எந்த ஒரு சிறு உடல் நலக் கோளாறையும் நம் சமையலறையில் இருக்கும் வெந்தயம், மிளகு, கிராம்பு, ஏலக்காய், சீரகம், சோம்பு முதலிய பொருள்களளக் கொண்டும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் சித்தரத்தை, திப்பிலி, வசம்பு, சுக்கு, அதிமதுரம், போன்ற மருந்துப்பொருள்களைக் கொண்டு சரியாக்கி விட முடியும். இதனால் நாம் டாக்டரிடம்
செல்ல வேண்டிய அவசியத்தையும் அதனால் ஏற்படும் செலவுகளையும் தவிர்க்க முடியும். சின்ன சின்னப் பிரச்சினைகளுக்கு டாக்டரிடம் ஓடுவதைக் குறைத்து நமக்கு நாமே கை வைத்தியம் செய்து கொள்ள சில குறிப்புக்கள் இங்கே!!
சீரகம்:
சீரகத்தைப் பொன்வறுவலாக வறுத்து தூள் செய்து கொதிநீரில் இட்டு காய்ச்சிக் குடித்தால் உண்ட உணவை சீரணமாக்கி பசியைத் தூண்டுவதுடன் உணவுப்பாதையையும் சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. கேரளத்து மக்கள் எல்லோரது வீட்டிலும் இந்த சீரக வெள்ளம் இருக்கும்.
தொண்டைக்கட்டிற்கு:
அதிமதுரத்தை நாட்டு மருந்து கடையில் வாங்கி இடித்து சலிக்கவும். ஒரு வேலைக்கு அரை ஸ்பூன் எடுத்து தேன் கலந்து குழைத்து சாப்பிட்டு வந்தால் தொண்டைக்கட்டு சரியாகும்.
அஜீரணம்:
அரை ஸ்பூன் இஞ்சி சாறு, அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு, அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் அஜீரனக் கோளாறுகள் மறையும்.
கால் ஆணிக்கு:
மருதாணி இலைகள், சிறிது வசம்பு, சிறிய மஞ்சள் துண்டு மூன்றையும் நன்கு அரைத்து ஒரு வெற்றிலையில் வைத்து கால் ஆணிடில் வைத்து ஒரு துணியால் கட்டி வந்தால் ஒரு வாரத்தில் குணமாகி விடும்.
தேமல் மறைய:
புடலங்காயை 6 அங்குலத்திற்கு வெட்டி, குடலை நீக்கி, சீயக்காயை அரைத்து அதனுள்ளே வைத்து, வெய்யிலில் ஒரு நாள் காய வைக்கவும். மறு நாள் அதை அரைத்து தேமல் உள்ள இடங்களில் தடவி இ மணி நேரம் ஊறவைத்து வெந்நீரில் குளிக்கவும். தொடர்ந்து இது போல செய்து வந்தால் சில தினங்களில் தேமல் மறைந்து விடும்.
தலைவலி:
ஒரு ஸ்பூன் கிராம்பையும் ஒரு சிட்டிகை கல் உப்பையும் அரைத்து பற்று போட்டால் தலைவலி சரியாகும்.
விக்கலுக்கு:
சீனியை வாயில் போட்டு மெதுவாக உறிஞ்சவும். விக்கல் நின்று விடும். 2 நிமிடம் கழித்து மறுபடியும் இது போல செய்யலாம். குழந்தைகளின் விக்கலுக்கு விரலை நீரில் நனைத்து சீனியில் தொட்டு வாயில் வைக்கவும்.
மலச்சிக்கல்:
வெங்காயத்தையும் முள்ளங்கியையும் அடிக்கடி சமையல் சேர்த்துக்கொள்ளவும். அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு சம பங்கு எடுத்து பவுடர் செய்து ஒரு ஸ்பூன் எடுத்து தேனில் குழைத்து சாப்பிடவும்.

படங்கள் உதவி: கூகிள்
22 comments:
எப்போதும் தேவைப்படக்கூடிய மருத்துவ, சமையல் குறிப்புகள். பகிர்வுக்கு நன்றி.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.மேடம்.
மிகப் பயனுள்ள அருமையான மருத்துவக்குறிப்புகள்,நன்றி பகிர்வுக்கு.
மருத்துவ முத்துக்கள் அருமை உபயோகமான பகிர்வு நன்றி...!!!
சமயல் அறைமருத்துவம் எல்லாருக்குமே பயன்படும். பகிர்வுக்கு நன்றி.
புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா!! அனைத்தும் மிக பயனுள்ள குறிப்புகள்.பகிர்வுக்கு நன்றி..
எளிதான வீட்டிலேயே இருக்கிற
மருத்துவப் பொருட்களை மிகச் சரியாகப்
புரிந்து கொண்டாலே பாதி மருத்துவச் செலவு
மிச்சம் என நினைக்கிறேன்
பயனுள்ள பதிவு
பகிர்வுக்கு நன்றி
மிக உபயோகமான குறிப்புகள். நன்றி. முதலாவதை ‘ஜல் ஜீரா’ என ஹோட்டல்களிலும் கொடுக்கிறார்கள்.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
எளிய மருத்துவ குறிப்பிற்கு நன்றி மனோ அக்கா.
இந்த பயனுள்ள குறிப்புகளை எல்லோரும் பின்பற்றினால்
பாதி உடல்நலக் குறைவுகளை நாமே சரி செய்து கொள்ளலாம்.
குறிப்புகளுக்கு மிக்க நன்றி மனோம்மா
Print எடுத்துக்கொண்டு பத்திரப் படுத்தி விட்டேன்.
மிக்க நன்றி மேடம்
மிகவும் பயனுள்ள விஷயங்கள் தான். பகிர்வுக்கு மிக்க நன்றி.
எல்லாமே ஜோர்! விக்கலுக்கு ஒரு ஸ்பூன் சர்க்கரையை வாயிலிட்டு உடனே தண்ணீர் ஊற்றி மருந்து போல் விழுங்கச் செய்வோம்.
வாயால் மூச்சிழுத்து மூக்கால் வெளிவிட்டால் கூட (சில தடவைகள் செய்ய வேண்டும்)விக்கல் நிற்பதைக் கண்கூடாய் கண்டிருக்கிறேன். நன்றி சகோ...!
ஜீரகத் தண்ணீரின் பயன்பாடுகளை தனிப்பதிவாகவே எழுதலாம்!
எல்லாமே ஈஸியாதான் தெரியுது...ஆனா பிராப்ளம் வந்தா எதுவுமே மெமரியில நிக்க மாட்டேங்குதே... ஒரு வேளை வெண்டைக்காய் நிறைய சாப்பிடனுமோ ..?? ஹா..ஹா... :-))
@ நாஞ்சில் மனோ
@ ராம்வி
@ ரமேஷ்
@ லக்ஷ்மி
உங்கள் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் இனிய நன்றி!!
@ சகோதரர் ரமணி
@ மேனகா
இனிய கருத்துரைக்கும் பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி!!
நானும் சில ஹோட்டல்களில் 'ஜல்ஜீரா' கொடுப்பதை கவனித்திருக்கிறேன் ராமலக்ஷ்மி! புத்தாண்டு வாழ்த்துக்களுக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி!!
@ ஆசியா
@ சகோதரர் சிவகுமாரன்
@ சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்
@ புவனேஸ்வரி
இனிய கருத்துரைகளுக்கு அன்பு நன்றி!!
அன்பான கருத்துரைக்கு இனிய நன்றி நிலாமகள்!!
நீங்கள் சொல்வது சரி தான்! சில சமயங்களில் எதுவும் நினைவுக்கு வருவதில்லை. இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜெய்லானி!!
புத்தாண்டு வாழ்த்துகள்.
எல்லாமே அருமையான குறிப்புகள் அம்மா. நான் ஊருக்கு செல்லும் போதெல்லாம் சுக்கு, சித்தரத்தை, அதிமதுரம், வசம்பு போன்றவற்றை வாங்கி எப்போதுமே வைத்திருப்பேன்.
மிகவும் பயனுள்ள மருத்துவ முத்து
உங்கள் இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன் நேரம் கிடைக்கும் போது வந்து பார்வையிடவும்.
http://blogintamil.blogspot.com/2012/09/blog-post_8948.html
இப்படிக்கு
ஜலீலாகமால்
Post a Comment