வழக்கம்போல வித்தியாசமான சமையல் குறிப்பைக் கொடுக்க எண்ணி யோசித்தபோது எனக்கு மிகவும் பாரட்டுக்களை அள்ளி வழங்கிய இந்த ' வாழைத்தண்டு ரசம்' பற்றி எழுதலாமே என்று தோன்றியது. சாதாரணமாகவே ரசம் தமிழ்நாட்டின் மதிய உணவில் இன்றியமையாத ஒன்று! மைசூர் ரசம், மிளகு ரசம், தக்காளி ரசம், புதினா ரசம், கண்டத்திப்பிலி ரசம், பருப்பு ரசம், அன்னாசி ரசம், புளி ரசம், எலுமிச்சை ரசம் என்று ரசத்திலேயே ஊறியவர்கள் நாம். சின்ன வெங்காயம், தக்காளி, எலுமிச்சை சாறு சேர்த்து செய்யப்படும் இந்த ரசம் ஒரு முழு உணவு மாதிரி. சூடான சாதம் வடித்து, இந்த ரசம் செய்தால் போதும், தொட்டுக்கொள்ள காயும் ரசத்திலேயே கிடைத்து விடுவதால் ஒரு முழு சாப்பாடு சாப்பிட்ட திருப்தியும் கிடைக்கும்!
தேவையான பொருள்கள்:
இளம் வாழைத்தண்டு- 1 அடி நீளமானது
சிறிய வெங்காயம் 1- கை
சிறிய பூண்டிதழ்கள்-10
இஞ்சி நசுக்கியது -1 ஸ்பூன்
கீறிய பச்சை மிளகாய்- 4
கறிவேப்பிலை- ஒரு கீற்று
நறுக்கிய கொத்தமல்லி -கால் கப்
வெந்தயம் -அரை ஸ்பூன்
கடுகு -அரை ஸ்பூன்
சீரகம் -அரை ஸ்பூன்
எலுமிச்சை சாறு -ஒரு எலுமிச்சம்பழத்தினுடையது
தக்காளி [பொடியாக நறுக்கியது]- 1 கப்
தேவையான உப்பு
நெய்- 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள்-அரை ஸ்பூன்
பெருங்காயப்பொடி- அரை ஸ்பூன்
எண்ணெய்- 1 மேசைக்கரண்டி
வெந்த பருப்பு- கால் கப்
செய்முறை
ஒரு வாணலியில் நெய்யையும் எண்ணையையும் ஊற்றி சூடுபடுத்தவும்.
கடுகு போட்டு அது வெடித்ததும் சீரகம், வெந்தையம் இரண்டையும் போடவும்.
அவை இலேசாக சிவக்க ஆரம்பித்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, இஞ்சி, பெருங்காயம்,கறிவேப்பிலை, மஞ்சள் தூள் கொத்தமல்லி சேர்த்து அவை நன்கு குழையும்வரை வதக்கவும்.
6 கப் நீரை ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
வாழைத்தண்டை சிறிய வில்லை வில்லைகளாய் அரிந்து கொதிக்கும் ரசத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும்.
சிறிது நிமிடங்களிலேயே வாழைத்தண்டு வெந்து விடும்.
பருப்பையும் அரை கப் நீரையும் சேர்த்து ஊற்றவும்.
மறுபடியும் கொதி வர ஆரம்பிக்கும்போதி இறக்கி எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
சூடான, சுவையான வாழைத்தண்டு ரசம் ரெடி!
67 comments:
கேள்விப் பட்டது இல்லை இதுவரை .பகிர்வுக்கு நன்றி
கேள்விபட்டது இல்லை. செஞ்சு பாத்துட வேண்டியதுதான்.
ஆனா இளம் வாழைத் தண்டு நிறைய கிடைக்காது:(
அருமையாக இருக்கு அக்கா,புதுசாகவும் இருக்கு.வாழைத்தண்டு கிடைத்தால் செய்து பார்க்கவேண்டும்.
செஞ்சு பார்த்துடலாம் மேடம்.
வாழ்த்தண்டில் ரசம் செய்து அசத்தி விட்டீர்கள் அக்கா.அவசியம் செய்து பார்த்திடுறேன்.வித்தியாசமாக இருக்கிறது.
அருமையா இருக்கு. நிச்சயம் செய்து பார்க்கணும்.
அம்மா...
நீங்க வச்சு கொடுத்த மாதிரியே இருக்கு..! நான் இந்த வாரம் வீட்ல சொல்லி வைக்கசொல்றேன்.......அப்டி இல்லேன்னா நான் நம்ம வீட்டுக்கு வர்றேன் நீங்க வச்சுக் கொடுங்கம்மா! மருத்துவ குணங்கள் நிறைஞ்சு இருக்கும்ல... நன்றிகள் அம்மா!
நானும் கேள்விப்பட்டதே இல்லை. செஞ்சிப் பார்த்திடறேன்..
ரசம் என்றாலே அருமை.அதிலும் இந்த ரசம் அருமையோ அருமை.பகிர்வுக்கு நன்றி
மனோ அக்கா அசத்தலானா வித்தியாசமான ரசம்.
நானும் என் பையன்களும் ரசத்திலேயே ஊறியவர்கள், எனக்கும் வித விதமா ரசம் வைத்து சாப்பிட ரொம்ப பிடிக்கும்.
வாழைத்தண்டு ரசம்? வீட்டுல அம்மணிகிட்ட சொல்லணும். தில்லில வாழைத்தண்டு கிடைக்கிறதுதான் கஷ்டம். பார்க்கலாம். பகிர்வுக்கு நன்றி.
நிச்சயம் நன்றாகவே இருக்கும். வித்யாசமாக.
முதன் முதலில் கேள்வி படுகிறேன்.முயற்சி செய்கிறேன்.
மிளகும், புளியும் இல்லாத ரசமா - வித்தியாசமா இருக்கு. வாழைத் தண்டு போட்டு செய்து பார்க்கணும்.
ம்... இது சூப்பர்..ஐட்டம்... கிட்னி பிராப்ளம், வயிறு பிரச்சனை உள்ளவர்களுக்கு இது சிறந்த உணவு ..சாதாரணமாவே குடிக்கலாம் ..டீ..காப்பிக்கு பதிலா ((பருப்பு இருப்பதால நிறைய தண்ணீர் சேர்க்கனும் ))
அருமையான பதிவு
வாழ்த்தண்டில் ரசம் செய்து அசத்தி விட்டீர்கள் .
முதன் முதலில் கேள்வி படுகிறேன்.முயற்சி செய்கிறேன்.
பார்க்கவே நல்லா இருக்கு. கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.
அசத்தி விட்டீர்கள் மனோ. செய்து பார்க்கிறேன்.
Wow... வாழைத்தண்டு கிடைத்தால் கண்டிப்பாகச் செய்து பார்த்துவிட வேண்டும் :-)
பகிர்வுக்கு நன்றி! :-)
டெக்னாலஜி இன்னும் கொஞ்சம் முன்னேற வேண்டும்..
உங்கள் இடுகையைப் படித்தவுடன், அதன் கமகம நம் நாசிகளை வருடவேண்டும்....
அருமையா இருக்கு. நிச்சயம் செய்து பார்க்கணும்.
அசத்தலா இருக்கு ரசம்.. வாழைத்தண்டு கிடைச்சா கண்டிப்பா செஞ்சு பார்க்கணும்.
super rasam.
கருத்துக்கு நன்றி எல்.கே!
" Gopi Ramamoorthy said...
கேள்விபட்டது இல்லை. செஞ்சு பாத்துட வேண்டியதுதான்.
ஆனா இளம் வாழைத் தண்டு நிறைய கிடைக்காது:( "
அவசியம் செய்து பாருங்கள்.அப்புறம் இந்த ரசத்தின் சுவையை மறக்க மாட்டீர்கள்!
அவசியம் செய்து பாருங்கள் ஆசியா! இங்குதான் எல்லா தமிழ், மலையாளி சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கிறதே!
கருத்துக்கு அன்பு நன்றி தமிழ் உதயம்!
வாழைத்தண்டு ரசம் செய்து பார்த்துச் சொல்லுங்கள் ஸாதிகா!
பாராட்டுக்கு அன்பு நன்றி புவனேஸ்வரி!
மனைவிக்கு பிரின்ட் அவுட் எடுத்து குடுத்து படிக்க சொல்லணும்
" dheva said...
அம்மா...
நீங்க வச்சு கொடுத்த மாதிரியே இருக்கு..! நான் இந்த வாரம் வீட்ல சொல்லி வைக்கசொல்றேன்.......அப்டி இல்லேன்னா நான் நம்ம வீட்டுக்கு வர்றேன் நீங்க வச்சுக் கொடுங்கம்மா! மருத்துவ குணங்கள் நிறைஞ்சு இருக்கும்ல... நன்றிகள் அம்மா!"
அவசியம் நீங்கள் எங்கள் வீட்டுக்கு வரும்போது இந்த ரசத்தை வைத்து தருகிறேன்! சாப்பிட்டுப்பார்த்து சொல்லுங்கள்!
அவசியம் செய்து பார்த்து சொல்லுங்கள் வித்யா!
பாராட்டுக்கு அன்பு நன்றி ராஜி!
அவசியம் செய்து பாருங்கள் ஜலீலா! ரசம் பிடிப்பவர்களுக்கு இது ரொம்பவும் பிடிக்கும். இங்குதான் வாழைத்தண்டும் கிடைக்கிறதே!
கருத்துக்கு அன்பு நன்றி சகோதரர் வெங்கட நாகராஜ்! டில்லியில் வாழைத்தண்டு கிடைக்காதா? ஆச்சரியமாக இருக்கிறது!
கருத்துக்கு அன்பு நன்றி சகோதரர் சுக்கு மாணிக்கம்!!
கருத்துக்கு அன்பு நன்றி சகோதரர் இளம் தூயவன்!
நீங்கள் சொல்வது மாதிரி இந்த ரசம் வழக்கமான புளி, மிளகு இல்லாதது. சுவை மிகவும் ருசியாக இருக்கும். புளிக்குப்பதிலாகத்தான் எலுமிச்சை. மிளகுக்கு பதிலாக பச்சை மிளகாய்! செய்து பாருங்கள் ஹுஸைனம்மா!
பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் ஜெய்லானி! நீங்கள் சொல்வது மாதிரி வாழைத்தண்டை எப்படிச் சேர்த்தாலும் சிறுநீரகப்பிரச்ச்சினைக்கு மிகவும் நல்லது. பச்சை மிளகாய், பருப்பு இரண்டையும் சிறிது குறைத்து சாதம் இல்லாமல் ஒரு சூப் போல இதை அருந்தலாம்.
பாராட்டுக்கு அன்பு நன்றி சகோதரர் குமார்! அவசியம் செய்து பாருங்கள்! செய்வதும் மிகவும் சுலபம்!
"கோவை2தில்லி said...
பார்க்கவே நல்லா இருக்கு. கண்டிப்பா செய்து பார்க்கிறேன். "
அவசியம் செய்து பாருங்கள்!
பாராட்டுக்கு அன்பு நன்றி வித்யா சுப்ரமன்யம்!
அவசியம் செய்து பாருங்கள்!
கருத்துக்கு அன்பு நன்றி சுபத்ரா!
"”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
டெக்னாலஜி இன்னும் கொஞ்சம் முன்னேற வேண்டும்..
உங்கள் இடுகையைப் படித்தவுடன், அதன் கமகம நம் நாசிகளை வருடவேண்டும்...."
டெக்னாலஜி எப்படி எப்படியோ முன்னேறுவதைப்பார்க்கும்போது ஒரு வேளை எதிர்காலத்தில் இப்படி கூட முன்னேறுமோ என்னவோ? பாராட்டுக்கு அன்பு நன்றி!!
பாராட்டிற்கு அன்பார்ந்த நன்றி காஞ்சனா!
அவசியம் செய்து பாருங்கள்!
பாராட்டிற்கு மனங்கனிந்த நன்றி அமைதிச்சாரல்! அவசியம் செய்து பார்த்துச் சொல்லுங்கள்!
பாராட்டிற்கு அன்பு நன்றி வானதி!
புதுசாக இருக்கு.கேள்விபட்டது இல்லை. செய்து பார்க்கவேண்டும். நன்றி!
உம் வாழைத்தண்டு ரசம் உண்மையில் அற்புதம் இந்த ரசம் சிறுநீரக கல் இருப்பவர்கள் நாளும் எடுக்க கல் கரையும் . சிறுநீரகத்தை பாதுகாக்கும் பாராட்டுகள் .
வாழைதண்டு ரசம் இப்பதான் கேள்வி படரேன். கிடைக்கும்போது செய்து பாத்துடுவேன். வாழைத்தண்டு
உடம்புக்கு ரொம்ப நல்லது. நாங்க இருக்கும் இடத்தில் எப்பவும் கிடைக்காது.
wow, such a great recipe, but vazhaithandu is not available here, i'll try this recipe when i visit india
உங்களுக்கு அவார்ட் கொடுத்திருக்கேன். பெற்றுக் கொள்ளுங்கள்.நன்றி!!
http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html
தேங்காய்த் துருவலுடன் கூடிய வாழைத்தண்டு கறி, பச்சைமிளகாய் அரைத்து விட்டு வாழைத்தண்டு மோர்க்கூட்டு [காரசாரமாக பிரமாதமாக இருக்கும்] கேள்விப்பட்டிருக்கிறோம்.
அது போல தக்காளியுடன் கூடிய, பருப்பு ரஸம், மிளகு ரஸம், எலுமிச்சை ரஸம் போன்றவை கேள்விப் பட்டுள்ளோம்.
வாழைத்தண்டு ரஸம் என்பது புதுமையாக உள்ளது.
முருங்கைக்காய்க் கறி(பொறியல்), வெண்டைக் காய்க் கூட்டு என்பதுபோல சற்று விசித்திரமாக உள்ளது.
சமையல்கலை நிபுணராகிய தாங்களே சொல்லியுள்ளதால் அது சூப்பராகத்தான் இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
உங்களுக்கு அவார்ட் கொடுத்திருக்கிறேன் பெற்றுக் கொள்ளுங்கள். நன்றி!!
http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html#
http://asiyaomar.blogspot.com/2010/12/blog-post_29.html
உங்களை தொடர் பதிவிற்கு அழைத்து இருக்கிறேன்.
Arumaiyaana pakuthi....migavum arumaiyaana ezhuthukkal....ungal theevira visiri aagivitaen... "puthaandu nalvaathukkal"... meendum meendum varuvaen...
Reva
நல்ல பகிர்வு.
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
கருத்துரைக்கு அன்பு நன்றி ஜிஜி!
பாராட்டிற்கு அன்பு நன்றி போளூர் தயாநிதி!
அவசியம் செய்து பாருங்கள் லக்ஷ்மி! மிகவும் சுவையாக இருக்கும்!
பாராட்டுரைக்கு மிக்க நன்றி சகோதரர் திரு.வை.கோபாலகிருஷணன்!
மனந்திறந்த பாராட்டிற்கு மகிழ்வும் அன்பும் கலந்த நன்றி ரேவா!
அவசியம் அடிக்கடி வந்து பாருங்கள்!!
கருத்துரைக்கு அன்பு நன்றி ராமலக்ஷ்மி!!
இப்பதிவிற்கு ஓட்டளித்துச் சென்ற அன்புத் தோழமைகள் karthikVk, Saathika, Farthan, Shruvish, Jeylani, Sriramanantha guruji,RDX, MOHANKUMAR, Gopi, vani அனைவருக்கும் இனிய நன்றி!
வாழைதண்டு வாங்கியாச்சு
கூட்டு வைத்தாகிவிட்டது, மீதி கொஞ்சம் இந்த ரசத்துக்காக வைத்துள்ளேன்.
தாளித்தபிறகு ரசத்தை கொதிக்க் விடலாமா?
அன்புள்ள ஜலீலா!
பொதுவாய் ரசம் ரொம்பவும் கொதிக்கக்கூடாது என்று சொல்வார்கள். ஆனால் சிலர் 5 நிமிடமாவது கொதித்தால்தான் ரசம் நன்றாக இருக்கும் என்று சொல்வார்கள். உள்ளபடியே அந்த ரசமும் மிகவும் ருசியாகத்தான் இருக்கும். நான் ரசம் செய்யும்போது அது தளதளவென்று ஒரு நிமிடம் கொதித்ததும்தான் இறக்குவேன். அப்போதுதான் புளியின் வேடுதம் போகும். இந்த வாழைத்தண்டு ரசம் நான் எழுதியுள்ளபடியே செய்யுங்கள். மிகவும் நன்றாக இருக்கும்.
Post a Comment