Wednesday, 27 April 2011

கற்பனையை விஞ்சும் நிகழ்கால உண்மைகள்!!

இந்த முறை 'முத்துக்குவியலில்' நான் சமீபத்தில் படித்து வியந்த சில செய்திகளைக் குறிப்பிட்டு எழுதலாமென்று நினைத்தே. இங்கே வெளியிட்டிருக்கும் இரண்டு செய்திகளுமே மிக மிக ஆச்சரியமான விஷயங்கள்தாம்!
  
குழந்தையே பிறக்காத கிராமம்!

இப்படி ஒரு செய்தியைப்படித்தபோது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

ஸ்பெயினின் தலைநகரான மாட்ரிடிலிருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது சியூன்கா நகர். அதனருகில் உள்ள ஒல்மெடா தி லா சியூஸ்டா என்ற கிராமத்தில்தான் கடந்த 40 வருடங்களாக குழந்தைகலே பிறக்கவில்லை. குழந்தைகள் மட்டுமில்லை, சிறுவர்கள், இளைஞர்களைப்பார்த்தும்கூட 40 வருடங்கள் ஆகிவிட்டன இந்த கிராமத்திற்கு.
இந்த கிராமத்தின் மொத்த மக்கள் தொகையே 15 பேர் தான். அவர்களும் 65 வயதிலிருந்து 90 வயதிற்குட்பட்டவர்கள். ஒரு காலத்தில் இந்த கிராமம் விவசாயத்தில் கொடி கட்டிப் பறந்திருக்கிறது. அதன் பின் விவசாயம் கொஞ்சம் தடுமாற பிழைப்புக்காக வெளி மாநிலங்களில் இந்த கிராமத்து மக்கள் குடியேறி விட்டார்கள். நல்லது, கெட்டது எதற்குமே அப்படிச் சென்றவர்கள் திரும்ப வந்ததில்லை. கிராமத்தை விட்டு வெளியேற விரும்பாத சிலர் அப்படியே இருந்து விட, ஐந்து வ‌ருடங்களுக்கு முன் கணக்கெடுத்தபோது 22 பேர்களாயிருந்து, இப்போது பதினைந்தாகக் குறைந்து விட்டார்கள்.

அதற்காக, நிலைமையைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கவில்லை இந்தப் பெரியவர்கள். தன் கிராமத்துக்குப் புது ரத்தம் பாய்ச்சியே ஆக வேன்டும் என முடிவெடுத்து அதற்கான செயலிலும் இறங்கி விட்டார்கள். அதற்காக அவர்கள் கையிலெடுத்த ஆயுதம் ரியல் எஸ்டேட். நிலங்களை மிகக் குறைந்த விலைக்கு விற்கத் தொடங்கினார்கள். அதற்காக அவர்கள் போட்ட நிபந்தனை ஒன்றே ஒன்றுதான். நிலத்தை வாங்குபவர்கள் இளைஞர்களாக இருக்க வேண்டுமென்பதுதான். தற்போது பலரும் அங்கே நிலங்களை வாங்கிப் போட்ட வண்ணம் இருக்கிறார்களாம். ஆனாலும் ஓரளவு அங்கே ஜனத்தொகை கூடுவதற்கு இன்னும் 10 ஆண்டுகள் பிடிக்கும் என்கிறார் சியூன்கா மேயர்!

                                                              &&&&&&&&&

தாய்ப்பால் ஐஸ்க்ரீம்!

ஐஸ்கிரீமிஸ்ட்ஸ்!

இது லண்டனிலுள்ள மிகப்பெரிய ஐஸ்கிரீம் பார்லர்! இங்கு ஒரு ஐஸ்கிரீம் கிடைக்கிறதென்றால் அது வேறு எங்கேயும் அறிமுகப்படுத்தாத அல்லது அறிமுகப்படுத்தியிருந்தாலும் அத்தனை சுவையில்லாததாகத்தான் இருக்கும்!
இதன் நிறுவனர் எப்போதுமே வித்தியாசமாக சிந்திப்பவர். அதனால்தான் யாருமே கற்பனைகூட செய்திருக்க முடியாத தாய்ப்பால் ஐஸ்கிரீம் விற்பனைக்கு வந்திருக்கிறது. உலகில்  பல தாய்மார்களுக்கு தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுவதில் சிரமம் இருக்கின்றன. கொடுப்பதில் உடல் ரீதியான பிரச்சினைகள் இருக்கலாம் அல்லது குடிப்பதில் குழந்தைகளுக்குப் பிரச்சினைகள் இருக்கலாம். இதன் விளைவாக, பால் கட்டிக்கொண்டு செயற்கை முறையில் அதை வெளியேற்ற வீணாக்க வேண்டியிருக்கிறது.             இப்படிப்பட்டவர்கள் தயவு செய்து உங்கள் பாலை வீணாக்காமல் எங்களுக்குத் தாருங்கள். நாங்கள் காசு தருகிறோம் என்று ஒரு விள‌ம்பரம் இதன் நிறுவனர் வெளியிட்டார். பல தாய்மார்கள் முன் வந்தார்கள். அந்தத் தாய்ப்பாலை அதி நவீன முறையில் பதப்படுத்தி ஐஸ்கிரீம் தயாரித்திருக்கிறது ஐஸ்கிரீமிஸ்ட்ஸ் கம்பெனி!
ஒரு தாய்ப்பால் ஐஸ்கிரீம் விலை 14 பவுண்டுகள்! [23 டாலர்கள், கிட்டத்தட்ட ஆயிரத்து இருநூறு ரூபாய்கள்!}

27 comments:

மனோவி said...

புதிய தகவல்களுக்கு நன்றி..
அது போன்ற கிராமம் இந்தியாவில் ஏதும் இருக்கிறதா?

மோகன் குமார் said...

இரண்டு தகவலுமே ஆச்சரியமாக உள்ளது பகிர்ந்தமைக்கு நன்றி

Ramani said...

உண்மையில்
க்ற்பனையை மிஞ்சும் உண்மைகளாகத்தான்
இரண்டு செய்திகளும் உள்ளன
நல்ல புதிய செய்திகளைத் தந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

Nalla thagavalgal.

சிநேகிதி said...

2 செய்திகளும் மிகவும் ஆச்சிரியமாக இருக்கு மனோ அக்கா

இமா said...

ஆச்சரியமான செய்திகள்.
சுவாரசியமாக இருக்கிறது அக்கா.

Lakshminarayanan said...

கற்பனைக்கெட்டாத விஷயங்கள்தான்...எனினும், இரண்டுமே ‘மாத்தி யோசி..மாமு’ டைப்...(ஊலலல்லா...என்னுடையதுதான் முதல் கமெண்ட்)

Lakshmi said...

இந்த தகவல்களை பத்த்ரிகையில் படித்ததாக நினைவு.

வை.கோபாலகிருஷ்ணன் said...

இரண்டுமே புதிய தகவல்கள்.

ஒல்மெடா தி லா சியூஸ்டா என்ற கிராமத்தில் மலிவு விலையில் நிறைய இடம் வாங்கிப்போடுங்கோ ! அங்கேயே தாங்கள் “தாய்ப்பால் ஐஸ்கிரீம்” தயாரிக்கும் ஃபாக்டரி ஒன்று ஆரம்பீங்கோ !

வாழ்த்துக்கள் ! அன்புடன் vgk [ Voted ]

middleclassmadhavi said...

வினோதமான செய்திகள் தாம்!

athira said...

தகவல்களுக்கு நன்றி.

லேடி காகா போய் இப்போ பேபி காகா:).. நல்ல பெயர்தான் வைத்திருக்கிறார்கள் ஐஸ்கிரீமுக்கு.

வெங்கட் நாகராஜ் said...

இரண்டாவது விஷயம் நாளிதழில் படித்தேன். ஒன்றும் சொல்வதிற்கில்லை. எல்லாவற்றிலும் வியாபாரம்.... :(

முதல் விஷயம் - நம்முடைய கிராமங்களிலும் இந்நிலை வந்தால் ஆச்சரியப்படுவதிற்கில்லை...

சிநேகிதி said...

உங்களுக்கு எனது இனிய இல்லத்தில் அவார்டு கொடுத்திருக்கேன்.. பெற்றுக்கொள்ள வாருங்கள்

என்றும் நட்புடன் உங்கள் சிநேகிதி

http://en-iniyaillam.blogspot.com/2011/04/blog-post_22.html

மனோ சாமிநாதன் said...

கருத்துக்கு அன்பு நன்றி ம‌னோவி! இந்த மாதிரி கிராமங்கள் தமிழ் நாட்டில் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்தியாவில் பல கிராமங்களில் 500 பேருக்கும் குறைவாக மக்கள் தொகை இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் தமிழ் நாட்டில் நடைமுறை வாழ்க்கை இயலில் கிராமங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பசுமையை இழந்து வருவது போல, விரைவிலேயே அநேக மக்கள் புலம் பெயர்ந்து நகரங்களில் முழுமையாகக் குடியேறும் நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!!

மனோ சாமிநாதன் said...

கருத்துக்கு இனிய நன்றி மோகன்குமார்!

மனோ சாமிநாதன் said...

அன்பான கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி சகோதரர் ரமணி!!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துக்கு அன்பு நன்றி வித்யா சுப்ரமண்யம்!

மனோ சாமிநாதன் said...

அன்பான கருத்துக்கு உளமார்ந்த நன்றி சினேகிதி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு இனிய நன்றி இமா!

மனோ சாமிநாதன் said...

கருத்துக்கு அன்பு நன்றி சகோதரர் லக்ஷ்மி நாராயணன்!

மனோ சாமிநாதன் said...

நான் பத்திரிக்கைகளில் படித்ததைத்தான் செய்திகளாகக் கொடுத்திருக்கிறேன். கருத்துக்கு அன்பு ந‌ன்றி சகோதரி லக்ஷ்மி!!

மனோ சாமிநாதன் said...

கருத்துக்களுக்கு அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

மனோ சாமிநாதன் said...

கருத்துக்கு அன்பு நன்றி மாதவி!

மனோ சாமிநாதன் said...

கருத்துக்கு இனிய நன்றி அதிரா!

மனோ சாமிநாதன் said...

நீங்கள் சொல்வது சரி தான் சகோதரர் வெங்கட் நாகராஜ்! ஏற்கனவே கிராமங்கள் தங்கள் பசுமையையும் இனிமையையும் இயல்பையும் இழந்து வருகின்றன. பசும் நிலங்கள் எல்லாம் தற்போது கட்டிடங்களாக மாறி வருகின்றன! இனி நகரங்களுக்கு குடி பெயர்ந்து மக்கள் தொகையும்கூட குறையலாம் நிறைய கிராமங்களில்!!

மனோ சாமிநாதன் said...

விருதுக்கு அன்பு நன்றி சினேகிதி! விரைவில் உங்கள் தளத்துக்கு வந்து பெற்றுக்கொள்கிறேன்!!

ஸ்ரீராம். said...

முதல் செய்தி புதிது. இரண்டாவது செய்தி ஆதிமனிதன் ப்ளாக்கில் கொஞ்ச நாள் முன்பு படித்தேன். நண்பர் வைகோவின் பதில் ரசிக்கத் தக்கதாய் இருந்தது.