Wednesday, 18 May 2011

அன்புள்ளங்களிடமிருந்து ஒரு உதவி!!

அன்புத் தோழமைகளுக்கு!


எல்லோருக்கும் வந்த பிரச்சினை எனக்கும் கடந்த வியாழ‌னன்று ஆரம்பித்தது. ஆரம்பத்தில் தற்போது உள்ள பதிவு மறைந்து, அதற்கு முந்தின பதிவு வந்தது. அதன் பின் அது ஒழுங்காக வந்தாலும் அனைவருடைய பின்னூட்டங்கள் அனைத்தும் காணாமல் போயின. இது வரை அவை மீண்டும் வரவில்லை. அதற்குப்பின் வந்த பின்னூட்டங்கள் மட்டுமே இணைக்க முடிந்தது. அதுவல்ல என்னுடைய பிரச்சினை. என்னுடைய இன்பாக்ஸிலிருந்து என்னால் அன்றிலிருந்து வெளியேற‌ முடியவில்லை. கூகிள் உதவி மையம் சென்று படித்து பல தீர்வுகளை செய்து பார்த்தும் பலனில்லை. www.blogger.com-ல் புகுந்தாலே user name, password  எதுவுமில்லாமல் நேரே இன்பாக்ஸ் வந்து விடுகிறது. இன்பாக்ஸிலிருந்து வெளியேற முடிவதில்லை! யாரேனும் இதற்கு தீர்வு சொன்னால் என்னுடைய தற்போதைய பிரச்சினை விலகும். நல்லதொரு தீர்வை என் அன்புத் தோழமைகளிடமிருந்து ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.அன்புடனும் நன்றியுடனும்


மனோ சாமிநாதன்.

12 comments:

தளிகா said...

அன்புள்ள மனோ ஆண்ட்டி எனக்கு இதனை பற்றி எதுவும் தெரியாது என்றாலும் அனேகமாக நீங்கள் ப்ரவுசரில் /டூல்ஸ்/இன்டெர்னெட் ஆப்ஷனில் ரீசென்ட் ஹிஸ்டரி(temp files,history,saved passwords) க்லியர் பண்ணி பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.இருந்தும் அதுவே தொடர்ந்தால் எங்காவது பாஸ்வேர்ட் சேவ் ஆகும்படி செட்டிங்க்ஸ் மாறியுள்ளதா என்று பார்க்கலாம் என நினைக்கிறேன்.

Chitra said...

Did you check: http://www.google.com/support/forum/p/gmail/thread?tid=5078d52fcfd9ed12&hl=en
Looks like few other people had this problem.

தேனம்மை லெக்ஷ்மணன் said...

அடடா மனோ.. எனக்கு இது பற்றி சரியாக தெரியாது. வேலன்., வந்தேமாதரம் சசிகுமார்., சூர்யகண்ணன் போன்ற ப்லாகர்களுக்குத் தெரிந்திருக்கலாம். இவங்கதான் கம்ப்யூட்டர் டெக்னாலஜி பத்தி எழுதுறவங்க..

அஸ்மா said...

மனோ மேடம்! தளிகா சொன்னதுபோல் உங்க ப்ரௌஸரில் பாஸ்வேர்டு சேவ் ஆகும்படி ஏதாவது செட்டிங்ல இருந்திருக்கும் என்றே தோன்றுகிறது. அப்படியிருந்தால் 'un-check' பண்ணிவிட்டு, logout பண்ணிப் பாருங்கள். அல்லது உங்கள் gmail லில்கூட அதுபோன்ற செட்டிங்ஸ் சேவ் ஆகியிருக்கலாம். அதையும் செக் பண்ணிக்கோங்க. அல்லது ஒருமுறை cookies delete பண்ணி, கம்ப்யூட்டரை restart பண்ணிப் பாருங்கள். வேறு ஒன்றும் இதுபற்றி பெரிதாக எனக்குத் தெரியவில்லை. எனக்குத் தெரிந்தவர்கள் யாரிடமாவது கேட்டு, சொல்யூஷன் கிடைத்தால் சொல்கிறேன் மேடம். எதற்கும் இந்த லிங்க் உதவுமா என்று பாருங்கள்.

http://mail.google.com/support/bin/answer.py?answer=53374

MANO நாஞ்சில் மனோ said...

//http://www.vandhemadharam.com/2011/05/previews.html//
இந்த லிங்க்'ல போயி பாருங்க, உங்களுக்கு உபயோகமா இருக்கும்னு நினைக்கிறேன்....

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள தாளிகா!

ரொம்ப நாட்களுக்குப்பின் வருகை தந்ததற்கும் சில தீர்வுகளைத் தெரிவித்திருப்பதற்கும் என் அன்பு நன்றி! நீங்கள் சொன்னவற்றை முன்பே செய்து பார்த்து விட்டேன்! அதிர்ஷ்டவ‌சமாக அஸ்மா கொடுத்த லிங்க் என் பிரச்சினையை சரியாக்கி விட்டது.

மனோ சாமிநாதன் said...

அன்பு அஸ்மா!

நீங்கள் கொடுத்த லிங்க் என் பிரச்சினையைத் தீர்த்து விட்டது. கடந்த ஒரு வாரமாக என் இரு வலைத்தளங்களுக்குச் செல்ல முடியாமலும் யாருக்கும் பின்னூட்டங்கள் கொடுக்க முடியாமலும் கஷ்டப்பட்டேன். உங்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றி!

மனோ சாமிநாதன் said...

Dear Chithra!

Thanks a lot for giving me a link as well as your suggestions. The link which had been given by Mrs.Asma had helped me to solve my problem.

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள தேனம்மை!

உங்களின் அன்புக்கும் அக்கறைக்கும் என் மனமார்ந்த நன்றி! அஸ்மாவின் உதவியால் என் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விட்டது!

மனோ சாமிநாதன் said...

அன்புச் சகோதரர் மனோ!

உங்களின் அக்கறைக்கும் உதவிக்கும் என் உளமார்ந்த நன்றி!!

அஸ்மா said...

அப்படியா...! ரொம்ப சந்தோஷம் மனோ மேடம் :) உங்கள் பிரச்சனையைத் தீர்த்து வைத்த இறைவனுக்கே எல்லாப் புகழும். appointment போகும் அவசரத்தில் யாரிடமும் கேட்டுக்கூட உங்களுக்கு சொல்ல முடியவில்லையே, சரி வேறு யாராவது அதில் தேர்ந்தவர்கள் சொல்லியிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டே வந்தேன். உங்க தகவல் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிப் போனது :-) பிரச்சனை சரியானதை தெரிவித்ததற்கு நன்றி மேடம்!

Lakshminarayanan said...

ப்ரச்னை நல்ல விதமாக தீர்ந்ததில் சந்தோஷம்!!