Monday, 14 March 2011

ஆதலினால் அன்பு செய்வோம்!!!

சென்ற மார்ச் 16ந்தேதி தான் என் 'முத்துச்சிதறலை'த் துவங்கினேன். பல ஆண்டுகளாய் உள்ள‌த்திலேயே நீருபூத்த நெருப்பாக‌
கனன்று கொன்டிருந்த எண்ணங்களுக்கு வடிகால் என் நினைத்தே இதைத் தொடங்கினேன். எழுத ஆரம்பித்ததும்தான் இந்த வலையுலகம் என்னை பல விதங்களிலும் பிரமிக்க வைத்தது. எத்தனை கவிஞர்கள்! எத்தனை எழுத்தாளர்கள்! எத்தனை சமையல் வல்லுனர்கள்! எத்தனை கருத்தாழம் மிக்க பதிவுகள்! எத்தனை மனம் நெகிழ வைத்த, சிந்திக்க வைத்த பதிவுகள்! இந்த ஒரு வருடத்தில் இப்படிப்பட்ட திறமையாளர்கள் பலரின் அன்பும் நட்பும் அறிமுகமும் பின்னூட்டங்களும் கிடைத்திருப்பது மனதை நெகிழ வைக்கிறது! பெருமிதப்பட வைக்கிறது! 25723 பார்வையாளர்கள், 113 ஃபாலோவர்ஸ், 69 இடுகைகள்,  என்று என் ப‌யணம் வெற்றிகரமாகத் தொடர, அன்பான பின்னூட்டங்களும், இன்ட்லியில் ஓட்டுக்களும் அளித்து அளித்து என்னை பெரிதும் உற்சாகப்படுத்தும் அன்பு நெஞ்சங்களுக்கு

                              என் இதயங்கனிந்த நன்றிகள்!! 


உங்கள் அனைவரின் அன்பும் பின்னூட்டங்களும் என்றும் இனிதே தொடரும் என்ற நம்பிக்கையில் என் பயணத்தைத் தொடர்கிறேன்!

                                  ஆதலினால் அன்பு செய்வோம்!!!  
ஒரு வருடத்தை நிறைவு செய்யும் பதிவு ஒரு சிறந்த விஷயத்தை மூலக்கருவாகக் கொண்டிருக்க வேண்டுமென நினைத்தேன். உலகில் அன்பை விட சிற‌ந்தது எது?

பிரியம், பாசம், சினேகிதம், தாய்மை, காதல் என்று பல வடிவில் இருக்கும் இந்த 'அன்பு' என்ற மாபெரும் சக்தியைப்பற்றி எத்தனை எத்தனை திரைப்படங்கள், பாடல்கள், புத்தகங்கள் வெளி வந்திருக்கின்றன!!

முன்பெல்லாம் தமிழ் எழுத்தாளர்களின் நாவல்களில் இந்த அன்பு தான் பிரதானமாயிருக்கும். அதைச் சுற்றித்தான் கதை பின்னப்பட்டிருக்கும். இதை வெளிப்படுத்தி சொல்லலங்காரமாக எழுதுவதில் அகிலன், நா.பார்த்தசாரதி இவர்களெல்லாம் தேர்ந்தவர்கள். கல்கி மிக எளிமையான வார்த்தைகளால் கதாபாத்திரங்களின் அன்பை நமக்குப் புரிய வைத்திருப்பார்.

எழுத்தாளர் நா.பார்த்தசாரதி தன் 'பொன் விலங்கு' என்ற நாவலில் சில இடங்களில் அன்பைப்பற்றி மிக அருமையாக எழுதியிருப்பார்.

"பரிசுத்தமான அன்பு என்பது மனம் நெகிழ்ந்து உருகும் தூயவர்களின் கண்ணீரால் உலகில் நிரூபிக்கப்படுகிறது"

என்று ஓரிடத்தில் சொல்லுவார்.
மற்றொரு சமயம்

" மனதின் எல்லா நோய்களுக்கும் அன்பு தான் மருந்து. அதே அன்பு பொய்யாய் இருந்து விட்டாலோ அதை விட பெரிய நோய் எதுவுமில்லை" 

என்று உருகியிருப்பார். எழுத்தாளர் கல்கி தனது 'சிவகாமியின் சபதத்தில்' இறுதி அத்தியாயத்தில், தன் கதாநாயகி கடவுளுக்கு மட்டுமே அன்பு செய்யப் பிறந்தவள், அவனின் காதலியானவள், மானிடனுக்காகப்பிறந்தவள் இல்லை என்று இதயம் உருக முடித்திருப்பார்.

கவிஞர் பாரதியார் '
துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம் அன்பில் அழியுமடி‍! அன்பிற்கழிவில்லை காண்" என்று சொல்லி மறைந்தார்.

சங்கப் புலவர் நரிவெரூத்தலையார் அருளும் அன்பும் இல்லாதவரோடு சேர வேண்டாம் என அறிவுரைத்திருப்பார்.
  
வடலூர் வள்ளலாரும்
ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செய்தல் வேண்டும்"
என உலகத்து உயிர்களுக்கு அன்பு காட்ட அருளுமாறு ஆண்டவனை வேண்டுகிறார்.

"மனதிலே அன்பு குறையும் போது வாழ்க்கை வறண்டு போகிறது.
அவிழ்தம் பலப்பலக் கண்டேன் அன்பின் நிகராய் கண்டிலேன்
தனுவில் ஒருதுளி புகுந்தது, தனுவெலாம் பொன்னொளி பாய்ந்தது" 

என்று கபீர்தாஸ் மெய்மறக்கிறார்.

அன்பின் சிறப்பை, மேன்மையை திருமூலர் இப்படி ஒரு பாடலில் குறிப்பிடுகிறார்.
"ஓதும் மயிர்க்கால் தொறும் அமுதூறிய
பேதம் அபேதம் பிறழாத ஆனந்த
மாதி சொரூபங்கள் மூன்று (அ)கன்றப்பாலை
வேதம் ஓதுஞ் சொரூபிதன் மேன்மையே - திருமந்திரம்"

காற்றில் காண இயலாதவாறு கலந்திருக்கும் நீர் மேகமாக திரண்டு மழை போல் பொழிவது போல் திருமூலர் உரைக்கும் ’மயிர்க்கால் தொறும் ஊறும் அன்பு’அளவில்லாமல் பெருகும் போது பிற உயிர்களிடம் பெருகி பாய்கிறது. அப்போது நல்லவன் தீயவன் பேதம் இல்லை. மழை யாவர்க்குமாம் என்பது போல் மேன்மக்கள் அன்பும் யாவர்க்குமாய் பயனளிக்கிறது."

இதையே ஸ்ரீ அரவிந்த அன்னை இப்படி சொல்கிறார்:
At first, one loves, when one is loved.
Next, one loves spontaneously, but one wants to be loved in return!
Then, one loves even if one is not loved, but one still wants one's love to be accepted!
And finally, one loves purely and simply, without any other need or enjoy than that of loving!


இப்படி அறிவிலும் அனுபவத்திலும் சிறந்தவர்கள் சொல்லியிருப்பது போல நாம் பிறரிடம் அன்பு செய்கிறோமா?
நாம் அன்பு செய்வதற்காகவே பிறந்திருக்கிறோம். அன்பை பார்வையற்ற‌வர்களும் பார்க்க முடியும், செவித்திறனற்ற‌வர்களும் கேட்க முடியும், பேசும் திறனற்றவர்களும் பேச முடியும் என்கிறபோது, ஐம்புலன்களும் நிறையப்பெற்றவர்களான நாம் அன்பினால் உலகையே வளைக்க முடியாதா?

அன்பு நாம் எதிர்பார்க்குமிடத்திலிருந்து கிடைக்காவிட்டாலும்கூட, நாம் அன்பு செலுத்தினால், அது நதியின் பிரவாகம் போல போக வேண்டிய இடங்களுக்குச் சென்று இறுதியில் நம்மிடமே பல மடங்காய்த் திரும்பி வரும்.   
அன்பு செலுத்தியதால் துன்பங்கள் கிடைத்ததுதான் மிச்சம் என்று உலகில் சொல்பவ‌ர்கள் கிட்டத்தட்ட 100 சதவிகிதமே இருக்கிறார்கள். அன்பு செலுத்தும்போதே எதிர்பார்ப்புகளையும் மனதில் மூட்டைகளாக சேமித்து வைக்கிறோம். இதனால்தான் துன்பப்படவும் ஏமாற்ற‌ங்களைத் தாங்கவும் வேண்டியதாகிறது. எதிர்பார்ப்பு என்று ஆகும்போதே அங்கு அன்பு என்பது பற்றாகி விடுகிறது.

ஒரு பறவையைக் கூண்டிலடைத்துப் பார்ப்பது, அது தனக்கே சொந்தம் என்ற பற்றின் காரணமாகத்தான். கூண்டிலடைத்த பறவையை விடுதலை செய்து அதைப் பறக்க விட்டு ஆனந்திப்பவன்தான் அன்பு மயமானவன்! பாய்ந்து செல்கிற‌ நதி போகிற இடமெல்லாம் செடிகளையும் கொடிகளையும் வரண்டிருக்கும் நிலங்களையும் உயிர்ப்பித்து பசுமையாக்கிச்
 செல்வதைப்போல, அன்பு மயமானவனின் வாழ்க்கை பரந்து, விரிந்து உயர்ந்த சிந்தனைகளுடனேயே எப்போதும் செல்கிறது!

வாழ்க்கை அன்பு மயமானது! சிறுமைகளை புறந்தள்ளி, பற்றையும் சற்றே ஒதுக்கி வைத்து அனைவரிடமும் அன்பு செய்வோம்!! 

45 comments:

மோகன் குமார் said...

ஓராண்டு நிறைவுக்கும் அற்புத பதிவுக்கும் வாழ்த்துகள் !

அஹமது இர்ஷாத் said...

உங்க‌ள் எழுத்தில் அன்பு தெரி(க்)கின்ற‌து..
அன்பை மீறி வேறேது..

வாழ்த்துக்க‌ள் ஒரு ச‌கோத‌ர‌னாக‌.. ந‌ல‌மாக‌ இருப்பீர்க‌ள் என்ற‌ ந‌ம்பிக்கையுட‌ன்..

இமா said...

முதலில் முதலாவது வருட நிறைவையிட்டு முத்துச்சிதறலுக்கு என் வாழ்த்துக்கள்.

அருமையான இடுகை அக்கா.

MANO நாஞ்சில் மனோ said...

அன்பை விட சிறந்த ஆயுதமில்லை சரிதானே....

middleclassmadhavi said...

அன்பான பதிவு அருமை! அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

GEETHA ACHAL said...

வாழ்த்துகள் மனோ ஆன்டி...உங்களுடைய அனுபவங்கள், ஆலோசனைகள் அனைத்துமே நல்ல பகிர்வு...

வை.கோபாலகிருஷ்ணன் said...

அன்பைப்பற்றி, அன்பாக, அன்பர்கள் பலர் சொன்னதை அன்புடன் சேகரித்து, அன்புடனே எங்களுடன் பகிர்ந்து கொண்ட, உங்களின் அன்பு உள்ளத்தில் ஊறும், அன்பு ஊற்றுக்கு நான் என்றும் அன்பினால் அடிமை, சகோதரியே! அன்புடன் உங்கள் vgk

வெங்கட் நாகராஜ் said...

பதிவுலகில் நுழைந்து ஒரு வருடம் ஆனதற்கும் இனிய பதிவுகள் பல எழுதவும் வாழ்த்துகள்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஆம்..ஆதலினால் அன்பு செய்வோம்!

Krishnaveni said...

congrats on your achievement madam, true words, great

raji said...

இதை விட ஒரு சிறந்த பதிவு இருக்க வாய்ப்பே இல்லை.
அன்பை பற்றி என்ன ஒரு அற்புதமான சிந்தனை!!!!

இந்த பதிவின் பகிர்விற்கு நன்றி மேடம்
பதிவுலகில் தங்களது ஒரு வருட நிறைவிற்கு எனது அன்பை
காணிக்கையாக்குகிறேன்.

தங்களின் இந்த பதிவிற்கு எனது பதிவு ஒன்றை காணிக்கையாக
அளிக்க விரும்புகிறேன் மேடம்

http://suharaji.blogspot.com/2010/12/blog-post_05.html

asiya omar said...

வாழ்க்கை அன்பு மயமானது! சிறுமைகளை புறந்தள்ளி, பற்றையும் சற்றே ஒதுக்கி வைத்து அனைவரிடமும் அன்பு செய்வோம்!!


-அருமையான கருத்துடன் கூடிய ஒரு வருட நிறைவிற்கு அன்பான நல்வாழ்த்துக்கள்,மனோ அக்கா.

Ramani said...

ஓராண்டு நிறைவுக்கு என் மன்ங்கனிந்த
நல்வாழ்த்துக்கள்
தங்கள் பதிவின் அடி நாதமாக எப்போதும்
அன்பையே கண்டிருக்கிறேன்
அந்த அன்பையே ஒரு பதிவாக்கியது மிக அருமை
நல்ல பதிவு தொடர மீண்டும் வாழ்த்துக்கள்

ஹைஷ்126 said...

அன்பு அக்கா முதலாம் ஆண்டு நிறைவுக்கு எதிர்பார்ப்பு இல்லாத அன்பான மனம் கனிந்த வாழ்த்துகள் :)

வாழ்க வளமுடன்

தோழி பிரஷா said...

ஓராண்டு பூர்த்திக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள். அன்பை பற்றி கூறிகொண்டே போகலாம் அருமையான பதிவு

athira said...

இனிய முதலாமாண்டு நிறைவுக்கு என் இனிய வாழ்த்துக்கள் மனோ அக்கா.

ஸாதிகா said...

அக்கா,வாழ்த்துக்கள்,இன்னும் பற்பல சதங்கள் பதிவெழுத வாழ்த்துக்கள்.//இந்த ஒரு வருடத்தில் இப்படிப்பட்ட திறமையாளர்கள் பலரின் அன்பும் நட்பும் அறிமுகமும் // எங்களுக்கெல்லாம் வலையுலகால் உயரிய நட்புக்கள் கிடைத்துள்ளது.உங்களுக்கோ உறவுகளே கிடைத்துள்ளது.அந்த அபுர்வ தருணங்களை எங்களுடன் அனுபவ பதிவாக பகிர்ந்து கொள்ளலாமே?

ஸாதிகா said...

தங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்.உங்களின் கருத்தினை பகிருங்கள்.

மனோ சாமிநாதன் said...

இனிய வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி மோகன்குமார்!!

மனோ சாமிநாதன் said...

அன்புச் சகோதரர் அஹமது இர்ஷாத்!

ரொம்ப நாட்களுக்குப்பின் உங்கள் வருகையும் வாழ்த்துக்களும் மிக்க மகிழ்ச்சியூட்டியது! என் மனமார்ந்த நன்றி!

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி இமா!!

மனோ சாமிநாதன் said...

மிகவும் சரிதான் சகோதரர் நாஞ்சில் மனோ! அன்பை விடவும் சிறந்த ஆயுதம் உலகத்தில் இல்லை!

மனோ சாமிநாதன் said...

அன்பைக்கொன்டே அழகான பதிலும் தந்து விட்டீர்கள் மாதவி!பாராட்டிற்கு அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

மனந்திறந்த பாராட்டுக்கும் வாழ்த்துக்களுக்கும் என் அன்பு நன்றி கீதா!!

ஹுஸைனம்மா said...

அக்கா, மனமார்ந்த வாழ்த்துகள்.

Vijisveg Kitchen said...

முத்துசரத்திற்க்கு முதலாமாண்டு நினைவு என் இனிய வாழ்த்துக்கள். மேலும் மேலும் உங்க முத்தான எழுத்துக்களை தொடர வாழ்த்துக்கள்.

ஜெய்லானி said...

many more happy return of day (( BLOG )) :-)))


ரீடரில் பிராப்ளம் நிறைய பேர் பதிவு வரல :-(

புவனேஸ்வரி ராமநாதன் said...

அன்பின் ஆழத்தை அறிந்துகொள்ள அருமையாக,
அழகாக ஒரு பதிவிட்டுள்ளீர்கள். மிக்க நன்றி
மனோம்மா. இன்னும் நிறைய எழுதிட வாழ்த்துக்கள்.

Ramani said...

பல்வேறு பணிகளுக்கிடையில் ஓராண்டு காலம்
தொடர்ந்து பதிவிட்டமைக்காகவும்
தொடர்ந்து தரமான பதிவுகளைக் கொடுத்தமைக்காகவும்
அன்பாலே பதிவர்கள் அனைவரின் மனதிலும்
ஒரு நிலையான இடத்தை பெற்றமைக்காகவும்
ஒவ்வொரு சிறு மகிிழ்வினையும் துயரத்தையும்
குடும்ப உறுப்பினர்போல் கருதி பதிவர்களுடன்
பகிர்ந்து கொண்டமைக்காகவும்
எங்களைப்போல புதிதாக பதிவுலகில்
நுழைந்துள்ளோருக்கு நல்ல வழிகாட்டியாக
விளங்கிக் கொண்டிருப்பதற்காகவும்....
எனது மனங்கனிந்த நல்வழ்த்துக்கள்

மனோ சாமிநாதன் said...

உலகமே அன்பிற்கு அடிமையாகிப்போகும்போது, தங்களின் அன்பான பின்னூட்டம் என் மனதில் மகிழ்வை நிறையச் செய்து, இந்த அன்புப்பதிவை வெளியிட்டதற்காக பெருமிதப்பட வைத்தது. தங்களுக்கு என் அன்பான மனதின் நன்றிகள் சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!!

மனோ சாமிநாதன் said...

அன்பார்ந்த வாழ்த்துக்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள் சகோதரர் வெங்கட் நாகராஜ்!

மனோ சாமிநாதன் said...

பாரதியை வழிமொழிந்து பின்னூட்டமிட்டதற்கு என் அன்பு நன்றி சகோதரர் ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி!!

மனோ சாமிநாதன் said...

Thank you very much for the lovely feedback as well as your sincere wishes!

மனோ சாமிநாதன் said...

அன்பு சகோதரி ராஜி!

தங்களின் காணிக்கைக்கும் வாழ்த்துக்களுக்கும் என் இதயங்கனிந்த நன்றி!
முக்கியமாக, தங்களின் அன்பென்ற காணிக்கைக்கு நன்றி கூற என்னிடம் வார்த்தைகளில்லை உண்மையிலேயே!!

மனோ சாமிநாதன் said...

இனிய வாழ்த்துக்களுக்கு என் அன்பு நன்றி ஆசியா!!

மனோ சாமிநாதன் said...

அன்புச் சகோதரர் ரமணி!

தங்களின் மனம் நிறைந்த பாராட்டு என்னை பெருமிதப்பட வைத்தது.
என் பதிவுகளின் அடிநாதம் அன்பென்பதை அழகாக கண்டு பிடித்து விட்டீர்கள்.
உண்மைதான், அன்பென்ற சக்தியை விட உலகில் உயர்ந்ததொன்று எது?
என் பதிவுகளுக்கு இத்த‌கைய பாராட்டை விடவும் உயர்ந்த பரிசு வேறெதுவுமில்லை.
தங்களுக்கு என் இதயங்கனிந்த நன்றி!

மனோ சாமிநாதன் said...

அன்பு சகோதரர் ஹைஷ்!

அன்பான பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நெஞ்சார்ந்த நன்றி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி தோழி பிரஷா!

மனோ சாமிநாதன் said...

மனமார்ந்த வாழ்த்துக்கு அன்பு நன்றி அதிரா!

மனோ சாமிநாதன் said...

இனிய வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி சாதிகா!

மனோ சாமிநாதன் said...

இனிய வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி விஜி!!

மனோ சாமிநாதன் said...

மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு இனிய நன்றி சகோதரர் ஜெய்லானி!!

மனோ சாமிநாதன் said...

விரிவான பாராட்டுரைக்கு அன்பு நன்றி புவனேஸ்வரி! ரொம்ப நாட்களுக்குப்பின் உங்களை இங்கு காண்பது மிகவும் மகிழ்வாக இருக்கிறது!

மனோ சாமிநாதன் said...

இண்ட்லியில் என் பதிவில் தங்களை இணைத்த அன்புத் தோழமைகள்
RDX, Haish, Sriramanandhaguruji, Spice, Vilambi, Sudhir, Asiya, Abdul Kadher, Karthi6, Idukaiman, Ambuli, Geetha, Maragatham, Ramalakshmi, Irshath, Venkat Nagaraj, Madhavi, Aadhi, Piraasha, Vadivelan, Chuttiyar, Bhaavan, Paarvai, Boopathy, Jeylani

அனைவருக்கும் என் இதயங்கனிந்த நன்றி!

ரிஷபன் said...

அன்பின் பலம் புரிந்து வைத்திருக்கிறீர்கள்.. தொடரட்டும் உங்கள் வெற்றிப் பயணம்..