Monday 5 September 2011

அனுபவங்கள் தொடர்கின்றன!

சென்ற மாதமும் இந்த மாத ஆரம்பத்திலுமாக ஆச்சரியம் அளித்த, வலி கொடுத்த, கலங்க வைத்த, அனுபவங்களாகவே தொடர்ந்து வந்து கொன்டிருக்கின்ன.

முதலில் ஆச்சரியமும் வலியுமான அனுபவம்:

சென்ற வாரம் இறுதியில் வலைச்சர ஆசிரியர் பணிக்காக அதன் ஆசிரியர் என்னைக் கேட்டிருந்தார். அதற்கு முன்பே சில மாதங்களுக்கு முன், திருமதி. லக்ஷ்மி வலைச்சர ஆசிரியர் பணிக்காகக் கேட்டபோது தொடர் பிரயாணங்களாக நான் தஞ்சைக்கும் ஷார்ஜாவிற்கும் அலைந்து கொன்டிருந்ததால் என் இயலாமையைச் சொன்னேன். மறுபடியும் வலைச்சர ஆசிரியரே கேட்டபோது மறுபடியும் மறுக்க முடியாத என் இயலாமை. காரணம், என் வலது கை மோதிர விரலுக்குக் கீழே ஒரு பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அதற்கு TRIGGER FINGER என்று பெயர். எல்லோருடைய கையிலும் விரல்களுக்குக் கீழே எலும்பு முட்டுக்கள் இருக்கும். அந்த எலும்பு முட்டுக்கள் மீது ஒரு சிலிண்டர் போன்ற அமைப்பினுள்ளே தான் நரம்புகள் செல்கின்றன. எனது மோதிர விரலின் அடியில் இருக்கும் அந்த சிலிண்டர் தற்போது பாதிக்கப்பட்டு உள்ளுக்குள் ஒரு பட்டாணி போல வீங்கியிருக்கிறது. அந்த விரலை லேசில் மடக்க முடியாது. மடக்கும்போது அதிக வலி இருக்கிறது. திரும்பவும் மடக்கிய விரலை நிமிர்த்தும்போது மற்ற விரல்களைப்போல இலகுவாக நிமிர்த்த முடியாது. இந்த விரல் மட்டும் ஸ்ப்ரிங் போல படாரென்று நிமிர்கிறது. இதனால்தான் இதற்கு TRIGGER FINGER என்று பெயர்.



இதற்குக் காரணம் ஏதுமில்லை என்று டாக்டர் சொன்னார். வயது ஏற ஏற சிலருக்கு இந்த பாதிப்பு ஏற்படுமென்றும் இது பெரும்பாலும் மருந்தினாலும் பிஸியோதெரபியினாலும் குணமாகாது என்றும் இந்தியாவில் இதற்கென ஒரு Steroid Injection போடுவார்கள் என்றும் அதில் குணம் ஏற்படாவிட்டால் அறுவை சிகிச்சை செய்து அந்த சிலிண்டரில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சரி செய்வார்கள் என்றும் கூறினார். கடந்த 8 மாதங்களில் 5 முறைகள் தஞ்சை சென்று வந்துள்ளதால் மறுபடியும் ஒரு பிரயாணத்தை நினைத்தாலே அயர்வாயிருக்கிறது. மருத்துவரும் சிறிது நாட்களுக்கு மருந்துகளும் பிஸியோதெரபியும் எடுத்துக்கொள்ளச் சொன்னதால் அது போல சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த சமயம் தான் எனக்கு மீன்டும் வலைச்சர அழைப்பு வந்தது. ஆச்சரியம் என்னவென்றால், 25 வருடங்களுக்கு முன்பு, ஆனந்த விகடன் ஆசிரியர் எனக்கு ஒரு சிறுகதையை இங்கு அனுப்பி, அதற்கு ஓவியம் வரைந்தனுப்பச் சொன்னபோது இப்படித்தான் வலது கை ஆள்காட்டி விரலில் வேறு ஒரு பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இப்போது அதே போல் வேறு ஒரு அழைப்பு வரும்போது அதே போல ஒரு பாதிப்பு, அதுவும் அதே வலது கையில்! இரண்டாவது அழைப்பை மறுக்க இயலாமல் தயக்கத்துடன் தான் ஒத்துக்கொண்டேன். ஓரளவு மனநிறைவுடன் செய்திருந்தாலும் கடைசி நாள் வலியினால் விடைபெறுதலைக்கூட என்னால் எழுத முடியவில்லை. இன்னும் நான் நினைத்திருந்த நண்பர்களை அறிமுகம் செய்ய முடியவில்லை. அதனால் அறிமுகம் ஆகாத தோழமைகள் என்னைத் தவறாக நினைக்க வேண்டாம்!

கலங்க வைத்த அனுபவம்:

இது என் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி சொன்ன தகவல். இங்கே பொதுவாக விடுமுறை நாட்களில் எல்லா இனத்தவர்களும் பார்க், உணவகங்கள் என்று இரவு 12 மணி வரை நேரத்தை மகிழ்ழ்சியாகக் கழிப்பது வழக்கம்தான். அதுவும் அரேபியர் இல்லங்களில் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள யாராவது இந்திய பெண்ணோ, அல்லது வெளி நாட்டுப் பெண்களோ குழந்தைகள் கூடவே இருப்பார்கள். அது மாதிரி குழந்தையை கவனித்துக்கொண்டிருந்த ஒரு இந்திய பெண்ணுக்கு விளக்கைச் சுற்றிக்கொன்டிருந்த ஒரு பூச்சி பறந்து வந்து கடித்திருக்கிறது. அடுத்த நாள் அடிபட்ட இடத்தில் வீக்கமும் ஜுரமும் வந்திருக்கிறது. என்ன, ஏது என்று நிதானிக்கும் முன் அந்தப் பெண்மணி கோமாவில் விழுந்து விட்டாராம். நாலைந்து நாட்களாகியும் அதே நிலையில்தான் இருக்கிறாராம். இந்தப்பூச்சியைப்பற்றி தகவல் சொல்லி, இரவு நேரம் பார்க் போன்ற மரங்கள் சூழ்ந்த, பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கச் சொல்லி தொலைக்காட்சியில் செய்தி வந்ததாகவும் சொல்கிறார்கள். அமீரக நண்பர்கள் யாருக்கேனும் இது பற்றிய தகவல்கள் தெரிந்தால் எழுதுங்கள். மற்றவர்களுக்கும் இது பயன்படும். குடும்பத்திற்காக, உறவுகளைப்பிரிந்து வந்து, இங்கு வீடு வீடாகப் போய் வேலை செய்யும் பெண்கள் இங்கே ஏராளமாக இருக்கிறார்கள். அது போன்ற நிலையில் இருக்கும் அந்தப் பெண்ணை நினைத்தால் மனம் கலங்குகிறது!

59 comments:

ஹுஸைனம்மா said...

கைவலி குறித்த தகவல் - புதிது! இப்படியும் இருக்குமா என்னுமளவுக்கு நோய்கள் புதிதாய் தோன்றிக்கொண்டே இருக்கின்றன!! கவனமாய் சிகிச்சையெடுங்கள் அக்கா.

அந்தப் பெண்ணின் கோமா நிலையும் வருத்தம் தருகிறது. எனினும், இது எல்லாருமே கவனமாக இருக்க வேண்டிய விஷயம்!! நம் நாட்டில் காட்டை அழிப்பதால், யானை, சிறுத்தை போன்றவை நாட்டிற்குள் வருவதைப் போல இங்கும் பாலைவனத்தை அழிப்பதால் இதுபோன்ற பாலவன விஷ ஜந்துக்கள் நகருக்குள் வந்துவிடுகின்றன.

சிலவருடங்கள் முன்பு அமீரகத்தில் புதிதாகக் கட்டிய வீடுகளில் Redback spiders எனப்படும் விஷ சிலந்திகள் பயமுறுத்தி வந்தனவே?

பல வருடங்கள் முன், ஓமன் மஸ்கட்டில் ஒரு சிறந்த இந்திய பெண் மருத்துவர், ஒரு சிறு எறும்பு கடித்து இறந்துபோனார்!! அது ஏதோ விஷ வகையைச் சேர்ந்ததாம். இவர் எறும்புதானே என்று அலட்சியமாக இருந்திருக்கிறார்.

CS. Mohan Kumar said...

Take care of your health madam.

RAMA RAVI (RAMVI) said...

முதல் அனுபவம் ஆச்சரியமாக இருக்கு.trigger finger பற்றி கேள்வி பட்டதில்லை. உடல்நிலையை பார்த்துக்கொள்ளுங்க, மேடம். இரண்டாவது, மிகவும் வருந்தத்தக்கது. எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும்.
என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதர்க்கு நன்றி.

ADHI VENKAT said...

கைவிரலில் வலி இருந்தும் ஆசிரியப்பணியினை வெகு சிறப்பாக செய்துள்ளீர்கள். அந்த விரலுக்கு ஏற்ற சிகிச்சையை எடுத்துக் கொள்ளுங்கள் அம்மா. குணமாக கடவுளை பிரார்த்திக்கிறேன்.

அந்த பெண்ணிற்கு விரைவில் குணமாகட்டும்.

துளசி கோபால் said...

அட ராமா....... இப்படியெல்லாம் ஆகுதா?

உடம்பைப் பார்த்துக்குங்க மனோ.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அழகிய பதிவுகள் தரும் விரலுக்கு இப்படியென்றால் அது திருஷ்டியாகத் தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்ல வருவேன்;

பகுத்தறிவுப் பாசறையில் இருப்பதால் நீங்கள் அதை நிச்சயம் ஏற்கப்போவது இல்லை என்பதும் எனக்கு மிகவும் நன்றாகவே தெரியும்.

[விரலுக்குத்தகுந்த வீக்கமே என்றாலும்] எப்படியும் உங்கள் விரல் வீக்கம் குறையவும், மேற்கொண்டு தொந்தரவு அளிக்காமல் இருக்கவும், பழையபடி இயல்பு நிலைக்கு அது திரும்பவும், பழையபடி எங்களுக்கு மேலும் மேலும் நல்ல நல்ல பதிவுகள் தரவும், நான் உங்களுக்காகப் பிரார்த்திப்பேன்.

அன்புடன் vgk

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அது மாதிரி குழந்தையை கவனித்துக்கொண்டிருந்த ஒரு இந்திய பெண்ணுக்கு விளக்கைச் சுற்றிக்கொன்டிருந்த ஒரு பூச்சி பறந்து வந்து கடித்திருக்கிறது. அடுத்த நாள் அடிபட்ட இடத்தில் வீக்கமும் ஜுரமும் வந்திருக்கிறது. என்ன, ஏது என்று நிதானிக்கும் முன் அந்தப் பெண்மணி கோமாவில் விழுந்து விட்டாராம். நாலைந்து நாட்களாகியும் அதே நிலையில்தான் இருக்கிறாராம். //


இரண்டாவது சம்பவம் படித்ததும் மனதுக்கு மிகவும் சங்கடம் ஏற்பட்டது.

ஆபத்துக்கள் எந்த எந்த ரூபத்தில்
எப்போது எப்படி வரும் என்று தெரியாத நிலையில் தான் இன்றைய உலகம் உள்ளது. மிகவும் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டியுள்ளது.

//அது போன்ற நிலையில் இருக்கும் அந்தப் பெண்ணை நினைத்தால் மனம் கலங்குகிறது!//

உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் தான், மனம் கலங்குகிறது. என்ன செய்வது? எப்படி அவளை கோமாவிலிருந்து மீட்பது? என்று யாராவது கருத்துக்கூறினால் மகிழ்ச்சியாக இருக்கும்.

இதுபோன்ற நல்ல அனுபவப்பதிவுகள் தொடரட்டும். vgk [2 to 3 in INDLI]

வே.நடனசபாபதி said...

கைவலியோடு கொ(எ)டுத்த பணியை சிறப்பாக முடித்தமைக்கு
வாழ்த்துக்கள்!
அந்த இந்தியப் பெண் குணமாக ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

தமிழ் உதயம் said...

நீங்கள் இரண்டாவதாக சொன்ன தகவலும், ஹீசைனம்மா அவர்கள் சொன்ன தகவலும் அதிர்ச்சியை, ஆச்சர்யத்தை தந்தது. சிறப்பாக செய்திருந்தீர்கள் வலைச்சர ஆசிரியர் பணியை.

அஸ்மா said...

//அந்த விரலை லேசில் மடக்க முடியாது. மடக்கும்போது அதிக வலி இருக்கிறது. திரும்பவும் மடக்கிய விரலை நிமிர்த்தும்போது மற்ற விரல்களைப்போல இலகுவாக நிமிர்த்த முடியாது. இந்த விரல் மட்டும் ஸ்ப்ரிங் போல படாரென்று நிமிர்கிறது//

என் தோழியின் தாயாருக்கு இதேபோல் வலதுகை பெருவிரலில் இருந்து கஷ்டப்படுவார்கள். அந்த கஷ்டத்துடனே மேலும் மேலும் படிக்கும் ஆர்வத்தில் எக்ஸாம் எல்லாம் எழுதுவார்கள். மடக்கும்போதும், நிமிர்த்தும்போதும் வலியினால் வியர்த்துக் கொட்டுவதைப் பார்க்க பாவமாக இருக்கும். அவர்களுக்கு டாக்டர் சொன்னது, 'ருமேடிக் ப்ராப்ளம்' என்று!

விஷப்பூச்சி, விஷ வண்டு, விஷக் கொசு, விஷ எறும்பு.. என நீளமான பட்டியலின் முடிவில் மரணம்தான் காத்து நிற்பதை பலரின் அனுபவத்தில் பார்த்திருக்கிறோம். மரணத்தை யாராலும் தடுக்க முடியாது என்றாலும், எதுவாக இருந்தாலும் அலட்சியப்படுத்தாமல் உடனே வைத்தியம் பண்ணிக்கொள்வது தற்காப்பானது. இறைவன் நம்மனைவரையும் காப்பானாக! உங்களுக்கும் விரைவில் நலமாக என் பிரார்த்தனைகள் மனோ மேடம்!

பனித்துளி சங்கர் said...

வணக்கம் தங்களின் விரல் பிரச்சனை தற்போது எப்படி இருக்கிறது ௧? நானும் அமீரகத்தில்தான் இருக்கிறேன் . நீங்கள் சொல்லி இருக்கும் பூச்சி பற்றி எந்த ஒரு தகவலும் அவளவாக வெளிவரவில்லை . இருந்த போதும் இதைப் பற்றி இன்னும் ஆராய்வதற்கு நண்பர்களிடமும் பகிர்ந்திருக்கிறேன் . அப்படி ஒரு பூச்சி உண்மையாகவே இருக்கும் என்ற நிலையில் விரைவில் அதைப் பற்றிய விரிவானப் பதிவை வெளியிடுகிறேன் . தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி

Thenammai Lakshmanan said...

சாதனைகள் செய்யும் போது சோதனைகள் வரத்தான்ெய்யும் மனோ.. மன உறுதியுடன் இருங்கள். சரியாகி விடும். நெட்டில் அதிகம் அமர்ந்திருப்பதால். கண் வலி., கை வலி., கழுத்து வலி எல்லாம் சகஜமாக இருக்கிறது.

ஆனால் நிஜமாகவே அந்தப் பணிப்பெண்களின் ப்ரச்சனை கவனிக்கப்படவேண்டிய ஒன்றூ.

மனோ சாமிநாதன் said...

அக்கறைக்கு அன்பு நன்றி ஹுஸைனம்மா! நீங்கள் சொல்வது உண்மைதான். என்னவென்றே தீர்மானம் செய்ய முடியாத நோய்களெல்லாம் தற்போது வருகின்றன.

அந்த பெண் தனது சர்ச்சில் பிரார்த்தனை செய்த போது இந்த செய்தியையும் சொல்லி பிரார்த்தனை செய்யச் சொன்னார்களாம். இப்படி தான் என் வீட்டில் வேலை செய்யும் பெண் தகவல் சொன்னது.

மனோ சாமிநாதன் said...

உங்கள் அன்பு அக்கறைக்கு உள‌மார்ந்த நன்றி மோகன்குமார்!

மனோ சாமிநாதன் said...

அன்பான அக்கறைக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி ராம்வி!

மனோ சாமிநாதன் said...

அன்பான பாராட்டுக்களுக்கும் அக்கறைக்கும் உளமார்ந்த நன்றி ஆதி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் அன்பான அக்கறைக்கும் இனிய நன்றி துள‌சி கோபால்!

மனோ சாமிநாதன் said...

அன்புச் ச‌கோத‌ர‌ர் வை.கோபால‌கிருஷ்ண‌ன் அவ‌ர்க‌ளுக்கு!

உங்க‌ளின் அன்பான‌ அக்க‌றைக்கும் பிரார்த்த‌னைக்கும் நான் மிக‌வும் கொடுத்து வைத்திருக்கிறேன்.

வலைச்சர ஆசிரியராவதற்கு முன்பிலிருந்தே சிகிச்சையில்தான் இருக்கிறேன். பிஸியோதெரபியும் முடித்து விட்டேன்.

ஆனால் சில மணித்துளிகள் வீக்கம் இல்லாமலும் பல நேரம் வீக்கமும் வலியாகவும் தான் இருக்கின்றது. வேலைகள் செய்யும்போது சாதாரண‌மாகவும் இருக்கிறது. வேலைகள் செய்யாமல் இருக்கும்போதும் வலிக்கிறது. அத‌னால்தான் சில‌ நேர‌ம் ப‌திவுக‌ள் கொடுக்க‌ முடிகிற‌து. ம‌ருத்துவ‌ரும் வழக்கம்போல வேலைகளைச் செய்யலாம் என்று தான் கூறுகிறார். அறுவை சிகிச்சையில் தான் குணமாகும் என்றும் கூறுகிறார். இருந்தாலும் கூடிய வரை மருந்துகள் உபயோகித்துத்தான் பார்க்கப் போகிறேன்.

மனோ சாமிநாதன் said...

தங்களின் வாழ்த்துக்களுக்கு என் அன்பு நன்றி சகோதரர் நடன சபாபதி!

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி தமிழ் உதயம்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுரைக்கு அன்பு நன்றி சகோதரர் ரத்னவேல் நடராஜன்!

வெங்கட் நாகராஜ் said...

கைவலி.... பார்த்துக் கொள்ளுங்கள்.... அது Tigger Finger-ஆ அல்லது Trigger Finger-ஆ?

சிறு குழப்பம்... ஏனெனில் இரண்டுமே உங்கள் பதிவில் வந்துள்ளது....

அட என்ன பூச்சி கடித்தது? சிறு வயதில் இரவில் புல்வெளிகளுக்கோ, பூங்காக்களுக்கோ சென்றால் ‘பூச்சி-பொட்டு” இருக்கும்... ஜாக்கிரதை” என்று சொல்வார்கள்.... அது நினைவுக்கு வந்தது. அந்த பெண்ணின் உடல்நிலை சரியாகவும், உங்கள் கைவலி சரியாகவும் ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்....

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கும் பிரார்த்தனைக்கும் அன்பு நன்றி அஸ்மா! இதற்கு இரண்டே சாய்ஸ் என்று தான் டாக்டர் சொன்னார். ஒன்று steroid injection. அடுத்த, கடைசி வைத்தியம் அறுவை சிகிச்சை. இண்டர்நெட்டிலும் இதே போலத்தான் எழுதியிருக்கிறார்கள். இருந்தாலும் சில நாட்களில் second opinionக்காக வேறு ஒரு மருத்துவரைப் பார்த்து அபிப்பிராயம் கேட்கப் போகிறேன்!

மனோ சாமிநாதன் said...

தங்களின் வரவிற்கும் அக்கறையான விசாரிப்பிற்கும் அன்பு நன்றி சங்கர்!

இந்த விஷப்பூச்சி பற்றி, என் பணிப்பெண் சொன்னது, இதைப்பற்றி தொலைக்காட்சியில் அறிவிப்பு செய்து எச்சரித்திருக்கிறார்கள் என்பது தான். மெலும் விபரங்கள் கேட்டிருக்கிறேன். உங்கள் நண்பர்களிடம் இது பற்றி விசாரித்து வருவது மகிழ்வாக இருக்கிறது. விரைவில் தகவல்கள் கிடைக்கும் என்றும் நம்புகிறேன்!

ஜெய்லானி said...

இந்த ருமேடிக் பிராப்ளம் வயசு வித்தியாசம் இல்லாமல் வருகிறது.. வைட்டனின் பி காம்ளாக்ஸ் சாப்பிட்டு வருவதால் இது வர சான்ஸ் இல்லை .

இப்போது எப்படி இருக்கு ?


இது சிவப்பு கலரில் வண்டு மாதிரி நீளமா இருக்கும் . (சுமார் ஒன்னறை இஞ்ச்) அடர்ந்த மரத்தில் பட்டையில் இருக்கும் ((சிலநேரம் பார்கில் உள்ள குட்டைமரம் ))

கடித்தால் இரெண்டு மணிநேரத்தில் அந்த இடம் வீங்கி விடும் ,குளிர் ஜுரம் வரும் அதற்குள் டாக்டரிடம் போய் ஆண்டியாபைடிக் ஊசிப்போட்டால் வீக்கம் குணமாக ஒரு வாரம் பிடிக்கும் .

அவருக்கு கடித்தது இரவு நேரமானதால் ஸ்பான்ஸரிடம் சொல்லவில்லை போலும் அதான் இங்கே பிரச்சனை :-(

இங்கே மதாம் (ஹத்தா ரூட் ) போனபோது மிகச்சிறிய எறும்பு ஒன்னு கடிச்சு மரண வேதனை ..டாக்டரிடம் காட்டியும் சுமார் ஒரு மாதம் வரை அந்த கடிபட்ட இடத்தில் கை வைத்தால் வலி இருக்கும் .

பாலைவனத்தில் இருக்கும் எல்லா பூச்சிகளுக்கும் விஷம் கொஞ்சம் அதிகம் தான் .

உங்கள் பதிவு என் நினைவலைகளை மீட்டி விட்டது

சாகம்பரி said...

ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வு உண்டு. தேடுதலை அதிகரிக்க வேண்டும். தீர்வு கிட்டும் வழியை கடவுள் தங்களுக்கு காட்டுவார் என்று நம்புகிறேன்.

அந்த பணிப்பெண் பிரச்சினைக்கும் விரைவில் பதில் கிட்டும்.

குறையொன்றுமில்லை. said...

உங்க விரல் வலியையும் பொருட் படுத்தாமல் ஏற்றுக்கொண்ட ஆசிரியப்பணியை நிறைவாகவே செய்திருந்தீங்க மேடம். அந்த இந்திதிய வேலைக்காரப்பெண் இப்போ நலமா இருக்காளா?

முற்றும் அறிந்த அதிரா said...

என்னது பாலைவனப்பூச்சிகள் எல்லாமே விஷம் அதிகமோ? கேட்கவே பயமாக இருக்கு. எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும்.

raji said...

விரல் குணமடைய பிரார்த்திக்கிறேன்.நன்றாக குணமடையும் வரை
கவனமாகப் பார்த்துக் கொள்ளவும்.சிரமம் ஏற்படுத்தும் வேலைகளை செய்யாமலிருக்க கேட்டுக் கொள்கிறேன்.

இரண்டாவது சம்பவம் அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் உள்ளது
அதற்காகவும் பிரார்த்தித்துக் கொள்கிறேன் மேடம்

Asiya Omar said...

தேவையான பகிர்வு,கைவலி ஓய்வாக இருந்தால் சரியாகிவிடும் மனோஅக்கா.
அப்பப்பா,இந்த எறும்பு கடி,சிலந்தி கடி அலர்ஜி எல்லாம் அனுபவித்து இருப்பதால் இப்ப நினைத்தாலும் பயத்தில் உதறலெடுக்கிறது.

ஸ்ரீராம். said...

கைவலிக்கு இடையிலும் பணியைச் சிறப்பாக செய்தமைக்கு பாராட்டுகள். விரல் சீக்கிரம் குணமடைய வாழ்த்துகள். கவாஸ்கர் ஜுரம் அடிக்கும் போது விளையாடினால் சென்சுரி அடிப்பாராம். அது போல நீங்களும் தளராமல் உங்கள் கடமையை செய்து விட்டீர்கள். இரண்டாவது சம்பவம் வேதனைப் படுத்துகிறது. சிறு பூச்சிகள் கடிக்கும்போது நாம் சற்றே அஜாக்கிரதையாக இருப்பது இயற்கை. ஹுசைனம்மா சொல்லும் 'எறும்பு கடித்து இறந்து போன தகவலும் சிலந்தித் தகவலும்' பயமுறுத்துகின்றன.

மனோ சாமிநாதன் said...

இந்த நெடிய பயணத்தில் இது போன்ற சோதனைகள், அதுவும் வித்தியாசமான சோதனைகளை நிறைய‌ சந்திதிருக்கிறேன் தேனம்மை! ஆனால் எதைப்பற்றியும் கவலைப்பட்டதில்லை. எதுவாயிருந்தாலும் அதை சந்தித்துத்தானே ஆக வேன்டும்? இது நெடுநேரம் கணினி முன் அமர்வ‌தால் வரும் பிரச்சினையில்லை என்று மருத்துவர் கூறியுள்ளார். நானும்
கணினியில் அதிக நேரம் செலவழிப்பதில்லை.
கருத்துரைக்கு அன்பு நன்றி தேனம்மை!

மனோ சாமிநாதன் said...

Trigger Finger என்பது தான் சரி. உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்ததும் பிழையத் திருத்தி விட்டேன். அன்பான அக்கறைக்கும் கருத்துரைக்கும் மனம் நிறைந்த நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்!

மனோ சாமிநாதன் said...

அன்புச் சகோதரர் ஜெய்லானி!

ருமாடிக் பிரச்சினை, சர்க்கரை வியாதி இருப்பவர்களுக்கு இந்த பிரச்சினை வரலாம் என்று சொல்கிற மருத்துவர், எந்தக் காரண‌மும் இல்லாமலேயே இது நிறைய‌ பேருக்கு வரலாம் என்றும் ஆண்களை விட பெண்களை அதிகமாகத் தாக்குகிற பிரச்சினை இது என்றும் சொல்கிறார்.
உங்க‌ளின் அன்பான விசாரிப்பிற்கு இனிய நன்றி! விரலில் பெரிய அளவில் ஏதும் முன்னேற்றமில்லை. ஐஸ் கட்டியை வைத்து ஒத்தடம் கொடுப்பதும் மருந்து தடவி சிறியதாக மஸாஜ் செய்வதுமாக இருக்கின்றேன்.

அந்த வண்டு பற்றிய தகவல்களுக்கு மறுபடியும் நன்றி! நாம் தான் கவனமாக இருக்க வேன்டும். நீங்கள் சொல்வதும் சரி தான். அந்தப் பெண் உடனடியாக மருத்துவ உதவி பெற‌வில்லை என்று நினைக்கிறேன். பூச்சிக்கடி தானே என்ற நினைப்பாகவும் இருந்திருக்கும்.

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி சாகம்பரி!

மனோ சாமிநாதன் said...

உங்களின் அக்கறைக்கும் வாழ்த்துக்கும் அன்பு நன்றி சகோதரி லக்ஷ்மி! அந்த இந்திய‌ப்பெண் இன்னும் கோமாவில்தான் இருக்கிறாள்.

மனோ சாமிநாதன் said...

அன்பான அக்கறைக்கும் கருத்துரைக்கும் பிரர்த்தனைக்கும் இனிய நன்றி ராஜி!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி அதிரா!

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

பூரண நலம் பெற வாழ்த்துகிறேன் மனோ. உங்கள் உறுதியும் தன்னம்பிக்கையும் உங்களுடன் இருக்க நோய் நொடிகள் ஓடி விடும்

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

அன்பிற்கினிய மனோ அம்மா,

நீங்க என்னை "அனுபவ முத்துக்கள்" என்ற தலைப்பில் அறிமுகப்படுத்தி இருந்த விதம் கண்டு.. கண்ணில் நீர் வந்துவிட்டது. எனக்கு மிகவும், பிடித்த என் தந்தையை பற்றி நான் எழுதியிருந்த பதிவை நீங்க சுட்டிக் காட்டியதில் எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோசம். உங்கள் அன்பிற்கும், அறிமுகத்திற்கும் நன்றிகள் கோடி!!!!

அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

என்றும் அன்புடன்
ஆனந்தி

(கால தாமதமான எனது வருகைக்கு மன்னிக்கவும்)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

உங்கள் கை வலியையும் பொருட்படுத்தாது வலைச்சரத்தில் நீங்க எழுதி இருக்கீங்க. கை சீக்கிரமா குணமாகனும்னு வேண்டிக்கிறேன்.

இன்ஜெக்ஷன் எதுவும் போட்டீங்களா? இப்போ வலி எப்படி இருக்கும்மா? எதாச்சும் முன்னேற்றம் தெரியுதா?

Yaathoramani.blogspot.com said...

இத்தனை சிரமத்தினை வெளிக்காட்டிக்கொள்ளாது
மிகச் சிறப்பான முறையிலே ஆசிரியர் பணியினை
நிறைவு செய்வது எவ்வளவு சிரமம் எனப் புரிய
மனம் சங்கடப்படுகிறது
அறுவை சிகிச்சையின்றியே சீக்கிரம் குணமடைய
எல்லாம் வல்லவனை வேண்டிக் கொள்கிறேன்
அந்த சகோதரி விஷயமும் மனவேதனை அளிக்கிறது
விரைவில் குணமடைந்து முன்புபோல் நடமாடவும்
பிரார்த்திக்கிறேன்

தக்குடு said...

கைவலி இப்ப கொஞ்சம் பரவால்லியா?? ரெண்டு விஷயங்களை படிச்சுட்டு கொஞ்சம் கஷ்டமா இருந்தது. உபாதைகள் எல்லாம் ரகம் ரகமானா வருது ...:( உடம்பை பாத்துக்கோங்கோ அம்மா!

மனோ சாமிநாதன் said...

ரொம்ப நாளைக்குப்பிறகு உங்களை இங்கே பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது ஆசியா!

கருத்துரைக்கு அன்பு நன்றி ! இந்த விரல் வலிக்கும் ஓய்வுக்கும் சம்பந்தம் இல்லை. தோன்றுபோதெல்லாம் வலிக்கிறது!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

மனம் நிறைந்த தன்னம்பிகை வார்த்தைகளுக்கும் பாராட்டிற்கும் மனமார்ந்த நன்றி வித்யா!

மனோ சாமிநாதன் said...

உங்கள் தந்தையைப்பற்றி நீங்கள் இட்டிருந்த இடுகை அருமையாக இருந்தது ஆனந்தி! அதனால்தான் அதைத் தேர்வு செய்தேன். உங்களின் பின்னூட்டம் மிகவும் மகிழ்வைத் தந்தது.

என் உடல்நிலை பற்றிய உங்களின் அக்கறைக்கு அன்பு நன்றி! அந்த steroid in jection இங்கே தடை செய்யப்ப‌ட்டிருக்கிறது. ஊருக்குச் சென்று தான் போட்டுக்கொள்ள‌ வேன்டும். வலி இருந்து கொண்டு தான் இருக்கிறது. வீக்கம் வருவதும் போவதுமாக இருக்கிறது.

அம்பாளடியாள் said...

வணக்கம் அம்மா உங்கள் கடமை உணர்வைப் பாராட்டுகின்றேன் .
இப்போது உங்கள் கைவிரல் எப்படி உள்ளது ?....இறுதியாக அந்தப்
பூச்சியினால் நிகழ்ந்த இழப்பை கேட்க்கும்போது மனதிற்கு துன்பமாய்
இருந்தது .மனிதைத் தேடி மரணம் எத்தனை வழிகளில் வருகின்றது !....
மிக்க நன்றி அம்மா பகிர்வுக்கு .

Unknown said...

அன்புச் சகோதரி!
வணக்கம் கணக்கில!
வலைச்சரத்தில் என்னையும் அறி
முகப் படத்தினீர்
என் நன்றி தங்களுக்கு
என்றும் உரியது.
கைவலியோடு அப்பணியைச்
செய்துள்ளீர் என தற்போது அறிந்து
மிகவும் கவலைப் பட்டேன்
விரைவில் குணமடைய
வேங்கடவனை வேண்டுகிறேன்

புலவர் சா இராமாநுசம்

கதம்ப உணர்வுகள் said...

இத்தனை அவஸ்தையிலும் பெஸ்ட் கொடுத்திருக்கீங்கம்மா நீங்க.. நான் ரொம்ப நாள் உங்க ப்ளாக் வந்து பார்த்து பார்த்து பதிவிட முடியாமல் ஏமாற்றத்துடன் போனேன். இன்று வலைச்சரத்தில் உங்க பதிவை பார்த்து வேகமாக வந்தேன்.. நல்லவேளை மிஸ் பண்ணிடலை உங்களை...

கைவிரல் வலி என்று வார்த்தையாக சொல்லாமல் அதன்மூலம் நீங்க பட்ட அவஸ்தைகளையும் புரியவெச்சிட்டீங்கம்மா. இதுப்பற்றி இப்ப தான் முதல்முறை கேள்விப்படுகிறேன்...

இப்ப அந்த பணிப்பெண்ணின் உடல்நிலைப்பற்றிய தகவல் எதுனா தெரிந்ததா உங்களுக்கு?

வேதனையாக இருக்கிறது... நானும் விவரங்கள் தெரிந்தால் அறியத்தருகிறேன்.

உங்கள் உடல்நலனை பார்த்துக்கொள்ளுங்கள்....

அன்பு பிரார்த்தனைகள் உங்கள் ஆரோக்கியத்திற்காகவும் பணிப்பெண்ணின் உடல்நலம் தேறி எழுந்து நடக்கவும்....

மனோ சாமிநாதன் said...

தங்கள் பிரார்த்தனைக்கும் அக்கறைக்கும் அன்பு நன்றி சகோதரர் ரமணி!

மனோ சாமிநாதன் said...

உங்களின் அன்பான அக்கறைக்கு இனிய நன்றி சகோதரர் தக்குடு! விரலின் வலி அதிகரிப்பதும் குறைவதுமாகத் தானிருக்கிறது!

மனோ சாமிநாதன் said...

அன்பான பின்னூட்டமும் அதில் தெறிக்கும் அக்கறையும் மனதிற்கு இதமளிக்கிறது அம்பாளடியாள்! உங்களுக்கு என் அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

தங்களின் பிரார்த்தனைக்கும் அக்கறைக்கும் மனங்கனிந்த நன்றி சகோதரர் ராமானுஜம்!

மனோ சாமிநாதன் said...

அன்பான பின்னூட்டத்திற்கும் உங்களின் அக்கறைக்கும் பிரார்த்தனைக்கும் மகிழ்ச்சி கலந்த நன்றி மஞ்சுபாஷணி! அந்தப் பெண்ணைப்பற்றிய தகவல் ஒரு வேளை இன்று வந்தாலும் வரலாம். வந்தால் தெரிவிக்கிறேன்!

Jaleela Kamal said...

மனோ அக்கா இந்த பதிவ இப்ப தான் படிக்கிறென்

கைவலி ஏன் இப்படி முன்பு இதே போல் மீன் முள்ளினால் அவஸ்தை பட்டீங்க் சீக்கிறம் குனமடைய பிராத்திக்கிறேன்

கை விரலிலில் உள்ள கோடுகளை என்னுவது போல் ஒரு உடற்பயிற்சி செய்து பாருங்கள்

Jaleela Kamal said...

பூச்சி கடி மிகவும் அதிர்சியூட்டும் தகவல்

இங்கு எல்லாமே
இராத்திரி தானே சட்டிய தூக்கி கொண்டு
பார்க் போகிறார்கள்
குளிக்க போகிறாற்ஆள்

Jaleela Kamal said...

இங்கு இரவினில் தான் எல்லாமே ஆட்டம் போடுகிறர்கள்

நாங்க் இப்ப பார்க்கே
போவதில்லை

முன்பெல்லாம் நாங்கள் பார்க் போய் திரும்பும் சமையம்
அப்பதான் அரபிகள் சட்டிய தூக்கி கொண்டு வருவார்கள்

எல்லா வீடுகளிலும் இரண்டு வேலைகாரிகள் எஅதால்
ரொம்ப வே
அவர்களுக்கு சொகுசு தான்

Jaleela Kamal said...

அந்த காலத்தில் விளக்குவைத்ததும் எங்கும் வெளியில் அனுப்ப மாட்டார்கள்