Thursday 31 March 2011

சேமியா பருப்பு உசிலி

சுவையான சமையல் பகுதிக்கு வந்து ரொம்ப நாட்களாகி விட்டதால் மறுபடியும் ஒரு ருசிகரமான சிற்றுண்டி செய்வதைப் பற்றி இங்கே எழுதலாம் என நினைத்தேன். வழக்கமான இட்லி, தோசை, உப்புமா, பொங்கல், அடை இவைகளைத் தவிர்த்து இங்கே நான் கொடுக்கப்போகும் புதிய குறிப்பு சேமியா பருப்பு உசிலி!


சேமியாவில் கிச்சடி, உப்புமா, பாயசம், இட்லி என்று பல வகை சமையல் செய்யலாம். இந்த சேமியா பருப்பு உசிலியில் பருப்புகள் அடங்கியிருப்பதால் ரொம்பவும் சத்தான உசிலி இது.



தேவையானவை:

துவரம்பருப்பு- 1 கப்
கடலைப்பருப்பு- 1 கப்
மிளகாய் வற்றல்-6
பெருங்காயத்தூள்- அரை ஸ்பூன்
சேமியா- 1 கப்
தேவையான உப்பு
நெய்- 2 மேசைக்கரண்டி
எண்ணெய்- 2 மேசைக்கரண்டி
கடுகு- 1 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு- 2 ஸ்பூன்
மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்
பொடியாக அரிந்த கொத்தமல்லி- அரை கப்
கறிவேப்பிலை- 20 இலைகள்
மெல்லியதாக அரிந்த வெங்காயம்- 1 கப்
பொடியாக அரிந்த தக்காளி- 1 கப்
[தேவையானால்]தேங்காய்த்துருவல்- 1 கப்

செய்முறை

மிளகாய்களை விதைகள் நீக்கி, பருப்பு வகைகளுடன் போதுமான நீரில் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.

தண்ணீரை வடித்து போதுமான உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

இத்துடன் சேமியா, சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

இட்லித்தட்டில் ஊற்றி 10 நிமிடங்கள் ஆவியில் வேக வைக்கவும்.

வெளியே எடுத்து ஆறியதும் உதிர்த்துக்கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெயையும் நெய்யையும் ஊற்றவும்.

கடுகைப்போட்டு அவை வெடித்ததும் உளுத்தம்பருப்பு, பெருங்காயம் போட்டு வதக்கவும்.

சிறிது சிவந்ததும் வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து, தக்காளி நன்கு குழையும் வரை வேக வைக்கவும்.

எண்ணெய் மேலே தெளிந்து வந்ததும் உதிர்த்திருப்பவற்றைச் சேர்த்து குறைந்த தீயில் சில நிமிடங்கள் அனைத்தும் சேரும்படி கிளறவும்.

அடுப்பை அணைத்து தேங்காய்த்துருவல் வேண்டுமானால் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

சுவையான சேமியா பருப்பு உசிலி தயார்!!



23 comments:

GEETHA ACHAL said...

ஆஹா...ரொம்ப வித்தியசமாக இருக்கு...கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆஹா, சேமியா பருப்பு உசிலி செய்முறை அருமை.
நாக்கினில் நீரை வரவழைப்பதாக உள்ளது. பாராட்டுக்கள்.

Chitra said...

Thank you for this delicious recipe.

Anisha Yunus said...

படத்தில் இருக்கும் பிளேட்டும், அதன் கீழிருக்கும் டேபிள் விரிப்பும் கண்ணை அசத்துகிறது அக்கா. அழகோ அழகு. உசிலியும்தான்!! :))

Menaga Sathia said...

மிகவும் வித்தியாசமான உசிலி,அருமை!!

ஸ்ரீராம். said...

புதுசு...இது புதுசு...!

middleclassmadhavi said...

ம்.. செய்து பார்த்துடுவோம்! பகிர்வுக்கு நன்றி

Vijiskitchencreations said...

super new recipe. I wil try definetely.

மனோ சாமிநாதன் said...

செய்து பாருங்கள் கீதா! மிகவும் சுவையாக இருக்கும்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

மனோ சாமிநாதன் said...

Thank you Chithra!

ADHI VENKAT said...

படத்தை பார்க்கும் போதே ஆசையாக இருக்கிறது. கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்.

மனோ சாமிநாதன் said...

புகைப்படத்தை ரசித்து எழுதியது எனக்குத் தனியான மகிழ்ச்சியைத் தருகிற‌து அன்னு! நிச்சயம் சேமியா உசிலியும் அதுபோலவே சுவையாக இருக்கும். அன்பு நன்றி உங்களுக்கு!!

ஹுஸைனம்மா said...

அக்கா, எனக்கும் அந்த பிளேட், மேசை விரிப்புதான் ரொம்பப் பிடிச்சிருக்கு. அதுவும் சேமியா பக்கத்திலே ஏதோ சுருள்சுருளா இருக்கே, அது பிளேட்டின் டிஸைனா, இல்லை செய்து வைத்ததா?

சேமியா உசிலி - ரொம்பப் புதுசு. வித்தியாசமாவும் இருக்கு.

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு அன்பு நன்றி மேனகா!

மனோ சாமிநாதன் said...

கருத்துக்கு அன்பு நன்றி ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

செய்து பார்த்து சொல்லுங்கள் ஆதி!

மனோ சாமிநாதன் said...

அன்பான கருத்துக்கு இனிய நன்றி ஹுஸைனம்மா! அந்த சுருள் எல்லாம் பிளேட்டின் டிஸைன்தான்! புகைப்படத்தில் அப்படி அழகாய் விழுந்திருக்கிறது!!

Kanchana Radhakrishnan said...

வித்தியாசமான உசிலி.பகிர்வுக்கு நன்றி.

Asiya Omar said...

மனோ அக்கா அருமையான புது ரெசிப்பி,அசத்தலாக இருக்கு.

மனோ சாமிநாதன் said...

கருத்துக்கு அன்பு நன்றி காஞ்சனா!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு இனிய நன்றி ஆசியா!

மனோ சாமிநாதன் said...

இப்பதிவிற்கு இன்ட்லியில் ஓட்டளித்து இணைந்த அன்புத் தோழமைகள்
KARTHIK, SRIRAMANTHAGURUJI, VAI.GOPALAKRISHNAN, CHITHRA, bsr, AADHI
அனைவருக்கும் என் அன்பார்ந்த நன்றி!