Tuesday 1 March 2011

சமையலறை மருத்துவம்

மறுபடியும் சில மருத்துவக் குறிப்புகள்!
வீட்டின் சமையலறையிலுள்ள‌‌ அஞ்சறைப்பெட்டியில் நம் உடல் காக்கும் மருத்துவப் பொருள்கள் வெந்தயம், சீரகம், மிளகு, லவங்கம் போன்றவற்றில் ஏராளமாய் இருக்கின்றன. அதே போல் வீட்டைச் சுற்றி நாம் வளர்க்கும் துளசி, செம்பருத்தி,தூதுவளை போன்ற செடிகளில் நிறைய மருத்துவப்பயன்கள் இருக்கின்றன. அவற்றுள் சில உங்களின் பார்வைக்கும் தேவைகளுக்கும்!!
1. வயிற்றின் இடப்பக்கமோ, வலப்பக்கமோ இழுத்துப்பிடித்துக்கொண்டால் சிறிது சீரகத்தை வாணலியில் போட்டி சிறு தீயில் கறுக்க வறுத்து ஆறியதும் வாயில் போட்டு தண்ணீர் குடித்தால் வலி உடனே வலியும் வாயுப்பிடிப்பும் சரியாகி  விடும்.

2. கால்களின் பித்த வெடிப்புகளுக்கு வேப்பெண்ணெயைத் தொடர்ந்து தடவி வந்தால் பித்த வெடிப்பு குணமாகி விடும்.

3. வயிற்றுப்பொருமல், வாயுப்பிடிப்புக்கு, சீரகம், சுக்கு, மிளகு, ஓமம், காயம் இவற்றை பொன்னிறமாக வறுத்துப்பொடித்து சூடான சாதத்தில் சிறிது நெய் விட்டு அல்லது நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து சாப்பிட்டால் சரியாகி விடும். பொதுவாகவே இந்தப்பொடியை தயார் செய்து முதலில் இந்த சாதத்தை ஒரு பிடி சாப்பிட்டு, மற்ற‌ உணவுப்பொருள்களை சாப்பிடுவது மிகவும் நல்லது
.

4. சோற்றுக்கற்றாழையை ஒடித்தால் வரும் பிசினை வெட்டுக்காயங்களுக்குத் தடவினால் அவை சீக்கிரம் ஆறும்.

5. பாக்கை தண்ணீர் விட்டு அரைத்து ஒரு எலுமிச்சை அளவிற்கு 100 கிராம் தேங்காய் எண்ணெய் கலந்து ஒரு நாள் முழுவதும் வெய்யிலில் வைக்கவும். மறு நாள் சிறு தீயில் அடுப்பில் வைத்து காய்ச்சினால் நீர் வற்றி மெழுகு போன்ற கலவை அடியில் தங்கும். இதை ஆறியதும் ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக்கொள்ள‌வும். சுட்ட புண்கள், சூடான எண்ணெய் தெறித்து கொப்புளங்களான புண்கள் இவற்றுக்கு இந்த மருந்தை தடவினால் உடனே காயங்கள் ஆறும்.

6.காலில் கண்னாடி குத்தி விட்டால், ஓமத்தை வெல்லத்துடன் அரைத்து அடுப்பில் வைத்துக்கிளறி, பொறுக்கும் சூட்டில் கடிவாயில் வைத்துக் கட்டுங்கள். எவ்வளவு சிறிய கண்ணாடித் துண்டானாலும் வெளியே வந்து விடும்.

7.சிறிது நொச்சி இலைகளை கொதிக்கும் வெந்நீரில் போட்டு ஆவி பிடித்தால் சுவாசிப்பதில் சிரமம் இருப்பவர்களுக்கு இரவில் அவஸ்தையின்றி தூக்கம் வரும்.

8..முளை கட்டிய பச்சைப்பயிறை வெறும் வயிற்றில் 3 ஸ்பூன்கள் தினமும் சாப்பிட்டு வந்தால் குழந்தையிலாத பெண்களுக்கு மூன்றே மாதத்தில் கருத்தரிக்கும். இதை சாப்பிடும்போது காப்பி குடிப்பதை அறவே நிறுத்த வேண்டும்.

9. அரச மரத்தின் பழுப்பு இலைகளை ஒரு சட்டியில் போட்டு மற்றொரு சட்டியால் மூடி அடுப்பில் வைத்தால் பத்து நிமிடங்களில் அவை சாம்பலாகி விடும். அந்த சாம்பலை தேங்காயெண்ணெயுடன் கலந்து வைத்துக்கொண்டு தீப்புண்கள், கொப்புளங்களில் தடவி வந்தால் புண்கள் விரைவில் ஆறும்.

10. நாள்பட்ட தலைவலி, ஒற்றை தலைவலிக்கு:

அடுக்கு செம்பருத்திகளை வாணலியில் போட்டு அவை மூழ்கும் அளவு நல்லெண்ணெயை ஊற்றி காய்ச்சவும். பின் வடிகட்டி வைத்துக்கொண்டு வாரம் ஒரு முறை தலை குளித்து வந்தால் தலைவலி சரியாகும்.

படங்களுக்கான நன்றி: கூகிள் வலைத்தளம்







47 comments:

Chitra said...

எளிய முறையில் உள்ள மருத்துவ குறிப்புகள். பகிர்வுக்கு நன்றிங்க.

R. Gopi said...

இந்த மாதிரி கைவைத்தியம் யாருக்கு இப்போது தெரிகிறது? தகவலுக்கு நன்றி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

பயனுள்ளபதிவு.

வை.கோபாலகிருஷ்ணன் said...

தாங்கள் அளித்துள்ள படங்களும் பாடங்களும் மிகவும் அருமை. பிரிண்ட் போட்டு லேமினேட் செய்து ஒவ்வொரு வீட்டு சமயல் அறையிலும் மறக்காமல் மாட்டப்பட வேண்டிய பொக்கிஷம். மகத்தானதொரு சமையல் அறை மருத்துவப் பகிர்வுக்கு மிக்க நன்றி.
வெளியூரிலுள்ள என் இரு மருமகள்களுக்கும் அனுப்பி வைக்கத் தீர்மானித்து விட்டேன்.

குறையொன்றுமில்லை. said...

நம் கிச்சனில் உபயோகப்படுத்தும் பொருட்களிலேயே அருமையான மருத் நன்றி.துவக்குறிப்புகள்.

சாந்தி மாரியப்பன் said...

பயனுள்ள எளிய மருத்துவக்குறிப்புகள்.. நல்லாருக்குங்க.

பத்மநாபன் said...

சின்ன சின்ன வைத்தியங்கள்..பெரிய பெரிய பிரச்சனைகளுக்கும் தீர்வாக ..அருமையான குறிப்புகள்...

ஹுஸைனம்மா said...

சீரகம் எப்பவுமே நல்ல மருந்து. அதுபோல சுக்கு, ஓமம், மிளகும். நிறைய புதிய மருந்துகளும் சொல்லிருக்கீங்க. குறிப்பா கண்ணாடி குத்தினதுக்கு சொல்லிருக்கது இப்பத்தான் கேள்விப்படுறேன். வெலம்னா கருப்பட்டிதானே? அதைப் பாகு எடுக்காம, அப்படியே ஓமத்தோடு அரைச்சுடணுமா? அளவுகள் ஏதும் குறிப்பா உண்டாக்கா?

Menaga Sathia said...

super tips,thxs for sharing!!

Asiya Omar said...

நல்ல டிப்ஸ் மனோ அக்கா.பகிர்வுக்கு நன்றி.

ADHI VENKAT said...

அத்தனையுமே உபயோகமான மருத்துவ தகவல்கள். பகிர்வுக்கு நன்றிம்மா.

vanathy said...

nice tips.

ஸாதிகா said...

அருமையான ,குறித்து வைத்துக்கொள்ள வேண்டிய குறிப்புகள்.இது போல் இன்னும் நிறைய குறிப்புகள் தந்து அனைவரையும் பயனுறச்செய்யுங்கள் அக்கா.

middleclassmadhavi said...

பயனுள்ள குறிப்புகள். நன்றி

'பரிவை' சே.குமார் said...

Nalla maruththuvak kurippugal amma...
pakirvukku nanri.

Thenammai Lakshmanan said...

ரொம்ப உபயோகமான டிப்ஸ் மனோ. நன்றீ..

Anisha Yunus said...

நொச்சி இலைன்னா எது மனோ அக்கா?

சீரகத்தின் குணனலன்கள் எண்ணிக்கையில் அடங்காது போலவே.. :)

Vijiskitchencreations said...

எல்லாமே நல்ல எந்த பக்கவிளைவுகள் இல்லாத எளிய மருத்துவ குறிப்புகள். எங்க பாட்டியும் சுக்கு,மிளகும் ஒமம் பொடிசெய்து சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட குடுப்பாங்க. நல்ல குறிப்புகள்.

Kanchana Radhakrishnan said...

பயனுள்ளபதிவு.பகிர்வுக்கு நன்றி.

மனோ சாமிநாதன் said...

அன்பு சித்ரா!
அன்பு தோழி பிரஷா!
இனிய கருத்துக்களுக்கு அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

அன்பான கருத்துக்கு மகிழ்வான நன்றி சகோதரர் கோபி ராமமூர்த்தி!!

Yaathoramani.blogspot.com said...

மிக எளிய ஆனால் அடிக்கடி
தேவைப்படுகிற மருந்துக் குறிப்புகள்
நன்றி தொடர வாழ்த்துக்கள்

enrenrum16 said...

நல்ல குறிப்புகளை எங்களோட பகிர்ந்ததற்கு நன்றி.. எல்லாமே எனக்கு புதுசு அக்கா புதுசு.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

பயனுள்ள பதிவு!!

R. Gopi said...

தொடர்ப்பதிவிட அழைத்துள்ளேன்

http://ramamoorthygopi.blogspot.com/2011/03/blog-post_06.html

மனோ சாமிநாதன் said...

தங்களின் இரு மருமகள்களுக்கும் இந்த குறிப்புகளை அனுப்பியதற்கு அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்! இந்த பதிவின் நோக்கமே அதுதான். இந்தக் குறிப்புகளால் நிறைய பேர் பலனடைய வேண்டுமென்பதுதான்!!

மனோ சாமிநாதன் said...

அன்பு சகோதரி லக்ஷ்மி!
அன்பான அமைதிச்சாரல்!
தங்களின் கருத்துக்கும் பாராட்டுக்கும் இதயங்கனிந்த நன்றிகள் பல!!

மனோ சாமிநாதன் said...

தாங்கள் எழுதியது போல, சில பெரிய பிரச்சினைகளைக்கூட இந்த் சின்ன சின்ன வைத்தியங்கள் குணப்படுத்தி விடும் அளவு வல்லமை வாய்ந்தவை!
கருத்துக்கு அன்பு நன்றி சகோதரர் பத்மநாபன்!!

மனோ சாமிநாதன் said...

கருப்பட்டி வேறு, வெல்லம் வேறு ஹுஸைனம்மா! பொதுவாக சில மருந்துகளுக்கு வெல்லத்தையும் விட கருப்பட்டி தான் நல்லது என்று சொல்வார்கள். வெல்லத்தையும் ஓமத்தையும் சமமாகத்தான் எடுத்து அரைத்து காய்ச்ச வேண்டும்.
காய்ச்சும்போது வெல்லம் தண்ணீர் விட்டுக்கொன்டு பாகாய் ஆகி விடும்.

மனோ சாமிநாதன் said...

கருத்துக்கு அன்பு நன்றி ஆசியா!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு அன்பு நன்றி ஆதி!

மனோ சாமிநாதன் said...

கருத்துப்பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி ஸாதிகா!

மனோ சாமிநாதன் said...

Thank you very much for the nice feedback Menaka!!

மனோ சாமிநாதன் said...

கருத்துக்கு உளமார்ந்த நன்றி மாதவி!

மனோ சாமிநாதன் said...

Thanks a lot for the nice appreciation Vanathy!!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு அன்பு நன்றி சகோதரர் குமார்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு உளமார்ந்த நன்றி தேனம்மை!

மனோ சாமிநாதன் said...

நொச்சி இலை பொதுவாய் ஆற்றோரங்களில் வளர்ந்திருக்கும் அன்னு! இதன் வாசனைக்கு பூச்சிகள் கிட்ட வராது. பல மருத்துவப் பயன்கள் கொண்டது இந்த இலை. வலிகள், ஜலதோஷம் இவற்றுக்கு கண்கண்ட மருந்து.
சீரகத்திற்கு இன்னும் நிறைய பயன்கள் உண்டு. மறுபடியும் மருத்துவப்பயன்கள் எழுதும்போது எழுதுகிறேன்.

மனோ சாமிநாதன் said...

விரிவான கருத்துக்கும் பகிர்வுக்கும் அன்பு நன்றி விஜி!

மனோ சாமிநாதன் said...

கருத்துக்கு அன்பு நன்றி சகோதரர் ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி!!

மனோ சாமிநாதன் said...

அன்பான கருத்துக்கு மனமார்ந்த நன்றி காஞ்சனா!!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு அன்பு நன்றி என்றென்றும் 16!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கும் கருத்துக்கும் அன்பு நன்றி சகோதரர் ரமணி!!

மனோ சாமிநாதன் said...

இந்த பதிவிற்காக இண்ட்லியில் இணைத்து எனக்கு ஊக்கம் தந்த அன்புத் தோழமைகள்
Chithra, Sriramanandhaguruji, Ilamthooyavan, Shruvish, Vino, Spice, Asiya, Sadhiqah, Inbathurai, karthikVK, Janavin, Pirasha, Vai.Gopalakrishnan, Aadhi, Vany, Sidhartha, Tharun, Mahizh, Rajesh, Karthi6, Vedha, Nanban, Ashok, Thenammai, Thomasruban, Annu
அனைவருக்கும் இனிய நன்றி!!

Krishnaveni said...

very useful, thanks madam

இராஜராஜேஸ்வரி said...

அருமையான எளிதில் கிடைக்கும் பொருள்களின் மருத்துவகுணம் அளவற்றது. பாராட்டுக்கள்.

Grannytherapy said...

தங்களுடைய பயனுள்ள சமையல் மருத்துவ குறிப்புகளுக்கு நன்றி. எங்களின் தமிழ் பற்றினால் பாட்டி வைத்தியம் பற்றிய மருத்துவ குறிப்புகளை இணையதளத்தில் வெளிட்டுள்ளோம்.


மேலும் விவரங்களுக்கு:
http://www.grannytherapy.com