரர் வை.கோபாலகிருஷ்ண‌ன் அவர்களுக்கு!

உங்களின் சின்ன வயது அனுபவமும் உங்களைப் பாதித்த அந்த சிறுகதையும் என்னையும் பாதித்தது. தாறுமாறான கதைகள் குழந்தைகளின் மெல்லிய மனசை எந்த அள‌வில் பாதிக்கும் என்பதை தெளிவாக எழுதியிருக்கிறீர்கள். உங்களின் அனுபவம் என் பதிவிற்கு வலு சேர்க்கின்றது.

என் தந்தை ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தார். அவர் கீழ் வேலை செய்த ஏட்டு, போலீஸ்காரர்கள் எல்லாம் சமயங்கிடைக்கும் போது ஏதாவது கிண்டல் செய்து கொண்டே இருப்பார்கள். ஒரு தடவை ' உன்னையெல்லாம் உங்கள் அப்பா தவிட்டுக்குத்தான் வாங்கினார்' என்று சொல்ல பல நாட்கள் அதை நினைத்துக்கொண்டு அழுதிருக்கிறேன்!

A.R.ராஜகோபாலன் said...

””” தனிமை பல மன மாறுதல்களை அவர்களிடம் ஏற்படுத்துகிறது. பல விபரீத எண்ணங்களையும் ஏற்படுத்துகிறது. வேலை செய்து வந்த அலுப்பில் கணவனும் மனைவியும் சோர்ந்து படுத்து விட, அப்போதும் குழந்தைக்குத் துணை தனிமை தான் அல்லது தொலைகாட்சி தான். தொலைக்காட்சியின் பாதிப்பு அவர்களை பல விதங்களில் மாற்றி ஆழ்மனத்தில் சிக்கல்களை உண்டாக்குகிறது”””

கொடுமையிலும் கொடுமை இளமையில் வறுமை அதனிலும் கொடுமை இளமையில் தனிமை.

பொருளாதாரம் எனும் பேய்க்கு பெருந்தீனியாகும் பெற்றோர்களின் பொறுப்பற்ற தன்மையை பொறுப்பாக சொன்ன விதம் அருமை அம்மா....

கே. பி. ஜனா... said...

பொக்கிஷங்கள் அல்லவா அவை? போற்றிப் பாதுகாக்க வேண்டுமல்லவா? நல்ல விழிப்புணர்வை ஊட்டும் பதிவு!

ஸ்ரீராம். said...

மனம் பதற வைக்கும் நிகழ்வுகள்.

vanathy said...

உண்மை தான். சிலதுகளுக்கு குழந்தை என்பது ஒரு பொருள் போல. அமெரிக்காவில் குழந்தையை தனியாக காரினுள் விட்டுச் சென்றால் தண்டனை கண்டிப்பாக உண்டு.
நல்ல பதிவு.

மனோ சாமிநாதன் said...

இனிய க‌ருத்துரைக்கு அன்பு நன்றி ராம்வி!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பார்ந்த நன்றி ரமேஷ்!

மனோ சாமிநாதன் said...

குழந்தைகளை பொக்கிஷமாக வளர்க்க வேன்டும் என்ற கருத்தை மேலும் வலுவூட்டிய தங்கள் க‌ருத்துரைக்கு அன்பு நன்றி மோகன்குமார்!!

மனோ சாமிநாதன் said...

அன்பான கருத்துரைக்கு உள‌மார்ந்த நன்றி லக்ஷ்மி!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பான நன்றி மகேந்திரன்!!

மனோ சாமிநாதன் said...

உண்மைதான் தளிகா! உங்களை மாதிரியே தான் எனக்கும் மிகவும் கோபமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது சில பெற்றோர்களின் பொறுப்பற்ற‌ செயலை பார்க்கும்போது! அவர்கள் நம் குறுக்கீடலை அலட்சியப்படுத்தினாலும் யாருக்கு வந்தால் நமக்கென்ன என்று அலட்சியப்படுத்தி விட்டு போக முடியாது. நம்மால் இயன்ற நல்ல விஷயங்களை எப்போதும் செய்து கொன்டு தானிருக்க வேன்டும். நீங்களும் அப்படி செய்து கொண்டிருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. நீன்ட கருத்துரைக்கு அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

அருமையான விளக்கத்துடன் அமைந்த கருத்துரைக்கு அன்பு நன்றி கீதா!!

மனோ சாமிநாதன் said...

எனக்கும் இப்படித்தான் கண்ணெதிரே குழந்தைகளை தவிக்க விடுபவர்களைப் பார்த்தால் தாங்க முடியாத கோபம் வருகிறது. குழந்தைகளை கை நழுவ விட்டு, அப்புறம் அழுதாலும் திரும்ப கிடைக்குமா அவை?

இனிய க‌ருத்துரைக்கு அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ராஜகோபாலன்!

மனோ சாமிநாதன் said...

அன்பான கருத்துரைக்கு இனிய நன்றி சகோதரர் ஜனா!

மனோ சாமிநாதன் said...

நானும் கேள்விப்பட்டேன் வானதி அமெரிக்காவில் இத்தகைய பொறுப்பின்மைகளுக்கு தண்டனை உன்டு என்பதை! வளரும் நாடுகள் எல்லாவற்றிலும் மிகக் கடுமையான தண்டனைகளை இது போலத் தரவேண்டும்!
கருத்துரைக்கு அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...
This comment has been removed by the author.
மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு உளமார்ந்த நன்றி SRIRAM!!

Yaathoramani.blogspot.com said...

நீங்கள் சொல்லிச் செல்லும் நிகழ்வுகள் எல்லாம்
மனம் பதறச் செய்து போகிறது
நிகழ்ந்தபின் கொடூரமாகத் தோன்றும் நிகழ்வுகள்
அதற்கு முன்பு சாதாரண அன்றாட நிகழ்வு போலத்தான் படுகிறது
அனைவரும் அவசியம் படித்து மனதில் பதிந்து
வைத்துக் கொள்ள வேண்டிய பயனுள்ள பதிவு
பகிர்வுக்கு நன்றி

நிலாமகள் said...

ஒவ்வொரு ச‌ம்ப‌வ‌மும் ப‌த‌றித் துடிக்க‌ச் செய்த‌ன‌. அப்ப‌ப்பா... தாங்க‌ முடிய‌வில்லை. எங்கோ ஒன்றிர‌ண்டு எப்போதோ கேட்க‌ நேர்ந்தாலே ப‌ல‌ நாட்க‌ள் அத‌ன் க‌ன‌ம் ம‌ன‌தை விட்ட‌க‌லாது. தொகுப்பாக‌ பார்க்கையில்... அய்யோடா! ப‌ண‌த்தை துர‌த்தும் வேக‌த்தில் எதுவும் துச்ச‌மாகிவிடுகிற‌து இக்கால‌ப் பெற்றோருக்கு. புதிதாக‌ குழ‌ந்தை பெறுப‌வ‌ர்க‌ளுக்கு சொல்லி வைக்க‌ வேண்டிய‌ அனுப‌வ‌ எச்ச‌ரிக்கைக‌ள் இவை.

Jaleela Kamal said...

குழந்தைகளை என்ன கண்ணும் கருத்துமாய் பார்க்கனும்


ஏன் இப்படி தொடர்ந்து இந்த செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன

அன்றே படித்து விட்டு கமெண்ட் போட்டுட்டேன் நினைச்சேன்,

இன்று பேப்பரிலும் முதல் பக்கதில் குழந்தை தவறி விழுந்து இறந்த செய்ட்திதான்,

ஏன் இப்படி கவனமின்மையால் இருக்கிறார்களோ தெரியல..